32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
Dinesh R
செய்தியாளர் விவரம் சேலம்

Dinesh R

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

4024 செய்திகள் எழுதப்பட்டுள்ளன வலைத்தளம்
செய்திகள் வரிசை (பக்கம் 227)
தமிழின் முதல் பீரியட் பேய்ப்படம் சினிமா

தமிழின் முதல் பீரியட் பேய்ப்படம்

சிபிராஜ், பிந்துமாதவி, சத்யராஜ், கருணாகரன், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் ஆகியோர் தமிழின் முதல் பீரியட் படமான ஜாக்சன் துரையில் நடிக்கவுள்ளனர். இவர்களுடன் முக்கிய வேடத்தில் தமிழில் முதன்முறையாக ஹாலிவுட் நடிகர் ஜக்கேரி அறிமுகமாகிறார். அதிக பொருட்செலவில் பிரம்மாண்டமாகத் தயாராகவுள்ள இப்படத்தை ஸ்ரீ க்ரீன் புரொடக்ஷன்ஸ், எம்.எஸ்.சரவணன் இன்று துவக்கினார். ஹாலிவுட்டில் மிகப்பெரிய வெற்றி பெற்ற காஞ்சுரிங் (CONJURING) படத்தின் ஒப்பனைத் தொழில்நுட்பம் இப்படத்தில் பயன்படுத்தபடுகிறது. தரணிதரன் இத்திரைப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். ஒளிப்பதிவு யுவராஜ், […]

20/05/2015 Dinesh R
அமானுஷ்யமும் மர்மமும் நம்பினால் நம்புங்கள்

அமானுஷ்யமும் மர்மமும்

அமானுஷ்யமும் மர்மமும் போல் ஈர்ப்பான விஷயங்கள் உலகத்தில் வேறெதுவுமில்லை. அதைப் பற்றிப் பேசவும் கேட்கவும் எப்பொழுதும் தயாராகவே இருப்போம். அதுவே செவி வழி கதையாக இல்லாமல் தனக்கேற்பட்ட அனுபவங்களை ஒருவர் தொகுத்தால்? அப்படித்தான், ஜேம்ஸ் வான் பிராக் தனது புத்தகமான, Ghosts Among Us என்பதில் ஆவிகள் உலகத்தினைப் பற்றிச் சொல்கிறார். புத்தகத்தில் திகிலான சம்பவங்களோ, புனைவுக்குரிய சுவாரசியங்களோ இல்லை. மரணத்தைப் பற்றியும், மரணத்துக்குப் பின்னான வாழ்க்கையைப் பற்றியும் அலசுகிறார் அமெரிக்காவின் புகழ் பெற்ற ஆவி மீடியம்களில் […]

18/05/2015 Dinesh R
இனிது இனிது டைசன் சினிமா

இனிது இனிது டைசன்

தெலுங்கு படமான ‘ஹேப்பி டேஸ்’ ரீமேக்கான ‘இனிது இனிது’ படத்தில் அறிமுகமானவர் நாராயணன். அந்தப் படத்தின் இணை ஒளிப்பதிவாளர்தான் நிமேஷ் வர்ஷன் இயக்கும் ‘திறந்திடும் சீசே’ படத்துக்கு நாராயணனைப் பரிந்துரைத்துள்ளார். சி.எஸ்.கே. படத்தில் வில்லனாக நாராயணன் கலக்கியிருந்தது நினைவிருக்கலாம். “நிமேஷைப் பார்த்த போது, அவர் கதையை விவரித்த விதம் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. தன்ஷிகா, வீரவன் ஸ்டாலின் மற்றும் எனக்கு இடையில் நடக்கும் முக்கோண த்ரில்லர் தான் படத்தின் கதை. இந்தப் படத்தில் எனக்கு முக்கியமான ரோல் […]

18/05/2015 Dinesh R
மேட் மேக்ஸ்: ஃப்யூரி ரோட் விமர்சனம் அயல் சினிமா

மேட் மேக்ஸ்: ஃப்யூரி ரோட் விமர்சனம்

MAD MAX: FURY ROAD உலகம் முழுவதும் பாலைவனமாக மாறிவிட்டால் மனிதர்கள் என்னாவார்கள்? ஃப்யூரி ரோடின் கதைக்களமும், காலக்கட்டமும் அதான். இம்மார்ட்டன் ஜோ எனும் சர்வதிகாரியின் ஐந்து மனைவிகளைக் கடத்தி விடுகிறார் கமாண்டர் (imperator) ஃப்யூரியோஸா. தனது ஐந்து மனைவிகளைக் காப்பாற்ற மொத்த படைப்பிரிவையும் பாலைவனத்தில் இறக்குகிறார் ஜோ. சந்தர்ப்ப நெருக்கடியால், மேக்ஸ் ஃப்யூரியோஸாக்கு உதவ வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. ஜோ, ஃப்யூரியோஸாவைப் பிடித்தாரா இல்லையா என்பதுதான் கதை. ஃப்யூரியோஸாவாக சார்லைஸ் தெரான். நம்மூர் இயக்குநர் பாலா […]

16/05/2015 Dinesh R
புறம்போக்கு என்கிற பொதுவுடமை விமர்சனம் சினிமா

புறம்போக்கு என்கிற பொதுவுடமை விமர்சனம்

ஆறாண்டுகளுக்கு பிறகு வந்துள்ள எஸ்.பி.ஜனநாதனின் படம். அந்த எதிர்பார்ப்பைத் துளியும் ஏமாற்றாமல் அசத்தியுள்ளார். மக்கள் விடுதலைக்காகப் போராடி இறந்த அனைத்து தோழர்களுக்கும் இப்படத்தைச் சமர்ப்பிக்கிறார். பாலுச்சாமி எனும் கம்யூனிஸ்ட்க்கு, தேசத் துரோகக் குற்றத்துக்காக மூன்று தூக்கு தண்டனையை அறிவிக்கிறது இந்திய அரசு. தூக்கு தண்டனையை நிறைவேற்ற, சிறை அதிகாரியான ஏ.டி.ஜி.பி. மெக்காலே ஐ.பி.எஸ். வசம் ஒப்படைக்கப்படுகிறார் பாலுச்சாமி. தீர்ப்பின்படிபாலுச்சாமியைத் தூக்கிலிட, எமலிங்கம் எனும் ஹேங்மேனின் உதவி தேவைப்படுகிறது. எமலிங்கத்தின் உதவி கிடைத்ததா? பாலுச்சாமிக்கு தண்டனையை மெக்காலே நிறைவேற்றினாரா […]

15/05/2015 Dinesh R
சந்துருவுக்கு என்னாச்சு? புத்தகம்

சந்துருவுக்கு என்னாச்சு?

சுமார் 7 வயது மதிக்கத்தக்க தருண் எனும் சிறுவனின் மனதில் எழும் கேள்வியான “சந்துருவுக்கு என்னாச்சு?” என்பதுதான் புத்தகத்தின் தலைப்பு. குழந்தைகள் உலகம் கேள்விகளால் நிரம்பியது. அவர்களின் கேள்விகளை எதிர்கொள்வது போல் பெரியவர்களைப் பதற்றத்துக்கு உள்ளாக்கும் விஷயம் வேறில்லை. அப்படித்தான், தருணின் கேள்வி அவனது அம்மா சரஸ்வதியை அதிர்ச்சியடைய வைக்கிறது. கொஞ்சம் அதட்டலுடன், அக்கேள்வியை எரிச்சலுடன் கடந்து விடுகிறார் சரஸ்வதி. இதற்கே தருண் தன் தந்தைக்குப் பயந்து, அவர் கொஞ்சம் தள்ளிச் செல்லும்வரை காத்திருந்தே தன் தாயிடம் […]

13/05/2015 Dinesh R
உப்பு கருவாடு தயார் சினிமா

உப்பு கருவாடு தயார்

இயக்குநர் ராதா மோகன் இயக்கத்தில் தயாராகி வரும் ‘உப்பு கருவாடு’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. ஃபர்ஸ்ட் காப்பி ஃபிக்சர்ஸ் மற்றும் நைட் ஷோ சினிமா தயாரிப்பில் கருணாகரன், நந்திதா ஆகியோர் நடித்துள்ளார்கள். “தேர்ந்த பல படங்களைத் தந்து வரும் இயக்குநர் ராதா மோகன், மீண்டும் ஓர் அழகிய படத்தை எடுத்துள்ளார். நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என அனைவரது திறமையான உழைப்பும் படத்தைக் குறித்த காலத்தில் முடிக்க உதவியுள்ளது. ‘உப்பு கருவாடு’ குழுவினருக்கு எனது நன்றிகள். படத்தின் இறுதிகட்ட […]

12/05/2015 Dinesh R
இந்தியா பாகிஸ்தான் விமர்சனம் சினிமா

இந்தியா பாகிஸ்தான் விமர்சனம்

விஜய் ஆண்டனியின் நடிப்பில் வரும் மூன்றாவது படம். முதலிரண்டு படங்கள் போலின்றி இம்முறை நகைச்சுவைக்கு மாறியுள்ளார். வக்கீல்களான கார்த்திக்கும் மெல்லினாவும் ஒரே வீட்டில் அலுவலகங்களை வாடகைக்கு எடுக்கின்றனர். எலியும் பூனையுமாக எதிரெதிர் துருவமாக நிற்கும் இவ்விருவரைக் குறிப்பிடத்தான் தலைப்பை இந்தியா பாகிஸ்தான் என வைத்துள்ளனர். படத்தில் காட்டமுத்துவான பசுபதி அறிமுகமானதும் படம் சூடு பிடிக்கத் தொடங்குகிறது. பசுபதி வரும் அனைத்துக் காட்சிகளுமே திரையரங்கு கலகலப்பாகிறது. முக்கியமாக, பத்து பேரை ஓடவிட்டு வெட்டி, ‘டெமோ’ செய்து காட்டும் காட்சியைச் […]

09/05/2015 Dinesh R
சாதாரணமானவர்களின் அசாதாரணமான ஜின் சினிமா

சாதாரணமானவர்களின் அசாதாரணமான ஜின்

ஜின் – ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாய்க் கொண்டு உருவாக்கப்படும் படம். சாதாரணமான ஐந்து நண்பர்களின் வாழ்வில் ஏற்படும் ஓர் அசாதாரணமான அமானுஷ்ய நிகழ்வை மையமாகக் கொண்ட படம். ரைட் மீடியா ஒர்க்ஸ் மற்றும் சதீஷ் சந்திரசேகரனின் கதைகள் நிறுவனங்களின் கூட்டு தயாரிப்பில் உருவாகி வருகிறது. இப்படத்தைப் பற்றி இளம் அறிமுக இயக்குநர் சதீஷ் சந்திரசேகரன் கூறுகையில், “கலையரசன், மெட்ராஸ் ஹரி, காளி வெங்கட், அர்ஜுனன், ‘முண்டாசுப்பட்டி’ முனீஸ் காந்த் ஆகிய சாதாரணமான ஐந்து நண்பர்களின் பிரயாணத்தில் […]

06/05/2015 Dinesh R
ஜின் – படக்குழுவினர் சினிமா

ஜின் – படக்குழுவினர்

நடிகர்கள்: >> கலையரசன் >> மெட்ராஸ் ஹரி >> காளி வெங்கட் >> அர்ஜுனன் >> ‘முண்டாசுப்பட்டி’ முனீஸ் காந்த் >> ப்ரீத்தி பணிக்குழு: >> தயாரிப்பு – ரைட் மீடியா ஒர்க்ஸ் & சதீஷ் சந்திரசேகரனின் கதைகள் >> இயக்கம் – சதீஷ் சந்திரசேகரன் >> ஒளிப்பதிவு– விஜய் கார்த்திக் கண்ணன் >> படத்தொகுப்பு – மதன் >> இசை – ராதன் >> கலை – ரமேஷ் >> சண்டை – பில்லா ஜகன் >> […]

06/05/2015 Dinesh R
இயக்குநர் சுசீந்திரனின் வீர தீர சூரன் கதை சினிமா

இயக்குநர் சுசீந்திரனின் வீர தீர சூரன் கதை

இயக்குநர் சுசீந்திரனின் கதையமைப்பில் உருவாகும் ‘வீர தீர சூரன்’ எனும் படத்தில் விஷ்ணு விஷால் நாயகனாகவும், கேத்ரின் தெரஸா நாயகியாகவும் நடிக்கவுள்ளனர். முக்கியமான கதாபாத்திரத்தில் சூரியும் நடிக்கிறார். இப்படத்தை N.ஷங்கர் தயாள் இயக்குகிறார்.  “ என்னுடைய பல்வேறு தொழில் அலுவல்களுக்கு மத்தியில் நான் ஒரு சினிமா ஆர்வலனாகவே இருந்துள்ளேன். படம் தயாரிக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டும் திண்ணமாய் இருந்த சமயத்தில் எதேச்சையாக சுசீந்திரனிடமிருந்து, இந்தக் கதையைக் கேட்டேன். சொல்வதற்கு வார்த்தையில்லாமல் அசந்து போனேன். மற்றவை சொல்லி […]

05/05/2015 Dinesh R
புறம்போக்கு விஜய் சேதுபதி சினிமா

புறம்போக்கு விஜய் சேதுபதி

படத்தில் தனது கதாப்பாத்திரத்தைப்  பற்றி விஜய் சேதுபதி கூறும் பொழுது, “இப்படத்தில் நான் ‘எமலிங்கம்’ என்ற ரயில்வே தொழிலாளியாக வருகிறேன். நகரும் ரயில் வண்டியின் ஓசையும், ரயில்வே தொழிலாளியின் பரபரப்பும் என்னுள் அடங்கவே இல்லை. வேறு எந்த கதாநாயகனும் செய்யாத கதாப்பாத்திரம் என்று நான் தைரியமாக சொல்வேன். எமலிங்கம், ரசிகர்கள் அதிகம் கண்டிடாத ஒரு கதாப்பாத்திரமாக இருக்கும். எனது வாழ்நாளில் நான் நடித்த நல்ல கதாப்பாத்திரங்களில் ஒன்றாக இக்கதாப்பாத்திரம் நிலைத்து நிற்கும்.  இந்த கதாப்பாத்திரத்திற்காக பிரத்யேக பயிற்சி […]

05/05/2015 Dinesh R
உத்தம வில்லன் விமர்சனம் சினிமா

உத்தம வில்லன் விமர்சனம்

பரம(க்குடி) நாத்திகரான கமல்தான், சக மனிதர்களை நேசிப்பவர் கடவுள் என அன்பே சிவம் படத்தில் சொல்ல வேண்டியிருந்தது. இம்முறை, உத்தம வில்லனில் வாழ்வின் நிலையாமையைக் குறித்த ஆத்ம விசாரம் செய்துள்ளார். யாருமே வில்லன் இல்லை என்பதுதான் படத்தின் கரு. பின் யார்தான் உத்தம வில்லன்? இந்த வசீகரமான தலைப்புக்குத்தான் எத்தனை அர்த்தங்களைக் கொணர்ந்துள்ளார் கமல்!? 1. உத்தமன் என்பவர் கதை சொல்ல தமிழக வில்லுப்பாட்டையும் (வில்லன்), கதையின் களம் செல்ல கேரள தெய்யத்தையும் இணைத்து கூத்து கட்டுபவர். […]

04/05/2015 Dinesh R