Shadow

“ஹைய்யோடா” பாடலுக்கான டீசர் வெளியீடு

ஜவான்” படத்தின்  மீதான  எதிர்பார்ப்பு  உச்சம்  தொட்டிருக்கும்  இந்த வேளையில் “வந்த இடம்” பாடல்,  விஜய் சேதுபதி மற்றும் நயன் தாராவின் தோற்றத்துடன் கூடிய போஸ்டர் வெளியீடு, #AskSRK நிகழ்வு, SRK UNIVERSEன் சென்னை எக்ஸ்பிரஸ் திரைப்படம் 52 நகரங்களில் வெளியிடல் கொண்டாட்டம் , வந்த இடம் பாடலின் மேக்கிங் வீடியோ வெளியிட்டது ஆகியவற்றின் மூலம் “ஜவான்” படத்தை லைம் லைட்டிலேயே வைத்திருக்கும் படக்குழுவினர் தற்போது அடுத்த அஸ்திரத்துடன் வந்துள்ளனர்.

Ask SRK நிகழ்வின் போது ஷாருக்கானிடம் ‘ஜவான்’ படத்தில் உங்களுக்குப் பிடித்த பாடல் எது என்று கேள்வி எழுப்பிய போது அவர் “ஹைய்யோடா” என்னும் ரொமாண்டிக் பாடல் தான் இப்படத்தில் தனக்கு மிகவும் பிடித்த பாடலாக அமைந்துள்ளது என்று பதிலளித்திருந்தார். அப்பொழுது  இருந்தே அப்பாடல் மீதான ஃபீவர் ரசிகர்களுக்கு தொற்றிக் கொண்டது.

தற்போது  “ஹைய்யோடா” பாடலின் டீசரை வெளியிட்டிருக்கும் ஷாருக்கான் ”ஹைய்யோடா” பாடல் வரும் ஆகஸ்டு மாதம் 14ம் தேதி அன்று வெளியாகும் என்கின்ற தகவலையும் ரசிகர்களுக்கு தெரிவித்து அவர்களை குஷிப்படுத்தியுள்ளார்.  ஷாருக்கான் மற்றும் நயன்தாரா முதன்முறையாக இணைந்து நடித்துள்ள “ஜவான்” திரைப்படத்தின் ரொமான்ஸ் பாடலான ‘ஹைய்யோடா’  பாடல் டீசரை இணையத்தில் பார்த்து ரசித்த ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் முழுப்பாடலையும் பார்ப்பதற்காக ஏங்கித் தவிக்கத் துவங்கியுள்ளனர்.

இது ஒருபுறம் இருக்க, படத்தை விளம்பரப்படுத்தும் வரிசையில் அடுத்து புதிதாக என்ன இருக்கும் என்கின்ற ஆர்வம் தொடர்பான விவாதமும் இணையத்தில் தொடங்கியிருக்கிறது.

 

ஜவான் திரைப்படத்தை ரெட் சில்லிஸ் என்டர்டெய்ன்மென்ட் வழங்க, அட்லீ இயக்கியுள்ளார். கௌரி கான் தயாரித்துள்ளார். கௌரவ் வர்மா இணை தயாரிப்பாளராக பணியாற்றி இருக்கிறார். இந்தப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார், இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் செப்டம்பர் 7ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.