32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
Dinesh R
செய்தியாளர் விவரம் சேலம்

Dinesh R

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

4024 செய்திகள் எழுதப்பட்டுள்ளன வலைத்தளம்
செய்திகள் வரிசை (பக்கம் 219)
தி வாக் விமர்சனம் அயல் சினிமா

தி வாக் விமர்சனம்

சில அடி உயரத்தில், இரண்டு கம்பங்களுக்கு இடையே கட்டப்பட்டிருக்கும் கயிற்றின் மேல் நடப்பதை என்னவென்று சொல்வீர்கள்? பொதுவாக, கழைக்கூத்து அல்லது சர்க்கஸ் வித்தை என்போம். இல்லவே இல்லை.. ‘அது ஒரு கலை’ என்கிறார் பிலிப். அந்தக் கலைஞன், தன் 24வது வயதில் செய்த மயிர்க்கூச்செறியும் சாகசம்தான் ‘தி வாக்’ திரைப்படத்தின் கதை. உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள மிக அற்புதமான படம். இயக்குநர் ராபர்ட் ஜெமெக்கிஸ் மிரட்டியுள்ளார். பிலிப்பாக நடித்துள்ள ஜோசஃப் கோர்டான்-லெவிட்டின் அறிமுகமே அமர்க்களம். அமெரிக்காவின் […]

09/10/2015 Dinesh R
தூங்கா வனத்தின் க்ளிட்ச் மியூஸிக் சினிமா

தூங்கா வனத்தின் க்ளிட்ச் மியூஸிக்

“உத்தமவில்லன், பாபநாசம் என மியூஸிக் பண்ணி, அந்த ஹேங் ஓவரில் இருந்து வெளிவராமல் இருந்தேன். தூங்கா வனத்துக்கு எந்த பேட்டர்னில் மியூஸிக் பண்ணலாம்னு ஐடியா போயிட்டே இருந்தது. கமல் க்ளிட்ச் மியூஸிக் பண்ணலாம் என்றார். எனக்கு ஒரு சந்தேகம். க்ளிட்ச்னு ஒருவகை மியூஸிக் இருக்கு. அதைத்தான் சொல்றாரா எனக் கேட்டேன். ஆமாம்ன்னார். ஆனா, அந்த வகை மியூஸிக்கில் ஸ்பீக்கர் கிழிஞ்சாப்ல சத்தம் வரும். சரியா மிக்ஸ் செய்யலைன்னு நினைச்சுட்டா என்னப் பண்றதுன்னு டென்ஷனா கேட்டேன். ‘க்ளிட்ச் மியூஸிக், […]

07/10/2015 Dinesh R
மகாகவி பாரதியார் சினிமா

மகாகவி பாரதியார்

மாயலோகத்தில்.. “பாட்டுக்கொரு புலவன் பாரதியடா…” என கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அவர்களால் பாடப்பட்ட கவிஞர் பாரதியார். தமிழின் நவீன யுகத்தின் மகாகவி, முதல் தமிழ்க் கவிஞன். சுப்ரமணிய பாரதியின் பிறப்பு 1882 ஆம் வருடம் திருநெல்வேலி மாவட்டம் எட்டயபுரத்தில் நிகழ்ந்தது. சிறுவனாக, பத்து வயதிலேயே பாடல்கள் புனையும் ஆற்றல் பெற்றார். தகப்பனார் சின்னசாமி அய்யர் எட்டயபுரம் ஜமீனில் வேலை பார்த்து வந்தார். மகனை நன்றாகப் படிக்க வைக்க வேண்டும் என்பது அவரது ஆசை. ஆனால் பாரதியோ […]

07/10/2015 Dinesh R
சவாலும் சோதனையும் எதிர்கொள்ளும் பெண் போலிஸ் சினிமா

சவாலும் சோதனையும் எதிர்கொள்ளும் பெண் போலிஸ்

“சமுதாயத்தில் பெண்களுக்கு சம உரிமை கிடைத்துள்ளதா இல்லையா என்ற சர்ச்சை இன்றும் நீடித்தாலும் , தொழிற்துறையில் குறிப்பாக காவல் துறை போன்ற இடங்களில் பெண்களுக்கு எதிரான அவலக்கேடுகள் நடந்த வண்ணம் தான் இருக்கிறது. எத்தனயோ பெண்கள் இந்தத் துறையில் சாதித்து இருந்தாலும் , இன்னமும் இதைப் போன்ற சில துறைகள் ஆண்களின் மேலாதிக்கத்தில்தான் இருக்கிறது. மேற்கூறிய இந்த விஷயங்கள் மட்டுமல்ல அர்த்தநாரி. காவல் துறைக்குப் பெரும் சவாலாக திகழும் ஒரு வழக்கை துப்பறியும் போலிஸ் அதிகாரிக்கு நேரும் […]

06/10/2015 Dinesh R
புலி விமர்சனம் சினிமா

புலி விமர்சனம்

மருதீரனின் காதலியைக் கடத்தி விடுகின்றனர் வேதாளபுரத்தின் வீரர்கள். பலம் பொருந்திய வேதாளர்களிடமிருந்து மருதீரன் தன் காதலியை எப்படி மீட்கிறார் என்பதுதான் படத்தின் கதை. மருதீரன், புலிவேந்தனும் என இரண்டு வேடங்களில் விஜய். விஜய்யின் வழக்கமான நடிப்பில் மருதீரனும், ‘மக்களுக்காக சந்தோஷமா சாவேன்’ என அடித் தொண்டையில் கோவத்தை அடக்கிப் பேசும் விஜய்யின் வித்தியாசமான (!?) நடிப்பில் புலிவேந்தனும் திரையில் தோன்றுகின்றனர். ஸ்ருதிஹாசன் மழலையில் கொஞ்சிப் பேசி ஆடவும், ஹன்சிகா ஆட மட்டுமென நேர்ந்து விடப்பட்டுள்ளனர். ஜலதரங்கனாக வரும் […]

05/10/2015 Dinesh R
வரலாற்றுப் பயணத்தின் தொடக்கம் கட்டுரை

வரலாற்றுப் பயணத்தின் தொடக்கம்

இன்று தமிழ் காமிக்ஸ் வரலாற்றில் ஒரு முக்கியமான நாள். ஏனென்றால், ஆனந்த விகடன் நிறுவனத்தின் புதிய இம்ப்ரிண்ட் ஆன “விகடன் கிராஃபிக்ஸ்” இன்று அறிமுகம் ஆகிறது. அடுத்த மாதம் ஒன்றாம் தேதி முதல் விற்பனைக்கு வரவுள்ள இந்தப் புத்தகம் நிச்சயமாக வாசிப்பில் ஒரு புதிய பாதையை உருவாக்கும் என்று நம்பலாம். ‘காவல் கோட்டம்’ நாவலிற்காக சாகித்திய அக்காதெமி விருது பெற்ற எழுத்தாளர் திரு சு. வெங்கடேசன் அவர்களின் கதைக்கு, வண்ணமயமாக உயிரூட்டி இருக்கிறார் கோவையைச் சேர்ந்த ஓவியரான […]

01/10/2015 Dinesh R
மிதக்கும் சொர்க்கம் கட்டுரை

மிதக்கும் சொர்க்கம்

ஓர் உல்லாசக்கப்பல் பயணத்தைப் பற்றிய பயணநூல் என்பதே ஆர்வத்தைக் கிளறுவதாக இருந்தது. அதையும் அந்தப் புத்தகத்தை எழுதியவர் ஒரு பெண் விஞ்ஞானி என்பது புத்தகத்தைப் படிக்கும் ஆர்வத்தை மேலும் தூண்டியது. மன்மதன் அம்பு படத்தில் கமல், த்ரிஷா பயணிக்கும் க்ரூஸ் வகை கப்பலைச் சேர்ந்ததுதான் இந்நாவலின் உல்லாசக்கப்பலும்! புத்தகத்தை அறிமுகம் செய்த யுவகிருஷ்ணா, தமிழில் வந்துள்ள பயணநூல்கள் பற்றிய ஒரு பார்வையை அளித்தார். 1940 களிலேயே, ஏ.கே.செட்டியார், தனியொருவராக இருந்து அச்சு இயந்திரத்தில் எழுத்துகளைக் கோர்த்து, தனது […]

27/09/2015 Dinesh R
யாவருக்குமான காமிக்ஸ்! கட்டுரை

யாவருக்குமான காமிக்ஸ்!

பொம்மைப் படங்கள் என கொஞ்சம் கேலியாக அழைக்கப்படும் சித்திரக் கதைகள் குழந்தைகளுக்கானது மட்டுமா? “ஆம்” என்பவரே இங்கு அதிகம். ஆனால் அப்படியில்லவே இல்லை, காமிக்ஸ் என்பது அனைத்து வயதினருக்குமானது என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக “கிராபிக் நாவல்கள்” பற்றியதொரு கலந்துரையாடலை யாவரும்.காம், டிஸ்கவரி புக் பேலஸ், தமிழ் காமிக்ஸ் உலகம் ஆகிய மூவரும் இணைந்து நடத்தினர். “ஃப்ரான்ஸில் 95% பேர் காமிக்ஸை விரும்பிப் படிக்கிறாங்க. லேண்ட் மார்க் போல, அங்க ஒரு 6 மாடிக் கட்டடம் முழுவதும் […]

27/09/2015 Dinesh R
ஜிப்பா ஜிமிக்கி விமர்சனம் சினிமா

ஜிப்பா ஜிமிக்கி விமர்சனம்

ஜிப்பா என்பது நாயகனுக்கான குறியீடு, ஜிமிக்கி என்பது நாயகிக்கான குறியீடு. ஜிப்பாக்கும் ஜிமிக்கிக்குமான ஊடல்தான் திரைப்படத்தின் கதை. சென்னை டூ கூர்க், கூர்க் டூ சென்னை என படத்தின் பெரும்பகுதி பயணத்திலேயே கழிகிறது. நாயகனும் நாயகியும் வழியில் பார்க்கும் மனிதர்கள் எல்லாம் சுவாரசியமானவர்கள். முக்கியமாக கன்னட விவசாயியாக வரும் ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் மனதைக் கனக்க வைக்கிறார். படத்தில் நெகிழ்ச்சிக்குரிய காட்சிகள் ஏராளமாக உண்டு. ஆடுகளம் நரேனும், விஜய் டி.வி. ‘தாயுமானவன்’ புகழ் செளந்தரராஜனும் பேசும் காட்சிகள், […]

24/09/2015 Dinesh R
குற்றம் கடிதல் விமர்சனம் சினிமா

குற்றம் கடிதல் விமர்சனம்

62ஆவது தேசிய திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படத்திற்கான விருதினை இப்படம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஐந்தாம் வகுப்பு மாணவண் ஒருவனை ஆசிரியை அறைந்து விடுகிறார். அம்மாணவனுக்கு மூக்கில் இருந்து ரத்தம் வருகிறது. பின் என்னானது என்று பரபரப்பாகச் செல்கிறது படத்தின் கதை. வழக்கமான சினிமாவிலிருந்து வழுவி ஒரு சம்பவத்தை பிரதானமாகக் கொண்டு படமெடுத்துள்ளார் இயக்குநர் பிரம்மா. கதாபாத்திரங்களின் அறிமுகம் முடிந்து, ஓர் ‘அறை’யில் தொடங்கும் படம் அசுர வேகமெடுக்கிறது. அங்குத் தொடங்கும் பதற்றத்தை, கடைசி நொடி வரை […]

24/09/2015 Dinesh R