Shadow

Author: Dinesh R

யாசகம்

யாசகம்

கவிதை, படைப்புகள்
பயணசீட்டு வாங்குவதற்கு மட்டுமிருக்கிறது என்னிடத்தில் கூட்டத்திடம் கையேந்திக் கும்பிடு வருபவருக்கு எப்படித் தெரியும் என்நிலைமை சில்லறை போட்டவரெல்லாம் என்னை இப்படிப் பார்ப்பது என்ன நியாயம்? - சே.ராஜப்ரியன்
இன்னுமின்னும்

இன்னுமின்னும்

கவிதை, படைப்புகள்
மீனவர்கள் மீது மீண்டும் தாக்குதல் நாட்டின் எல்லையில் நடந்த துப்பாக்கிசூடு தலைநகரில் குண்டு வைத்து தகர்ப்பு தற்கொலைப்படை தலைவர் தப்பியோட்டம் தலைவரின் தலைமகன் நாளை வருகை திருவல்லிகேணியில் நேற்றிரவு திருட்டு வானூர்திநிலையத்தில் பிடிபட்டனர் போதைப்பொருள் கடத்தல் கள்ளக்காதலனுடன் கைது கணவன் கொலைவழக்கில் வன்கலவி சிறுமியிடம் வாலிபர் கைது விசாரணை நடந்துவருகிறது கையூட்டு வாங்கிய அரசு ஊழியர் கையும் களவுமாக பிடிபட்டார் இருவேறு சாலை விபத்தில் இரண்டுபேர் உயிரிழந்தனர் கவலைக்கிடமாக ஏழுபேர் மருத்துவமனையில் பிரபல அரசியல்வாதி கொலைவழக்கில் இன்று பிணையம் பெற்றார் வரி ஏய்ப்பு லட்சகணக்கில் தொழிலதிபர் செய்த மோசடி அம்பலம் நடிகையின் விவாகரத்து வழக்கு புது நாயகனுடன் இன்று நேரில் வந்தார் நாடாளுமன்றத்தில் அவை ஒத்...
ம-ர-ண-ம்

ம-ர-ண-ம்

கவிதை, படைப்புகள்
நிற்குமிடத்திலிருந்தே தனக்கு வேண்டியதை எடுத்துக்கொண்டு பிறருக்கு தந்துகொண்டும் எத்தனை உயிர்கள் வாழ்ந்துகொண்டிருந்தது அதன் உடம்பில் இதுவரையில் வாழ்வளித்துவந்தது வந்த புயலையெல்லாம் புறம் தள்ளி இன்று நெடுஞ்சாலைத்துறை நெடுகக்கிடத்தி வைத்திருக்கிறது துண்டு துண்டுகளாய் - சே.ராஜப்ரியன்...
காலத்தின் மழையில் நனைகிறோம்

காலத்தின் மழையில் நனைகிறோம்

கவிதை, படைப்புகள்
கொட்டும் மழையில் குளிரும் நிலையில் இரவு பிறந்து பகல் மரிக்கும் வேளையில் தான் நிற்கும் இடத்திலிருந்து எதிர்த்திசையில் வந்துகொண்டு இருக்கும் ஒவ்வொரு பேருந்தாய் பார்த்துக்கொண்டே எவ்வளவு நேரம் கழித்தாரோ தெரியவில்லை ...... ! கையைக் காட்டி நிறுத்தினாலும் தன்னுடன் காத்திருந்தோர் வேகமாக ஓடி ஏறிக்கொண்டதும் அவரை மட்டும் தனிமைப்படுத்தி விட்டு சென்றுகொண்டே இருக்கின்றார்கள் அதுவும் ஏனோ ? அவர் ஏறி இறங்க நேரம் அதிகமாகும் என்பதுதானே உங்கள் கவலை உங்களுக்கும் இது பிரதிபலிக்கும் பின்னொருநாளில் ஓய்வூத்தியத்தைப் பெற நாட்களை எண்ணிக்கொண்டு இருக்கும்பொழுது நீயும் பேருந்திற்கு காத்துக்கொண்டிருக்கும் பொழுது நடக்கமுடியாமல் நாற்காலியில் நாட்களை நகர்த்தும் பொழுது வீட்டில் வெந்நீர் கேட்டு பல நிமிடங்கள் கழித்துக் கிடைக்கும்பொழுது கழிவறைக்கு செல்ல பிறரி...
பொன்மொழியில் புதைந்துள்ள உண்மைகள்

பொன்மொழியில் புதைந்துள்ள உண்மைகள்

கட்டுரை, மற்றவை
பெண் புத்தி பின் புத்தி இதற்கு பெரும்பாலனோர் கொண்டுள்ள பொருள் பெண் தவறாக/பிற்போக்காக/மடமையாக/ சிந்திப்பாள் என புரிந்து கொண்டுள்ளனர். இதற்கு சரியான பொருள் பெண் எப்பொழுதும் எதிர்காலம்/பின்னால் வரக்கூடிய/முன் எச்சரிக்கையாக/ யோசிப்பவள் என்பதுதான் அர்த்தம். ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானாக வளரும் இதற்கு பெரும்பாலனோர் கொண்டுள்ள பொருள் வேறு ஒருத்தருடைய குழந்தையை ஊட்டி வளர்த்தால் தன்னுடைய பிள்ளை தானாக வளரும் என புரிந்து கொண்டுள்ளனர். ஆனால் தன்னுடைய மனைவி என்பவள் வேறுஒருத்தனுடைய குழந்தை ஆகையால் தன் மனைவியை நன்றாக(கர்ப்ப காலம்/ எப்பொழுதுமே) ஊட்டி வளர்த்தால் அவள் அவனுடைய குழந்தையாய் நன்றாக கவனித்துக் கொள்வாள். எப்படியோ யாருடைய குழந்தையாக இருந்தாலும் சரி ஊட்டி வளருங்கள் அது யாராக இருந்தாலும். போக்கத்தவனுக்கு போலீஸ் வேலை..  வக்கத்தவனுக்கு வாத்தியார் வேலை  போலீஸையும் வாத்தியார...
நானும் என் நிராசையும்

நானும் என் நிராசையும்

கவிதை, படைப்புகள்
ஊத ஊதப் பெரிதாகிக் கொண்டே போனது ஒரு அளவுக்கு மேல் வெடித்து முடித்து விடை கொடுத்தது என் ஆசைக்கு இன்னுமொரு ஆசை ஊதி பெரிதாக்கிய அதில் மிகச்சிறிய ஊசியின் முனையை உரசினால் எப்படி இருக்கும் என்று அதுபோலத்தான் நான் வளர்த்து வைத்திருக்கும் ஆசைகளை சிறு சொல் கொண்டு கொன்று விடுகிறார்கள் யார் யாரோ - சே.ராஜப்ரியன்...
உன்னைப்போல் ஒருவன் விமர்சனம்

உன்னைப்போல் ஒருவன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
"உன்னைப்போல் ஒருவன்" என்பது உலக நாயகன் கமல் அவர்களின் படம் என்று நினைத்தால் அது பாதி தான் உண்மை. ஒரு நல்ல படத்தை தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்த கமல் எடுத்த முயற்சி என்பது தான் மீதி பாதி உண்மை. இப்படத்தின் ஆதாரமான பாலிவுட்டின் "வெட்னஸ்டே" படத்தின் உரிமையை ராஜ்கமல் நிறுவனம் வாங்கித் தமிழுக்கு ஏற்றாற்போல் சின்னஞ்சிறு மாற்றம் செய்து வெளியிட்டுள்ளனர். கொடுக்கும் பணத்திற்கு நல்ல தக்காளியாக வாங்க வேண்டும் என்று கவலைப்படுபவன் சாதாரண மனிதன். எது நடந்தாலும் தனக்கேன் வம்பு என முகத்தைத் திருப்பிக் கொண்டு வேறு திசையில் செல்லும் அந்த சாமானிய மனிதன், சமூகத்தில் நடக்கும் அவலங்களைப் பார்த்து மனம் நொந்து, தன்னால் முடிந்த பதில் நடவடிக்கை எடுக்க தீவிரம் காண்பித்தால் என்னாகும் என்பது தான் இப்படத்தின் ஒரு வரிக் கதை. 'சி4' என அழைக்கப்படும் செக்கோஸ்லோவக்கியன் ப்ளாஸ்டிக் குண்டுகளை சென்னையில் ஆறு இடத்தில் வைக...
உன்னைப்போல் ஒருவனைப்பற்றி சில

உன்னைப்போல் ஒருவனைப்பற்றி சில

சினிமா, மற்றவை
நான் உன்னைப்போல் ஒருவன் படத்தை விமர்சனம் செய்யப் போவதில்லை. இணையத்தில் rediff,sifi லிருந்து குப்பன் சுப்பன் வரை விமர்சனம் வந்துவிட்டன. நான் பார்த்த உன்னைப்போல் ஒருவன் படத்தை சிலர் துர்பிரச்சாரம் செய்வதற்கு பதில் தர விரும்புகிறேன். குற்றச்சாட்டு 1 படத்தில் ஆங்கில வசனங்களை COMMOM MAN கமல் அதிகமாக பிரயோகிக்கிறார் என்பது ஒரு சிலரின்  குற்றச்சாட்டு. COMMON MAN என்றால் என்ன என்பது தெரியாதவர்கள் செய்யும் - பிரச்சாரம் இது. சராசரி மனிதன் என்பது சரியான பொருள். அதாவது படிக்காதவன் தான் COMMOM MAN என்று தவறாக புரிந்து கொள்கிறார்கள். படித்தவன் - PRIVATE MAN ஆ இதற்கு விளக்கம் என்ன? அதுவும் INTERNET - ல் BOMB  செய்வது எப்படி என்று தெரிந்துக் கொள்ளும் அளவிற்கு அறிவுள்ளவன் எப்படி ஆங்கிலம் தெரியாதவனாக இருக்கமுடியும். கமல் பயன்படுத்தும் சில வார்த்தைகள் negotiate, state-of-...
சன்யாசம் கூறாமல் கொள்

சன்யாசம் கூறாமல் கொள்

கதை, படைப்புகள்
"உங்களுக்கும் க்ளைன்ட்டுக்கும் நடுவில் மாட்டிக்கிட்டு இப்படி உயிர விடுறதுக்கு.. பேசாம சாமியாரா போயிடலாம்." கோபத்திலும் சற்று நிதானமாக உதிர்ந்த வார்த்தைகள். ஒரே நாளில் வெவ்வேறு தருணங்களில் மூன்று முறை சாமியார் ஆவதைப் பற்றி ராம்சரண் கூறி விட்டார். அதன் பிறகு அலுவலகத்தில் ஒரு வித மரியாதையுடன் பார்க்க ஆரம்பித்தனர். அவர் கடந்தவுடன் அவரைப் பற்றி குசுகுசுவெனப் பேசிக் கொண்டனர். எப்பொழுதையும் விட இவருக்கு கீழ் இருப்பவர்கள் நன்றாக வேலை செய்தது போலிருந்தது. நாற்பதுகளை கடந்தும் நல்ல திடகத்திரமான உருவம். எப்பொழுதும் ஒரு புன்னகையை வலுக்கட்டாயமாக முகத்திலே வைத்துக் கொண்டு, கலகலப்பாக வலம் வருவார். ஐந்துமுறை பணி நிமித்தமாக வெளிநாடுகள் எல்லாம் சென்று வந்திருந்தார். அவர் சாமியாராகப் போவதாகக் கூறியதும்..  அது பெரும் பரபரப்பை ஏற்படுத்திவிட்டது. அவரிடம் யாரும் அதைப் பற்றி நேரிலும் கேட்கவில்லை...
ரசிகன் நான்

ரசிகன் நான்

கவிதை, படைப்புகள்
ஏ தமிழ் சினிமாவே! எனக்கு உன்னை எவ்வளவு பிடிக்கும் என்று நீ அறிவாயா? கருப்பு வெள்ளை காலத்திலேயே காண்பவர்களின் கனவுகள் உன்னால் வண்ணம் பெற்றன. இன்று நீயோ வண்ண பெண்ணாய் கனவு தேவதையாய் புவனத்தை பவனி வருகிறாய். ஆனால் உனது ஆதாரங்கள் அக்கரை சீமையில் இருந்து இறக்குமதி ஆகிறது. ஏன் உனக்கு இந்த அவல நிலை? கதைக்கு நாயகி தேடும் காலம் போய் கவர்ச்சிக்காக நாயகி என்ற இழிவு ஏன் இங்கு என்று உன்னிடம் தொற்றியது? கற்பனைகள் கோடி கொட்டிக் கிடந்தாலும் இங்கே உனக்கு வியாபரம்தான் பிரதானம். எண்ணற்றவர்களுக்கு வாழ்வு அளிக்கிறாய். எனினும் ஒரு குறுகிய வட்டத்துக்குள் நீ சுத்திச் சுத்தி வருவதேன்? புரட்சி புரியும் நாயகன் மன்னர் மகளாய் நாயகி சூழ்ச்சி புரியும் வில்லன் இதொருகாலம். நல்லவன் நாயகன் காதல் நாயகி ரவுடி வில்லன் இதொரு காலம். ரவுடி நாயகன் காதல் நா...
BJP – ஜஸ்வந்த் சிங் நீக்கமும் அதன் பின்பக்கமும்

BJP – ஜஸ்வந்த் சிங் நீக்கமும் அதன் பின்பக்கமும்

அரசியல், கட்டுரை
சிம்லாவில் நடைபெற்றுவரும் ''சைதன் பைதக்'' எனும் செயற்குழு அவசர அவசரமாக 30 வருடங்களாக BJP யில் உழைத்த '' ஜஸ்வந்த் சிங் '' நீக்கப்பட்டதாக அறிவித்தது. ஜஸ்வந்த் சிங் உடனே தான் அனுமனாக BJP யில் இருந்ததாகவும் தற்பொழுது ராவணனாக  என்னை மாற்றி உள்ளனர் என்றும் சொல்கிறார். அவருக்கு விளக்கமளிக்கவும் வாய்ப்பு தரப்படவில்லை. TV மீடியாக்கள் தொடர் செய்தியாக இதை ஒளிபரப்பி வருகின்றன. ஜஸ்வந்த் சிங் செய்த பிழை தான் என்ன? ஒரு புத்தகம் எழுதினர் என்பது தான் குற்றச்சாட்டு. பாகிஸ்தான் தேசத்தை, பாகிஸ்தான் தனிநாடு தோன்றுவதற்கு காரணமான ஜின்னா புகழதக்கவரா? அதுவும்  BJP எனும் இந்துமத கொள்கையுடைய கட்சியை சார்ந்தவர் புகழ்வதா? இது எப்படி நிகழ்ந்தது ஜஸ்வந்த் சிங் மட்டும் ஏதோ வாய்தவறி (கைதவறி) புகழ்ந்துவிட்டார் என்று சொல்லமுடியாது. 2005 -ம் ஆண்டு L.K. அத்வானி பாகிஸ்தான் சென்ற போது ஜின்னாவை புகழ்ந்தார் உடனடியாக அ...
கூண்டுக்குள் நம்சுதந்திரம்

கூண்டுக்குள் நம்சுதந்திரம்

கவிதை, படைப்புகள்
பூகம்பம், புயல், சுனாமி வந்தால்தான் நமக்குள்ளே தேசிய ஒருமைப்பாடு அப்பொழுதான் அனைவரும் ஒன்றுபடுவோம்...... பரவாயில்லை அடிக்கடி இவைகள் வரட்டும் அந்த சில காலமாவது ஒற்றுமையாய் இருப்போம் .....! நிவாரண நிதியிலும் நித்தம் நித்தம் சீர்கேடு ....! 62 ஆண்டுகள் ஆகின்றது ஆயினும் குண்டு துளைக்காத பாதுகாப்புகுள் நம் சுதந்திர உரை ......! சுதந்திரம் இப்பொழுது சுத்தமாக சுற்றாத இயந்திரம் ....! மகாத்மா சொன்னார் எப்பொழுது ஒரு பெண் இரவில் தனியாக பயமில்லாமல் நடமாட முடிகிறதோ அதுதான் உண்மையான சுதந்திரம் என்று .....! இன்று நிலைமை அதைவிட மோசம் இப்பொழுது பகலில் கூட பெண்கள் சுதந்திரமாய் வெளியே வரமுடிவதில்லை பர்தா போடாமல் வெளியே வந்தால் ஆசிட் அபிஷேகம் அதுமட்டுமா ? பாலியல் வன்முறை பேருந்து நிறுத்தம், கல்லூரிகளில்,பள்ளிகளில், அலுவலகங்களில்...! மொட்டுக்களுக்கு மோக உணர்வு ஊட...
அது என்ன… காதல்!

அது என்ன… காதல்!

கட்டுரை, மற்றவை
யார பார்த்தாலும் நான் அவள காதலிக்கிறேன், இவன காதலிக்கிறேன் என்று சொல்றாங்க. ஆனா.. எனக்கு இந்த காதல் மட்டும் ஒரு புரியாத விஷயாமாகவே இருக்கு. ஏன் எரிச்சலா கூட தான் இருக்கு? இத சொன்னா என்னை இதயம் இல்லாதவன் என்று சொல்றாங்க. சரி காதல் என்ற வார்த்தைக்கு இலக்கண இலக்கியத்தில் பொருள் தேடி, ஓலைச் சுவடி எல்லாம் கூட ஒன்றிரண்டு புரட்டினேன். காதல் என்பது பெரும்பாலும் வினைச் சொல்லாகவும்(Verb), சில இடத்தில் பெயர்ச் சொல்லாகவும்(Noun) உபயோகிக்கப் படுகிறது. ஓடுபவன் -ஓடுகிறவர்களை குறிக்கின்றது. சாப்பிடுகிறவன் - சாப்பிடுபவர்களை குறிக்கின்றது. காதலன் -காதலிப்பவர்களை குறிக்க வேண்டும் அல்லவா.. ஆனால்? "அவன் தான் என் காதலன்" என்றல்லவா சொல்கிறோம். சரியாக புரிந்து கொள்ள முடியாதவர்கள் மீண்டும் படியுங்கள். "அவன் தான் என் சாப்பிடுகிறவன்/ஓடுபவன்" என்பது எவ்வளவு முட்டாள் தனமான வாக்கியமாக படுகிறது. "நான் தான் காதலன்/...