32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

ரெமோ – திருட்டைத் தடுக்க புது யுக்தி

Dinesh R சேலம் Published: 23/08/2016 1 நிமிட வாசிப்பு Updated: 27/09/2016 சினிமா
எழுத்து அளவு:

Remo ready

ரெமோ மிகப் பெரும் வெற்றியைப் பெரும் என மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளது படக்குழு.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

பொதுவாகவே ஒரு திரைப்படமானது அதன் வெளியீட்டு தேதிக்கு ஒரு நாள் முன்னதாகவே வெளி நாடுகளில் வெளியிடப்படும். ஆனால் தற்போது ரெமோ படத்தின் பாதுகாப்பு கருதி அதை சற்றே மாற்றி இருக்கிறார் தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா. “ஒரு நாள் முன்னதாக நாம் வெளிநாடுகளில் திரைப்படத்தை வெளியிடுவதால், வெகு சுலபமாக அந்தப் படமானது வெளியே கசிந்து விடுகிறது. ஆனால் ஒரே நாளில், ஒரே சமயத்தில் இந்தியா உட்பட மற்ற வெளி நாடுகளிலும் திரைப்படத்தை வெளியிட்டால், அப்படி நடக்க வாய்ப்புகள் குறைவு.

இது நம்முடைய வாழ்க்கை!! எந்தவித அச்சமும் இன்றி இதைப் பாதுகாக்கத் தேவையான அனைத்து வழி வகைகளையும் நாம் உருவாக்க வேண்டும்” என்று கூறுகிறார் தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா. திரைப்படத் தயாரிப்புத் துறையில் தனக்குக் கிடைத்த அனுபவங்கள் மூலம், ஒரு படத்தை எப்படி விளம்பரப்படுத்த வேண்டும் என்பதை நன்கு அறிந்தவர் 24 ஏஎம் ஸ்டுடியோஸின் உரிமையாளர் ஆர்.டி.ராஜா. திரையரங்கை விட்டு படம் வெளியே செல்லாமல் பாதுகாக்க அவர் வகுத்திருக்கும் யுக்தி சித்திக்கட்டும்.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.