ஷாருக்கான் நடிப்பில் அட்லி இயக்கத்தில் ரெட் சில்லீஸ் எண்டர்டெயின்மெண்ட் சார்பாக கெளரி கான் தயாரிப்பில் “ஜவான்” திரைப்படம் மிக பிரம்மாண்டமாக உருவாகி இருக்கிறது. ’ஜவான்’ தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் செப்டம்பர் 7ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
செப்டம்டர் மாதம் வெளியாகவிருக்கும் நிலையில் இந்த மாதத்தின் துவக்கத்தில் இருந்தே படம் குறித்தான வேறு வேறு தகவல்களும், பாடல்களும், முன்னோட்ட வீடியோக்களும் வெளியாகி உலகமெங்கும் இருக்கும் ஷாருக்கான் யூனிவர்ஸ் ரசிகர்களையும் பொதுமக்களையும் படம் குறித்தான எதிர்பார்ப்புக்குள் விழ வைத்திருக்கிறது.
’வந்த இடம்’ பாடல் வெளியாகி அதில் மீண்டும் இடம் பெற்ற லுங்கி தொடர்பான காட்சிகள் பெரும் பரப்புரையைப் பெற்றதோடு இசைப் பாடல்கள் வரிசையில் ‘வந்த இடம்’ பாடல் முதல் இடத்தையும் பிடித்தது.. அதைத் தொடர்ந்து SRK UNIVERSE ரசிகர்கள் சென்னை எக்ஸ்பிரஸின் பத்து ஆண்டு கொண்டாட்டத்தையும் ஜவான் வெளியீட்டையும் இணைத்து இந்தியாவில் உள்ள 52 நகரங்களில் சென்னை எக்ஸ்பிரஸ் படத்தின் பிரத்யேக திரையிடலையும் கொண்டாட்டத்தையும் அறிவித்தனர். இதைத் தொடர்ந்து பாலிவுட்டின் கிங்கான் ஆன ஷாருக்கான் நேற்று ‘ஜவான்’ படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டார்.
அதில் ஷாருகான் உடன் இணைந்து நடிக்கும் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாராவின் தோற்றம் முதன் முதலாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது. விஜய் சேதுபதி தாடியுடன் கூலிங் க்ளாஸ் அணிந்து கொண்டு ஒரு டான் போன்ற தோற்றத்தில் இருக்கிறார். நயன்தாரா மாடர்ன் உடையில் நவீனரக துப்பாக்கியைக் கொண்டு குறி வைப்பது போன்ற தோற்றத்தில் இருக்கிறார். இந்த போஸ்டர் வெளியானதும் நயன் தாரா மற்றும் விஜய் சேதுபதி ஆகியோரின் கதாபாத்திரம் திரைப்படத்தில் என்னவாக இருக்கும் என்பதான விவாதங்கள் இணையத்தில் சூடு பறக்கத் துவங்கி இருக்கின்றது.