32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

இஞ்சி இடுப்பழகி விமர்சனம்

Dinesh R சேலம் Published: 28/11/2015 2 நிமிட வாசிப்பு Updated: 08/03/2016 சினிமா
எழுத்து அளவு:

Inji idupazhagi vimarsanan

குண்டாய் இருக்கிறார் ஸ்வீட்டி. அதனால் அவரது திருமணம் தள்ளிப் போகிறது. எப்படியாவது தன் மகளின் எடையை, மிகக் குறைந்த நாட்களிலேயே குறைத்து விடவேண்டுமென ‘ஜீரோ சைஸ்’-இல் சேர்க்கிறார் ராஜேஸ்வரி. பின் என்னாகிறது என்பதுதான் படத்தின் கதை.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

படம் தொடங்கிய கொஞ்ச நேரத்திலேயே, இது நிறைய தெலுங்குப் படம் கொஞ்சமே கொஞ்சம் மட்டும்தான் தமிழ்ப்படம் என்ற புரிதல் ஏற்பட்டு விடுகிறது. அதாவது க்ளோஸ்-அப் ஷாட்களில் ஒட்டும் கதாபாத்திரங்களின் உதடு, வைட் ஷாட்களில் ஒட்டாமல் போகிறது. ‘இது தமிழ்ப்படமும் தான்’ என்ற லேசான நம்பிக்கையையும், ‘சைஸ் ஜீரோ’ பாடலில் தன் நடனத்தால் சுக்குநாறாக நொறுக்கி விடுகிறார் அநி.

ஸ்வீட்டியான அனுஷ்காவை மட்டுமே மையப்படுத்தி படத்தை எடுத்துள்ளனர். அனுஷ்காவும், ஸ்வீட்டி எனும் கதாபாத்திரத்தை மிகவும் ரசித்துச் செய்துள்ளார். அதை நமக்கும் கடத்தி விடுகிறார். ஆர்யா முதல் இஞ்சி இடுப்பழகியான சோனல் செளஹன் வரை மற்ற எந்த கதாபாத்திரமும் மனதில் பதியவே இல்லை. ஆனால், தன் அனுபவத்தால் கனமிக்க ஸ்வீட்டியையும் அனாயாசமாக ஓரங்கட்டியுள்ளார் ஊர்வசி. குண்டாக இருக்கும் பெண்ணின் மனநிலையைப் படம் பிரதிபலிக்கத் தவறினாலும், அத்தகைய பெண்ணினுடைய தாயாரின் மனநிலையைத் தெள்ளத் தெளிவாகப் பதிந்துள்ளது.

உடனடி எடைக் குறைப்பு எத்தகைய ஆபத்தானது என்பதை நோக்கி நகரும் கதைக்கு வில்லனாக பிரகாஷ் ராஜைக் கொண்டு வருகின்றனர். பின் படம் தன் வசத்தை இழந்து க்ளைமேக்ஸ் நோக்கி வருகிறது. அங்கேயும் ஒரு ட்விஸ்ட். ‘உங்களால் கதையை யூகிக்க முடியலாம். ஆனால் எப்படி அதைக் காட்சிபடுத்தியுள்ளோம் பாரீர்’ என இழுத்து முடிக்கின்றனர். அவர்களுக்கு அந்த நம்பிக்கையைக் கொடுத்திருப்பது நிரவ் ஷாவின் அற்புதமான ஒளிப்பதிவே!

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.