32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
Dinesh R
செய்தியாளர் விவரம் சேலம்

Dinesh R

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

4024 செய்திகள் எழுதப்பட்டுள்ளன வலைத்தளம்
செய்திகள் வரிசை (பக்கம் 218)
ஜல்லிக்கட்டு புகைப்படக் கண்காட்சி சமூகம்

ஜல்லிக்கட்டு புகைப்படக் கண்காட்சி

தமிழர்களின் வாழ்வோடு பின்னிப் பிணைந்த வீர விளையாட்டான ஜல்லிக்கட்டைப் பற்றிய புகைப்படக் கண்காட்சி, நவம்பர் 2 முதல் 8 வரை சென்னை லலித் கலா அகாடெமியில் நடக்கவுள்ளது. தமிழர்களின் வீரத்தையும், மாண்பையும் சிறப்பிக்கும் வகையில் நடைபெறும் இந்த புகைப்படக் கண்காட்சியை நடிகரும் இயக்குநருமான கமலஹாசன் இன்று காலை 10:30 மணி அளவில் திறந்து வைத்தார். J.சுரேஷ் எனும் புகைப்பட நிருபரின் முயற்சியால் இந்தக் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புகைப்படத்துறையில் 23 வருடங்கள் அனுபவம் கொண்ட அவர், புகைப்படத்துறை […]

02/11/2015 Dinesh R
கூஸ்பம்ப்ஸ் விமர்சனம் அயல் சினிமா

கூஸ்பம்ப்ஸ் விமர்சனம்

கூஸ்பம்ப்ஸ், தமிழில் ‘மயிர்க்கூச்சு’ எனச் சொல்லலாம். மயிர்க்கூச்சு என்றால் பயத்தினாலோ, குளிரினாலோ உடலிலுள்ள முடிகள் குத்திட்டு நிற்கும் நிலை. ஜக்காரி ஒரு புத்தகத்தைத் தெரியாத்தனமாகத் திறந்து விடுவதால், அதிலிருந்து எட்டி எனும் பனி மனிதன் வெளியில் வந்துவிடுகிறான். அதனைத் தொடர்ந்து நடக்கும் மயிர்க்கூச்செறிய வைக்கும் சம்பவங்களே படத்தின் கதை. ஸ்லாப்பி எனும் வில்லன் பொம்மை உயிர் பெற்றதும் படம் சுவாரசியமாகிவிடுகிறது. அது, அனைத்துப் புத்தகங்களிலுமுள்ள கோரமான/ பயங்கரமான கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுப்பதோடு, அவர்களை வழி நடத்தவும் செய்கிறது. […]

31/10/2015 Dinesh R
இனியொரு விதி செய்வோம்.! கட்டுரை

இனியொரு விதி செய்வோம்.!

அமெரிக்க அரசு அக்டோபர் மாதத்தை குடும்ப வன்முறை விழிப்புணர்வு (Domestic Violence Awareness) மாதமாக அனுசரிக்கிறது. இது தொடர்பில் நிறைய கருத்தரங்கங்கள், விவாத நிகழ்ச்சிகள் நாடெங்கும் நடத்தப்படுகின்றன. நான்கில் ஒரு பெண் உடல், உளவியல் ரீதியான வன்முறைக்கு ஆளாகிறார் என்றும் இத்தகைய வன்முறைகள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருப்பதாகவும் அரசின் புள்ளி விவரங்கள் கூறுகின்றன. தன்னுடைய துணையை அல்லது குடும்ப உறுப்பினர்களை அடிப்பது, அச்சுறுத்துவது, பாலியல் ரீதியாக சித்திரவதை செய்வது, உளவியல் ரீதியாகத் துன்புறுத்துவது, திருமணப் பந்தத்தை […]

30/10/2015 Dinesh R
விரைவில் இசை விமர்சனம் சினிமா

விரைவில் இசை விமர்சனம்

சுசி எனும் சுதந்திர சேகரனும், ஏ.ஆர்.ராமன் எனும் ஏ.ரங்கராமானும் நண்பர்கள். சுசிக்கு இயக்குநராகவும், ராமனுக்கு இசையமைப்பாளராகவும் திரைப்பட உலகத்தில் பரிணமிக்க வேண்டுமென்பது கனவு. கிராமத்திலிருந்து ஓடி வந்த அவர்களின் கனவு நனவானதா இல்லையா என்பதே படத்தின் கதை. மறைந்த நடிகர், தமிழகத்து ஜேம்ஸ் பாண்ட் என்றழைக்கபடும் ஜெய் ஷங்கர் அவர்களின் மகன் சஞ்சய் ஷங்கர் இப்படத்தில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகிவுள்ளார். நாற்பது வயதில் நடிப்பாசை ஏன் வந்தது என்ற சுய எள்ளலோடு கலகலப்பாக அறிமுகமாகியுள்ளார். எனினும், தனித்த […]

30/10/2015 Dinesh R
அழகு, பெண்மை, பாரம்பரியம் சமூகம்

அழகு, பெண்மை, பாரம்பரியம்

அழகிய தமிழ் மகள் எனும் மகுடத்தை வெல்லப் போவது யார்? அழகிய தமிழ் மகள் மகுடம் போக, 15 பட்டங்களும் வெல்வதற்கு உள்ளன. ‘வாவ் செலிப்ரேசன்’ எனும் இந்தியாவின் முதல் முழுமையான நிகழ்வு மாத இதழ், நாடு முழுவதும் உள்ள பின்தங்கிய இளைஞர்களின் விழிப்புணர்வு மற்றும் முன்னேற்றத்துக்காக இயங்கும் ‘டேக் கேர் இந்தியா’ எனும் நிறுவனத்துடன் இணைந்து இப்போட்டியை வழங்குகிறது. அழகு, பெண்மை, பாரம்பரியம் ஆகிய மூன்றையும் ஒரே மேடையில் இணைக்கும் ஒரு மாறுபட்ட முயற்சி. இந்தப் […]

30/10/2015 Dinesh R
இஞ்சி இடுப்பழகி – படக்குழுவினர் சினிமா

இஞ்சி இடுப்பழகி – படக்குழுவினர்

நடிகர்கள்: >> அனுஷ்கா >> ஆர்யா >> சோனல் செளகன் >> ஊர்வசி >> பரத் >> பிரகாஷ் ராஜ் பணிக்குழு: >> தயாரிப்பு நிறுவனம் – பி.வி.பி. சினிமா >> தயாரிப்பாளர் – பரம் V.பொட்லூரி >> இயக்கம் – K.S.பிரகாஷ் ராவ் >> ஒளிப்பதிவு – நிரவ் ஷா >> இசை – மரகத மணி >> கலை – ஆனந்த் சாய் >> படத்தொகுப்பு – ப்ரவின் புடி & ரூபன் >> உடைகள் […]

29/10/2015 Dinesh R
திருகோகர்ணம் – அரபிக் கடலோரத்தில் கட்டுரை

திருகோகர்ணம் – அரபிக் கடலோரத்தில்

நானும் என் மனைவியும் ஒரே அலுவலகத்தில், ஒரே டீமில் பணிபுரிவதால், மற்றவரின் பணி சுமையினை நன்கு அறிவோம். என்னை விட என் மனைவிக்கே அலுவலகத்திலும் சரி வீட்டிலும் சரி அதிக ஆணி. இந்தக் கவலைகளை மறக்க, இதுவரை நாங்கள் பார்த்திராத ஆனால் பார்க்க வேண்டிய ஒரு இடத்திற்குச் செல்ல வேண்டும் என்று முடிவு செய்து எனது தேடலைத் தொடங்கினேன். நாங்கள் ஹைதராபாத்தில் இருப்பதால், இங்கிருந்து செல்லக்கூடிய இடங்களை ஆராய்ந்தேன். மேலும் அது குளிர் காலம் என்பதால் ஹில் […]

29/10/2015 Dinesh R
நானும் ரெளடிதான் விமர்சனம் சினிமா

நானும் ரெளடிதான் விமர்சனம்

தன்னை ரெளடி என நம்பும் ஒருவனிடம், அவனது காதலி ஒரு கொலை செய்யச் சொல்கிறாள். பின் என்னாகிறது என்பதுதான் கதை. தனி ஒருவன், மாயா முதலிய படங்களைத் தொடர்ந்து, இந்தப் படத்திலும் கோலேச்சியுள்ளார் நயன்தாரா. காது கேளாத காதம்பரியாகக் கலக்கியுள்ளார். பொதுவாக, இது போன்ற படங்களில் அல்லது பெரும்பாலான தமிழ்ப் படங்களில் நாயகியை ஊறுகாய் போலவே உபயோகப்படுத்துவார்கள். இப்படத்தின் வெற்றி, நாயகிக்குக் கொடுத்த முக்கியத்துவத்தில் இருந்தே தொடங்குகிறது. இந்தப் படத்தின் இன்னொரு குறிப்பிடத்தக்க விஷயம், கதாபாத்திரத் தேர்வுகள். […]

22/10/2015 Dinesh R
10 எண்றதுக்குள்ள விமர்சனம் சினிமா

10 எண்றதுக்குள்ள விமர்சனம்

10 எண்றதுக்குள்ள எதையும் சாதித்து முடிக்கக் கூடியவர் படத்தின் நாயகன். அதைக் கேட்டு, ‘ஐய்யய்யே.!’ என அரை லூஸு நாயகியே உதட்டைச் சுழிக்கிறார். படம், மிக முக்கியமான சமூக அவலத்தில் இருந்து தொடங்குகிறது. நாயகனாகப்பட்டவர் அதில் சிக்கி, அதிலிருந்து தப்பிக்க எப்படி அதை மேலும் தீ மூட்டித் தப்பிக்கிறார் என்பதுதான் படத்தின் கதை. நாயகியின் பெயரை ஷகீலா என வைத்ததில் தொடங்கி, சமந்தாவின் கதாபாத்திரத்தை அதிக கவனமுடன் லூஸுத்தனமாகவே உருவாக்கியுள்ளனர். சீரியசான படத்துக்கு, மிக மிக இடைஞ்சலாய் […]

22/10/2015 Dinesh R
க்ரிம்ஸன் பீக் விமர்சனம் அயல் சினிமா

க்ரிம்ஸன் பீக் விமர்சனம்

க்ரிம்ஸன் பீக் என்றால் செவ்வண்ண முகடு எனச் சொல்லலாம். எடித் சிறுமியாக இருக்கும்பொழுதே, அவளது இறந்த தாயின் ஆவியால், ‘செவ்வண்ண முகடு’க்குப் போகாதே என எச்சரிக்கப்படுகிறாள். யுவதியாக வளர்ந்த பின்பாகவும், எடித்தை அவளது தாயின் ஆவி மீண்டுமொரு முறை எச்சரிக்கிறது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக கல்யாணமாகிச் செல்லுமிடம் செவ்வண்ண முகடெனத் தெரியாமலேயே அங்குப் போய் விடுகிறார். பின் என்னானது என்பதே படத்தின் கதை. ‘அலேர்டல் ஹால்’ என்ற தனித்து நிற்கும் மாளிகையை, உள்ளூர் மக்கள் செவ்வண்ண முகடு என […]

16/10/2015 Dinesh R
நகரத்தில் நிம்மதியாக வாழ்தல் எளிதல்ல.! சினிமா

நகரத்தில் நிம்மதியாக வாழ்தல் எளிதல்ல.!

மெல்லிசை படம், அடுத்த கட்டத்தை நோக்கி நகர எடுத்துக் கொண்ட காலதாமதம் குறித்த கோபம் விஜய் சேதுபதியிடம் இருந்தது. “யாருடைய தயவும் இல்லாமல் தானாக முளைத்த காட்டு மரம் விஜய் சேதுபதி. அந்த காட்டு மரம் எதைப் பற்றியும் கவலைப்படாமல், வந்தா மலை போனா சென்ஸாரில் கட் பண்ணும் வார்த்தை என படங்கள் செய்கிறது. யாருடைய தயவும் இல்லாமல் வரக்கூடியவருக்குத்தான் புதியவர்களை அறிமுகம் செய்வதிலும், புதிய முயற்சிகளைச் செய்வதிலும் தைரியமும் மனோதிடமும் இருக்கும். இதுதான் அவரை உச்சத்துக்குக் […]

14/10/2015 Dinesh R
கொச்சி திரைப்படத் திருவிழா சினிமா

கொச்சி திரைப்படத் திருவிழா

ALIIFF (All Lights India International Film Festival) & Indywood Film Market ஆகிய இருவரும் இணைந்து கொச்சியில் நடத்தும் சர்வதேச திரைப்பட விழா, நவம்பர் 15 முதல் 21 வரை நடக்கவுள்ளது. கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள், www.aliiff.com என்ற இனையதளத்தில் பதிந்து கொள்ளலாம். நுழைவுக் கட்டணம் 500/- ஆகும். மாணவர்களுக்கு சலுகை விலையாக 300/- மட்டும் வசூலிக்கப்படுகிறது. Indywood Film Market, தென்னிந்தியாவின் மிகப் பெரிய திரைப்பட சந்தையை உருவாக்குவதில் முன்னொடியானவர்கள். நவம்பர் 16 […]

13/10/2015 Dinesh R
மசாலா படம் விமர்சனம் சினிமா

மசாலா படம் விமர்சனம்

விமர்சனம் என்ற பெயரில், தாங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் திரைப்படம் முடியும் முன்பாகவே, கிழிக்கிழி எனக் கிழிக்கும் பதிவர்களையும் (Bloggers), ஃபேஸ்புக் பயனர்களையும், ட்வீட் போடுபவர்களையும் பகடி செய்வது போல் தொடங்குகிறது படம். இணைய விமர்சகர்களைக் கலாய்த்து ஒரு படமா? அடடே.. ‘செத்தான்டா சேகர்’ என விமர்சகர்களுக்காக உச்சுக் கொட்டும்போது ட்விஸ்ட் வைத்து விடுகின்றனர். அங்கே ‘கட்’ செய்தால் இடைவேளை. படம் தொடங்கிய சில நிமிடங்களுக்குள்ளாகவே இடைவேளை வந்துவிட்டதே என ஆச்சரியப்பட வைக்கிறது. படத்தின் மொத்த நீளமே 110 […]

09/10/2015 Dinesh R