Shadow

”ஜவான்” கவுன்ட்-டவுன் ஸ்டார்ட்

பாலிவுட் உலகின் கிங் கான் என்று அழைக்கப்படும் ஷாருக்கான் நடிப்பில் நம் ஊர் அட்லி இயக்கத்தில் ரெட் சில்லீஸ் எண்டர்டெயின்மெண்ட் வழங்க,  கெளரி கான் தயாரிப்பில் உருவாகி இருக்கும் ‘ஜவான்’  திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஏகத்துக்கு எகிறி இருக்கிறது. ஜவான் திரைப்படம் தொடர்பாக வெளியாகும் ஒவ்வொரு செய்திகளும் தலைப்பு செய்திகளில் இடம் பெறும் அளவுக்கு முக்கியத்துவமாக கருதப்பட்டது.  இந்நிலையில்  ஜவான் படம் தொடர்பாக இதுவரை வந்த செய்திகளுக்கு முத்தாய்ப்பாக நடிகர் ஷாருக்கான் இன்று சமூக ஊடகத்தில், புத்தம் புதிய போஸ்டரை வெளியிட்டு படத்திற்கான கவுண்டவுனை துவக்கி வைத்துள்ளார். இப்படம் செப்டம்பர் 7, 2023 அன்று திரையரங்குகளில்  பிரமாண்டமாக ரசிகர்களை மகிழ்விக்க வருகிறது.

இப்படத்தின் முந்தைய அறிவிப்புகள், எப்படி  ரசிகர்களிடம்  பொதுமக்களிடம் கவன ஈர்ப்பு பெற்றதோ, அதைவிட ஷாருக்கான் வெளியிட்டிருக்கும் ஜவான் தொடர்பான போஸ்டருக்கு  ரசிகர்களிடம் மட்டுமின்றி பொதுமக்களிடம் நல்ல வரவேற்பும்  எதிர்பார்ப்பும் பெரும் அளவில் கிடைத்து வருகிறது.

இந்தப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார், இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் செப்டம்பர் 7ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.