32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

இயக்குநர் விஜயசேகரனின் எவனும் புத்தனில்லை

Dinesh R சேலம் Published: 29/08/2019 4 நிமிட வாசிப்பு சினிமா
எழுத்து அளவு:

evanum-buddhanillai-audio-launch

வி சினிமா க்ளோபல் நெட்வொர்க்ஸ் வழங்கும் படம் ‘எவனும் புத்தனில்லை’. விஜயசேகரன் இயக்கியுள்ள இப்படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா, சென்னை கமலா திரையரங்கில் மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

“எவனும் புத்தனாக முடியாது. ஆனால் எல்லாரும் மனுசனாக முடியாது. இங்கு சிறிய படம் பெரிய படம் என்றில்லை. எல்லோரும் ஒரே போல் தான் உழைக்கிறோம். ஆனால் எல்லாப்படங்களுக்கும் தியேட்டர் கிடைக்குதா என்றால் இல்லை. மற்ற மாநிலங்களில் சினிமா மிகவும் ஆரோக்கியமாக இருக்கிறது. நம் இண்டஸ்ட்ரி மிகவும் சிக்கலாக இருக்கிறது” என்றார் இயக்குநர் மீரா கதிரவன்.

இசையமைப்பாளர் மரியா மனோகர், ” ‘எவனும் புத்தனில்லை’ என்ற தலைப்பே எல்லோரையும் ஈர்க்கக்கூடியது. எல்லோருமே அயோக்கியர்கள் தான். ஏன்னா எல்லோராலும் நல்லவனா இருக்க முடியாது. காலத்தின் கட்டாயத்தால் தான் அப்படி மாறுகிறோம். அதனாலே எவனும் புத்தனில்லை என்ற டைட்டில் மிகவும் பிடித்தது. என்னுடைய முதல்படம் ஜே.கே.ரித்திஷ் சார் நடிச்ச நாயகன் படம் தான். எனக்கு பணம் என்பது எனக்கு இரண்டாம் பட்சம் தான். இசை எனக்கு பேஷன். நல்லவனாக இருப்பதால் நிறைய படங்களில் நிராகரிக்கப் பட்டிருக்கேன்” என்றார்.

நடிகர் ஆரி, “இந்த விழாவில் கலந்து கொள்வது ரொம்ப சந்தோஷமா இருக்கு. விஜயசேகரன் சாருக்காகத் தான் இந்த விழாவுக்கு வந்தேன். பாடல்கள் ட்ரைலர் இரண்டுமே நல்லா இருந்தது. இயக்குநர் ஒரு நல்ல படத்தை எடுத்திருக்கிறார். பொள்ளாச்சி சம்பவம் நடப்பதற்கு முன்பாகவே இந்தப் படம் துவங்கப்பட்டது. சினிமா எடுப்பவர்களுக்கு காலம் பூராவும் பிரசவ வலி தான். இயக்குநர் ஒவ்வொரு விசயங்களுக்கும் மெனக்கெடுவார். இப்படத்தின் கதை சைக்காலஜிக்கலாக நகரும். மேலும் சமூகப் பிரச்சனையைப் பேசும் படம் இது. சினிமாவில் யாருமே புத்தனாக இருக்கோமோ என்றால் நிச்சயமாக இல்லை. சிறிய படங்கள் வெளிவர சிரமப்படுகிறது. இந்நிலை மாறவேண்டும்” என்றார்.

வேல ராமமூர்த்தி, “இந்த விழாவின் நாயகன் மரியா மனோகர் தான். சினேகனின் வரிகளைக் கேட்டால் எனக்குப் பொறாமையாக இருக்கிறது. நாங்கள் எழுத வந்த காலம் நினைவுக்கு வருகிறது. இப்படத்தின் ‘பட்டாம் பூச்சி’ பாடல் என்னுடைய இளம் வயதை நினைவூட்டுகிறது. இப்படத்தின் இயக்குநர் டைட்டிலையே சிறப்பாக வைத்திருக்கிறார். படத்தையும் அருமையாகக் கொடுத்திருக்கிறார். இயக்குநர் விஜயசேகரன் என்னோடு அண்ணன் தம்பி போல பழகி வருகிறார். இந்த இயக்குநருக்கு ஒரு பேராசை. நினைத்ததை எல்லாத்தையும் நடத்த வேண்டும் என்று மெனக்கெடுவார். இந்தப் படம் பட்ஜெட்டில் அடங்கிய படமா இது? எவ்வளவு பிரம்மாண்டமாக இருக்கிறது. சண்டைக்காட்சிகள் பாடல் காட்சிகள் எல்லாம் மிகச் சிறப்பாக எடுத்துள்ளார் இயக்குநர். அவர் தான் தயாரிப்பாளரும்” என்றார்.

ஆர்.வி.உதயகுமார், “சினிமா என்பது மிகப்பெரிய ஆளுமை கொண்ட ஊடகம். அப்படியான சினிமாவில் சிஸ்டம் சரியில்லை. சிஸ்டம் சரி செய்கிறேன் என்று வருபவர்கள் கூடத் திருடிக் கொண்டு போய்விடுகிறார்கள். நடிகர்கள் கட்சி ஆரம்பித்து நாட்டைக் காப்பாத்துவதை விட அவர்கள் வளர்ந்த, அவர்களை வளர்த்த சினிமாவில் இருக்கும் பிரச்சனைகளை சரி செய்யலாம். இப்பவும் சொல்றேன் பெரிய சம்பளம் வாங்கும் நாலு நடிகர்கள் ஒன்னா உட்கார்ந்து பேசினாலே சினிமாவில் இருக்கும் சிக்கல்கள் தீர்ந்துவிடும்.

தியேட்டரில் இருந்து வரும் டிக்கெட் ஷேரை விட பாப்கார்ன் காசிலும் நமக்கு பங்கு வந்தால் சிறுபடத் தயாரிப்பாளருக்கு வருமானம் வரும். தமிழ் சினிமாவில் தான் நிறைய நல்ல கிரியேட்டர்ஸ் இருக்கிறார்கள். இப்போது சினிமாவில் ஒரு குடும்பம் என்ற உணர்வு என்பது இல்லாமல் இருக்கிறது. கேரவன் என்ற கலாச்சாரம் எப்போது வந்ததோ அப்போதே நமக்குள் பிளவு வந்துவிட்டது. எவன் எதைக் கண்டுபிடிச்சானோ? ரஜினி எஜமான் படத்தில் சூட்டிங் ஸ்பாட்டில் தென்னை ஓலையை போட்டுப் படுத்துக் கொள்வார். அவ்வளவு எளிமையான மனிதர் அவர். அவரை எல்லாம் நம் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண அழைத்தால் வருவார். தமிழ் சினிமாவின் ஒப்பற்ற கலைஞனான கமலைக் கூப்பிட்டாலும் வருவார்” என்றார்.

இயக்குநர் ஆர்.கே செல்வமணி, “திரைப்பட சங்கங்களில் இருக்கும் பிரச்சனைகளைப் பற்றிப் பலரும் பேசினார்கள். எனக்குப் பேசிப் பேசி அலுத்துவிட்டது. நாங்கள் படம் எடுத்த காலங்களில் தயாரிப்பாளர்கள் நல்லா இருந்தார்கள். உழைக்கிற எல்லாருக்கும் சரியான கூலி கொடுத்தால் பிரச்சனை இல்லை. இந்தத் திரைப்படத்துறையை யாராலும் அழிக்க முடியாது. அதே நேரம் இந்தத் திரைப்படத்துறையைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு அரசுக்கு இருக்கிறது. மக்களால் அங்கீகாரம் பெறப்பட்ட படங்களுக்கு விருதுகள் அளிக்கப்படவில்லை. மத்திய மாநில அரசுகளுக்கு நாங்கள் வைக்கும் கோரிக்கை. படங்களுக்குப் பெரிய எதிரி இண்டெர்நெட் தான். அது அரசாங்கம் கையில் தான் இருக்கிறது. எவனும் புத்தனில்லை என்ற தலைப்பு மிகவும் சிறந்த தலைப்பு. சினேகன் பாடலாசிரியர் அல்ல.. பாவை ஆசிரியர்” என்றார்.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.