32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

ஒரு புது கதவு திறக்குது

Dinesh R சேலம் Published: 28/02/2015 1 நிமிட வாசிப்பு Updated: 12/05/2015 சினிமா
எழுத்து அளவு:

உப்பு கருவாடு

“இப்பாடல் ஒரு இளைஞனின் கொண்டாட்டத்தின் வெளிப்பாடாய் இருந்தது. கௌதம் அவர்களின் குரல் இந்தப் பாட்டிற்கு அந்தத் துள்ளலைத் தந்துள்ளது. இசையமைப்பாளர் ஸ்டீவ், கௌதமின் நண்பர். முதலில் இசையமைப்பாளர் ஸ்டீவ் வாட்ஸ், கௌதம் மூலமாகத்தான் எனக்கு அறிமுகமானார். படத்தில் ஒரு சோலோ சாங் வைக்கலாம் என்று நானும் ஸ்டீவ் அவர்களும் முடிவு செய்தோம். இப்பாடலுக்கு புதிதாக ஒரு குரல் வேண்டும் என்று நினைத்தோம். ஜி.வி.எம். (கெளதம் வாசுதேவ் மேனன்) பாடினால் நன்றாக இருக்கும் என்று ஸ்டீவ் கூறினார். கௌதம் நன்றாகவே பாடுவார் என்று அறிந்து அவரை அணுகினோம். வியப்பிற்குள்ளான கௌதம் துளியும் தயங்காமல் எங்களையும் வியப்பில் ஆழ்த்தினார்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

ஒரு வெற்றிக்கான முதல் அடியை எடுத்து வைக்கும் ஒருவனின் கொண்டாட்டமாய் வரும் ‘புது ஒரு கதவு திறக்குது’ என்ற பாடலை அதே துள்ளலுடனும், கொண்டாட்டத்துடனும் பாடிக் கொடுத்தார் கௌதம். இப்பாடல் கடற்கரைக் காற்று போல் ரசிகர்களுக்கு புத்துணர்வைத் தரும்.

கேட்டதை நிறைவேற்றுவதற்கு நல்ல நண்பனை தவிர எவரும் உண்டோ” எனக் கூறினார் இயக்குநர் ராதா மோகன்.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.