32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

தலைவெட்டியான் பாளையம் மக்களைக் கவருவதற்கு ஜி.பி. முத்தான யோசனைகள்

Dinesh R சேலம் Published: 18/09/2024 1 நிமிட வாசிப்பு Updated: 19/09/2024 OTT
எழுத்து அளவு:

தலைவெட்டியான் பாளையம் முன்னோட்டத்தைத் தொடர்ந்து, இந்தத் தொடர் மீது ரசிகர்களுக்குப் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. முன்னதாக, ஜி.பி. முத்துவும் அபிஷேக் குமாரும், இந்தத் தொடரில் நடிக்கும் கதாபாத்திரங்களை ஒட்டி ஒரு அட்டகாசமான ப்ரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளனர். ஜி.பி. முத்து, அபிஷேக்குமாருக்கு தலைவெட்டியான் பாளையத்தின் டார்லிங்காக மாற ஐந்து அருமையான யோசனைகளைத் தருகிறார்.

1. எப்போதும் ஸ்ட்ரெஸ் ஆகக்கூடாது.
2. சம்பிரதாயமாக நடந்து கொள்ளக் கூடாது. ஏனெனில் இந்தக் கிராமத்தில் யாரும் புதியவரில்லை.
3. இயல்பாகப் பழக வேண்டும். அதே நேரம் புத்திக் கூர்மையுடன் இருக்க வேண்டும்.
4. பிரச்சனைகளிலிருந்து எப்போதும் ஒதுங்கி இருக்கவேண்டும்.
5. முக்கியமாக பேய் மரத்தை விட்டு எப்போதும் ஒதுங்கியே இருக்கவேண்டும்

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

‘இதையெல்லாம் ஒழுங்காகப் பின்பற்றினால், தலைவெட்டியான் பாளையத்தின் விசித்திரமான கிராமவாசிகளுக்குப் பிடித்தவனாக இருப்பாய்’ என்கிறார் ஜி.பி.முத்து. முத்துவின் இந்த விதிகளைப் பின்பற்றி இந்த சவாலில் அபிஷேக்கின் கதாபாத்திரமான சித்தார்த் வெற்றி பெறுவாரா?

தலைவெட்டியான் பாளையம் என்பது எட்டு அத்தியாயங்கள் கொண்ட நகைச்சுவைத் தொடராகும். இது பெரிய நகரத்தைச் சேர்ந்த ஒரு இளைஞன், தலைவெட்டியான் பாளையம் என்ற தொலைதூர கிராமத்தில், தனது புதிய பணியில், அறிமுகமில்லாத சூழலின் சவால்களை எப்படி எதிர்கொள்கிறான் என்பதைச் சொல்கிறது.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.