32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
குறிச்சொல்

பிரபாஸ்

21 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன
அனுஷ்கா ஷெட்டியின் ‘காட்டி’ ட்ரைலர் – பிரபாஸ் வாழ்த்து Trailer முக்கியச் செய்தி
05/09/2025 Dinesh R 2 நிமிட வாசிப்பு

அனுஷ்கா ஷெட்டியின் ‘காட்டி’ ட்ரைலர் – பிரபாஸ் வாழ்த்து

அன்போடு “ஸ்வீட்டி” என்று அழைக்கப்படும் அனுஷ்கா ஷெட்டி, ‘காட்டி’ எனும் அதிரடியான ஆக்ஷன்-க்ரைம் டிராமாவில் மையக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தியாவின் சூப்பர் ஸ்டாரான பிரபாஸ் தனது சமூக வலைத்தளத்தில், காட்டி ட்ரைலர் குறித்துப் பட வெளியீட்டிற்கு முன் தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்து, நீண்டநாள் இணை நட்சத்திரமும் நண்பருமான அனுஷ்கா ஷெட்டிக்கு இதயம் கனிந்த குறிப்பை எழுதியுள்ளார். அவர், “காட்டி ரிலீஸ் ட்ரைலர் ரொம்பத் தீவிரமாகவும் சுவாரசியமாகவும் இருக்கிறது. இந்த சக்திவாய்ந்த கதாபாத்திரத்தில் உன்னைப் பார்க்கக் காத்திருக்கிறேன் ஸ்வீட்டி. […]

முழுமையாகப் படிக்க
செய்திகள் வரிசை (பக்கம் 1)
கண்ணப்பா விமர்சனம் | Kannappa review அயல் சினிமா

கண்ணப்பா விமர்சனம் | Kannappa review

கண்ணப்பர் எனும் சிவ பக்தரின் கதையை பாகுபலி போல் ஒரு பிரம்மாண்டமான புனைவுப் படமாக உருவாக்கியுள்ளனர். திண்ணன் எனும் வேட்டுவக் குல வீரன், கடவுள் நம்பிக்கை இல்லாமல் வளருகிறான். அவன் வசிக்கும் காட்டிலுள்ள வாயுலிங்கத்தை அபகரிக்க காளாமுகன் என்பவன் பெரும்படையுடன் வருகிறான். திண்ணனின் தந்தை நாதநாதன், தீவிலுள்ள ஐந்து இனக்குழுக்களயும் ஒன்றிணைத்து காளாமுகனை எதிர்க்க ஒன்றிணைக்கிறான். கைலாயத்தில் வாழும் சிவனோ, ருத்ரனை அனுப்பி திண்ணனைத் தடுத்தாட்கொண்டு, அவனைப் பக்திமானாக்குவதோடு, அவனது தீவிரமான பக்தியை உலகறியச் செய்வதோடு, தனிநபர் […]

28/06/2025 Dinesh R
பிரபாஸ்ஹனு – பிரம்மாண்டமாய்த் தொடங்கியது அயல் சினிமா

பிரபாஸ்ஹனு – பிரம்மாண்டமாய்த் தொடங்கியது

‘ரெபல் ஸ்டார்’ பிரபாஸ், இயக்குநர் ஹனு ராகவபுடி, மைத்ரி மூவி மேக்கர்ஸ் கூட்டணியில் தயாராகும் பான் இந்திய திரைப்படமான ‘பிரபாஸ்ஹனு’, ஆகஸ்ட் மாதத்தில் பிரம்மாண்டமாகத் தொடங்கப்பட்டது. கற்பனைக்கும் எட்டாத பிரம்மாண்டமான படைப்பாகத் தயாராகும் இந்தத் திரைப்படத்தை பான் இந்திய தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. பிரபாஸ் , ஹனு ராகவபுடி மற்றும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் முதன்முறையாக ‘பிரபாஸ் ஹனு’ எனும் இந்தப் படத்தில் இணைகிறார்கள். இந்தக் கூட்டணியின் படைப்பாற்றல் மற்றும் கூட்டு […]

20/08/2024 Dinesh R
தி ராஜா சாப் – பிரபாஸின் ரொமான்டிக் ஹாரர் காமெடி அயல் சினிமா

தி ராஜா சாப் – பிரபாஸின் ரொமான்டிக் ஹாரர் காமெடி

ரிபெல் ஸ்டார் பிரபாஸின் பான்-இந்தியப் படமான ‘தி ராஜா சாப்’ படத்திலிருந்து, ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் விதமாகத் தயாரிப்பாளர்கள் ஓர் அருமையான க்ளிம்ப்ஸ் வீடியோவை வெளியிட்டுள்ளனர். அதில் அசத்தலான வின்டேஜ் லுக்கில் இளமை துள்ளலுடன் ஜொலிக்கிறார் பிரபாஸ். ‘தி ராஜா சாப்’ திரைப்படம், ஏப்ரல் 10, 2025 அன்று உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது எனும் அதிகாரப்பூர்வ அறிவிப்பைத் தந்துள்ளனர். வின்டேஜ் காரில் காட்சியளிக்கும் பிரபாஸ், ரொமான்டிக் ஹாரர் காமெடி மூலம் அனைவரையும் வசீகரிக்கத் தயாராக இருக்கிறார். மாருதி, பிரபாஸை […]

31/07/2024 Dinesh R
பிரபாஸ் | ஆயிரம் கோடிகளில் வசூலாகும் புகழ்மிகு இந்திய நடிகர் அயல் சினிமா

பிரபாஸ் | ஆயிரம் கோடிகளில் வசூலாகும் புகழ்மிகு இந்திய நடிகர்

கல்கி கி.பி 2898 இல் நடித்த இந்தியாவின் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சன், பிரபாஸை ‘கடவுளுக்கு நிகரானவர்’ என்று அழைத்தது, ​​​​ பிரபாஸுக்கு கிடைத்த மிகப்பெரிய பாராட்டாகும். சமீபமாக பிரபாஸின் அபரிமிதமான புகழ் பிராந்திய எல்லைகளைக் கடந்து இந்தியா முழுமைக்குமான ஒரு மறுக்க முடியாத சூப்பர்ஸ்டாராக மாற்றியுள்ளது. படமோ தலைப்போ பிரம்மாண்டமோ, எதுவும் முக்கியமில்லை, பிரபாஸ் எனும் வெறும் பெயர் மட்டுமே திரையரங்கிற்குக் கூட்டம் கூட்டமாக ரசிகர்களைக் குவிக்கிறது. மிகக்குறைந்த பப்ளிசிட்டியுடன் அதிக கூட்டத்தை வரவழைக்கும் பிரபாஸின் திறமை, […]

27/07/2024 Dinesh R
மே 4 – இயக்குநர்கள் தினம் கொண்டாட்டம் அயல் சினிமா

மே 4 – இயக்குநர்கள் தினம் கொண்டாட்டம்

உலகிலேயே அதிக திரைப்படங்களை இயக்கி உலக சாதனை படைத்த பெருமைமிகு தெலுங்கு இயக்குநர் தாசரி நாராயண ராவ் அவர்களின் பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில், மே 4 ஆம் தேதியை “இயக்குநர்கள் தின”மாக அறிவித்து, தெலுங்கு இயக்குநர்கள் கடந்த ஐந்து வருடமாகக் கொண்டாடிவருகின்றனர். தெலுங்கு இயக்குநர்கள் சங்கத்திற்கு நலநிதி வழங்குவதே முக்கிய நோக்கம் என்றும், இந்த ஆண்டு “இயக்குநர்கள் தின” விழாவை வரலாறு காணாத வகையில் நடத்தவுள்ளதாகவும் தெலுங்கு திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தலைவர் பா. வீர சங்கர் […]

23/04/2024 Dinesh R
கல்கி 2898 AD யின் பிரம்மாண்ட உலகத்தைப் பற்றிய அறிமுக வீடியோ அனிமேஷனில் சினிமா

கல்கி 2898 AD யின் பிரம்மாண்ட உலகத்தைப் பற்றிய அறிமுக வீடியோ அனிமேஷனில்

பிரபல இயக்குநர் நாக் அஸ்வினின் சயின்ஸ் பிக்சன் பிரம்மாண்டமான ‘கல்கி 2898 AD’ படத்தின், பிரமாண்ட வெளியீட்டிற்காக பார்வையாளர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிக்கின்றனர். அமிதாப் பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன், மற்றும் திஷா பதானி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இந்தப் படம், பார்வையாளர்களை காலத்தின் மீது ஒரு பரபரப்பான பயணத்திற்கு அழைத்துச் செல்லும். இப்படத்தின் மீது நாடு முழுவதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்த நிலையில், தற்போது இந்த பிரமாண்ட படைப்பிலிருந்து, ஒரு அற்புதமான […]

06/04/2024 Inbaaraja
Top Hashtags on X in India: Rebel Star Prabhas stands No 1 இது புதிது

Top Hashtags on X in India: Rebel Star Prabhas stands No 1

Rebel star Prabhas stands out among all star heroes with numerous records and achievements. Whether it’s unique collaborations, smashing box office records, or extensive pan-global film projects, he consistently leads the pack. This has elevated Prabhas from a Tollywood sensation to a pan-Indian icon. His popularity was recently highlighted in X’s (formerly Twitter) list of […]

16/03/2024 Dinesh R
2024ல் நெட்ப்ளிக்ஸில் ஸ்டிரீமிங் செய்யப்படவிருக்கும் தெலுங்குப் படங்கள் திரைச் செய்தி

2024ல் நெட்ப்ளிக்ஸில் ஸ்டிரீமிங் செய்யப்படவிருக்கும் தெலுங்குப் படங்கள்

மகர சங்கராந்தி தினத்தை ஒட்டி நெட்ஃபிலிக்ஸ் நிறுவனம் இந்த 2024 ஆம் ஆண்டுக்கான எதிர்பார்க்கப்படும் மாஸ் தெலுங்கு படங்களின் ஸ்லாட்டை அறிவித்துள்ளது! இந்த வருடம் , 2024ல் திரையரங்க வெளியீட்டிற்குப் பிறகு, 12 தெலுங்கு படங்கள் நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆக இருக்கிறது. நெட்ஃபிலிக்ஸ் நிறுவனம் இந்த 2024 ஆம் ஆண்டிற்கான ஓடிடி உரிமம் பெற்ற 12 தெலுங்கு படங்கள் குறித்து அறிவித்துள்ளது. இந்தத் திரைப்படங்கள் திரையரங்க வெளியீட்டுக்குப் பிறகு இந்த ஆண்டு நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் […]

19/01/2024 Inbaaraja
ஐந்து வருடங்களை  நஜீப் கதாபாத்திரத்திற்காக அர்ப்பணித்துள்ளேன். – ப்ருதிவிராஜ் சினிமா

ஐந்து வருடங்களை நஜீப் கதாபாத்திரத்திற்காக அர்ப்பணித்துள்ளேன். – ப்ருதிவிராஜ்

பிராந்தியத்தை தாண்டி, மாநில எல்லையை தாண்டி இந்திய நடிகர்கள் ஒவ்வொருவரும் மற்றவர்களின் படத்திற்கு விளம்பரம் செய்து உதவுவது மிகவும் ஆரோக்கியமான விஷயம். அந்த வகையில், ரசிகர்கள் நீண்ட நாட்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கும் தேசிய விருது பெற்ற பிளெஸி இயக்கத்தில், பிரித்விராஜ் சுகுமாரன் நடித்துள்ள ‘தி கோட் லைஃப்’ படத்தின் முதல் பார்வையை ’பாகுபலி’ மூலம் இந்திய ரசிகர்கள் எல்லோர் மனதையும் கவர்ந்த நடிகர் பிரபாஸ் வெளியிட்டுள்ளார். இந்தப் படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் ஏப்ரல்10, 2024 […]

11/01/2024 Inbaaraja
உயிர் நண்பன் பரம எதிரியான பரமபத விளையாட்டா…?? சலார் பார்ட் 1 சீஸ் ஃபயர் – 2வது டிரைலர் சினிமா

உயிர் நண்பன் பரம எதிரியான பரமபத விளையாட்டா…?? சலார் பார்ட் 1 சீஸ் ஃபயர் – 2வது டிரைலர்

‘கே ஜி எஃப் சீரிஸ்’ போன்ற பிரம்மாண்டமான பிளாக் பஸ்டர் ஹிட்டுகளை வழங்கிய ஹோம்பாலே ஃபிலிம்ஸ் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ‘சலார்’ படத்தின் இரண்டாவது ட்ரெய்லரை தனித்துவமான பாணியில் வெளியிட்டு, வித்தியாசமான சினிமா அனுபவத்தை வழங்கி உள்ளது. இந்த முன்னோட்டம்- அடக்க இயலாத பிரபாஸுடன் தொடங்குகிறது. இத்தகைய காட்சிகளில் வழங்கப்படும் மயக்கும் அழகியல் காட்சிகள் மற்றும் துடிப்பான சண்டை காட்சிகள் ரசிகர்கள் மற்றும் திரை ஆர்வலர்களை உற்சாகப்படுத்தி இருக்கிறது.‌ இந்தியா முழுவதும் 5000 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகவிருக்கும் […]

20/12/2023 Inbaaraja
சலார்: பார்ட் 1: சீஸ்ஃபயர் படத்திற்காக தனது உருமாற்றம் குறித்து மனம் திறந்த பிரபாஸ் சினிமா

சலார்: பார்ட் 1: சீஸ்ஃபயர் படத்திற்காக தனது உருமாற்றம் குறித்து மனம் திறந்த பிரபாஸ்

ஹொம்பாலே பிலிம்ஸ், சந்தேகத்திற்கு இடமின்றி இந்திய திரைப்படத் துறையில் மிகவும் மதிப்புமிக்க திரைப்படங்களை உருவாக்கும் முக்கியமான தயாரிப்பு நிறுவனமாக வளர்ந்துள்ளது. இந்நிறுவனத்தின் தயாரிப்பில், பாகுபலி நட்சத்திரம் பிரபாஸ் நடிப்பில் மற்றும் கேஜிஎஃப் இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் இந்தியாவே எதிர்பார்க்கும் படமாக சலார்: பார்ட் 1: சீஸ்ஃபயர் பிரமாண்ட வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது. சமீபத்திய நேர்காணலில், பான் இந்தியன் ஸ்டார் பிரபாஸ் படம் குறித்துக் கூறுகையில் கதபாத்திரங்களுக்கிடையான உணர்வுப்பூர்வமான போராட்டத்தைச் சொல்லும் உணர்ச்சிகரமான படைப்பாக இப்படம் இருக்கும் […]

16/12/2023 Inbaaraja
திருப்பதியில் ‘ஆதி புருஷ்’ படக்குழு சினிமா

திருப்பதியில் ‘ஆதி புருஷ்’ படக்குழு

நடிகர் பிரபாஸ் நடிப்பில் தயாராகி இருக்கும் ‘ஆதி புருஷ்’ படத்தின் பிரத்தியேக முன்னோட்டம் ஆன்மீக தலமான திருப்பதியில், நடிகர் பிரபாஸின் ரசிகர்களின் முன்னிலையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. உலகம் முழுவதும் பிரபலமான திருப்பதியில், பிரம்மாண்டமான முறையில் ‘ஆதி புருஷ்’ திரைப்படத்தின் பிரத்தியேக முன்னோட்ட வெளியீட்டு விழா நடைபெற்றது. லட்சக்கணக்கில் திரண்டிருந்த பிரபாஸின் ரசிகர்களின் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், நடிகர்கள் பிரபாஸ், கிருத்தி சனோன், சன்னி சிங், தேவதத்தா நாகே, தயாரிப்பாளர்கள் பூஷன் குமார், இயக்குநர் ஓம் ராவத், […]

08/06/2023 Dinesh R
நியூயார்க் சர்வதேசத் திரைப்பட விழாவில் ‘ஆதி புருஷ்’ அயல் சினிமா

நியூயார்க் சர்வதேசத் திரைப்பட விழாவில் ‘ஆதி புருஷ்’

அமெரிக்காவில் நடைபெறவிருக்கும் டிரிபெகா சர்வதேசத் திரைப்பட விழாவில் ஜூன் 13ஆம் தேதியன்று பிரபாஸ் நடித்திருக்கும் ‘ஆதி புருஷ்’ எனும் திரைப்படம் பிரத்தியேகமாகத் திரையிடப்படுகிறது. இதன் மூலம் ‘ஆதி புருஷ்’ தனது உலகளாவிய அரங்கேற்றத்தைத் தொடங்குகிறது. இயக்குநர் ஓம் ராவத், தயாரிப்பாளர் பூஷன் குமார், நட்சத்திர நடிகர் பிரபாஸ் ஆகியோரின் கூட்டணியில் தயாராகி இருக்கும் ‘ஆதி புருஷ்’, டிரிபெகா சர்வதேசத் திரைப்பட விழாவில் பிரத்தியேகமாகத் திரையிடப்படுவதன் மூலம் இந்திய சினிமா, உலக அரங்கில் தன்னுடைய அடுத்த கட்ட முன்னகர்வை […]

19/04/2023 Dinesh R
‘தேன்க் யூ டார்லிங் பிரபாஸ்” – இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலி இது புதிது

‘தேன்க் யூ டார்லிங் பிரபாஸ்” – இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலி

எஸ்.எஸ்.ராஜமௌலியின் இயக்கத்தில் பிரபாஸ் நடித்திருந்த பாகுபலி திரைப்படம் இந்தியத் திரையுலகில் புதிய சரித்திரம் படைத்தது. பிரபாஸின் நட்சத்திர அந்தஸ்து வானாளவு உயர்ந்தது. பாகுபலியின் மூலம் திரையில் ஒரு பிரம்மாண்டத்தைக் காட்டிய இந்த நடிகர்-இயக்குநர் கூட்டணியின் நட்புறவு, படத்தைத் தாண்டியும் அவ்வப்போது ரசிகர்களைத் தொடர்ந்து ஆச்சர்யப்படுத்தி வருகின்றது. அப்படி சமீபத்தில், நடிகர் பிரபாஸ், இயக்குநர் ராஜமௌலியை வாழ்த்திய இந்த சம்பவமும் இணைந்துள்ளது. எஸ்.எஸ்.ராஜமௌலி, நியூயார்க் பிலிம்ஸ் கிரிட்டிக்ஸ் சர்க்கிள் விருதையும், LA பிலிம்ஸ் கிரிட்டிக்ஸ் விருதுகளையும் வென்றார். இதற்காக […]

14/12/2022 Dinesh R