Shadow

OTT

தலைமை செயலகம் விமர்சனம்

தலைமை செயலகம் விமர்சனம்

OTT, OTT Movie Review, இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
என்றோ செய்த ஊழல், ஆளும் முதல்வரின் கழுத்தை நெறுக்க, முதல்வரின் கைத்தடிகள் இந்தச் சூழலைப் பயன்படுத்தி அடுத்த முதல்வராவதற்கு காய் நகர்த்த, அதே நேரம் 15 ஆண்டுகளுக்கு முன்பு வட இந்தியாவில் பன்சால் மற்றும் அவன் கூட்டாளிகள் ஐவரைக் கொலை செய்து விட்டு தப்பிச் சென்ற கௌலைகாரி துர்காவைத் தேடும் வழக்கு போலீஸ் இடமிருந்து சி.பி.ஐ.-க்கு மாற்றப்படுகிறது.  இந்த வட இந்திய மற்றும் தென் இந்திய நிகழ்விற்குமான தொடர்பு என்ன என்பதே இந்த தலைமை(ச்) செயலகம் இணைய தொடரின் கதை. ராடன் நிறுவனம் சார்பில் ராதிகா சரத்குமாரும், சரத்குமாரும் தயாரித்திருக்கும் இந்தத் தொடரை வசந்த பாலன் இயக்கி இருக்கிறார்.  கிஷோர், ஸ்ரேயா ரெட்டி, ரம்யா நம்பீசன், பரத், ஆதித்யா மேனன், சந்தான பாரதி, கவிதா பாரதி போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார்கள். எப்போதோ செய்த ஊழல் வழக்கில் சிறைக்குச் செல்ல வேண்டிய சூழ்நிலையில் ...
‘ஹார்ட் பீட்’ சீரீஸ் -ரீனாவின் கேள்விக்கு ரதியின் பதில் என்ன?

‘ஹார்ட் பீட்’ சீரீஸ் -ரீனாவின் கேள்விக்கு ரதியின் பதில் என்ன?

OTT
‘ஹார்ட் பீட்’ சீரிஸ் ஒரு மருத்துவமனையின் பின்னணியில் இளமை துள்ளும் காதல் கலந்து, இதயத்தை வருடும் பொழுதுபோக்கு சீரிஸாக, ரசிகர்களுக்கு இனிய அனுபவத்தை டிஸ்னி+ ஹாட்ஸ்டார் வழங்கி வருகிறது. மருத்துவமனையில் ரதி என்னும் மருத்துவருக்குக் கீழ், புதிதாக வேலைக்குச் சேரும் ரீனா, தான் தான் மருத்துவர் ரதியின் மகள் எனும் உண்மையை உடைக்கிறாள். இந்த சூழ் நிலையில் ரீனாவின் கேள்விக்கு ரதியின் பதில் என்ன? ஏன் ரீனாவை பிறந்தவுடன் தன்னுடன் வளர்க்காமல் குழந்தைகள் காப்பகத்தில் விட்டுச் சென்றாள்? ரீனாவை மகளாக ஏற்றுகொண்டு தன் குடும்பத்தில் இணைத்துக் கொள்வாரா? மேலான கேள்விகளுக்கு ரீனாவைப் போன்று ரசிகர்களும் பதிலை எதிர்பார்த்துள்ளனர். இந்த ஆச்சரியமான ட்விஸ்ட், அடுத்த வார அத்தியாயத்திற்காக, ரசிகர்களிடம் பெரும் ஆர்வத்தைத் தூண்டியுள்ளது. மேலும் பல திருப்பங்களுடன் , ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை அன்று ‘ஹார்ட் பீட்’ சீர...
அமேசான் 2024: ப்ரைம் வீடியோவின் புது வெளியீடுகள்

அமேசான் 2024: ப்ரைம் வீடியோவின் புது வெளியீடுகள்

OTT
ப்ரைம் வீடியோ, 2023 ஆம் ஆண்டை மிகப்பெரிய அளவில் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. 2024 இற்கான, கிட்டத்தட்ட 70 தொடர்கள் மற்றும் திரைப்படங்களின் பட்டியலை வெளியிட்டது ப்ரைம் வீடியோ. அவற்றில் பெரும்பாலானவை அடுத்த 2 ஆண்டுகளில் வெளியிடப்படும். 40 ஒரிஜினல் தொடர்கள் மற்றும் திரைப்படங்கள் மற்றும் இந்தியாவின் மிகப் பெரிய மற்றும் மிகவும் ஆவலோடு எதிர்பார்க்கப்பட்ட 29 திரைப்படங்களுடன் கூடிய இந்தப் புதிய பட்டியல் இந்தியாவின் தலைசிறந்த பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி மகிழ்ச்சியில் ஆழ்த்துவதற்கு உத்திரவாதமளிக்கிறது. வெளியிடப்படவிருக்கும் நிகழ்ச்சிகளின் தலைப்புக்கள் குறித்த விவரங்கள்:ப்ரைம் வீடியோவின், இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் ஹெட் ஆப் ஒரிஜினல்ஸ், அபர்ணா புரோஹித், "பிரைம் வீடியோவில், மொழியியல் மற்றும் புவியியல் எல்லைகளுக்கும் அப்பால் பயணிக்கும், ஒரு மாறுபட்ட, உண்மையான ...
இன்ஸ்பெக்டர் ரிஷி – இயற்கை அமைதி மர்மம்

இன்ஸ்பெக்டர் ரிஷி – இயற்கை அமைதி மர்மம்

OTT, Web Series
மேக் பிலீவ் புரொடக்ஷன்ஸ் பேனரின் கீழ் நந்தினி ஜே.எஸ் உருவாக்கி, சுக்தேவ் லஹிரி தயாரித்த தமிழ் சித்திரத்தில் நவீன் சந்திரா நாயகனாகவும், சுனைனா, கண்ணா ரவி, மாலினி ஜீவரத்தினம், ஸ்ரீகிருஷ்ண தயாள் மற்றும் குமரவேல் ஆகியோர் முக்கிய வேடங்களிலும் நடித்துள்ளனர்.பத்து எபிசோட்கள் கொண்ட இத்தொடர் மார்ச் 29 அன்று பிரத்தியேகமாக பிரைம் வீடியோவில் இந்தியாவிலும் 240 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களிலும் பிரீமியர் செய்யப்பட உள்ளது.இத் தொடர், பசுமை மற்றும் வனவிலங்குகள் நிறைந்த தமிழ்நாட்டின் ஒரு அழகிய கிராமத்திற்கு பார்வையாளர்களை அழைத்துச் செல்கிறது. ஆனால் சூழல், இன்ஸ்பெக்டர் ரிஷி மற்றும் இரண்டு சப்-இன்ஸ்பெக்டர்கள், (அய்யனார் மற்றும் சித்ரா,) காட்டின் ரகசியங்களை வெளிக்கொணரும் மற்றும் இந்த விவரிக்க முடியாத நிகழ்வுகளுக்குப் பின்னால் உள்ள உண்மையைக் கண்டறியும் சவாலை ஏற்கின்றனர். மூவரும் தங்களுட...
‘இன்ஸ்பெக்டர் ரிஷி’யின் த்ரில் இசைத்தொகுப்பு

‘இன்ஸ்பெக்டர் ரிஷி’யின் த்ரில் இசைத்தொகுப்பு

OTT, Web Series, இது புதிது
நந்தினி ஜே.எஸ் உருவாக்கத்தில், மேக் பிலீவ் புரொடக்ஷன்ஸ் பேனரின் கீழ், சுக்தேவ் லஹிரியால் தயாரிக்கப்பட்ட இந்த தமிழ் திகில் க்ரைம் டிராமா தொடரில், நவீன் சந்திரா, சுனைனா, கண்ணா ரவி, மாலினி ஜீவரத்தினம், ஸ்ரீகிருஷ்ண தயாள் மற்றும் குமரவேல் ஆகியோர் நடித்துள்ளனர். ‘இன்ஸ்பெக்டர் ரிஷி’ இந்தியாவிலும், உலகெங்கிலும் உள்ள 240 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் மார்ச் 29 அன்று வெளியிடப்படவிருக்கிறது.இத்தொடரில் இடம்பெறும் முதுகுத்தண்டை சில்லிடச் செய்யும் இசைத்தொகுப்பை இன்று வெளியிட்டது. அஷ்வத் நாகநாதன் (Ashwath Naganathan) இசையமைப்பில் உருவான இந்தத் தொகுப்பில் அதன் டைட்டில் டிராக் உட்பட இந்த திகில் க்ரைம் டிராமா தொடரின் இயற்கைக்கு அப்பாற்பட்ட சிலிர்ப்பூட்டும் கூறுகளை உள்ளடக்கிய அச்சமூட்டும் தொனியுடனான மனதைக் கொள்ளை கொள்ளும் ஏழு பாடல்கள் இடம்பெற்றுள்ளன. இந்த ஒட்டுமொத்த இசைத் தொகுப்பும் இன...
“தி வில்லேஜ் | மக்கள் விரும்பும் திகில் தொடராக இருக்கும்” – ஆர்யா

“தி வில்லேஜ் | மக்கள் விரும்பும் திகில் தொடராக இருக்கும்” – ஆர்யா

OTT, Web Series
ப்ரைம் வீடியோவில் வெளியாகவிருக்கும் தமிழ் திகில் தொடரான 'தி வில்லேஜ்' எனும் நீண்ட வடிவிலான இணையத் தொடரின் உலகளாவிய பிரீமியரை அண்மையில் அறிவித்தது. இந்தத் தொடர், அதே பெயரில் அஸ்வின் ஸ்ரீவத்சங்கம், விவேக் ரங்காச்சாரி மற்றும் ஷாமிக் தாஸ் குப்தா ஆகியோர் உருவாக்கிய கிராஃபிக் ஹாரர் நாவல்களால் ஈர்க்கப்பட்டு உருவாகியிருக்கிறது. தனது குடும்ப உறுப்பினர்களின் மறைவுக்குப் பின்னணியில் உள்ள மர்மத்தை அவிழ்க்க முயற்சி செய்யும் மனிதனின் கதையை இந்த திகில் தொடர் விவரிக்கிறது. பத்தாண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையில் பணியாற்றி வருகிறார். இப்போது இந்த திகில் தொடரில் நடித்ததன் மூலம் இணையத் தொடரின் ஸ்ட்ரீமிங்கில் அறிமுகமாகிறார். இந்த திகில் தொடரில் அவர் கௌதம் எனும் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்தக் கதாபாத்திரம், கட்டியல் எனும் கிராமத்தில் வசிக்கும் உள்ளூர் வாசிகள் சிலருடன் இணைந்து தனது குடும்பத்தைக் கண்டறியு...
தி வில்லேஜ் – ப்ரைம் வீடியோவின் திகில் தொடர்

தி வில்லேஜ் – ப்ரைம் வீடியோவின் திகில் தொடர்

OTT, Web Series
அமேசான் ப்ரைம் வீடியோவில், தமிழ் ஒரிஜினல் திகில் தொடரான “தி வில்லேஜ்” நவம்பர் 24 அன்று வெளியாகிறது. ஸ்டுடியோ சக்தி புரொடக்ஷன்ஸ் சார்பில் பி.எஸ்.ராதாகிருஷ்ணன் தயாரிக்க, மிலிந்த் ராவ் இயக்கியுள்ளார். இந்தத் தொடரில் புகழ்பெற்ற தமிழ் நடிகரான ஆர்யா, மிகச் சிறந்த திறமை வாய்ந்த நட்சத்திரங்களான திவ்யா பிள்ளை, அலீயா, ஆடுகளம் நரேன், ஜார்ஜ் மரியான், பூஜா ராமச்சந்திரன், முத்துக்குமார் கே., கலைராணி எஸ்.எஸ்., ஜான் கோக்கன், வி.ஜெயபிரகாஷ், அர்ஜுன் சிதம்பரம், மற்றும் தலைவாசல் விஜய் உட்பட பல்வேறு நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். அஸ்வின் ஸ்ரீவத்சங்கம், விவேக் ரங்காச்சாரி மற்றும் ஷாமிக் தாஸ் குப்தா ஆகியோரால் உருவாக்கப்பட்டு, முதலில் யாலி ட்ரீம் ஒர்க்ஸால் அதே பெயரில் பிரசுரிக்கப்பட்ட கிராஃபிக் திகில் நாவலால் ஈர்க்கப்பட்டு தயாரிக்கப்பட்ட ஒரு திகில் தொடராகும். தனது குடும்பத்தை ஆபத்திலிருந்து மீட்டு காப்பாற்...
ஸ்கந்தா – தி அட்டாக்கர் விமர்சனம்

ஸ்கந்தா – தி அட்டாக்கர் விமர்சனம்

OTT, OTT Movie Review, அயல் சினிமா, இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
தலைப்பு வைப்பது ஒரு கலை. சிலர், தலைப்பில் கதைக் கருவைத் தொட்டுச் செல்வார்கள்; சிலர், முழுக்கதையையும் உணர்த்துவார்கள்; சிலர், சம்பந்தமே இல்லாமல் என்னத்தையாவது தலைப்பென வைப்பார்கள். படத்தின் விமர்சனத்தையே தலைப்பாக்கும் தைரியம், நந்தமூரி பாலகிருஷ்ணாவின் 'சிம்ஹா', 'லெஜண்ட்', 'அகண்டா' முதலிய படங்களை இயக்கிய ஆக்ஷன் இயக்குநர் போயபட்டி ஸ்ரீனுவிற்கே உண்டு. படம், பார்வையாளர்களைக் கிஞ்சித்தும் கருணையின்றிச் சாவடி அடிக்கிறது. அதை நேர்மையாகத் தலைப்பிலேயே சுட்டிக் காட்டி, நேர்மை என்றால் 'ஹமாம்' சவர்க்காரம் மட்டுமில்லை, தானும் தானென உலகிற்கு எடுத்தியம்பியுள்ளார் ஸ்ரீனு. இரண்டு வில்லன்களின் அறிமுகம் காட்டப்பட்டவுடன், ஆந்திரக் காரத்துடன் முழுச் சாப்பாடு விருந்து தயாரென நினைக்கையில், அது தொடங்குகிறது. அது என்றால் படத்தின் 'அட்டாக்' வெர்ஷன். ரெகுலராக ஜிம்முக்குப் போய் நன்றாக உடலை வளர்த்து வைத்திருக்கும் ஒ...
கூழாங்கல் விமர்சனம்

கூழாங்கல் விமர்சனம்

OTT, OTT Movie Review, இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
வறண்ட நிலப்பகுதியில் பயணிப்பவர்கள், தண்ணீர் தாகத்தைத் தணிக்க கூழாங்கல்லை வாயில் வைத்துக் கொள்வார்கள். அத்தகையதொரு நிலப்பகுதியை வேலுவும், அவனது தந்தை கணபதியும் நடந்தே கடக்கின்றனர். பிறந்த வீட்டுக்குப் போன மனைவியை அழைத்து வர, கடன் வாங்கிப் பேருந்தில் செல்லுகிறான் குடிகாரனான கணபதி. மீண்டும் திரும்புகையில், நல்ல உக்கிரமான வெயிலில் தந்தையை நடக்க வைக்கிறான் வேலு. நடப்பது வேலுவிற்கும், கடன் வாங்கிப் பேருந்தில் வரக் குறைவான வாய்ப்பைப் பெற்ற அவனது தாயிற்கும் வழக்கமானது ஒன்றாகும். ஆனால் மாப்பிள்ளை முறுக்குடன் திரியும் கணபதிக்குப் புதுசு. தந்தையை, நடக்க வைப்பதோடு மட்டுமல்லாமல் ஒரு துண்டு கண்ணாடியைக் கொண்டு தந்தையின் முதுகையும் சூரியக்கதிர்களால் சூடேற்றியும் விளையாடுகிறான். வத்திப்பெட்டியை ஒளித்து வைத்து பீடி பிடிக்க நினைக்கும் தந்தையைக் கோபப்படுத்துகிறான். முழுப் படமுமே அவ்விருவரின் நடைப்பயணம் மட்...
சட்னி சாம்பார் – இயக்குநர் ராதாமோகனின் வெப் சீரிஸ்

சட்னி சாம்பார் – இயக்குநர் ராதாமோகனின் வெப் சீரிஸ்

OTT, Web Series, திரைத் துளி
டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தனது அடுத்த ஒரிஜினல் சீரிஸாக, பிரபல இயக்குநர் ராதாமோகன் இயக்கத்தில், "சட்னி சாம்பார்" சீரிஸை அறிவித்துள்ளது. இந்த சீரிஸ் பூஜையுடன் ஜூலை 15 அன்று துவங்கியது. வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிப்பை மேற்கொள்கிறது. யோகிபாபு முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் இந்த ஒரிஜினல் சீரிஸ் அனைத்து ரசிகர்களுக்கும் விருந்தாக அமையும். இயக்குநர் ராதாமோகன், "சட்னி சாம்பார்' சீரிஸின் படப்பிடிப்பை, அட்டகாசமான குழுவுடன் இணைந்து, மகிழ்ச்சியுடன் துவங்கியிருக்கிறோம். இது முழுக்க முழுக்கக் காமெடியாக அனைவரும் ரசிக்கும்படியான படைப்பாக இருக்கும். யோகி பாபு மற்றும் வாணி போஜன் மட்டுமில்லாமல், இந்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் சீரிஸில் 'கயல்' சந்திரமௌலி, நிதின் சத்யா, சார்லி மற்றும் குமரவேல் உட்பட பல முக்கிய நட்சத்திரங்களும் நடிக்கிறார்கள்" என்றார். நடிகர் யோகிபாபு, "சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவர...
சக்ரவியூகம் – நாயகன் அஜயின் மர்டர் மிஸ்ட்ரி

சக்ரவியூகம் – நாயகன் அஜயின் மர்டர் மிஸ்ட்ரி

OTT, OTT Movie Review, சினிமா
துப்பறியும் வகை "சக்ரவியூகம்" திரைப்படத்தை சேத்குரி மதுசூதன் இயக்கியுள்ளார். இந்தப் படத்தைப் பிரபல தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் வெளியிட்டுள்ளார்கள். கதையின் நாயகனாக அஜய் நடித்திருக்கும் படத்தில் விவேக் திரிவேதி, ஊர்வசி பரதேசி, பிரக்யா நயன், ஷுபலேகா சுதாகர், ராஜீவ் கனகலா, சுரேஷ் பிரியா, ஸ்ரீகாந்த் ஐயங்கார், ராஜ் திரன்தாசு ஆகியோர் முன்னணி பாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். சஞ்சய் ராவின் மனைவி சிரி தனது வீட்டில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடக்கிறார். விசாரணை அதிகாரி எஸ்.ஐ.சத்யா தனது விசாரணையைத் துவங்குகிறார். அவர் முதலில் சஞ்சய் தான் குற்றவாளி என்று நினைக்கிறார். மேலும், சஞ்சய் ராவின் நெருங்கிய நண்பரும், தொழில் பங்குதாரருமான ஷரத்தைச் சந்தேகிக்கிறார். கொலைக்குப் பிறகு வீட்டில் இருந்து ஒரு கோடி மதிப்புள்ள பணம் மற்றும் தங்கம் காணாமல் போனதால், சத்யா சிரியின் வீட்டில் பணி...
“குட் நைட்” – ஜூலை 3 முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில்

“குட் நைட்” – ஜூலை 3 முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில்

OTT, சினிமா, திரைத் துளி
இந்த வருடத்தின் சூப்பர் ஹிட் திரைப்படமான குட் நைட் திரைப்படத்தை, டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளம் தங்கள் ரசிகர்களுக்காகச் சிறப்பு விருந்தாக ஜூலை 3 முதல் வழங்குகிறது. இயக்குநர் விநாயக் சந்திரசேகரனின் இயக்கத்தில், மணிகண்டன், மீதா ரகுநாத் நடிப்பில், அருமையான நகைச்சுவை டிராமாவான குட் நைட் திரைப்படம் வெளியானது. குறட்டை ஒலியும், அது சமூகத்தில் உண்டாக்கும் அதிர்வுகளையும் அதன் மீதான கருத்துக்களையும் அலசுகிறது இந்தப் படம். ஒருவனின் வாழ்க்கையையும் அதனால் சமூகத்தில் ஏற்படும் பிரச்சனைகளையும், நகைச்சுவையாகச் சொல்லப்பட்டுள்ளது. குறட்டை விடுவதால், அவதிப்படும் மணிகண்டனுக்கும், அவரது மனைவியாக நடித்துள்ள மீதாவிற்கும் உள்ள உறவையும், அவர்கள் வாழ்வில் குறட்டை ஏற்படுத்தும் தாக்கங்களையும் நகைச்சுவையுடன் அருமையான திரைக்கதையில் தந்துள்ளது இப்படம். மோகனின் குறட்டை சத்தம் அனுவை இரவு முழுவதும் தூங்கவிடாமல் செய்கிறது. இறு...
சிர்ஃப் ஏக் பண்டா காஃபி ஹை – சாமானியன் Vs சாமியார்

சிர்ஃப் ஏக் பண்டா காஃபி ஹை – சாமானியன் Vs சாமியார்

OTT, சினிமா, திரைச் செய்தி
இந்தியத் திரையுலகின் மிகப் பெரிய கோர்ட் டிராமாவான "சிர்ஃப் ஏக் பண்டா காஃபி ஹை (Sirf Ek Bandaa Kaafi Hai)" திரைப்படத்தை, ஜூன் 7 முதல் உள்ளூர் மொழிகளில் காணலாம். இந்தியாவின் முன்னணி OTT தளமான ZEE5, அதன் சமீபத்திய நேரடி-டிஜிட்டல் ஒரிஜினல் படைப்பான ‘சிர்ஃப் ஏக் பண்டா காஃபி ஹை’ படத்தை சமீபத்தில் வெளியிட்டது. உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில், அபூர்வ் சிங் கார்க்கி இயக்கத்தில், கோர்ட் டிரமாவாக உருவாகியுள்ள ‘சிர்ஃப் ஏக் பந்தா காஃபி ஹை’ படத்தில் வழக்கறிஞராக மனோஜ் பாஜ்பாய், P.C. சோலங்கி எனும் பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் பார்வையாளர்கள் மற்றும் விமர்சகர்களிடம் பெரும் பாராட்டுக்களைக் குவித்தது. மேலும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று பார்வை எண்ணிக்கையில் சாதனை படைத்தது. ZEE5 தனது பிராந்திய ரசிகர்களுக்காக இப்படத்தை வரும் ஜூன் 7 ஆம் தேதி முதல் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியிடுகிறத...
மாடர்ன் லவ் சென்னை விமர்சனம்

மாடர்ன் லவ் சென்னை விமர்சனம்

OTT, OTT Movie Review, சினிமா
என்றென்றும் புதுமை மாறாமல் இருக்கும் ஒரு விஷயம் என்றால் அது ‘காதல்’ தான். அதாவது, காதல் என்றுமே நவீனமும் ஆகாது, பழைமையானதாகவும் மாறாது. ‘மாடர்ன் லவ்’ என்பதை, மாறி வரும் நவீன யுகத்தில், காதல் என்பது என்னவாக உள்ளது, எப்படிப் பார்க்கப்படுகிறது என்பதாகப் புரிந்து கொள்ளலாம். சங்ககாலம் முதலே, காதலெனும் சொல்லை அகவயமான உணர்வாகவே பார்த்துப் போற்றியுள்ளனர் தமிழர்கள். போன நூற்றாண்டின் மத்தியில், அது ‘லவ்’வாக மாறியதில் இருந்து, அவ்வுணர்வு அகத்திலிருந்து புறத்திற்கு மெல்ல கசியத் தொடங்கி, இப்பொழுது புறவயமான அம்சமாகவே பெரும்பாலும் மாறிவிட்டது. அதற்கு நல்லதொரு எடுத்துக்காட்டாக உள்ளது தியாகராஜன் குமாரராஜாவின் ‘நினைவோ ஒரு பறவை’ படம். போகியுடன் ‘சிச்சுவேஷன்ஷிப் (Situationship)’-இல் இருக்கும் சாம் எனும் பெண், கே எனும் ஆணுடன் சிச்சுவேஷன்ஷிப்பில் இணைகிறார். பார்க்கும் கணத்தில், கிடைக்கும் வாய்ப்பைத் தவறவிடாம...