32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
Dinesh R
செய்தியாளர் விவரம் சேலம்

Dinesh R

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

4024 செய்திகள் எழுதப்பட்டுள்ளன வலைத்தளம்
செய்திகள் வரிசை (பக்கம் 217)
கவியோகி சுத்தானந்த பாரதியார் சினிமா

கவியோகி சுத்தானந்த பாரதியார்

மாயலோகத்தில்.. 1958இல் நாகர்கோவிலில் தமிழ் எழுத்தாளர் மாநாடு ஒன்று நடைபெற்றது. எழுத்தாளர்கள் பதாகையெல்லாம் பிடித்துக் கொண்டு, கோஷங்கள் எழுப்பியபடி ஊர்வலமாக வந்தார்கள். அவர்கள் மத்தியில் காவி உடையணிந்து, தலையில் காவித்துணி முண்டாசுடன் கூடிய, நரைத்த தாடியுடன் கூடிய தோற்றத்தில் ஒருவரும் நடந்து வந்தார். அவரைப் பார்த்ததும் இவருக்கு இங்கு என்ன வேலை என்று தான் தோன்றிற்று. அவர் யார் என்பதுவும் எனக்குத் தெரிந்திருக்கவில்லை. நல்ல வேளையாக எனதருகிலேயே ஒரு தமிழ் எழுத்தாளர் வசித்து வந்தார். அவரிடம் இவரைப் […]

23/12/2015 Dinesh R
சந்திரஹாசம்  – ஓர் அலசல் கட்டுரை

சந்திரஹாசம் – ஓர் அலசல்

அதென்ன சந்திரஹாசம்? சட்டென ஈர்க்காத இந்தத் தலைப்பை ஏன் விகடன் கிராஃபிக்ஸ் தேர்ந்தெடுத்தனர்? சந்திரஹாசம் என்பது பாண்டியர்களுடைய வீர வாளின் பெயர் (இது சந்திரஹாசம் இணையத்தள முன்னுரையில் ஏற்கெனவே குறிப்பிடப்பட்டிருந்தது). புத்தகத்தின் ஆரம்பப் பக்கங்களே ஏமாற்றத்தைத் தருகின்றன. ‘இது தான் குளியலறை. இங்கே குளிப்பார்கள்’ என குளியலறை காட்டி யாராவது சொன்னால் உங்களுக்கு எப்படியிருக்கும்? அப்படித்தான் சித்திரங்களுக்கு விளக்கவுரை போட்டு ஓவியர், வாசகர் என இருவரையும் அவமானப்படுத்துக்கிறார்கள். அதை விட கொடுமை, ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ்க்குப் பயன்படுத்தப்பட்டிருக்கும் வீங்கிய […]

21/12/2015 Dinesh R
தங்கமகன் விமர்சனம் சினிமா

தங்கமகன் விமர்சனம்

தன் தந்தை மீது விழும் பழியை எப்படி தங்கமகனான தமிழ் கலைகிறான் என்பதே படத்தின் கதை. ஹேமா டிசோசாவாக எமி ஜாக்சன். முடியைத் தூக்கிச் சீவிய முன் நெற்றியோடு, சுடிதார் அணிந்து வரும் அவர் மிக அந்நியமாகத் தெரிகிறார். ‘ஹீரோ ஃப்ரெண்ட்’ ஆக வரும் சதீஷ் முதற்பாதி கலகலப்புக்கு உதவுகிறார். தனுஷ் மீசையை மழித்தால் கல்லூரி மாணவர்; மீசை வைத்தால் பொறுப்பான மகனும் மனிதனும் ஆகி விடுகிறார். ஆனால் சதீஷின் உடல் வாகிற்கு, அத்தகைய  மாற்றம் பொருந்தவில்லை. […]

18/12/2015 Dinesh R
பீப் பாடலும் டூப் சீற்றமும் கட்டுரை

பீப் பாடலும் டூப் சீற்றமும்

நல்ல பொம்பள எவளுமிங்கு இல்லவே இல்ல.. கெட்ட ஆம்பள எவனுமிங்கில்ல.. குட் பொம்பள எவளுமிங்கில்ல.. ஃப்ராட் ஆம்பள எவனுமிங்கில்ல.. ஆளைப் பார்த்துத்தானே பொண்ணு தூண்டில் போடுவா.. அவளோட ஆச தீர, உன்ன விலகி ஓடு வா இந்தப் பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள படம் “நாலுபேரு நாலுவிதமா பேசுவாங்க”. பாடலின் தொடக்க வரி, ‘சரக்கடிச்சும் தானே போதை ஏறல’. பாடியவர் கானா பாலா. எழுதியவர் யுகபாரதி. இசையமைத்தவர் ரிஷால் சாய். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில், மூன்று […]

17/12/2015 Dinesh R
ஈட்டி விமர்சனம் சினிமா

ஈட்டி விமர்சனம்

தனது பலவீனத்தை, முறையான பயிற்சியின் மூலமாக எதிர்கொண்டு விருப்பப்பட்ட துறையில் புகழ் சாதிக்கிறானா இல்லையா என்பது தான் கதை. புகழாக அதர்வா. குறி தப்பாது காற்றைக் கிழித்துக் கொண்டு செல்லும் ஈட்டி போல் அவரது உடம்பு கச்சிதமாக உள்ளது. நாயகன் என்பதால் வென்று விடுவான் என்ற சினிமாத்தனத்தை மீறி, இந்த முயற்சிக்கு வெல்லாமல் எப்படி என்ற உணர்வைத் தருவது தான் அதர்வாவின் வெற்றி. வசன உச்சரிப்பின் போது, கடைசி வார்த்தையைக் கத்தரித்தது போல் பேசுவார். இப்படத்தில், அதர்வாவின் […]

13/12/2015 Dinesh R
இஞ்சி இடுப்பழகி விமர்சனம் சினிமா

இஞ்சி இடுப்பழகி விமர்சனம்

குண்டாய் இருக்கிறார் ஸ்வீட்டி. அதனால் அவரது திருமணம் தள்ளிப் போகிறது. எப்படியாவது தன் மகளின் எடையை, மிகக் குறைந்த நாட்களிலேயே குறைத்து விடவேண்டுமென ‘ஜீரோ சைஸ்’-இல் சேர்க்கிறார் ராஜேஸ்வரி. பின் என்னாகிறது என்பதுதான் படத்தின் கதை. படம் தொடங்கிய கொஞ்ச நேரத்திலேயே, இது நிறைய தெலுங்குப் படம் கொஞ்சமே கொஞ்சம் மட்டும்தான் தமிழ்ப்படம் என்ற புரிதல் ஏற்பட்டு விடுகிறது. அதாவது க்ளோஸ்-அப் ஷாட்களில் ஒட்டும் கதாபாத்திரங்களின் உதடு, வைட் ஷாட்களில் ஒட்டாமல் போகிறது. ‘இது தமிழ்ப்படமும் தான்’ […]

28/11/2015 Dinesh R
உப்பு கருவாடு விமர்சனம் சினிமா

உப்பு கருவாடு விமர்சனம்

சினிமாவைத் தவிர வேறொன்றினை அறியாத சந்திரனுக்கு, படம் இயக்க காசிமேடு தயாரிப்பாளர் ஒருவர் கிடைக்கிறார். பல சிக்கில்களுக்கு மத்தியில், சந்திரனால் அந்தப் படத்தை இயக்க முடிந்ததா இல்லையா என்பது தான் படத்தின் கதை. ராதாமோகனின் ஆஸ்தான நடிகர்களில் ஒருவரான குமரவேல் தான் படத்தின் நாயகன். அவர் பீடி பிடித்துக் கொண்டே முதற்பாதி படத்தில் பட்டும் படாமலும் திரையில் தோன்றினாலும், இரண்டாம் பாதியில் ஒட்டுமொத்த படத்துக்கே தான் தான் நாயகனென கருணாகரனை மிக இலகுவாக முந்தி விடுகிறார். மாஞ்சா என்ற […]

27/11/2015 Dinesh R
சாகசக் குற்றவாளிகளைத் தேடி.. அயல் சினிமா

சாகசக் குற்றவாளிகளைத் தேடி..

ஸ்பெக்டர் படத்துடன் பாயிண்ட் பிரேக் படத்தின் ட்ரெயிலரைப் பெரிய அளவில் வெளியிட்டுள்ளனர் PVR பிக்சர்ஸ். நவம்பர் 20 ஆம் தேதி முதல். இந்தியாவெங்கும் 500 திரையரங்குகளில் ட்ரெயிலர் வெளியிடப்பட்டுள்ளது. ஒரு ஹாலிவுட் படத்தின் ட்ரெயிலர், இது போன்று அதிக திரையில் பிரம்மாண்டமான முறையில் வெளியிடப்படுவது இதுவே முதல் முறை. யூட்டா எனும் இளம் FBI அதிகாரி, குற்றங்களை அதீத சாகசத்துடன் இணைத்துச் செய்யும் விளையாட்டுக் குழுவைத் தேடிச் செல்வது தான் படத்தின் கதை. இதுவரை வந்த சாகசப் […]

25/11/2015 Dinesh R
ஸ்பெக்டர் விமர்சனம் அயல் சினிமா

ஸ்பெக்டர் விமர்சனம்

ஸ்கைஃபாலில் விதைத்த எதிர்பார்ப்பை மிக விரிவாகப் பூர்த்தி செய்துள்ளார் சாம் மெண்டீஸ். இதுவரை பார்த்து வந்த 007 படங்களின் இலக்கணத்தை ஸ்கைஃபால் படத்தில் உடைத்திருந்தார் சாம் மெண்டீஸ் எனும் மிதவாதி. இப்படத்தில் ஜேம்ஸ் பாண்ட் படங்களின் இலக்கணத்தில் கவனம் செலுத்தியிருந்தாலும், அது அளவுக்கு மீறாமல் பார்த்துக் கொண்டுள்ளார். உதாரணத்திற்கு, வழக்கமான கார் சேஸ் (chase) படத்தில் உண்டு எனினும் அந்த அதி நவீன காரை உருக்கலைக்காமலோ, வெடித்துச் சிதற விடாமலோ நீரில் மென்மையாக மூழ்க வைக்கிறார். வில்லன் […]

21/11/2015 Dinesh R
ஒருநாள் இரவில் விமர்சனம் சினிமா

ஒருநாள் இரவில் விமர்சனம்

போதையில் சபலத்துக்கு ஆட்படும் ஒரு நடுத்தரக் குடும்பத்தினன், ஒருநாள் முழுவதும் அனுபவிக்கும் மான ரோஷப் பதற்றம்தான் படத்தின் கதை. 2012 இல் வெளியான ‘ஷட்டர்’ எனும் மலையாளப் படத்துக்கு முறைப்படி உரிமை வாங்கி, ரீமேக் செய்து தமிழ்ப் படமாக வழங்கியுள்ளார் இயக்குநர் விஜய். இசை, பாகுபலியைத் தொடர்ந்து, சத்யராஜின் மற்றுமொரு பிரம்மாண்டப் பரிணாமமாக அவர் நடித்திருக்கும் சேகர் கதாபாத்திரத்தைச் சொல்லலாம். அவரின் தவிப்பும் பதற்றமும் பார்வையாளரையும் பீடிக்கிறது. அவருக்கு ஏற்படும் கோபம், அதாவது மகள் மீதான கோபமன்று, உடனிருப்போரின் சுயரூபம் […]

21/11/2015 Dinesh R
அஞ்சல – இரட்டை வேடங்களில் பசுபதி சினிமா

அஞ்சல – இரட்டை வேடங்களில் பசுபதி

“ஒரு டீக்கடையின் வரலாறுதான் அஞ்சல படத்தின் கதை. அந்த டீக்கடையும், அதைச் சுற்றியுள்ள மனிதர்களையும் பற்றிய கதை” என்றார் இயக்குநர் தங்கம் சரவணன். “நான் நடித்த படங்களிலேயே, என் மனதுக்கு மிகவும் நெருக்கமான சில படங்களில் இதுவும் ஒன்னு” என்றார் பசுபதி. தந்தை, மகன் என இரு வேடங்களில் பசுபதி நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சின்னக் கவுண்டர், சிங்கார வேலன், எஜமான் போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய ஆர்.வி.உதயக்குமார், இப்படத்தில் நாயகியின் தந்தையாக நடித்துள்ளார். “ஷூட்டிங் ஸ்பாட்லயே, […]

19/11/2015 Dinesh R
விமல் – நந்திதா – அஞ்சல சினிமா

விமல் – நந்திதா – அஞ்சல

பிரபல சண்டை இயக்குநர் திலிப் சுப்புராயன் தயாரிப்பில், விமலுக்கு ஜோடியாக நந்திதா நடிக்கும் அஞ்சல படத்தின் விநியோக உரிமையைப் பெற்று இருப்பவர் ஆரா (Auraa) சினிமா மகேஷ் கோவிந்தராஜ். நடிகர் விமல் உடைய படங்களுக்கு விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள், மற்றும் ரசிகர்கள் இடையே என்றுமே ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். சகல தரப்பினரையும் திருப்தி செய்யும் படமாக அவரது படம் இருக்கும் என்ற கணிப்பை அவர் என்றுமே பொய்க்க விட்டதில்லை. அந்த வகையில் தங்கம் சரவணன் இயக்கத்தில் உருவாகும் […]

17/11/2015 Dinesh R
தூங்கா வனம் விமர்சனம் சினிமா

தூங்கா வனம் விமர்சனம்

இரவில் தூக்கத்தைத் தொலைத்தவர்கள் உல்லாசமாய் இருக்கும் விடுதியில், திவாகரின் மகனைக் கடத்தி வைக்கின்றனர். திவாகர் எப்படி தன் மகனை மீட்கிறார் என்பதே படத்தின் கதை. மீண்டும் ஓர் உத்தம அப்பா கதாபாத்திரத்தில் கமல் ஹாசன். பனிச் சுமையின் பாதிப்பு காரணமாக மனைவி விட்டுப் பிரிந்த கழிவிரக்கத்தில் உழல்பவர். கமலுக்கு, இத்தகைய கதாபாத்திரம் தண்ணீர் பட்டபாடாகி விட்டாலும். ஒவ்வொரு முறையும் வித்தியாசம் காட்ட அவர் தவறுவதே இல்லை. உதாரணமாக, ‘ஜீன்ஸு, ஜீன்ஸு.. டி.என்.ஏ.’ என அவர் மகனை நொந்து […]

11/11/2015 Dinesh R
வேதாளம் விமர்சனம் சினிமா

வேதாளம் விமர்சனம்

மீண்டுமொரு ‘தல’ தீபாவளி. தன் தங்கைக்காகவே வாழும் பாசக்கார அண்ணன் கணேஷ். யாரிந்த கணேஷ், தன் தங்கைக்காக என்ன என்னெவெல்லாம் செய்கிறான் என்பதே படத்தின் கதை. வீரம் போலில்லாமல், இயக்குநர் சிவா கதைக்குக் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கிறார். எனினும் முதல் பாதியின் அசுவாரசியம் முகத்தில் அடிக்கிறது. கதைக்குக் கிஞ்சித்தும் உதவாத நகைச்சுவைக் காட்சிகள், ‘உனக்கு குழந்தைச் சிரிப்பு’ என்ற தொடர் முகஸ்துதிகள் சலிப்பை ஏற்படுத்துகின்றன. அண்ணன் – தம்பி பாசத்தை ரசிக்கும்படியாகச் சொல்லிய சிவா, அண்ணன் – தங்கை […]

11/11/2015 Dinesh R