32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

இசையமைப்பாளரானார் பாடகி ஸ்வாகதா

Dinesh R சேலம் Published: 18/10/2019 2 நிமிட வாசிப்பு Updated: 08/12/2019 Songs
எழுத்து அளவு:

வார்த்தைகளை, இசை கலந்து இனிமையான குரலில் பாடும் போதுதான் ஒரு பாடல் உயிர் பெறுகிறது. அப்படி மயக்கும் குரலால் தமிழ்சினிமாவில் பல பாடல்களுக்கு உயிர் கொடுத்து பிரபலமான பாடகியாக வலம் வருபவர் பாடகி ஸ்வாகதா.

அவரின் குரலில் காற்றின் மொழி படத்தில் ‘டர்ட்டி பொண்டாட்டி’, லட்சுமி படத்தில் ‘ஆலா ஆலா’  பாடல்கள் உள்ளிட்ட நிறைய பாடல்களைப் பாடி இருக்கிறார். இப்போது வெளிவரவுள்ள பல படங்களிலும் பாடி இருக்கிறார்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

தற்போது அவருக்குள் இருக்கும் இன்னொரு பரிணாமமும் வெளிப்பட்டுள்ளது. இசையையும் வார்த்தைகளையும் உள்வாங்கி அற்புதமான குரலில் பாடல்களை வெளிப்படுத்தும் ஸ்வாகதா தற்போது ஒரு பாடலுக்கு இசையமைத்து, பாடி அந்தப் பாடலை வீடியோவாகவும் வெளியிட்டிருக்கிறார். வீடியோவில் அவரே தலைமை நாயகியாக நடிக்கவும் செய்திருக்கிறார். தனிப்பட்ட முறையில் அவரே, இசை, குரல், நடிப்பு என முழுப் பொறுப்பையும் ஏற்று “அடியாத்தே” என்ற இசை ஆல்பத்தை யூ-ட்யூபில் வெளியிட்டிருக்கிறார்.

இளைஞர்களிடையே அப்பாடல் மிகச்சிறப்பான வரவேற்பைப் பெற்று வருகிறது. இசையமைப்பாளர்கள் கதாநாயகர்களாக நடிப்பதைப் போன்று ஒரு பாடகியான ஸ்வாகதா இசையமைப்பாளராகப் பரிணாமம் அடைந்துள்ளார். முகிலன் முருகேசன் இயக்கியுள்ள இந்தப் பாடலின் துவக்கத்தில், “நிலா வரும் சாமம் தோறும் மாமன் ஞாபகம்” என்ற வரிகளில் இசையும் அவரது குரலும் மெஸ்மரிசம் செய்கிறது.

ஸ்வாகதா இசையமைத்து, நடித்த அடியாத்தே பாடலை கெளதம் வாசுதேவ் மேனன், யுவன் ஷங்கர் ராஜா, ரா. பார்த்திபன், விக்னேஷ் சிவன், இயக்குநர் திரு,  அசோக் செல்வன், பாடகி சின்மயி, ஹரீஷ் கல்யாண் உள்ளிட்ட பல பிரபலங்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.