32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
செய்திப் பிரிவு

திரைத் துளி

1078 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 65 / 72
செய்திகள் வரிசை (பக்கம் 65)
ஜித்தனுக்கு ஏற்றவர் ஸ்ரீகாந்த் தேவா சினிமா

ஜித்தனுக்கு ஏற்றவர் ஸ்ரீகாந்த் தேவா

மர்ம மனிதனான ஜித்தன்-2 கதாபாத்திரத்தை வலுவாகக் கட்டமைக்க படத்தின் இசைத்தரம் மிக மிக அவசியம் எனக் கருத்துகிறார் படத்தின் இயக்குநர் ராகுல். “இசையில் அத்தகைய மேஜிக் செய்ய ஸ்ரீகாந்த் தேவாதான் பொருத்தமான நபர். காட்சிகளின் தரத்துக்கு ஏற்றாற்போல் பின்னணி இசை அமைய வேண்டுமென, சில பிரபலமான உலக இசைக் குழுக்களோடு இணைந்து பணியாற்றத் திட்டமிட்டுள்ளோம். படத்தை அழகாகச் செதுக்க போதிய கால அவகாசம் எடுத்துக் கொண்டு, மிகச் சிறந்த படமாக ஜித்தனைக் கொண்டு வருவோம்” என நம்பிக்கையுடன் […]

04/12/2014 Dinesh R
திருட்டு ரயில் ஏறியவர்கள் கதை திரைத் துளி

திருட்டு ரயில் ஏறியவர்கள் கதை

ஐந்து இளைஞர்களுக்கும், ஒரு போலீஸ் அதிகாரிக்கும் இடையே பிரச்சனை ஏற்படுகிறது. அதை சமாளிக்க முடியாமல் நண்பர்கள் திருட்டுரயில் ஏறிச்செல்லும் சூழ்நிலைக்கு ஆளாகிறார்கள். சென்னையில் இறங்கிய பின் அதைவிட பெரும் பிரச்சனை அவர்களுக்கு காத்திருந்தது.  அதிலிருந்து நண்பர்கள் மீண்டார்களா..? இல்லையா…? என்பதுதான் திருட்டு ரயில் படத்தின் கதை.

27/11/2014 Dinesh R
யார் ஆயா? யார் காக்கா? யார் நரி? சினிமா

யார் ஆயா? யார் காக்கா? யார் நரி?

ஆயா வட சுட்ட கதை படத்தின் கதையை மூன்று வார்த்தைகளில் சொல்லவேண்டுமென்றால், ‘முக்கோண ஏமாற்று கதை’ எனச் சொல்லலாம். ஒரு பரபரப்பான நகரத்தில் இருக்கும் ஒரு குடியிருப்புத்தான் படத்தின் களம். இந்தக் குடியிருப்பில் வசிப்பவர்கள், அருகில் வசிப்பவர்களை யார் என்று கூட அறியாதவர்கள். ஆனால் இவர்களுக்கு அன்றாட தேவைகளைச் செய்து தருபவர்கள் உதாரணத்துக்கு பேப்பர் போடுபவர்கள், இஸ்திரீ செய்பவர்கள், காவலாளி, கார் டிரைவர் போன்றவர்கள் அங்கு வசிக்கும் அனைவரைப் பற்றியும் நன்கு அறிந்தவர்களாக இருப்பார்கள். அத்தகைய பணியாளர்களக்கும், அங்குப் […]

26/11/2014 Dinesh R
‘நானும் பிசாசு.. அவனும் பிசாசு..’ – மிஷ்கின் பற்றி பாலா சினிமா

‘நானும் பிசாசு.. அவனும் பிசாசு..’ – மிஷ்கின் பற்றி பாலா

“என்னுடைய பாலா. ஒரு கலைஞன் கஷ்டத்தில் இருக்கும்போது கை கொடுத்துத் தூக்கிவிட்டார் பாலா. நான் என்னை கலைஞனென தைரியமாகச் சொல்வேன். ஏன்னா உழைப்பைக் கொட்டுறேன். ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ பார்த்துட்டு, அழுதுட்டே வெளில வந்தார் பாலா. என் ஆஃபீஸ் வரை காரை ஓட்டுடான்னு சொன்னார். அடுத்து என்னப் பண்ணப் போறேன்னு கேட்டார். நாளைக்கு வா படம் ஆரம்பிக்கலாம் என்றார். பிசாசு, டாம்பீகமற்ற எளிமையான படம். ஒரு பெண் இறந்து பிசாசாகி விடுகிறாள். கதை எழுதும்போது, நான் பேரலலாக (parallel) […]

16/11/2014 Dinesh R
மக்கள் இவ்ளோ நல்லவங்களா இருக்காங்களே! – 4 போலிஸ் திரைத் துளி

மக்கள் இவ்ளோ நல்லவங்களா இருக்காங்களே! – 4 போலிஸ்

தமிழ்த் திரை உலகில் தற்போது உலா வரும் புதிய சிந்தனை உடைய நவீன கதைகளுக்கு முன்னோடியாக இருக்கும் ஜே.எஸ்.கே. பிலிம் கார்ப்ரேஷன் நிறுவனமும், லியோ விஷன் நிறுவனமும் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், இதற்குத்தான் ஆசைப்பட்டாய் பாலகுமாரா…, தற்போது தயாரிப்பில் இருக்கும் ‘அண்டாவ காணோம்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து அடுத்து தயாரித்து வெளியிட இருக்கும் படம் ‘நாலு போலீஸும் நல்லா இருந்த ஊரும்’. சிந்தனையைத் தூண்டும், குலுங்கக் குலுங்கச் சிரிக்க வைக்கும் நகைச்சுவைச் சித்திரமான இந்தப் படத்தின் […]

12/11/2014 Dinesh R
டிராகுலா – சாத்தானின் மகன் சினிமா

டிராகுலா – சாத்தானின் மகன்

டிராகுல் என்றால் ரொமேனிய மொழியில் டிராகன் என்று பொருள். மனித ரத்தம் குடிக்கும் குணம் கொண்ட காட்டேரிகளுக்கு, டிராகுலா என்ற பெயர் வந்தது வலாக்கிய அரசாங்கத்தின் மன்னான மூன்றாம் விளாட்டி என்னும் சிற்றரசனால். நாடோடிக் கதைகளும் பழம்பாடல்களும் விளாடின் ‘பெருமை’களை இன்னும் ஊதிப் பெரிதாக்கிவிட்டன. டிராகுலா என்பதற்கு சாத்தானின் மகன் என்ற அர்த்தத்தையும் கொடுத்துவிட்டன. மனித ரத்தம் குடிக்கும் டிராகுலா பற்றிய படங்கள் பல முறை திரையில் உலா வந்ததுள்ளன. ஆனால் டிராகுலாவின் முந்தைய சரித்திரத்தைப் பற்றி […]

02/10/2014 Dinesh R
தி எக்ஸ்பேண்டபிள்ஸ் 3 – இந்தியப் பாடல் சினிமா

தி எக்ஸ்பேண்டபிள்ஸ் 3 – இந்தியப் பாடல்

வட இந்திய இசைக்குழுவான ;ஃபரித்கோட் (Faridkot)’ எக்ஸ்பேண்டபிள்ஸ்–3 பட பிரமோஷனுக்காக பாடலை உருவாக்கியுள்ளனர். சில்வஸ்டர் ஸ்டலோனின் எக்ஸ்பேண்டபிள்ஸ் படம் உலகம் முழுவதும் வரவேற்பைப் பெற்ற ஆக்ஷன் படத்தொடர். இந்திய ரசிகர்களை இன்னும் வலுவாகக் கவர, PVR பிக்சர்ஸ் மற்றும் MVP எண்டர்டெயின்மென்ட் (இந்தியா) உடன் இணைந்து ஆர்டிஸ்ட் அலெள்ட் (ArtistAloud) இணையத்தில் ஒரு போட்டியை வெளியிட்டு இருந்தனர். போட்டிக்கு வந்த ஆயிரக்கணக்கான இசைகளில் இருந்து 15 –ஐ மட்டும் இறுதிக் கட்டத்திற்கு தேர்வு செய்தனர். அதில் அனைவரையும் […]

13/08/2014 Dinesh R
“வரலாறு முக்கியம்!” – சில்வஸ்டர் ஸ்டலோன் சினிமா

“வரலாறு முக்கியம்!” – சில்வஸ்டர் ஸ்டலோன்

ரேம்போவாக கலக்கிய ஆக்ஷன் ஹோரோக்கு 68 வயதாகிறது. எனினும் அவரது ‘எக்ஸ்பேண்டபிள்ஸ் – 3’ மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. அதிலும் இம்முறை, எக்ஸ்பேண்டபிள்ஸில் ‘ப்ரேவ் ஹார்ட்’ நாயகன் மெல் கிப்சன் வில்லனாக அறிமுகமாகிறார். அந்த அனுபவத்தைப் பற்றி சில்வஸ்டர் ஸ்டலோனிடம் கேட்ட பொழுது, “வில்லனின் முகத்தில் குத்துவது சுலபம். ஆனா அந்தக் கதாபாத்திர உருவாக்கமும் அதன் பின்புலமான வரலாறையும் உருவாக்குவதுதான் கஷ்டம். மெல், ஸ்டோன்பேங்க்ஸ் எனும் பாத்திரத்தைச் செதுக்கியுள்ளார். அதனால் க்ளைமேக்ஸ் சண்டைக் காட்சி மிக அருமையாக […]

06/08/2014 Dinesh R
கிளாப் போர்ட் மூவிஸின் ‘மகாபலிபுரம்’ சினிமா

கிளாப் போர்ட் மூவிஸின் ‘மகாபலிபுரம்’

உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இயக்குநர் டான் சேண்டி இயக்கும் படம் “மகாபலிபுரம்”. கிளாப் போர்ட் மூவிஸ் சார்பாக வினாயக் இப்படத்தைத் தயாரித்துள்ளார். இப்படத்தில் வினாயக், அங்கனா ராய், விகிதா, ‘சூது கவ்வும்’ புகழ் கருணா, ரமேஷ், வெற்றி, கார்த்திக் மற்றும் பலர் நடித்துள்ளனர். தற்போது இப்படத்தை உலகம் முழுவதும் வெளியிடும் உரிமையை ஸ்டுடியோ 9 நிறுவனம் கைப்பற்றியுள்ளது. விரைவில் இந்த திரைப்படம் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

01/08/2014 Dinesh R
விரட்டும் சூறாவளி அயல் சினிமா

விரட்டும் சூறாவளி

இயற்கை அன்னை கோபம் கொண்டால், அதன் விளைவுகள் விபரீதமாக இருக்கும் என்பது தெரிந்த விஷயம். சூறாவளிக் காற்று சீறிப் பாய்ந்தால், அதன் விளைவிகளைப் பற்றிச் சொல்லவும் வேண்டுமா? வார்னர் பிரதர்ஸ் தயாரிப்பில் உருவாக்கப்பட்டுள்ள இப்படம், இந்த மாதிரியான ஒரு புயலின் கடும் கோபம் பற்றியும் அதன் விளைவாக அங்கு வாழும் மக்கள், உயிர் தப்பிக்க, தலை தெறிக்க ஓட வேண்டிய ஒரு நிலை உருவாகுவது பற்றியும் விளக்குகிறது. சில்வர்டன் என்பது ஓர் அழகிய, சிறு நகரம். அன்றும் […]

29/07/2014 Dinesh R
அர்னால்ட் பற்றி ரேம்போ! அயல் சினிமா

அர்னால்ட் பற்றி ரேம்போ!

வழக்கம் போல் ‘எக்ஸ்பேண்டபிள்ஸ்’ படத்தின் மூன்றாம் பாகமும் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகின் மிகச் சிறந்த ஆக்ஷன் ஹீரோக்களில் ஒருவரான சில்வஸ்டர் ஸ்டலோன் உருவாக்கியுள்ள இப்படத்தில், அர்னால்ட் ஸ்வாஸ்னேகர், மெல் கிப்ஸன், ஹாரிசன் ஃபோர்ட் போன்ற பல பிரபலமான நட்சத்திர ஆக்ஷன் ஹீரோக்கள் ஸ்டலோனோடு அணிவகுத்துள்ளனர. “ஆக்ஷன் ஹீரோக்கள் அழகானவர்களாக இருக்க வேண்டுமென்பதில்லை! ஏன், பெரிதான அளவில் உடற்கட்டு அமைந்திருக்க வேண்டும் என்கிற கட்டாயம் கூட கிடையாது. ஆரம்ப நாட்களில் நானும் அர்னால்ட்டும் போட்டியாளர்களாக ஒருவரையொருவர் […]

15/07/2014 Dinesh R
வீட்டிற்கே வரும் புது சினிமா! சினிமா

வீட்டிற்கே வரும் புது சினிமா!

திரையுலகில் அவ்வப்போது விஞ்ஞான வளர்ச்சியால் பல மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கும். சில மாற்றங்கள் உடனடியாக நடந்து விடும். சில மாற்றங்கள் நடக்க கால தாமதம் ஆனாலும் நடந்தே தீரும். காலம் காலமாக பயன்படுத்தப்பட்டு வந்த ஃபிலிம் சுருள் HARD DISKகளிலும், SD CARDகளிலும் சுருண்டு கொண்டது. 10 கிலோ எடையுடன் ஒரு மனிதன் தூக்கிச் சுமந்து அதன் மூலம் பதிவு செய்யப்பட்ட ஃபிலிம் கேமரா தடாலென டிஜிட்டல் கேமராவாக கைகளுக்கள் வந்தது. அதைப் போலவே, அகன்றத் […]

15/07/2014 Dinesh R
சபீரின் “கரர் – தி டீல்” அயல் சினிமா

சபீரின் “கரர் – தி டீல்”

நிகிதா தன் தாத்தாவுடன் தென் ஆஃப்ரிக்காவில் வாழ்கிறார். நகரின் ஒதுக்குப்புறமான மாளிகையொன்றில் இருவரும் வசிக்கிறார்கள். அன்னே எனும் நர்ஸ், நிகிதாவின் தாத்தாவைப் பார்த்துக் கொள்ள அம்மாளிகையிலேயே தங்குகிறார். ஒருநாள், நிகிதாவின் தாத்தாவிற்கு உடல்நிலை மோசமாகிறது. அம்மாளிகைக்கு வழக்கமாக வரும் மருத்துவரை அன்று தொடர்பு கொள்ள முடியாததால், நிகிதா ஆர்யன் எனும் மருத்துவரை அவசர உதவிக்கு அழைக்கிறாள். நிகிதாவின் தாத்தாவைக் காப்பாற்றுவதோடு, நிகிதாவிற்கும் மருத்துவம் பார்க்கிறார் ஆர்யன். ஆர்யனை நிகிதாவின் தாத்தாவிற்குப் பிடித்து விடுகிறது. தன் பேத்தி நிகிதாவை […]

11/07/2014 Dinesh R
“என் வியாபாரம் பெருசாகும்” – ‘அட்டகத்தி’ தினேஷ் சினிமா

“என் வியாபாரம் பெருசாகும்” – ‘அட்டகத்தி’ தினேஷ்

“அட்டகத்தியில நான் நானாவே இருந்துட்டேன். குக்கூல கொஞ்சம் வெளில போய் பண்ணியாச்சு. அதை முடிச்சுட்டு.. திருடன் போலிஸ் பண்றப்ப, கண் பார்க்கிறது என சில விஷயங்கள் எல்லாம் டஃப்பாக இருந்தது. அரங்கேற்ற வேளை க்ளைமேக்சில் வரும் சாங்கில், வி.கே.ராமசாமி சாரை ஜனகராஜ் துரத்துவார்ல? அந்த ஃபீல்தான் ‘திருடன் போலீஸ்’ படம் தரும். என்னுடைய வியாபாரத்தை இந்தப் படம் பெருசு பண்ணும்தான்னு நினைக்கிறேன்” என்றார் ‘திருடன் – போலீஸ்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய ‘குக்கூ’ புகழ் […]

11/07/2014 Dinesh R
ஆயிரம் மடங்கு உழைப்பில் “பூலோகம்” சினிமா

ஆயிரம் மடங்கு உழைப்பில் “பூலோகம்”

பிரம்மாண்டமான ஆக்ஷன் படமாக உருவாகியுள்ளது பூலோகம். பாக்சிங்கை மையமாகக் கொண்ட கதையம்சமுள்ள படம். இந்தப் படத்திற்கென பிரத்தியேகமாக அதிக உழைப்பைச் செலுத்தியுள்ளார் ஜெயம் ரவி. மதன் என்ற பாக்சரிடம் இரண்டு மாதங்கள் முறைப்படி பயிற்சி பெற்றுள்ளார் ஜெயம் ரவி. மேலும் இயக்குநர் கல்யாண கிருஷ்ணன் கேட்டுக் கொண்டதற்கிணங்க தனது எடையையும் 15 கிலோ கூட்டி, பூலோகம் படப்பிடிப்பின் பொழுது 90 கிலோ எடையை மெயின்டெயின் செய்துள்ளார். “பாக்சிங்கில் லீகலாக 6 பன்ச்சஸ்தான் அனுமதிப்பாங்க. அந்த 6 பன்ச்சை […]

01/07/2014 Dinesh R