Shadow

Tag: உதயா

“கணக்கு எப்படி இருக்க?” – உதயா உற்சாகம் | Accused movie

“கணக்கு எப்படி இருக்க?” – உதயா உற்சாகம் | Accused movie

சினிமா, திரைச் செய்தி
ஜேசன் ஸ்டுடியோஸ், சச்சின் சினிமாஸ், ஸ்ரீதயாகரன் சினி புரொடக்ஷன், மை ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் உதயா, தயா என். பன்னீர் செல்வம், எம். தங்கவேல் ஆகியோரின் தயாரிப்பில், பிரபு ஸ்ரீநிவாஸ் இயக்கத்தில் ஆகஸ்ட் 1 அன்று வெளியான திரைப்படம் அக்யூஸ்ட் ஆகும். ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ‘அக்யூஸ்ட்’ படக் குழுவினர் நன்றி தெரிவிக்கும் விழாவினை வடபழனி பரணி ஸ்டூடியோவில் நடத்தினர். இந்நிகழ்வில் தயாரிப்பாளர் தயா என்.பன்னீர்செல்வம், ”படத்தின் தொடக்கத்திலிருந்து தற்போது வரை அனைவரையும் அரவணைத்து ஒருங்கிணைத்து வழிநடத்திச் செல்வது உதயாதான். இந்தப் படத்தில் நாகராஜ் என்ற கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பளித்த இயக்குநருக்கும் உதயாவிற்கும் நன்றி. இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இதே கூட்டணி மீண்டும் ஒரு புதிய படத்தில் இணையத் திட்டமிட்டு இருக்கிறோம். இது தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவ...
அக்யூஸ்ட் விமர்சனம் | Accused review

அக்யூஸ்ட் விமர்சனம் | Accused review

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
கணக்கு என்றழைக்கப்படும் கனகு சுப்புரத்தினத்தைப் புழல் சிறைச்சாலையில் இருந்து சேலத்திற்கு அழைத்துச் செல்கின்றனர் காவலர்கள். கொலைக்குற்றம் சுமத்தப்பட்டிருக்கும் கணக்கை வழியிலேயே கொல்வதற்கு ஒரு கூலிப்படையும், என்கவுன்ட்டர் செய்வதற்குக் காவல்துறையும் முயற்சி செய்கிறது. யாரிந்தக் கணக்கு, அவன் செய்த குற்றமென்ன, அவன் உயிருடன் நீதிமன்றத்துக்குச் சென்றானா என்பதே படத்தின் கதை. குற்றஞ்சாட்டப்பட்டவரை நீதிமன்றத்தில் ஒப்படைக்க, உடன் செல்லும் காவலர்களில் ஒருவராகச் செல்லும் வேந்தன் பாத்திரத்தில் அஜ்மல் நடித்துள்ளார். உயரதிகாரிகளின் அழுத்தத்தையும் மீறி எப்படியாவது கனகை உயிருடன் நீதிமன்றத்தில் ஒப்படைக்க நினைக்கிறார். பயணத்தில், ஏதோ ஒரு புள்ளியில், மலர் என பச்சை குத்திக் கொண்டிருக்கும் கனகு மீது ஒரு சாஃப்ட் கார்னர் வேந்தனுக்கு உருவாகி விடுகிறது. கனகுவின் காதல் மீதும் சிறு அபிமானம் ஏற்படுவதோடு மட்டுமல்லாமல்,...
அக்யூஸ்ட் – இருக்கை நுனியில் அமர வைக்கும் த்ரில்லர்

அக்யூஸ்ட் – இருக்கை நுனியில் அமர வைக்கும் த்ரில்லர்

சினிமா, திரைச் செய்தி
பிரபு ஸ்ரீநிவாஸ் இயக்கத்தில், உதயா, அஜ்மல், யோகி பாபு, ஜான்விகா ஆகியோர் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கும் 'அக்யூஸ்ட்' திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. படத்தொகுப்பாளர் ஷ்யாம், “இந்தத் திரைப்படம் சீட் எட்ஜ் திரில்லராக உருவாகி இருக்கிறது. இந்தப் படத்தில் உதயாவும், இயக்குநர் பிரபு ஸ்ரீநிவாஸும் ஒன்றிணைந்து பணியற்றிருக்கிறார்கள். நாங்கள் இந்தப் படத்தின் திரைக்கதையின் வேகத்தைக் குறைப்பதற்காக சில உத்திகளைக் கையாண்டிருக்கிறோம். ஏனெனில் இந்தப் படத்தின் திரைக்கதை மிக வேகமாக இருக்கும்” என்றார். இயக்குநர் பிரபு ஸ்ரீநிவாஸ், ''கன்னடத்தில் திரைப்படங்களை இயக்கியிருந்தாலும் என்னுடைய திரையுலக வாழ்க்கை தமிழில் தான் தொடங்கியது. சுந்தர்.சி, தனுஷ், அர்ஜுன் ஆகியோர் நடித்த படங்களுக்கு நடன இயக்குநராகப் பணியாற்றி இருக்கிறேன். கிட்டத்தட்ட 400 பாடல்களுக்கு மேல் நடன இயக்குநராகப் பணிய...
அக்யூஸ்ட் – சினிமாவில் உதயாவின் 25 ஆவது ஆண்டு

அக்யூஸ்ட் – சினிமாவில் உதயாவின் 25 ஆவது ஆண்டு

சினிமா, திரைச் செய்தி
ஜேஷன் ஸ்டுடியோஸ் சச்சின் சினிமாஸோடு இணைந்து, ஸ்ரீதயாகாரன் சினி புரொடக்ஷன் மற்றும் MIY ஸ்டுடியோஸ் பேனர்களில் ஏ.எல்.உதயா, தயா என். பன்னீர்செல்வம், எம்.தங்கவேல் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் ‘அக்யூஸ்ட்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. பிரம்மாண்ட பட்ஜெட்டில் படமாக்கப்பட்டுள்ள ‘அக்யூஸ்ட்’ திரைப்படத்தில் முதல் முறையாக உதயா, அஜ்மல் மற்றும் யோகி பாபு இணைந்து நடித்துள்ளனர். இப்படத்தைக் கன்னடத் திரையுலகில் வெற்றி படங்களை இயக்கிய பிரபு ஶ்ரீநிவாஸ் இயக்கியுள்ளார். பிரபல கன்னட நடிகை ஜான்விகா நாயகியாக நடித்துள்ளார். இப்படத்திற்கு நரேன் பாலகுமார் இசையமைக்க, மருதநாயகம்.ஐ ஒளிப்பதிவு செய்ய, கே.எல்.பிரவீன் படத்தொகுப்பைக் கையாள, கலை இயக்கத்திற்கு ஆனந்த் மணி பொறுப்பேற்க, ஸ்டன்ட் சில்வா சண்டைக் காட்சிகளை இயக்கியுள்ளார். சென்னையில் நடைபெற்ற 'அக்யூஸ்ட்' இசை வெளியீட்டு விழ...
மார்ச் 22ல் வெளியாகும் ஜீ.வி. பிரகாஷ்குமாரின் “ரெபல்”

மார்ச் 22ல் வெளியாகும் ஜீ.வி. பிரகாஷ்குமாரின் “ரெபல்”

சினிமா, திரைச் செய்தி, திரைத் துளி
இசையமைப்பாளரும், நட்சத்திர நடிகருமான ஜீ. வி. பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'ரெபல்' திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்காக படக்குழுவினர் பிரத்யேக காணொளி ஒன்றையும் வெளியிட்டிருக்கிறார்கள்.அறிமுக இயக்குநர் நிகேஷ் ஆர். எஸ். இயக்கத்தில் தயாராகும் திரைப்படம் 'ரெபல்'. இதில் ஜீ. வி. பிரகாஷ் குமார், மமிதா பைஜூ, கருணாஸ், சுப்ரமணிய சிவா, ஷாலு ரஹீம், வெங்கிடேஷ் வி.பி., ஆதித்யா பாஸ்கர், 'கல்லூரி' வினோத், ஆதிரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அருண் ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு 'இசை அசுரன்' ஜீ.வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். கலை இயக்கத்தை உதயா கவனிக்க, பட தொகுப்பு பணிகளை வெற்றி கிருஷ்ணன் கையாண்டிருக்கிறார். உண்மை சம்பவங்களை தழுவி அதிரடி ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகி இர...
உத்தரவு மகாராஜா விமர்சனம்

உத்தரவு மகாராஜா விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ரவியின் காதுக்குள், 'நிற்காமல் ஓடிக்கொண்டே இரு'க்கும்படி உத்தரவிடுகிறார் இரண்டாம் இராஜராஜச் சோழன். அந்த உத்தரவை ரவி மீறினால், செவிப்பறையை அலறச் செய்யும் பலமான ஒலி எழுந்து, ரவியை நிலைகுலையச் செய்துவிடும். மகாராஜாவின் உத்தரவுக்குக் கீழ்ப்படிவதைத் தவிர ரவிக்கு வேறு மார்க்கம் இல்லை. ஏன் அந்த ஒலி எழுகிறது, யார் அந்த ஒலியை எழுப்புகின்றனர், எப்படி அதிலிருந்து ரவி மீண்டான் என்பதுதான் படத்தின் கதை.  படத்தின் முதற்பாதியில், இரண்டாம் ராஜராஜச் சோழனும் அவனது வீரர்களும் குதிரையில் வருகின்றனர். அஸெல் மீடியாவின் 3டி கிராஃபிக்ஸில் அவை இயல்பாய்ப் பொருந்துகின்றன. ட்ரெய்லரிலேயே அந்த மங்கலான குதிரைகளைப் பார்க்கலாம். அவை படத்தில் அழகாகப் பொருந்தி, நாயகனின் காதில் கேட்கும் அமானுஷ்யக் குரல்களுக்கான நேர்த்தியான உருவங்களாக உள்ளன. அமெச்சூரான கிராஃபிக்ஸ் என்ற எண்ணம் எழாததற்குக் காரணம், ஒளிப்பதிவாளர் பாலாஜி ரங்...