32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

பிரபாஸ்ஹனு – பிரம்மாண்டமாய்த் தொடங்கியது

Dinesh R சேலம் Published: 20/08/2024 3 நிமிட வாசிப்பு Updated: 23/08/2024 அயல் சினிமா
எழுத்து அளவு:

‘ரெபல் ஸ்டார்’ பிரபாஸ், இயக்குநர் ஹனு ராகவபுடி, மைத்ரி மூவி மேக்கர்ஸ் கூட்டணியில் தயாராகும் பான் இந்திய திரைப்படமான ‘பிரபாஸ்ஹனு’, ஆகஸ்ட் மாதத்தில் பிரம்மாண்டமாகத் தொடங்கப்பட்டது.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

கற்பனைக்கும் எட்டாத பிரம்மாண்டமான படைப்பாகத் தயாராகும் இந்தத் திரைப்படத்தை பான் இந்திய தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. பிரபாஸ் , ஹனு ராகவபுடி மற்றும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் முதன்முறையாக ‘பிரபாஸ் ஹனு’ எனும் இந்தப் படத்தில் இணைகிறார்கள். இந்தக் கூட்டணியின் படைப்பாற்றல் மற்றும் கூட்டு நிபுணத்துவம் ஆகியவை ஒருங்கிணைக்கப்படுவதால், இந்தப் படைப்பின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. மேலும் பிரம்மாண்டமான பங்களிப்புடன் உருவாகும் இந்த #பிரபாஸ் ஹனு படைப்பின் மூலம், சினிமா ரசிகர்களுக்கு இதற்கு முன் கிடைத்திராத புதிய அனுபவத்தை வழங்கத் திட்டமிட்டுள்ளது .

ஒவ்வொரு வரலாற்று நிகழ்வும், நம் உணர்ச்சிகள் மற்றும் எண்ணங்களைப் பிரதிபலிப்பதில்லை. ஆனால் இந்தக் கதை, ஒரு போர் வீரன், தனது தாய் மண்ணின் மக்களுக்காக, அவர்களுக்கு நீதியை வழங்குவதற்காக எழுதப்பட்டிருக்கிறது.

1940களின் பின்னணியில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த வரலாற்று புனைவுக்கதை அல்லது மாற்று வரலாறு உலகின் பார்வையில் இருந்து மறைத்து வைக்கப்பட்ட அல்லது புதைக்கப்பட்ட அநீதிகளுக்கும், மறந்து போன உண்மைகளுக்கும், ஒரே பதில் போர் என நம்பிய ஒரு சமூகத்தின் நிழலில் இருந்து எழுந்த ஒரு போர் வீரனின் கதை.

இந்தத் திரைப்படத்தில் பிரபாஸிற்கு ஜோடியாக நடிகை இமான்வி நடிக்கிறார். இவர்களுடன் புகழ்பெற்ற பிரபல நடிகர்களான மிதுன் சக்கரவர்த்தி மற்றும் ஜெயப்பிரதா ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். உலகளாவிய தயாரிப்பு மதிப்பு மற்றும் சர்வதேச தரம் வாய்ந்த நவீன தொழில்நுட்பங்களுடன் அதிக பொருட்செலவில் இந்தத் திரைப்படம் தயாராகிறது.

பிரபாஸ்ஹனு என தற்காலிகமாகப் பெயரிடப்பட்டிருக்கும் இந்தத் திரைப்படத்தின் தொடக்க விழா இன்று ஹைதராபாத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இவ்விழாவில் படக்குழுவினருடன் பிரபாஸ் மற்றும் இமான்வி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவிசங்கர் ஆகியோர் இந்தத் திரைப்படத்தைத் தயாரிக்கிறார்கள். சுதீப் சட்டர்ஜி ISC ஒளிப்பதிவு செய்யும் இந்தத் திரைப்படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார். படத்தொகுப்பு பணிகளை கோத்தகிரி வெங்கடேஸ்வர ராவ் கவனிக்க, தயாரிப்பு வடிவமைப்பு பணிகளை ராமகிருஷ்ணா – மோனிகா ஆகியோர் இணைந்து மேற்கொள்கிறார்கள்.

இந்தத் திரைப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.

நடிகர்கள்:-

பிரபாஸ்
இமான்வி
மிதுன் சக்கரவர்த்தி
ஜெயப்பிரதா

தொழில்நுட்பக்குழு:-

எழுத்து & இயக்கம் – ஹனு ராகவபுடி
தயாரிப்பு நிறுவனம் – மைத்ரி மூவி மேக்கர்ஸ்
தயாரிப்பாளர்கள் – நவீன் யெர்னேனி & ஒய். ரவிசங்கர்
ஒளிப்பதிவு – சுதீப் சட்டர்ஜி ISC
இசை – விஷால் சந்திரசேகர்
தயாரிப்பு வடிவமைப்பாளர்கள் – ராமகிருஷ்ணா & மோனிகா
படத்தொகுப்பு – கோத்தகிரி வெங்கடேஸ்வரராவ்
ஆடை வடிவமைப்பு – ஷீத்தல் இக்பால் சர்மா – டி. விஜய் பாஸ்கர்
வி.எஃப்.எக்ஸ் – ஆர் சி கமலா கண்ணன்
விளம்பர வடிவமைப்பு – அனில் – பானு
மக்கள் தொடர்பு – வம்சி -சேகர் & யுவராஜ்
மார்க்கெட்டிங் – ஃபர்ஸ்ட் ஷோ

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.