32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
Dinesh R
செய்தியாளர் விவரம் சேலம்

Dinesh R

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

4024 செய்திகள் எழுதப்பட்டுள்ளன வலைத்தளம்
செய்திகள் வரிசை (பக்கம் 221)
தனி ஒருவன் விமர்சனம் சினிமா

தனி ஒருவன் விமர்சனம்

ஒரு நல்லவனும் ஒரு கெட்டவனும் ஆடும் கண்ணாமூச்சி ஆட்டம்தான் தனி ஒருவன் படத்தின் கதை. ஐ.பி.எஸ். அதிகாரி மித்ரனாக ஜெயம் ரவி. குற்றங்களைக் கண்டு பொங்கிடும் நல்லவர்; கல்வி கேள்விகளில் வல்லவர்; 24 மணி நேரமும் குற்றங்களைத் தேடியும், அதைப் பற்றியுமே யோசிப்பவர். அதைத் தடுப்பதற்காகவே ஐ.பி.எஸ்.சில் சேருகிறார். மிகச் சிறிய வயதிலேயே குற்றங்களையும், அந்தக் குற்றத்துக்கான காரணங்களையும் செய்தித் தாள்களிலேயே கண்டடையும் தனித் திறமை மிக்கவராகத் தன்னை உருவாக்கிக் கொள்கிறார். நாளடைவில் செய்தித் தாளில் வரும் […]

28/08/2015 Dinesh R
கலை உத்தியஸ்தர் கட்டுரை

கலை உத்தியஸ்தர்

“எம்பெருமானே! இதென்ன மகாபாரதத்திற்கு வந்த சோதனை?” பல நூறாண்டுகளுக்குப் பிறகு, இப்பொழுதுதான் லஷ்மியின் முகத்தில் இருந்து பார்வையை மீட்டு வலது பக்கமாகப் புரண்டு படுக்கிறார். உடனே வியாசன், பரந்தாமன் முகத்தினைப் பார்த்து தனது வியாகூலத்தை வெளியிடுகிறார். “ஏன் வியாஸரே!? மகாபாரதத்துக்கு என்ன நேர்ந்தது?” “யாரோ ஜெமோ-வாம். தினம் ஒரு அத்தியாயமென பத்தாண்டுகளுக்கு மகாபாரதம் எழுதுகிறாராமே!?” “யாரோ ஜெமோவா? என்ன சொல்கிறீர் வியாஸரே! முக்காலமும் உணர்ந்த நீரா இப்படி அலட்சியமாகப் பேசுவது?” சற்று தயங்கிய வியாசர், “ஏன் பிரபோ? […]

26/08/2015 Dinesh R
பாபநாசம் சிவன் சினிமா

பாபநாசம் சிவன்

மாயலோகத்தில்.. பாபநாசம் சிவன் சினிமாவுக்கு எழுதிக் கொண்டிருந்த கவிஞர் என்கிற வகையில் அறியப்படக்கூடாது. அவரைத் தமிழ்த் தியாகய்யர் எனக் கூறுவார்கள். சினிமாவுக்காக அல்லாமல் ஏராளமான தமிழ்ப்பாடல்களை எழுதி, அவை சினிமாவில் அப்படியே பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. எனவே இவரையும் ஒரு இலக்கியவாதி வரிசையில் சேர்த்துக் கொள்ளலாம். தெலுங்கில் எழுதிய தியாகய்யர் போல் தமிழில் ஏராளமான பக்திப் பாடல்களை இயற்றி இன்றளவும் அவைகள் கச்சேரி மேடைகளில் வலம் வந்து கொண்டிருக்கின்றன. பாடல்களை எழுதும்போதே அவற்றிற்கான மெட்டுக்களையும் அமைத்துவிடும் திறன் இவருக்கு உண்டு. […]

26/08/2015 Dinesh R
வேலா வளர்த்த தீ கட்டுரை

வேலா வளர்த்த தீ

எழுத்தாளர் ஒருவர் பேரன்பும் பெருங்கோபமும் கொண்டு ஒரு நாவலை எழுதினால், அதைப் படிப்பவன் கதி அதோகதிதான் போல! குற்றப் பரம்பரை நாவல் படிப்பவரின் அகம், புறம் இரண்டையும் பதற்றத்துக்கு உள்ளாக்கி விடுகிறது. கதைசொல்லியான வேல ராமமூர்த்தி, நாவல் தொடங்கிய சில பக்கங்களுக்குள்ளாகவே உங்களை கெதியாய்த் தயார்படுத்தி, தான் கொண்டு செல்ல விரும்பும் இடத்திற்குக் கொண்டு போய்விடுகிறார். வழியில் நிற்பதென்ற பேச்சுக்கே இடமில்லை. அவரை மறுக்கவோ, கேள்வி கேட்கவோ முடியாதளவுக்கு மிக நேர்த்தியாய் ஒரு வாழ்க்கைக்குள் உங்களைத் தூக்கிப் […]

25/08/2015 Dinesh R
வண்ண ஜிகினா விமர்சனம் சினிமா

வண்ண ஜிகினா விமர்சனம்

கருப்பாய் இருக்கிறோமென்ற தாழ்வு மனப்பான்மையில் சிக்கித் தவிக்கும் பாவாடை, தனக்கொரு துணையைத் தேடிக் கொள்ள ஃபேஸ்புக்கில் போலியான அடையாளங்களுடன் கிஷோர் குமார் என்ற பெயரில் ஃப்ரொஃபைல் ஒன்றைத் தொடங்குகிறான். அவனது எண்ணம் ஈடேறி அவனுக்கொரு காதலி கிடைத்தாளா இல்லையா என்பதுதான் வண்ண ஜிகினாவின் கதை. கால் டாக்ஸி ட்ரைவர் பாவாடையாக விஜய் வசந்த். கதையின் நாயகனாக கச்சிதமாகப் பொருந்துகிறார். ஏஞ்சல் பிரியாவாக சானியா தாரா. காரணமேயின்றிச் சிரித்துக் கொண்டேயிருக்கிறார். வில்லனே தேவைப்படாத கதையில், கொதிக்கும் கொப்பறையில் தள்ளியது […]

22/08/2015 Dinesh R
வீரபாண்டிய கட்டபொம்மன் விமர்சனம் சினிமா

வீரபாண்டிய கட்டபொம்மன் விமர்சனம்

மே 5, 1959இல் வெளியான இப்படம் ஆகஸ்ட் 21, 2015இல் டிஜிட்டலில் ரீஸ்டோர் செய்யப்பட்டு மீண்டும் திரைக்கு வந்துள்ளது. சிவாஜியின் வீர கர்ஜனையை பெரிய திரையில் காணும் வாய்ப்பை மீண்டும் நல்கியுள்ளனர் சாய்கணேஷ் பிலிம்ஸ் பி.ஸ்ரீனிவாசலு. கப்பம் கட்ட மறுத்ததோடு, கொள்ளையில் ஈடுபட்ட தனது அமைச்சரையும் ஒப்படைக்க மறுத்து வெள்ளையரின் கோபத்துக்கு ஆளாகிறார் வீரபாண்டிய கட்டபொம்மன். போர் மூள்கிறது. வெள்ளையருக்கு எதிராகப் போராடிய முதல் வீரன் கட்டபொம்மன் என்ற வாய்ஸ் ஓவரோடு படம் தொடங்குகிறது. இந்த வரலாற்றுத் […]

21/08/2015 Dinesh R
ஐ ஆம் ஜிகினா.! சினிமா

ஐ ஆம் ஜிகினா.!

கருப்பாக உள்ளவர்கள் சிவப்பாக உள்ளவர்களை விட எந்த வகையிலும் குறைந்தவர்கள் அல்லர். இன்றைய வர்த்தக உலகத்தில் நிறம் என்பது தான் குணத்தையே நிர்ணயம் செய்யும் என்ற எண்ணத்தில் தான் பலரும் உள்ளனர். இதைக் குறையாக நினைத்து, போலி அடையாளம் மூலம் மற்றவரைக் கவர நினைக்கும் இளைஞன் ஒருவனைப் பற்றியக் கதை தான் ஜிகினா. ‘ஜிகினா’ திரைப்படத்தை இயக்குநர் லிங்குசாமியின் நிறுவனம் மூலம் வெளியிட இருப்பதே எனக்கு மிகப் பெருமை. அதற்காக லிங்கு சாமி சாருக்கும், போஸ் சாருக்கும் […]

19/08/2015 Dinesh R
செல்வந்தன் விமர்சனம் சினிமா

செல்வந்தன் விமர்சனம்

நேரடியாக தமிழில் வெளிவந்திருக்கும் மகேஷ் பாபுவின் முதல் திரைப்படம் இது. கோடீஸ்வரரான ரவிகாந்தின் ஒரே மகன் ஹர்ஷா. தனது சொந்த ஊரான தேவரக்கோட்டைக்குச் சென்று, அவ்வூரைத் தத்தெடுத்துக் கொள்கிறான். முன்பே அவ்வூரைத் தத்தெடுத்துக் கொண்ட மினிஸ்டர் வெங்கட் ரத்னமும், அவர் தம்பி சசியும், ஹர்ஷாவின் இந்தச் செயலால் கோபம் கொள்கின்றனர். கடைசியில் ஊர் யாருக்குச் சொந்தமானது என்பதுதான் படத்தின் கதை. ஹர்ஷாவாக மிகவும் அசால்ட்டாக நடித்துள்ளார் மகேஷ் பாபு. அவர் முகத்தில் ஒரு பேரமைதி நிலவுகிறது. ஆட்களைத் […]

16/08/2015 Dinesh R
வாலு விமர்சனம் சினிமா

வாலு விமர்சனம்

2012ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவருமென விளம்பரப்படுத்தப்பட்ட வாலு படம், ஆயிரம் சிக்கல்களைக் கடந்து ஒருவழியாக வெளி வந்தேவிட்டது. காதல் என்றாலே டார்ச்சர் என நினைக்கும் ஷார்ப்க்கு (நாயகனின் பெயர்), ப்ரியா மகாலட்சுமி மீது காதல் மலர்கிறது. முறை மாமனுடன் ப்ரியா மகாலட்சுமிக்கு கல்யாணம் நிச்சயிக்கப்பட்டுவிட்ட சூழ்நிலையில், ஷார்ப் எப்படி தன் காதலை வெளிப்படுத்தி ப்ரியாவை சம்மதிக்க வைக்கிறான் என்பதுதான் படத்தின் கதை. நகைச்சுவை, காதல், அப்பா செண்ட்டிமென்ட், தங்கச்சி செண்ட்டிமென்ட், இடையிடையே ஆக்ஷன் என கலந்து கட்டியடித்துள்ளார் […]

15/08/2015 Dinesh R
முதல் இந்திய நடிகர் Trailer

முதல் இந்திய நடிகர்

வீரபாண்டிய கட்டபொம்மன் 1959ஆம் ஆண்டு பி.ஆர்.பந்துலு அவர்களின் இயக்கத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், பத்மினி, ஜெமினி கணேசன் எனப் பலராலும் நடிக்கப்பட்டு, பிரம்மாண்டமாக வெளிவந்து பெரும் வெற்றி பெற்ற திரைக்காவியமாகும். இந்தத் திரைப்படம் ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடும் வீரபாண்டிய கட்டபொம்மன் என்ற தமிழ் மன்னனின் வாழ்க்கை வரலாறாகும். இந்தத் திரைப்படத்திற்காக நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஆப்ஃரோ ஆசியன் படவிழாவில் சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்றார். இதன் மூலம் சர்வதேச திரைப்படவிழாவில் விருது வாங்கிய […]

15/08/2015 Dinesh R
வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க விமர்சனம் சினிமா

வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க விமர்சனம்

தனது 25வது படத்தை தானே தயாரித்து நடித்துள்ளார் ஆர்யா. அது, பாஸ் (எ) பாஸ்கரன் போன்றதொரு வெற்றிப் படமாக இருக்கவேண்டுமென விரும்பி மீண்டும் ராஜேஷின் இயக்கத்தில் சந்தானத்துடன் இணைந்துள்ளார் ஆர்யா. வாசுவும் சரவணனும் ஒன்றாகப் படித்தவர்கள் மட்டுமல்ல, ஒன்றாகவே வளர்ந்து தொழில் செய்யும் மிக மிக நெருங்கிய நண்பர்கள். ஆனால் அவர்களின் மனைவிகளுக்கோ தங்கள் கணவரின் நண்பரைப் பிடிக்காமல் போய் விடுகிறது. நண்பனா? மனைவியா? என்ற இக்கட்டில் இருந்து நண்பர்கள் எப்படி மீள்கின்றனர் என்பதுதான் படத்தின் கதை. […]

14/08/2015 Dinesh R
பி. எஸ். ராமையா சினிமா

பி. எஸ். ராமையா

மாயலோகத்தில்.. வத்தலகுண்டு: இந்த ஊர் முன்பு மதுரை மாவட்டத்தில் இருந்தது. இப்போது திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ளது. வத்தலகுண்டு என்பதை ஆங்கிலத்தில் பத்லகுண்டு என்பார்கள். இந்த பத்லகுண்டு ஊரிலிருந்து திண்டுக்கல் செல்லும் பாதையில் அமைந்த ஊர் ஆத்தூர் என்கிற கிராமம். இந்த ஊரைச் சார்ந்த சுப்ரமணிய அய்யரின் மகன்களில் ஒருவர் ராமையா. சுப்ரமணிய அய்யர் பிழைப்புக்காக வந்து சேர்ந்த ஊர் பத்லகுண்டு. எனவே பத்லகுண்டு நாளடைவில் இவர்களுக்கு சொந்த ஊராக மாறியது. எனவே ராமையாவுக்கு பத்லகுண்டு சுப்ரமணிய ராமையா […]

12/08/2015 Dinesh R