32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
செய்திப் பிரிவு

திரைத் துளி

1078 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 63 / 72
செய்திகள் வரிசை (பக்கம் 63)
மீண்டும் லஹரி மியுசிக் சினிமா

மீண்டும் லஹரி மியுசிக்

பாபி சிம்ஹா, மிர்ச்சி சிவா நடிப்பில் ‘ஆல் இன் பிக்சர்ஸ்’ விஜய ராகவேந்திரா தயாரிக்கும் ‘மசாலா படம்’ வேகமாகத் தயாராகி வருகிறது. புகழ்பெற்ற ஆடியோ நிறுவனமான லஹரி மியுசிக் மசாலா படத்தின் இசை உரிமையை வாங்கியுள்ளது. அறிமுக இயக்குநர் லக்ஷ்மன் இயக்கும் இப்படத்திற்கு புதுமுக இசையமைப்பாளர் கார்த்திக் ஆச்சார்யா இசையமைக்கிறார். “ஆல் இன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள ‘மசாலா படம்’ ஆடியோ உரிமையைப் பெற்றதில் எங்கள் நிறுவனம் பெருமகிழ்ச்சியடைகிறது. இளம் இசையமைப்பாளர் கார்த்திக் ஆச்சார்யாவின் இசை நன்றாக வந்துள்ளது. […]

08/04/2015 Dinesh R
தயாரிப்பாளராகும் இயக்குநர் சிம்ரன் சினிமா

தயாரிப்பாளராகும் இயக்குநர் சிம்ரன்

தேர்ந்த நடிப்பாலும் திறமையாலும் சினிமா ரசிகர்கள் அனைவரது மனதிலும் கோலோச்சி நின்றவர் நடிகை சிம்ரன். தற்பொழுது சினிமா தயாரிப்பாளராகவும், இயக்குநராகவும் அவதாரம் எடுத்துள்ளார் சிம்ரன். ‘சிம்ரன் அண்ட் சன்ஸ்’ என்ற தனது தயாரிப்பு நிறுவனத்தின் ‘Logo’-வை வெளியிட்டு பேசிய சிம்ரன் கூறியதாவது, “எனது சினிமா ஆர்வம் என் வாழ்வில் பெரும் முக்கிய இடத்தைக் கொண்டது. என் கணவர் தீபக் உடன் இணைந்து ஒரு தயாரிப்பு நிறுவனம் தொடங்க அதுவே காரணமாய் இருக்கிறது. நான் நடிகையாக இருந்த அனுபவமும், […]

03/04/2015 Dinesh R
காற்றும் ஒளியும் நிலவொளியும் சிகரங்களும்.. சினிமா

காற்றும் ஒளியும் நிலவொளியும் சிகரங்களும்..

இயக்குநர் எஸ்.பி. ஜனநாதன் இயக்கத்தில் ஆர்யா, விஜய் சேதுபதி, ஷாம் நடிக்கும் ‘புறம்போக்கு என்கிற பொதுவுடைமை’ திரைப்படம் நிறைவுறும் தருவாயை எட்டியுள்ளது. UTV மோஷன் பிக்சர்ஸ் சித்தார்த் ராய் கபூர் தயாரிப்பில் பிரம்மாண்டமாகப் படமாக்கப்பட்டுள்ள இத்திரைப்படம் முன்னர் ‘புறம்போக்கு’ என அழைக்கப்பட்டு வந்தது. தனது முதல் படமான ‘இயற்கை’ மூலம் தேசிய அங்கீகாரத்தை இயன்றதோடு, தனது அடுத்த படங்களான ‘ஈ’ மற்றும் ‘பேராண்மை’ ஆகிய திரைப்படங்கள் மூலம் ரசிகர்களின் மனதைக் கவர்ந்த இயக்குநர் எஸ்.பி. ஜனநாதன் ‘புறம்போக்கு […]

01/04/2015 Dinesh R
கோடையைக் குதூகலமாக்க வரும் வைகைப்புயல் சினிமா

கோடையைக் குதூகலமாக்க வரும் வைகைப்புயல்

எலி படத்தின் கதையையும், தனது புதுவிதமான கதாப்பாத்திரத்தையும் கேட்டு கதாநாயகியாக நடிக்கச் சம்மதித்துள்ளார் நடிகை சதா. சதாவின் நகைச்சுவைக் காட்சிகள் புது அனுபவம் தரும். 1960களின் பிண்ணனியில் பிரம்மாண்டமாக உருவாகும் இப்படத்தை சிட்டி சினி கிரியேஷன்ஸ் சார்பாக ஜி.சதிஷ் குமார் தயாரிக்கிறார்.பின்னி மில் வளாகத்தில் அமைக்கப் பெற்ற நட்சத்திர வீடு, பழமையான வீடுகள், பிரம்மாண்டமான வீடுகளின் உள்க ட்டமைப்புகள், வில்லனின் ரகசிய இருப்பிடம் என 15க்கும் மேற்பட்ட பிரம்மாண்ட அரங்குகள் கோடிக்கணக்கில் கலை இயக்குநர் தோட்டாதரணியால் அமைக்கப்பட்டு, […]

28/03/2015 Dinesh R
ரு – அதுக்கும் மேல.! சினிமா

ரு – அதுக்கும் மேல.!

மரணத்தையும் தாண்டின தண்டனை ஏதேனும் உண்டா? உண்டு என்கிறார் தனது படத்துக்கு ரு என்ற வித்தியாசமான தலைப்பு வைத்திருக்கும் இயக்குநர் C. சதாசிவம். “ரு” என்றால் ஐந்து. படத்தில் ஐந்து குற்றவாளிகள் உள்ளனர் என யூகிக்க முடிகிறது. பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு தருபவர்களுக்கு நாயகன் எத்தகைய தண்டனை வழங்குகிறான் என்பதுதான் ரு படத்தின் கதையாம். இப்படத்தில் நாயகனாக இர்ஃபானும், நாயகியாக ரக்ஷிதாவும் நடித்துள்ளனர். P.R.ஸ்ரீநார்த் என்பவர் இசையமைத்துள்ளார். நடிக்க முதல் முறையாக சம்பளம் வாங்கிக் கொண்டு நடித்துள்ள […]

28/03/2015 Dinesh R
கருவாட்டு கருணாகரன் சினிமா

கருவாட்டு கருணாகரன்

“ஒரு சிறிய ரோல் கிடைத்தாலும் தனது நடிப்பால் அதைப் பதியச் செய்யும் ஒரு நடிகன் கருணாகரன். ‘உப்பு கருவாடு’ படத்தில் அன்றாடம் நம் பக்கத்து வீட்டில் பார்க்கும் ஒரு இளைஞன் கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். கதாநாயகியாக நந்திதா நடிக்கிறார். தன்னை ஒரு கதாநாயகி என்று தன்னை குறுகிய வட்டத்தினுள் அடைக்காமல் தனக்கான நல்ல கதாப்பாத்திரங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அவருக்கு சரியான கதைகளும் படங்களும் கிடைக்க வேண்டும். அவ்வகையில் இருவருக்கும் ‘உப்பு கருவாடு’ ஒரு சிறந்த படமாய் […]

18/03/2015 Dinesh R
நனவான மாபெரும் கனவு சினிமா

நனவான மாபெரும் கனவு

“பொதுவாக பெற்றோர்கள் தங்களது பிள்ளைகள் சினிமா பார்க்கக் கூடாது என்று அதட்டுவார்கள். எனக்கு சினிமாவை உணர வைத்தவரே எங்கப்பாதான்” என்றார் த்ரிஷா இல்லன்னா நயன்தாரா படத்தின் இயக்குநர் ஆதிக் இரவிச்சந்திரன். இதிலென்ன என்ன விசேஷம் என்றால், ஆதிக்கின் தந்தையான ரவி கந்தசாமி, தனது மகனிடம் உதவி இயக்குநராக இப்படத்தில் பணி புரிவதுதான். “பாரதிராஜா சார், செல்வமணி சார் இப்படி பல பேர்கிட்ட 16 வருடங்களாக உதவி இயக்குநராக பணி புரிந்து வருகிறார். அப்பாவின் போராட்டத்தையோ அவருடைய அங்கீகாரம் […]

16/03/2015 Dinesh R
பாண்டி.. மில்க் பாண்டி சினிமா

பாண்டி.. மில்க் பாண்டி

கோஸ்ட் கோபல்வர்மாவாக நடித்த ‘நான் கடவுள்’ ராஜேந்திரனின் அடுத்த அவதாரத்தை, ‘இவனுக்கு தண்ணில கண்டம்’ படத்தினைக் காணலாம். இரண்டு மணி நேர முழு நீள நகைச்சுவைப் படம். குமரவேல், செண்ட்ராயன், மனோ பாலா, எம்.எஸ்.பாஸ்கர், ‘லொள்ளு சபா’ சுவாமிநாதன், சுப்பு பஞ்சு, “கானா” பாலா என நகைச்சுவைக்கு தீனி போட படத்தில் பலருள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. A7 Band என்ற பெயரில் மூன்று இளைஞர்கள் இணைந்து இசையமைத்து உள்ளனர். “எல்லோரும் சொன்னாங்க.. குமரவேல் சார் ராதாமோகன் சார் […]

05/03/2015 Dinesh R
ஒரு புது கதவு திறக்குது சினிமா

ஒரு புது கதவு திறக்குது

“இப்பாடல் ஒரு இளைஞனின் கொண்டாட்டத்தின் வெளிப்பாடாய் இருந்தது. கௌதம் அவர்களின் குரல் இந்தப் பாட்டிற்கு அந்தத் துள்ளலைத் தந்துள்ளது. இசையமைப்பாளர் ஸ்டீவ், கௌதமின் நண்பர். முதலில் இசையமைப்பாளர் ஸ்டீவ் வாட்ஸ், கௌதம் மூலமாகத்தான் எனக்கு அறிமுகமானார். படத்தில் ஒரு சோலோ சாங் வைக்கலாம் என்று நானும் ஸ்டீவ் அவர்களும் முடிவு செய்தோம். இப்பாடலுக்கு புதிதாக ஒரு குரல் வேண்டும் என்று நினைத்தோம். ஜி.வி.எம். (கெளதம் வாசுதேவ் மேனன்) பாடினால் நன்றாக இருக்கும் என்று ஸ்டீவ் கூறினார். கௌதம் […]

28/02/2015 Dinesh R
துவங்கியது ‘பாம்பு சட்டை’ சினிமா

துவங்கியது ‘பாம்பு சட்டை’

பாபி சிம்ஹா, கீர்த்தி சுரேஷ் நடிக்கும் ‘பாம்பு சட்டை’ படத்தின் படப்பிடிப்பு சென்னையில் இன்று துவங்கியது. R.சரத்குமார், R.ராதிகா சரத்குமார், லிஸ்டின் ஸ்டிஃபன் ஆகியோரின் மேஜிக் ஃப்ரேம்ஸ் நிறுவனம் மற்றும் இயக்குனர் தயாரிப்பாளர் மனோபாலா அவர்களின் மனோபாலா பிக்சர் ஹவுஸ் இணைந்து தயாரிக்கும் ‘பாம்பு சட்டை’. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் துவங்குகிறது. நடிப்பில் தனக்கென ஒரு தனி பாணியைக் கையாண்டு வரும் பாபி சிம்ஹா இப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். பல தமிழ்ப் படங்களில் நடித்து வரும் […]

11/02/2015 Dinesh R
நட்பு சூழ் கோலிவுட் சினிமா

நட்பு சூழ் கோலிவுட்

இயக்குநர் ஆகும் கனவில் இருக்கும் நண்பனுக்காக தயாரிப்பாளர்களாகப் பரிணாமிப்பவர்களின் எண்ணிக்கை கோலிவுட்டில் கணிசமான உயர்ந்து வருகிறது. சிநேகாவின் காதலர்கள், அமர காவியம், கப்பல் போன்ற படங்களைத் தொடர்ந்து இப்பொழுது அதில் பட்ற படமும் அடக்கமும். பட்ற இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் ஜெயந்தன் மற்றும் தயாரிப்பாளர் காந்தி குமாரின் நட்பைப் பற்றி சிலாகித்த இயக்குநர் பாக்கியராஜ் தன் அனுபவம் ஒன்றையும் பகிர்ந்து கொண்டார். “நான் சேலத்துக்கு குடி பெயரந்த போது, அங்க கேரம்போர்ட் விளையாடப் போவேன். நான் […]

03/02/2015 Dinesh R
அப்போ காதல் மன்னன் இப்போ காவல் மன்னன் சினிமா

அப்போ காதல் மன்னன் இப்போ காவல் மன்னன்

விவேக்கின் கால்ஷீட் கிடைக்காததால்தான் வி.டி.வி.கணேஷை விண்ணைத் தாண்டி வருவாயாவில் நடிக்க வைத்ததாக இயக்குநர் கெளதம் மேனன் தன் சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார். ‘ஆனால் எப்போ கெளதம் என்னிடம் கேட்டார்? ஒருவேளை நான் மறந்திருப்பேன்’ எனச் சமாளித்தார் விவேக். மின்னலே இயக்கிய கெளதம்க்கும், என்னை அறிந்தால் அறிந்தால் கெதம்க்கும் என்ன வித்தியாசமெனக் கேட்ட பொழுது, “மின்னலே கௌதம் 13 வருடம் சின்னவர்; புதியவர் பரபரப்பும், படபடப்பும் உள்ளவர். என்னை அறிந்தால் கௌதம் 13 வருடம் கடந்து வந்து இருக்கிறார்; […]

31/01/2015 Dinesh R
இயக்குநர் பாரதிராஜா வியக்கும் ஜெமோ வாசகன் சினிமா

இயக்குநர் பாரதிராஜா வியக்கும் ஜெமோ வாசகன்

“எங்க ஊர்ல படம் பார்த்துட்டு வருபவர்களிடம், படமெப்படின்னு கேட்பேன். அவங்க நல்ல படம் எனச் சொன்னால், படத்தின் எத்தனை சண்டைக் காட்சி எத்தனை கற்பழிப்புக் காட்சின்னு கேட்பேன். அவங்களும் நாலு சண்டைக் காட்சி, ரெண்டு கற்பழிப்புக் காட்சி என கணக்கு சொல்வாங்க. இந்த மாதிரி படம்லாம் நான் ரசிச்சுப் பார்த்துட்டு இருந்தேன். அப்போ நான் பதினொன்னாவது படிக்கிறப்ப மண் வாசனைன்னு ஒரு படம் பார்த்தேன். ஜெயமோகன் சார் ஓரிடத்தில் சொல்லியிருப்பார். வியாபார நோக்கத்தோடு எழுதப்படுற எழுத்த மட்டும் […]

30/01/2015 Dinesh R
துறுதுறு மலபார் அழகி நேஹா சினிமா

துறுதுறு மலபார் அழகி நேஹா

ஆறு, அருவி என முற்றிலும் நீர் வரப்பின் ஈரத்தில் வளர்ந்து நிற்கும் தென்னை மரங்களுடைய மலபார் பகுதியைச் சேர்ந்தவர் நேஹா ரத்னாகரன். இவர் VVR சினி மாஸ்க் தயாரிக்கும், ‘இவனுக்கு தண்ணில கண்டம்’ திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். சின்னத்திரைப் புகழ் தீபக் நாயகனாக நடிக்கிறார். “மாடல், விளம்பரப் படம் என நடித்துக் கொண்டிருந்தேன். எதையும் செய்து பார்க்கலாம் என்ற எண்ணம் எனக்கு அதிகம் உண்டு. அப்படியே சினிமாவிலும் நடித்துப் பார்க்கலாம் என்று முடிவு செய்தேன். கேரளத்துப் […]

27/01/2015 Dinesh R
நல்லா இருந்த ஊரின் டீச்சர் சினிமா

நல்லா இருந்த ஊரின் டீச்சர்

“நாலு போலீஸும் நல்லா இருந்த ஊரும், ஒரு சிறந்த பயணமாகவும் அனைத்தையும் கற்றுக் கொள்ளும் வாய்ப்பாகவும் அமைந்தது. இப்படத்தில் நான் ஒரு ஸ்கூல் டீச்சராக வருகிறேன். ‘குள்ளநரி கூட்டம்’ திரைப்படத்துக்கு பிறகு நான் ஒரு கிராமத்துச் சாயலில் ஒரு கதாபாத்திரம். நான் இவ்வகையான நகைச்சுவைத் திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என நெடு நாளாய்க் காத்திருந்தேன். இயக்குநர் ஸ்ரீகிருஷ்ணா இந்தக் கதையைக் கூறும்பொழுதே எனக்கு மிகவும் பிடித்திருந்தது. சற்றும் யோசிக்காமல் நான் நடிக்க ஒப்புக் கொண்டேன்” என்றார் ரம்யா நம்பீசன். […]

27/01/2015 Dinesh R