பொன்மொழியில் புதைந்துள்ள உண்மைகள்
பெண் புத்தி பின் புத்தி
இதற்கு பெரும்பாலனோர் கொண்டுள்ள பொருள் பெண் தவறாக/பிற்போக்காக/மடமையாக/ சிந்திப்பாள் என புரிந்து கொண்டுள்ளனர்.இதற்கு சரியான பொருள் பெண் எப்பொழுதும் எதிர்காலம்/பின்னால் வரக்கூடிய/முன் எச்சரிக்கையாக/ யோசிப்பவள் என்பதுதான் அர்த்தம்.ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானாக வளரும்
இதற்கு பெரும்பாலனோர் கொண்டுள்ள பொருள் வேறு ஒருத்தருடைய குழந்தையை ஊட்டி வளர்த்தால் தன்னுடைய பிள்ளை தானாக வளரும் என புரிந்து கொண்டுள்ளனர்.
ஆனால் தன்னுடைய மனைவி என்பவள் வேறுஒருத்தனுடைய குழந்தை ஆகையால் தன் மனைவியை நன்றாக(கர்ப்ப காலம்/ எப்பொழுதுமே) ஊட்டி வளர்த்தால் அவள் அவனுடைய குழந்தையாய் நன்றாக கவனித்துக் கொள்வாள். எப்படியோ யாருடைய குழந்தையாக இருந்தாலும் சரி ஊட்டி வளருங்கள் அது யாராக இருந்தாலும்.
போக்கத்தவனுக்கு போலீஸ் வேலை.. வக்கத்தவனுக்கு வாத்தியார் வேலை
போலீஸையும் வாத்தியார...