
EMI – ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது
சபரி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் மல்லையன் தயாரிக்க, சதாசிவம் சின்னராஜ் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி, நாயகனாகவும் நடித்துள்ள படம் "EMI - மாதத் தவணை" ஆகும். இப்படம் முழுக்க முழுக்க காமெடி கலந்த சென்டிமெண்ட் படமாக உருவாகியுள்ளது.
தற்போதைய உலகில், 20000 ரூபாயில ஒரு மொபைல் வாங்கவேண்டுமானால் கூட, அதை முழுப் பணத்தைக் கொடுத்து யாரும் வாங்குவது இல்லை, எல்லோரும் இ.எம்.ஐ. -இல் போட்டுத்தான் வாங்குகிறார்கள். இப்போது லோ கிளாஸ், மற்றும் மிடில் கிளாஸ், ஹைகிளாஸ் என அவரவர் தகுதிக்குத் தகுந்த மாதிரி ஏதோ ஒன்று, காரோ, பைக்கோ, இ.எம்.ஐ. போட்டுத்தான் வாங்குகிறார்கள். இந்த மாதிரி லோன் எடுத்துவிட்டு, இரண்டு மூன்று மாசம் தவணை கட்டவில்லையென்றால் மேனேஜரில் இருந்து, கடைசி ஸ்டாப் வரைக்கும் கால் பண்ணி டார்ச்சர் பண்ணத் தொடங்குவார்கள். இதை நிச்சயமாக 90% மக்கள் அனுபவிக்காமல் இருக்க மாட்டார்கள். அவர்களின் கதை தான் ...