Tag: ஷாருக்கான்

ஷாருக்கானின் ‘டங்கி டிராப் 1’
இந்தியத் திரையுலகின் தலைசிறந்த கதைசொல்லியாகப் போற்றப்படும் ராஜ்குமார் ஹிரானி, ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களால் கொண்டாடப்பட்ட பல அற்புதமான திரைப்படங்களை வழங்கியுள்ளார். தற்போது ரசிகர்களின் மனதை இலகுவாக்கும் மற்றுமொரு அற்புதமான நகைச்சுவை திரைப்படைப்பான ‘டங்கி’ மூலம் பார்வையாளர்களுக்கு விருந்தளிக்க உள்ளார்.
இரண்டு மிகப் பெரும் திரைக்கலைஞர்களான ஷாருக் கான் மற்றும் ராஜு ஹிரானி ஆகிய இருவரும் இணைகின்றனர். நமக்குள் அன்பான நினைவுகளைத் தூண்டி, சினிமாவின் இனிமையையும், அதைக் கண்டுகளிக்கும் ஏக்கத்தையும் நம்முள் திரும்பக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது இப்படம்.
இன்று வெளியிடப்பட்ட ‘டங்கி டிராப் 1’ ட்ரெய்லர், ராஜ்குமார் ஹிரானி அமைத்திருக்கும் அற்புதமான உலகத்தைப் பற்றிய ஒரு சிறு அறிமுகப்பார்வையை நமக்குத் தருகிறது. இது, இதயம் வருடும் ஓர் அழகான நான்கு நண்பர்களின் நட்பின் கதை. நிஜ வாழ்க்கை அனுபவங்களில...

ஜவான்- விமர்சனம்
பெரிய ஹீரோக்களின் திரைப்படங்கள் கமர்ஸியல் இயக்குநர்களின் திரைப்படங்கள் இவைகளில் நாம் கேட்கக்கூடாத கேள்வி கதை என்ன என்பது. ஏனென்றால் பெரும்பாலும் அது ஒரே கதை தான். நல்வழியில் செல்லும் நாயகனின் வாழ்க்கையை தீய வழியில் செல்லும் வில்லன் சிதைப்பான். ஹீரோ மீண்டு வந்து பழிவாங்குவார். சில சமயங்களில் ஹீரோ பழிவாங்கத் தவறினால் அவரின் மகன் வந்து பழி வாங்குவார். இதன் வகையறாக்கள் அப்பாவும் மகனும் சேர்ந்து பழி வாங்குவது, அப்பாவிற்காக மகன் பழி வாங்குவது, மகனுக்காக அப்பா பழி வாங்குவது என உலக சினிமா வரலாறு தொடங்கியதில் இருந்து இது தொன்றுதொட்டு இருந்து வரும் வழக்கம். உதாரணத்திற்கு நம் இயக்குநர் அட்லியின் படங்களில் முதல் படமான ‘ராஜா ராணி’யை மட்டும் விட்டுவிட்டு பிற படங்களைப் பாருங்கள்.’தெறி’ தன் குடும்பத்தை சிதைத்தவனைப் பழி வாங்கும் ஹீரோ. “மெர்சல்’ தன் அப்பா அம்மாவை கொன்றவனை பழி வாங்கும் மகன்(கள்), “...

‘தமிழ்த் திரையுலகிலிருந்து நிறைய விசயங்களை கற்றுக் கொண்டிருக்கிறேன்’ – ஷாருக் கான்
ஷாருக்கான் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் தயாராகி இருக்கும் 'ஜவான்' திரைப்படத்தின் வெளியீட்டிற்கு முன்னதான விளம்பரப்படுத்தும் நிகழ்வு சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது.சென்னையில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் அமைந்திருக்கும் கலை அரங்கில் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் மற்றும் ரசிகர்களுடன் நடைபெற்ற இந்நிகழ்வில் படத்தை தமிழகம் மற்றும் கேரளாவில் வெளியிடும் விநியோகஸ்தரான ஸ்ரீ கோகுலம் கோபாலன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். இவ்விழாவிற்கு வருகை தந்திருந்த அனைவரையும் விநியோகஸ்தரான ஸ்ரீ கோகுலம் கோபாலன் வரவேற்றார். இந்நிகழ்வில் இசையமைப்பாளர் அனிருத் பேசுகையில், '' என் மீது நம்பிக்கை வைத்து எனக்கு வாய்ப்பளித்த ரெட் சில்லிஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்திற்கும், பூஜா தட்லானி மற்றும் கௌரி கான் ஆகியோருக்கும் நன்றி. பாடலா...

‘ஜவான்’ படத்தில் சாதனை படைத்த ‘ஹையோடா’ பாடல்
அன்பு அனைத்தையும் வெல்லும்! என்கின்ற வாசகத்துக்கு ஏற்ப, ஜவானில் இடம்பெற்ற காதல் பாடலான 'ஹையோடா' என தமிழிலும் , 'சலேயா' என இந்தியிலும், 'சலோனா' என தெலுங்கிலும் தொடங்கும் பாடல் வெளியாகி, தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும், யூட்யூபில் 35 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வைகளை பெற்றுள்ளது.யூட்யூபில் 24 மணி நேரத்தில் உலகளவில் அதிக நபர்களால் பார்வையிடப்பட்ட வீடியோவாகவும் சாதனை படைத்திருக்கிறது.யூட்யூப் மற்றும் யூட்யூப் மியூசிக் தர வரிசையில் 'ஹையோடா' முதலிடத்தில் ட்ரெண்டிங்கில் உள்ளது.தமிழில் 'ஹையோடா' . இந்தியில் 'சலேயா'.., தெலுங்கில் 'சலோனா'.., எனத் தொடங்கும் ஷாருக்கானின் காதல் பாடல், உண்மையிலேயே ரசிகர்களுக்கு சிறப்பான விருந்தாகும். அழகான நயன்தாரா மற்றும் ஷாருக்கான் உடனான அவர்களது கெமிஸ்ட்ரி பார்வையாளர்களால் பாராட்டப்பட்டது...

“ஜவான்”-னில் “ஹைய்யோடா”என ரொமான்ஷ் செய்யும் விண்டேஜ் ஷாருக்
மியூசிக்கல் மேஸ்ட்ரோ இசையமைப்பாளர் அனிருத் இசையில், அனிருத் & ப்ரியா மாலியின் குரலில், 'ஹைய்யோடா' பாடல் மனமெங்கும் மகிழ்ச்சியை தூண்டும் மேஜிக்கை செய்கிறது. இந்தப் பாடல் ஷாருக்கானின் காலத்தால் அழியாத ரொமான்ஸ் பக்கங்களை மீட்டுருவாக்கம் செய்திருக்கிறது.. இதயத்தை வருடும் மெல்லிசையும், காதல் பொங்கி வழியும் ஷாருக்கும் சேர்ந்த கலவையாக இந்தப் பாடல் ரசிகர்களுக்கும் பொதுமக்களுக்குள் பெரு விருந்தாக அமைந்துள்ளது.நடிகர் ஷாருக்கானும் நயன்தாராவும் முதன்முறையாக இப்பாடலில் ஜோடி சேர்ந்துள்ளனர். இந்தியாவின் முன்னணி நடன இயக்குநர் ஃபரா கானின் அற்புத நடன அமைப்பில், மிகவும் பிரபலமான பாடலாசிரியர் விவேக் எழுதிய இதயப்பூர்வமான பாடல் வரிகளில், ஒரு அற்புதமான பாடலாக இப்பாடல் வெளிவந்துள்ளது.ஷாருக்கானின் ரொமான்ஸ் நடிப்பிற்கு அனிருத் மிக அழகான பொருத்தமாக குரல் தர நயன்தாராவின் நேர்த்தியான தேனொழுகு...

“ஹைய்யோடா” பாடலுக்கான டீசர் வெளியீடு
ஜவான்” படத்தின் மீதான எதிர்பார்ப்பு உச்சம் தொட்டிருக்கும் இந்த வேளையில் “வந்த இடம்” பாடல், விஜய் சேதுபதி மற்றும் நயன் தாராவின் தோற்றத்துடன் கூடிய போஸ்டர் வெளியீடு, #AskSRK நிகழ்வு, SRK UNIVERSEன் சென்னை எக்ஸ்பிரஸ் திரைப்படம் 52 நகரங்களில் வெளியிடல் கொண்டாட்டம் , வந்த இடம் பாடலின் மேக்கிங் வீடியோ வெளியிட்டது ஆகியவற்றின் மூலம் “ஜவான்” படத்தை லைம் லைட்டிலேயே வைத்திருக்கும் படக்குழுவினர் தற்போது அடுத்த அஸ்திரத்துடன் வந்துள்ளனர்.Ask SRK நிகழ்வின் போது ஷாருக்கானிடம் ‘ஜவான்’ படத்தில் உங்களுக்குப் பிடித்த பாடல் எது என்று கேள்வி எழுப்பிய போது அவர் “ஹைய்யோடா” என்னும் ரொமாண்டிக் பாடல் தான் இப்படத்தில் தனக்கு மிகவும் பிடித்த பாடலாக அமைந்துள்ளது என்று பதிலளித்திருந்தார். அப்பொழுது இருந்தே அப்பாடல் மீதான ஃபீவர் ரசிகர்களுக்கு தொற்றிக் கொண்டது.தற்போது “ஹைய்யோடா” பாடலின் டீசரை வெளியிட்டிருக...

‘வந்த எடம் ‘ பாடலின் மேக்கிங் வீடியோ வந்தது.
ஷாருக்கான் நடிப்பில் அட்லி இயக்கத்தில் ரெட் சில்லிஸ் எண்டர்டெயின்மெண்ட் சார்பாக கெளரிகான் தயாரித்திருக்கும் திரைப்படம் “ஜவான்”. வரும் செப்டம்பர் 7ம் தேதி அன்று இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் உலகமெங்கும் வெளியாகிறது. இதனையடுத்து திரைப்படம் தொடர்பாக விளம்பரப்படுத்துதலில் இறங்கி இருக்கும் தயாரிப்புக் குழுவினர் திரைப்படம் தொடர்பான ஒவ்வொரு விசயங்களாக வெளிவிட்டு, “ஜவான்” திரைப்படத்தினை என்றென்றைக்குமான பேசு பொருளாக மாற்றி வருகின்றனர் என்றே சொல்லலாம்.முதலில் திரைப்படத்தின் முன்னோட்ட வீடியோ வெளியானது, முன்னோட்ட வீடியோ யூ டியூப்பில் சாதனையை சத்தமில்லாமல் படைக்க, அதே சூட்டோடு தமிழில் “வந்த இடம்” என்று தொடங்கும் பாடலை வெளியிட்டனர். சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் லுங்கி டான்ஸ் கிட் அடித்ததை நினைவில் கொண்டு, வந்த இடம் பாடலிலும் லுங்கி அணிந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட நடன கலைஞர்...

#AskSRK! “ஜவான்”தொடர்பான கேள்விகளுக்கு பதிலளித்த ஷாருக்
ஷாருக்கானின் நடிப்பில் வெளியாகவிருக்கும், ஜவான் படத்திற்கான எதிர்பார்ப்பு, பார்வையாளர்களிடையே தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதற்கான ஆதாரமாக சமீபத்திய #AskSRK அமர்வு, இணையம் முழுக்க வைரலாகி வருகிறது. ஷாருக்கான் தனது ரசிகர்களுடன் #AskSRK எனும் ஹேஸ்டேக்கில், ட்விட்டரில் தொடர்பு கொள்வதால், அவருடன் ரசிகர்கள் உரையாடுவது, உண்மையில் ஒரு பெரிய விருந்தாக அமைந்துள்ளது. மேலும் முன்னெப்போதும் இல்லாத அளவு ஷாருக்கானின் ஜவான் திரைப்பட எதிர்பார்ப்பு உச்சகட்டத்தை எட்டியுள்ளது. ஷாருக்கானிடம் படத்தின் கதையைக் கேட்பது முதல், அவரது கதாபாத்திரம் குறித்து கேட்பது வரை, நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் படம் குறித்த தங்கள் ஆர்வத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். #AskSRK டிவிட்டர் அமர்வில் SRK தனது ரசிகர்களுக்கு பதிலளிக்கத் தொடங்கியவுடன், ரசிக...

“ஜவான்” போஸ்டரில் மிரட்டும் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா
ஷாருக்கான் நடிப்பில் அட்லி இயக்கத்தில் ரெட் சில்லீஸ் எண்டர்டெயின்மெண்ட் சார்பாக கெளரி கான் தயாரிப்பில் “ஜவான்” திரைப்படம் மிக பிரம்மாண்டமாக உருவாகி இருக்கிறது. ’ஜவான்’ தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் செப்டம்பர் 7ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.செப்டம்டர் மாதம் வெளியாகவிருக்கும் நிலையில் இந்த மாதத்தின் துவக்கத்தில் இருந்தே படம் குறித்தான வேறு வேறு தகவல்களும், பாடல்களும், முன்னோட்ட வீடியோக்களும் வெளியாகி உலகமெங்கும் இருக்கும் ஷாருக்கான் யூனிவர்ஸ் ரசிகர்களையும் பொதுமக்களையும் படம் குறித்தான எதிர்பார்ப்புக்குள் விழ வைத்திருக்கிறது.’வந்த இடம்’ பாடல் வெளியாகி அதில் மீண்டும் இடம் பெற்ற லுங்கி தொடர்பான காட்சிகள் பெரும் பரப்புரையைப் பெற்றதோடு இசைப் பாடல்கள் வரிசையில் ‘வந்த இடம்’ பாடல் முதல் இடத்தையும் பிடித்தது.. அதைத் தொடர்ந்து SRK UNI...

52 நகரங்களில் SRK யுனிவர்ஸின் வித்தியாசமான கொண்டாட்டம்.
பாலிவுட்டின் கிங் கான், “ஷாருக்கான்” நடிப்பில் உருவாகி இருக்கும் ஜவான் திரைப்படத்தை ரெட் சில்லிஸ் எண்டர்டெய்ன்மென்ட் வழங்க, அட்லீ இயக்கியுள்ளார். கௌரி கான் தயாரித்துள்ளார். கௌரவ் வர்மா இணை தயாரிப்பாளராக பணியாற்றி இருக்கிறார். இந்தப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார், இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் செப்டம்பர் 7ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. சமீபத்தில் வெளியான 'வந்த எடம்' பாடல் மற்றும் ப்ரிவ்யூ படத்தின் மீதான பரபரப்பை மேலும் அதிகரித்துள்ளது.அதே நேரம் ஷாருக்கான் நடிப்பில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த சென்னை எக்ஸ்பிரஸ் திரைப்படம் வெளிவந்து 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், ஷாருக்கானின் ரசிகர்கள் பட்டாளமும், ஷாருக்கானின் மிகப்பெரிய ரசிகர் மன்றமுமான SRK யுனிவர்ஸ், இந்த இரண்டு பெரிய மைல்கற்களைக் கொண்டாட ஒரு தனித்துவ...

”ஜவான்” கவுன்ட்-டவுன் ஸ்டார்ட்
பாலிவுட் உலகின் கிங் கான் என்று அழைக்கப்படும் ஷாருக்கான் நடிப்பில் நம் ஊர் அட்லி இயக்கத்தில் ரெட் சில்லீஸ் எண்டர்டெயின்மெண்ட் வழங்க, கெளரி கான் தயாரிப்பில் உருவாகி இருக்கும் 'ஜவான்' திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஏகத்துக்கு எகிறி இருக்கிறது. ஜவான் திரைப்படம் தொடர்பாக வெளியாகும் ஒவ்வொரு செய்திகளும் தலைப்பு செய்திகளில் இடம் பெறும் அளவுக்கு முக்கியத்துவமாக கருதப்பட்டது. இந்நிலையில் ஜவான் படம் தொடர்பாக இதுவரை வந்த செய்திகளுக்கு முத்தாய்ப்பாக நடிகர் ஷாருக்கான் இன்று சமூக ஊடகத்தில், புத்தம் புதிய போஸ்டரை வெளியிட்டு படத்திற்கான கவுண்டவுனை துவக்கி வைத்துள்ளார். இப்படம் செப்டம்பர் 7, 2023 அன்று திரையரங்குகளில் பிரமாண்டமாக ரசிகர்களை மகிழ்விக்க வருகிறது.இப்படத்தின் முந்தைய அறிவிப்புகள், எப்படி ரசிகர்களிடம் பொதுமக்களிடம் கவன ஈர்ப்பு பெற்றதோ, அதைவிட ஷாருக்கான் வெளியிட்டிருக்கும் ஜவான் தொ...

ஜவானிலும் தொடரும் ”ஷாருக்கான் – லுங்கி” பந்தம்
மிகப்பெரிய வெற்றித் திரைப்படமான ‘சென்னை எக்ஸ்பிரஸ்” திரைப்படத்தில் இடம்பெற்ற லுங்கி டான்ஸ் பாடல் முதன்முறையாக பாலிவுட்டின் முதன்மை நடிகரான ஷாருக்கானுக்கும் தென்னிந்திய ரசிகர்களுக்கும் மிகப்பெரிய உறவை உருவாக்கியது. அதற்கு முக்கிய காரணம் தென்னிந்திய கலாச்சார உடையான லுங்கியை முதன்மைப்படுத்தும் வகையில் பாடல் வரிகளும் நடனமும் அமைந்திருந்தது தான் என்று சொன்னால் அது மிகையாகாது. அந்தப் பாடலுக்கு கிடைத்த வரவேற்ப்பையும், தென்னிந்திய ரசிகர்களிடம் அது சென்றடைந்த வீச்சையும் பார்த்தோ என்னவோ மீண்டும் ஒரு முறை ஷாருக்கான் தன் படத்தின் பாடலில் லுங்கியை கையில் எடுத்திருக்கிறார்.ரெட் சில்லீஸ் எண்டர்டெயின்மெண்ட் வழங்க, கெளரி கான் தயாரிப்பில் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் “ஜவான்”. இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் எதிர்வரும் செப்டம்பர் 7ஆம் தேதிய...



