Shadow

ஜவானிலும் தொடரும் ”ஷாருக்கான் – லுங்கி” பந்தம்

மிகப்பெரிய வெற்றித் திரைப்படமான ‘சென்னை எக்ஸ்பிரஸ்” திரைப்படத்தில் இடம்பெற்ற லுங்கி டான்ஸ் பாடல் முதன்முறையாக பாலிவுட்டின் முதன்மை நடிகரான ஷாருக்கானுக்கும் தென்னிந்திய ரசிகர்களுக்கும்  மிகப்பெரிய உறவை உருவாக்கியது. அதற்கு முக்கிய காரணம்  தென்னிந்திய கலாச்சார உடையான லுங்கியை முதன்மைப்படுத்தும் வகையில் பாடல் வரிகளும் நடனமும் அமைந்திருந்தது தான் என்று சொன்னால் அது மிகையாகாது.  அந்தப் பாடலுக்கு கிடைத்த வரவேற்ப்பையும், தென்னிந்திய ரசிகர்களிடம் அது சென்றடைந்த வீச்சையும் பார்த்தோ என்னவோ மீண்டும் ஒரு முறை ஷாருக்கான் தன் படத்தின் பாடலில் லுங்கியை கையில் எடுத்திருக்கிறார்.

ரெட் சில்லீஸ் எண்டர்டெயின்மெண்ட் வழங்க, கெளரி கான் தயாரிப்பில் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் “ஜவான்”.  இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் எதிர்வரும் செப்டம்பர் 7ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

சமீபத்தில் வெளியிடப்பட்ட ஜவானின் முதல் பாடலான “வந்த இடம்” பாடலிலும் ஷாருக்கான் லுங்கியை முன்னிலைப்படுத்தியிருக்கிறார்.  இந்தப் பாடலில் ஆயிரக்கணக்கான நடனக் கலைஞர்களுடன் ஷாருக்கான் லுங்கி அணிந்து, ஒரு தனித்துவமான கலாச்சார சுவையுடன் கூடிய நடனத்தையும், நடிப்பையும்  வெளிப்படுத்துயிருக்கிறார்.  இப்பாடல் வெளியானப் பிறகு பாடல்களுக்கான இசை அட்டவணையில் முதலிடத்தைப் பிடித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.  தற்போது இந்த பாடல் யூட்யூப்பில் 24 மணி நேரத்தில் 46 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு உலக இசை அரங்கில் பெரும்  புயலை ஏற்படுத்தியிருக்கிறது.

பிளாக்பஸ்டர் ஹிட்டான ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ படத்தில் இடம்பெற்ற ‘1234 கெட் ஆன் தி  டான்ஸ் ஃப்ளோர்..’ என்ற பாடலுக்குப் பிறகு  ஷாருக்கான் பிரியாமணி ஜோடி மீண்டும் ஒரு முறை இத்திரைப்படத்தில்  இணைந்திருப்பதும் எதிர்பார்ப்பை எகிற வைக்கிறது. பிரியாமணி மற்றும் ஷாருக்கான் மீண்டும் இணைவதன் மூலமும், லுங்கியில் தோற்றமளிப்பதன் மூலமும் ‘வந்த எடம்.’ அவர்களின் முந்தைய  மாயாஜாலத்தை மீண்டும் ஒரு முறை திரையில்  நிகழ்த்திக் காட்டும் அதிசயம் நிகழும் என்று ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.