32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

“அவர் நிஜமான லீடர்” – கலைப்புலி S. தாணு | லெஜண்ட் சரவணன்

Dinesh R சேலம் Published: 31/03/2026 3 நிமிட வாசிப்பு சினிமா
எழுத்து அளவு:

லெஜண்ட் சரவணன் முதன்மை வேடத்தில் நடிக்க, ஆர்.எஸ். துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘லீடர்’ திரைப்படம் வரும் ஏப்ரல் 3ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் இசை மற்றும் ஆக்ஷ‌ன் டீசர் வெளியீடு சென்னையில் பிரம்மாண்டமாக‌ நடைபெற்றது.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு, “லெஜெண்ட் சரவணன் நிஜமாகவே லீடர் தான்.‌ பல கதைகளை அவர் மனதில் வைத்துக் கொண்டிருக்கிறார் என்பதை அவருடன் பழகும் போது தெரிந்து கொண்டேன். பல கதாபாத்திரங்களை உருவாக்கி வைத்திருக்கிறார். அவர் என்னிடம் புரூஸ்லீயின் கதை ஒன்றைச் சொன்னார். அந்தக் கதைக்காக சிக்ஸ் பேக் வைத்துக் கொள்ளும் அளவிற்குத் தயார்ப்படுத்திக் கொள்வேன் என்று சொன்னார். அப்போது அவரை அழைத்துக் கொண்டு மிகப்பெரிய இயக்குந‌ரிடம் சென்று அது போன்ற ஒரு படத்தை உருவாக்குங்கள் என்ற பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்டேன். அவருடைய எண்ணமும் பணியும் பெரிய வெற்றியைப் பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்” என்றார்.

லெஜெண்ட் சரவணன், “‘லெஜெண்ட்’ படத்தின் கதை என்னவென்றால் ஒரு அப்பாவியான அப்பாவும் பிள்ளையும், மிகவும் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். திடீரென்று அவர்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய கேங்ஸ்டர் கும்பல் ஒன்று நுழைகிறது, அதற்குப் பிறகு நடக்கும் விஷயங்களை இயக்குந‌ர் துரை செந்தில்குமார் இன்றைய இளைய தலைமுறையினருக்குப் பிடிக்கும் வகையில் நேர்த்தியாகவும், அழகாகவும் இயக்கியிருக்கிறார். இப்படத்தில் அவர் தன்னை முழுதாக அர்ப்பணித்துக் கொண்டார். எவர் ஒருவர் வேலையில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டு வேலை செய்கிறார்களோ அந்த வேலை அற்புதமாக அமையும். இந்த படமும் மிகப் பிரம்மாண்டமாக இருக்கிறது.‌

இந்த படத்தில் குத்துப் பாடல்கள் கிடையாது. ஆனால் இந்த படத்தில் கதையுடன் பயணப்படுவது போல் பாடல்கள் இருக்கின்றன, அதற்கான வரிகளும் இருக்கின்றன‌. இசையமைப்பாளர் ஜிப்ரான் மிகப் பிரமாதமாக இசையமைத்திருக்கிறார்.‌

இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஜார்ஜியா, ஜெய்ப்பூர், ஊட்டி, தூத்துக்குடி, சென்னை ஆகிய இடங்களில் நடைபெற்றது. கிளைமாக்ஸ் சண்டைக் காட்சியை ஒரு ட்ரெயினில் படமாக்கிக் கொண்டிருந்தோம். குறுகலான இடத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட வெளிநாட்டுச் சண்டைக் கலைஞர்களுடனும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களுடனும் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது என்னுடைய தயாரிப்பு நிர்வாகியை அழைத்து, ‘இங்கு எத்தனை ஆம்புலன்ஸ் இருக்கிறது?’ என்று கேட்டேன். ஒன்றுதான் என்றார். உடனடியாக, ‘மேலும் இரண்டு அல்லது மூன்று ஆம்புலன்ஸ்களை வரவையுங்கள். ஏனென்றால் இங்கு யாருக்கு எப்படி எங்கு அடிப்படும் என்று தெரியவில்லை. எனக்குக் கூட அடிபடலாம் அதனால் தயாராக இருக்க வேண்டும்’ என்று சொன்னேன். ஆனால் கடவுள் அருளால் அந்த க்ளைமேக்ஸ் சண்டைக்காட்சியில் யாருக்கும் பெரிதாக அடிப்படவில்லை. பத்தாவது நாளில் எனக்குக் காலில் லேசாக அடிபட்டது, தொடர்ந்து படப்பிடிப்பை நடத்தலாமா, வேண்டாமா, என்ற நிலை ஏற்பட்டது. என்னுடன் பணியாற்றும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை மனதில் வைத்து அவர்களைக் காத்திருக்க வைக்க‌ வேண்டாம், கூடாது என்பதற்காக உடனடியாக முதலுதவி நிவாரண சிகிச்சையை எடுத்துக்கொண்டு படப்பிடிப்பில் தொடர்ந்து கலந்து கொண்டேன். இதற்கான ஆற்றல் கடவுளின் ஆசீர்வாதத்தாலும் இயக்குந‌ர் உள்ளிட்ட குழுவினர் கொடுத்த உற்சாகத்தாலும் வந்தது. இதற்காக அவர்களுக்கு மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படத்தை பார்த்த தனுஷ், வெற்றிமாறன் போன்றோர் படம் பிரம்மாண்டமானதாக இருக்கிறது என்று பாராட்டு தெரிவித்தார்கள்.

‘கடவுள் எந்த உதவியையும் நேரடியாக செய்வது இல்லை, எல்லா நல்லதும் நல்ல மனிதர்கள் மூலமாக தான் நடக்கும். நாம அவங்கள தான் நம்பணும். நீங்க என்னை நம்புங்க’ என இந்தப் படத்தில் ஒரு வசனம் இடம் பிடித்திருக்கிறது. அது எனக்கு மிகவும் பிடித்த வசனம். இந்தப்படம் கண்டிப்பாக உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும்” என்றார்.

லீடர் படத்தை லெஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ் பிரமாண்டமாகத் தயாரித்துள்ளது. வரும் ஏப்ரல் 3ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.