32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
குறிச்சொல்

குமரவேல்

8 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன
“குமார சம்பவம்: கொடுத்த வாக்கை நிறைவேற்றிவிட்டேன்” – கே.ஜி.கணேஷ் | Venus Infotainment சினிமா முக்கியச் செய்தி
04/09/2025 Dinesh R 8 நிமிட வாசிப்பு

“குமார சம்பவம்: கொடுத்த வாக்கை நிறைவேற்றிவிட்டேன்” – கே.ஜி.கணேஷ் | Venus Infotainment

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொலைக்காட்சித் தொடர் மூலம் ரசிகர்களிடம் பிரபலமான நடிகர் குமரன் தங்கராஜன் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘குமார சம்பவம்’ திரைப்படத்தின் முன்னோட்டம் சென்னையில் வெளியிடப்பட்டது. இதற்காக நடைபெற்ற நிகழ்வில் தயாரிப்பாளர் கணேஷ் முன்னோட்டத்தை வெளியிடப் படக்குழுவினர் பெற்றுக் கொண்டனர். நடிகரும் இயக்குநருமான பாலாஜி வேணுகோபால் இயக்கத்தில் இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தை வீனஸ் இன்ஃபோடெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே.ஜி. கணேஷ் தயாரித்திருக்கிறார். நடிகர் குமரவேல், ”இயக்குநர் பாலாஜி வேணுகோபால் இயக்கத்தில் நான் நடிக்கும் இரண்டாவது படம். […]

முழுமையாகப் படிக்க
செய்திகள் வரிசை (பக்கம் 1)
சட்னி சாம்பார் | இயக்குநர் ராதாமோகனின் 20 ஆம் ஆண்டு OTT

சட்னி சாம்பார் | இயக்குநர் ராதாமோகனின் 20 ஆம் ஆண்டு

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் வழங்க, வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில், இயக்குநர் ராதா மோகனின் இயக்கத்தில், அதிரடியான நகைச்சுவை சரவெடி வகைமையில் உருவாகியுள்ள சீரிஸ், ‘சட்னி சாம்பார்’. நடிகர் யோகி பாபுவின் முதல் முழுநீள வெப் சீரிஸாக உருவாகியுள்ள, இந்த சீரிஸ், ஜூலை 26 ஆம் தேதி முதல் ஸ்ட்ரீமாகத் தொடங்கியுள்ளது. வேல்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கும் முதல் வெப் சீரிஸ் இது. அஜீஸ் அசோக் இசையமைத்துள்ள மூன்றாவது வெப்சீரிஸ் இது. அவரது இசையில், ஹாட்ஸ்டாரில் வெளியாகும் இரண்டாவது வெப் […]

27/07/2024 Dinesh R
காற்றின் மொழி விமர்சனம் சினிமா

காற்றின் மொழி விமர்சனம்

‘தும்ஹாரி சுலு’ எனும் ஹிந்திப் படத்தின் மறு உருவாக்கமாக வந்துள்ளது ‘காற்றின் மொழி’ திரைப்படம். சுலோச்சனாவாக நடித்த வித்யாபாலனின் பாத்திரத்தில் விஜயலக்‌ஷ்மியாக ஜோதிகா நடித்துள்ளார். நாயகியை மையப்படுத்திய படமாக ஜோதிகா தேர்ந்தெடுத்து நடிப்பது சிறப்பு. ஒரே மாதிரியான அம்சம் பொருந்திய கதைகளிலேயே உழலாமல், ஜோதிகாவைப் போல், முன்னணி நாயகர்களும் படத்தைத் தேர்ந்தெடுத்தால் எப்படியிருக்கும்? பன்னிரெண்டாம் வகுப்பு தேறாத விஜியலக்‌ஷ்மிக்கு எதிர்பாராத விதமாக ஹலோ எஃப்.எம்.-இல் ஆர்ஜே-வாக (RJ – Radio Jockey) வேலை கிடைக்கிறது. அதனால் அவர் […]

17/11/2018 Dinesh R
60 வயது மாநிறம் விமர்சனம் சினிமா

60 வயது மாநிறம் விமர்சனம்

‘கோதி பண்ணா சாதார்ணா மைக்கட்டு (Godhi Banana Sadharna Mykattu)’ என்ற படம் கன்னடத்தில், 2016 இல் வெளிவந்தது. ‘கோதுமை நிறம் சாதாரண உடற்கட்டு’ என்பது அந்தக் கன்னடப்படத் தலைப்பின் பொருள். இயக்குநர் ராதாமோகன், ’60 வயது மாநிறம்’ எனத் தமிழில் மீள் உருவாக்கம் செய்துள்ளார். அல்சைமர் நோயால் பாதிக்கப்படும் 60 வயது கோவிந்தராஜ் காணாமல் போய்விடுகிறார். அவரையொரு பராமரிப்பு இல்லத்தில் சேர்த்துவிட்டிருக்கும் அவரது மகன் சிவா, தனது அலட்சியத்தால் தந்தையைத் தொலைத்துவிட்டோமெனத் தேடி அலைகிறான். சிவாவின் […]

02/09/2018 Dinesh R
ரிச்சி விமர்சனம் சினிமா

ரிச்சி விமர்சனம்

ரிச்சி எனும் ரிச்சர்ட்டின் வாழ்க்கை எவ்வாறு எதனால் திசை மாறி, அவன் வாழ்க்கை என்னானது என்பதுதான் படத்தின் கதை. 2014இல் வெளியான ‘உள்ளிடரு கண்டன்தே’ என்ற கன்னடப் படத்தின் ரீமேக் ஆகும். ஓர் அசாத்திய பொறுமையைக் கோருகிறது படம். துண்டு துண்டாய், அத்தனை கதாபாத்திரங்களைக் கொண்டு, இயக்குநர் கதையை நேர்க்கோட்டிற்குக் க்ளைமேக்ஸில் கொண்டு வரும் முன் ஒரு வழியாகிவிடுகிறோம். படத்தில் கையாண்டுள்ள கதை சொல்லும் பாணிக்கு நாம் தயார் ஆகாதது ஒரு காரணம் என்றாலும், மெதுவாகத் தனித்தனி […]

09/12/2017 Dinesh R
குரங்கு பொம்மை விமர்சனம் சினிமா

குரங்கு பொம்மை விமர்சனம்

புன்னகை வாங்கினால் கண்ணீர் இலவசம் என்ற குறும்படம், இயக்குநர் நித்திலனுக்கு ‘குரங்கு பொம்மை’ படத்திற்கான வாய்ப்பைப் பெற்றுத் தந்ததுள்ளது. அதைச் சரியாக உபயோகப்படுத்திக் கொண்டுள்ளார் நித்திலன். ஒரு பேருந்து நிறுத்தத்தில், பெரியவர் ஒருவரின் குரங்கு பொம்மை அச்சிடப்பட்ட பை ஒன்று நாயகனுக்குக் கிடைக்கிறது. அந்தப் பையில் என்ன உள்ளது என்றும், அது நாயகனின் வாழ்வில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படுத்துகிறது என்பதும் தான் படத்தின் கதை. படத்தின் முதற்பாதி தன்னுள் பார்வையாளர்களை இழுத்துக் கொள்கிறது. நடிகர்கள் அனைவரையும் அறிமுக […]

01/09/2017 Dinesh R
உப்பு கருவாடு விமர்சனம் சினிமா

உப்பு கருவாடு விமர்சனம்

சினிமாவைத் தவிர வேறொன்றினை அறியாத சந்திரனுக்கு, படம் இயக்க காசிமேடு தயாரிப்பாளர் ஒருவர் கிடைக்கிறார். பல சிக்கில்களுக்கு மத்தியில், சந்திரனால் அந்தப் படத்தை இயக்க முடிந்ததா இல்லையா என்பது தான் படத்தின் கதை. ராதாமோகனின் ஆஸ்தான நடிகர்களில் ஒருவரான குமரவேல் தான் படத்தின் நாயகன். அவர் பீடி பிடித்துக் கொண்டே முதற்பாதி படத்தில் பட்டும் படாமலும் திரையில் தோன்றினாலும், இரண்டாம் பாதியில் ஒட்டுமொத்த படத்துக்கே தான் தான் நாயகனென கருணாகரனை மிக இலகுவாக முந்தி விடுகிறார். மாஞ்சா என்ற […]

27/11/2015 Dinesh R
பொன்னியின் செல்வன் – நாடக அனுபவம் கட்டுரை

பொன்னியின் செல்வன் – நாடக அனுபவம்

மு.கு.: மேஜிக் லேண்டர்ன் தியேட்டரும், எஸ்.எஸ். இண்டர்நேஷ்னலும் இணைந்து நிகழ்த்தும் அற்புதமான 3½ மணி நேர ‘பொன்னியின் செல்வன்’ நாடகம், இன்று 25வது முறையாக (2014 – 2015) மேடையேற்றப்படுகிறது சுமார் 60 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட, ஐந்து பாகங்கள் கொண்ட ஒரு பெரும் சரித்திரப் புதினத்தை மூன்றரை மணி நேரத்திற்குச் சுருக்கி, அதனை மிக நேர்த்தியான நாடகமாக உருமாற்றியுள்ளனர். அரங்கை நிர்மாணித்த R.K.ஜெயவேலுவும், கலை இயக்குநர் தோட்டா தரணியும், உடைகளை வடிவமைத்து குந்தவையாகவும் நடித்த பிரீத்தி […]

07/07/2015 Dinesh R