32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
Dinesh R
செய்தியாளர் விவரம் சேலம்

Dinesh R

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

4024 செய்திகள் எழுதப்பட்டுள்ளன வலைத்தளம்
செய்திகள் வரிசை (பக்கம் 241)
“என் வியாபாரம் பெருசாகும்” – ‘அட்டகத்தி’ தினேஷ் சினிமா

“என் வியாபாரம் பெருசாகும்” – ‘அட்டகத்தி’ தினேஷ்

“அட்டகத்தியில நான் நானாவே இருந்துட்டேன். குக்கூல கொஞ்சம் வெளில போய் பண்ணியாச்சு. அதை முடிச்சுட்டு.. திருடன் போலிஸ் பண்றப்ப, கண் பார்க்கிறது என சில விஷயங்கள் எல்லாம் டஃப்பாக இருந்தது. அரங்கேற்ற வேளை க்ளைமேக்சில் வரும் சாங்கில், வி.கே.ராமசாமி சாரை ஜனகராஜ் துரத்துவார்ல? அந்த ஃபீல்தான் ‘திருடன் போலீஸ்’ படம் தரும். என்னுடைய வியாபாரத்தை இந்தப் படம் பெருசு பண்ணும்தான்னு நினைக்கிறேன்” என்றார் ‘திருடன் – போலீஸ்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய ‘குக்கூ’ புகழ் […]

11/07/2014 Dinesh R
‘துலக்கம்’ – தெளிவிற்கான தொடக்கம் கட்டுரை

‘துலக்கம்’ – தெளிவிற்கான தொடக்கம்

ஆட்டிசம் பற்றிய புரிதலைப் பரவலாக்கும் முயற்சியில், ‘ஆட்டிசம் – சில புரிதல்கள்’ என்ற புத்தகத்தை 2013 இல் எழுதினார் பாலபாரதி. ஆனால் இத்தகைய துறை சார்ந்த புத்தகங்கள் எவரையும் சுலபமாகக் கவர்ந்து விடுவதில்லை. ‘ஆட்டிசம் பத்தித் தெரிஞ்சுக்கிட்டு, நாங்க என்ன பண்ணப் போறோம்?’ என்ற மெத்தனம் காரணமாக இருக்கலாம். அவர்களுக்கு பாலபாரதி சொல்லும் இரண்டு விஷயங்கள் என்னவென்றால், உங்கள் சுற்றுவட்டத்தில் இருக்கும் குழந்தைகளை அடையாளம் காணவும், அக்குழந்தைகளுக்கு முன்கூட்டிய பயிற்சிகளைத் தொடங்குவதற்கும் நீங்கள் உதவக்கூடும். அதற்கு ஆட்டிசம் […]

02/07/2014 Dinesh R
ஆயிரம் மடங்கு உழைப்பில் “பூலோகம்” சினிமா

ஆயிரம் மடங்கு உழைப்பில் “பூலோகம்”

பிரம்மாண்டமான ஆக்ஷன் படமாக உருவாகியுள்ளது பூலோகம். பாக்சிங்கை மையமாகக் கொண்ட கதையம்சமுள்ள படம். இந்தப் படத்திற்கென பிரத்தியேகமாக அதிக உழைப்பைச் செலுத்தியுள்ளார் ஜெயம் ரவி. மதன் என்ற பாக்சரிடம் இரண்டு மாதங்கள் முறைப்படி பயிற்சி பெற்றுள்ளார் ஜெயம் ரவி. மேலும் இயக்குநர் கல்யாண கிருஷ்ணன் கேட்டுக் கொண்டதற்கிணங்க தனது எடையையும் 15 கிலோ கூட்டி, பூலோகம் படப்பிடிப்பின் பொழுது 90 கிலோ எடையை மெயின்டெயின் செய்துள்ளார். “பாக்சிங்கில் லீகலாக 6 பன்ச்சஸ்தான் அனுமதிப்பாங்க. அந்த 6 பன்ச்சை […]

01/07/2014 Dinesh R
ஆர்யா நிகழ்த்திய அமரவிழா சினிமா

ஆர்யா நிகழ்த்திய அமரவிழா

ஆர்யா தன் தம்பி சத்யாவை வைத்துத் தயாரிக்கும் ‘அமர காவியம்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவை, அமரத்துவம் வாய்ந்த விழாவாக நிகழ்த்திக் காட்டினார். பொதுவாக இசை வெளியீட்டு விழாவில், இசை குறுந்தகடை ஆண்கள்தான் வெளியிடுவார்கள். ஆனால் நடிகையில் மத்தியில் செல்வாக்கு மிகுந்த நடிகரான, நாயகி ஒருவரை இசை குறுந்தகடை வெளியிட வைத்து இன்னொரு நாயகியைப் பெற்றுக் கொள்ளச் செய்தார். இயக்குநர் பாலா முன்னிலையில், குறுந்தகடை நயன்தாரா வெளியிட த்ரிஷா பெற்றுக் கொண்டார். விழாவிற்கு வந்தவர்கள் படத்தைப் பற்றிப் […]

28/06/2014 Dinesh R
சைவம் விமர்சனம் சினிமா

சைவம் விமர்சனம்

சைவம் என்ற தலைப்பு மதத்தைக் குறித்ததல்ல. புலால் மறுப்பைப் பேசுகிறது. ஒரு குடும்பம் எப்படி ஏன் சைவ உணவு பழக்கத்திற்கு மாறுகிறது என்பதுதான் கதை. இக்கதையை இயக்குநர் ஏ.எல்.விஜய்க்குச் சொன்னது அவர் தாயார் என்பதை படம் முடிவில் குறிப்பிடுகிறார். தமிழ்ச்செல்வி தனது செல்லப் பிராணியான பாப்பா எனும் சேவல் பலி கொடுக்கப்படக் கூடாதென அதனை மறைத்து வைக்கிறாள். வீட்டிலிருப்பவர்கள் அச்சேவலை கண்டுபிடித்து பலி கொடுக்கிறார்களா இல்லையா என்பதுதான் படத்தின் முடிவு. சைவம் ஒரு அழகான ஃபேமிலி டிராமா. […]

28/06/2014 Dinesh R
மீண்டும் “ஜித்தன்” சினிமா

மீண்டும் “ஜித்தன்”

வெற்றி பெற்ற திரைப்படங்களின் தொடர்ச்சியான இரண்டாம் பாகம் தயாராவதும் வெளியாவதும் சமீபத்திய வியாபார நுணுக்கம் எனக் கூறலாம். முந்தைய படத்தில் நாயகனாக நடித்த ரமேஷ், ‘ஜித்தன் ‘ என்கிற அடைமொழியுடன் அழைக்கப்படுவதே அந்த கதாபாத்திரம் ரசிகர்களிடையே எந்த அளவுக்கு பதிவானது என்பதற்கு சான்று. இப்போது மீண்டும் ஜித்தன் ரமேஷ் கதாநாயகனாக நடிக்க, ஜித்தன் 2 என்ற பெயரில் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. மனித கற்பனைக்கு அப்பாற்பட்ட சில அமானுஷ்யங்களின் அடிப்படையில் நடக்கும் சம்பவங்களின் கோர்வையே ‘ஜித்தன் […]

27/06/2014 Dinesh R
ஆஃப்கன் ஃப்லிம்ஸின் “அசுரகுலம்” சினிமா

ஆஃப்கன் ஃப்லிம்ஸின் “அசுரகுலம்”

‘அசுரகுலம்’ எனும் படத்தை, ஆஃப்கன் ஃபிலிம்ஸ் V.வேம்பைய்யன் தயாரிக்கின்றார். ‘விண்மீன்கள்’ படத்தை இயக்கிய விக்னேஷ் மேனன் இப்படத்தை இயக்குகிறார். இசை C.சத்யாவும், ஒளிப்பதிவு J.ஆனந்த்தும் செய்கின்றனர். சபரிஷ், வித்யா, லால், ஜான் விஜய் முதலியோருடன் இதுவரை பார்த்திராத சுவாரசியமான பாத்திரத்தில் தம்பி ராமைய்யாவும் நடிக்கிறார். ஃபெப்சி விஜயனின் ஸ்டன்ட் காட்சிகள் குறிப்பிடும்படியாக இருக்கும் எனச் சொல்லப்படுகிறது. தலைப்பையும் படங்களையும் பார்த்தால் என்னென்னவோ யூகிக்கத் தோன்றுகிறது.

19/06/2014 Dinesh R
“இது ஒருவழிப் பாதை..” – குஷ்பு சுந்தர் அரசியல்

“இது ஒருவழிப் பாதை..” – குஷ்பு சுந்தர்

16.06.2014 பெறுநர் உயர்திரு தலைவர் அவர்கள், திராவிட முன்னேற்ற கழகம், அண்ணா அறிவாலயம், சென்னை. ஐயா, என்னைத் தங்களின் இல்லத்தில் ஒருத்தியாகவே ஏற்றுக் கொண்ட அன்புள்ளம் கொண்ட தமிழ்மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு கழக உறுப்பினராக பொது வாழ்வில் என்னை ஈடுபடுத்திக் கொண்டேன். அந்த நாள் முதல் கழகத்தில் எனக்கு அளிக்கப்பட்ட பணியை நான் நூறு சதவீதம் சிரத்தையுடன் நிறைவேற்றியதை கழகத்தில் பொறுப்பில் உள்ளவர்கள் முதல் அடிப்படைத் தொண்டர்கள் வரை அனைவரும் அறிவார்கள். […]

16/06/2014 Dinesh R
ட்ரான்ஸ்ஃபார்மர்ஸ்: அழித்தொழிவின் காலம் அயல் சினிமா

ட்ரான்ஸ்ஃபார்மர்ஸ்: அழித்தொழிவின் காலம்

ட்ரான்ஸ்ஃபார்மர்சின் நான்காவாது பாகம் ஜூன் 27 அன்று வெளிவரவுள்ளது. ட்ரான்ஸ்ஃபார்மர்ஸ் மூன்று பாகங்களையும் இயக்கிய மேக்கேல் பே தான் இப்படத்தையும் இயக்குகிறார். படத்தின் நிர்வாக தயாரிப்பாளர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் என்பது குறிப்பிடத்தக்கது. ட்ரக்காக உருமாறும் தலைவன் ஆப்டிமஸ் ப்ரைம், செவர்லே காராக மாறும் பம்பிள்பீ, ஹம்மர் H2வாக மாறும் மெடிக்கல் ஆஃபீசர் ராட்சட், தேனீயாக இருந்து லெனோவோ திங்க் பேடாக மாறும் ஆட்டோ பாட் ப்ரெய்ன்ஸ் முதலிய ட்ரான்ஸ்ஃபார்மர்களுடன் (உருமாறிகள்) மார்க் வால்பெர்க், ஜாக் ரெனார், நிக்கோலா […]

16/06/2014 Dinesh R
பென்சில் நாயகனின் நற்பனி மன்றம் திரைத் துளி

பென்சில் நாயகனின் நற்பனி மன்றம்

திரைப்பட இசையமைப்பாளரும் தயாரிப்பாளரும் நடிகருமான G.V. பிரகாஷ் குமாரின் பிறந்தநாள் விழா, ஜூன் 13, 2014 அன்று அவருடைய சென்னை மாவட்ட ரசிகர் மன்றத்தின் மூலம் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. பிறந்தநாளை முன்னிட்டு சென்னை மாவட்ட நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்த பிறந்தநாள் விழாவில் G.V. பிரகாஷ் கலந்து கொண்டு ரசிகர்களை நேரில் சந்தித்து அவர்களின் வாழ்த்துகளைப் பெற்றுக் கொண்டார். விழாவில் 10 கிலோ கேக் வெட்டப்பட்டது. ரசிகர்கள் அவருக்கு ஆளுயர மாலை, தலைக்கிரீடம், வெள்ளி வாள் மற்றும் […]

13/06/2014 Dinesh R
அரும்புகளுக்கு பூக்களின் பெயர்களைச் சூட்டிய கலைஞர் சினிமா

அரும்புகளுக்கு பூக்களின் பெயர்களைச் சூட்டிய கலைஞர்

AVA புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பாக ஏ.வி.அனூப் தயாரிக்கும் படம் “என்ன சத்தம் இந்த நேரம்”. இப்படத்தின் நிர்வாக தயாரிப்பாளராக அல்லயன்ஸ் பிக்சர்ஸ் புரொடக்சன்ஸின் கிருஷ்ண பலராம ராஜா பணியாற்றியுள்ளார். அறிமுக இயக்குநர் குரு ரமேஷ் இப்படத்தை இயக்கியுள்ளார். பிரபல இயகுநர் ராஜா, மானு நிதின் சத்யா, மாளவிகா மற்றும் பலர் நடித்து விரைவில் வெளிவரவிருக்கிறது. இப்படத்தின் சிறப்பம்சம் யாதெனில், ஒரு பிரசவத்தில் பிறந்த நான்கு பெண் குழந்தைகளான அதிதி, அக்ரிதி, ஆப்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். […]

05/06/2014 Dinesh R