சிவகார்த்திகேயனுடன் இணையும் ஹன்சிகா
"இயக்குநர் முருகதாஸ் அவர்களின் தயாரிப்பில் நடிக்கவிருப்பதை பெருமையாகவும், கௌரவமாகவும் கருதுகிறேன். இப்படத்தின் கதையும், திரைக்கதையும் என்னை மிகவும் கவர்ந்தது. இது ஒரு முழு நீள காமெடிப் படம். இப்படத்தின் கதாநாயகனாக சிவா கார்த்திகேயன் நடிக்க உள்ளார். இவரது திறமையும் வளர்ச்சியும் எல்லோரையும் கவர்ந்துள்ளது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வெற்றிப்பெறும் என்பதில் சந்தேகமே இல்லை. இப்படத்தின் படப்பிடிப்புக்காக ஆவலோடு காத்திருக்கிறேன்'' என்கிறார் மகிழ்ச்சியுடன் ஹன்சிகா மோத்வாணி....