32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
Dinesh R
செய்தியாளர் விவரம் சேலம்

Dinesh R

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

4024 செய்திகள் எழுதப்பட்டுள்ளன வலைத்தளம்
செய்திகள் வரிசை (பக்கம் 224)
பாகுபலி விமர்சனம் சினிமா

பாகுபலி விமர்சனம்

(பாகுபலி – தொடக்கம்) இந்தியாவின் மிக மிகப் பிரம்மாண்டமான படம். மிரட்டியுள்ளார் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலி. பேரருவியின் அடிவாரத்தில் வளரும் ‘ஷிவு’-வுக்கு, மலை மீதேறிப் பார்க்க வேண்டுமென்ற தீராத ஆசை, மிகச் சிறிய வயது முதலே கனலாய் எழுகிறது. பலமுறை முயன்றும் மலையில் ஏற முடியாமல் வழுக்கி விழுந்து கொண்டேயிருக்கிறான். அருவியில் இருந்து விழும் மரத்தாலான முகமூடியின் சொந்தக்காரியை எப்படியும் காண வேண்டுமென்ற காதலின் உந்துதலில், ஒருநாள் மலையில் ஏறிவிடுகிறான். அங்கு யார் இருக்கிறார்கள்? அவர்களுக்கும் ஷிவு-வுக்கும் என்ன […]

10/07/2015 Dinesh R
பாபநாசம் சுயம்புலிங்கம், ஹேப்பி அண்ணாச்சி!! சினிமா

பாபநாசம் சுயம்புலிங்கம், ஹேப்பி அண்ணாச்சி!!

படத்தின் வெற்றியைக் கொண்டாட, படக்குழுவினர் அனைவரும் அந்தந்தப் பாத்திரத்தின் உடையலங்காரத்துடனே மேடையேறினர். அது மட்டுமல்லாமல், சுலைமான் பாய் டீக்கடை – ராணி இல்லம் – காவல் நிலையம் என மேடையின் செட்டிங்கிலும் அமர்க்களப்படுத்தியிருந்தனர். ‘வெற்றி தோல்விகள் சகஜம். ஆனால் இப்படியொரு படம், எங்களுக்கும் மனத் திருப்தியை அளித்து ரசிகர்களுக்கும் மனத் திருப்தியை அளித்த இப்படம் வெற்றி பெற்றதில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளோம்’ என கமல் சொன்னதுபோல், பாபநாசம் படத்தின் மொத்த குழுவும் மகிழ்ச்சியில் திளைத்தவாறு ஊடகத்திற்கும் மக்களுக்கும் […]

09/07/2015 Dinesh R
பொன்னியின் செல்வன் – நாடக அனுபவம் கட்டுரை

பொன்னியின் செல்வன் – நாடக அனுபவம்

மு.கு.: மேஜிக் லேண்டர்ன் தியேட்டரும், எஸ்.எஸ். இண்டர்நேஷ்னலும் இணைந்து நிகழ்த்தும் அற்புதமான 3½ மணி நேர ‘பொன்னியின் செல்வன்’ நாடகம், இன்று 25வது முறையாக (2014 – 2015) மேடையேற்றப்படுகிறது சுமார் 60 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட, ஐந்து பாகங்கள் கொண்ட ஒரு பெரும் சரித்திரப் புதினத்தை மூன்றரை மணி நேரத்திற்குச் சுருக்கி, அதனை மிக நேர்த்தியான நாடகமாக உருமாற்றியுள்ளனர். அரங்கை நிர்மாணித்த R.K.ஜெயவேலுவும், கலை இயக்குநர் தோட்டா தரணியும், உடைகளை வடிவமைத்து குந்தவையாகவும் நடித்த பிரீத்தி […]

07/07/2015 Dinesh R
36 முத்தங்களின் பின்னணி.! சினிமா

36 முத்தங்களின் பின்னணி.!

டீஸர் வெளியான பின், ஒரே ஒரு முத்தக் காட்சிக்கு 36 டேக்குகள் வாங்கினாராம் ஜி.வி.பிரகாஷ் குமார் எனச் சொல்லப்பட்டது. “டீஸரைப் பார்த்துட்டு அனைவரும் கேட்டது, ‘ஏன் ஒரு நல்ல பையனை இப்படியாக்கி வச்சிருக்கீங்க?’ என்பதுதான். நான் ஒன்னும் செய்யலை. அவரது இயல்பே அப்படித்தான். வெளில யாருக்கும் அது தெரில. சொன்னாலும் நம்ப மாட்டேங்கிறாங்க. இப்ப இருக்கிற லவ்வுன்னா என்ன? அதை எந்தக் கட்டுப்பாடும் இல்லாம தனது ஃப்ரீ ஜோனில் இருந்து நடிச்சிருக்கார் ஜி.வி. இது முழுக்க முழுக்க பசங்களுக்கான […]

07/07/2015 Dinesh R
கேடுகெட்ட கேவலமான லவ் ஸ்டோரி சினிமா

கேடுகெட்ட கேவலமான லவ் ஸ்டோரி

“த்ரிஷா இல்லனா நயன்தாரா – இந்த காலகட்டத்துக்கான லவ் படம். இன்னும் சரியா சொல்லணும்னா, கேடுகெட்ட கேவலமான லவ் ஸ்டோரி இது. இந்தப் படத்தின் இயக்குநர் ஆதிக் இரவிச்சந்திரம் தன் சொந்த வாழ்க்கையில் பண்ண லவ், காதல் கேட்ட லவ்வெல்லாம் வச்சு கற்பனை கலந்து கதையாக்கியிருக்கார். இப்பயிருக்கிற யூத் ஆடியன்ஸுக்குப் பிடிக்கிறாப்ல படம் எடுத்திருக்கார்” என்றார் படத்தைத் தயாரித்த கேமியோ பிலிம்ஸ் C.J.ஜெயகுமார். படத்தை வழங்கும் ஸ்டுடியோ க்ரீன் K.E.ஞானவேல்ராஜா, “படம் தர லோக்கல்! இதுக்குன்னு இருக்கிற […]

07/07/2015 Dinesh R
பாபநாசம் விமர்சனம் சினிமா

பாபநாசம் விமர்சனம்

தன் குடும்பத்தை உலகமாக நினைத்து வாழுபவர் அண்ணாச்சி சுயம்புலிங்கம். அந்த சின்னஞ்சிறு உலகத்தில், அழையாத விருந்தாளி ஒருவரால் சிக்கலொன்று ஏற்படுகிறது. அச்சிக்கலால் எந்தப் பாதிப்பும் ஏற்படாமல் எப்படி சுயம்புலிங்கம் தன் குடும்பத்தைக் காப்பாற்றுகிறார் என்பதுதான் கதை. படத்தின் முதற்பாதி, அதன் மூலமான மலையாளப் படங்களுக்கே உரித்தான ஆர்ப்பட்டமில்லாத காட்சிகளாய் நகர்கின்றன. அதை கலகலப்பாக்குவது எழுத்தாளர் ஜெயமோகனின் வசனங்களே. அங்காடித் தெரு படத்துக்குப் பின், இப்படத்திற்கே கைதட்டல்களைப் பெறுகின்றன அவரின் வசனங்கள். கதாப்பாத்திரங்களின் வசன உச்சரிப்புக்கு உதவிய எழுத்தாளர் […]

05/07/2015 Dinesh R
அன்புக்காக ஏங்கி அலையும் டெய்சி சினிமா

அன்புக்காக ஏங்கி அலையும் டெய்சி

டெய்சி என்ற எட்டு வயது குழந்தையின் பாசத்தை எடுத்துக் கூறும் இக்கதை சமீபத்திய திகில்/ பேய் படங்களிலிருந்து பெரிதும் வித்திசயமாய் உருவாகியுள்ளது. உண்மையான நிகழ்வுகளை மையமாக வைத்து செண்டிமென்ட் – திகில் படமாக உருவாக்கியுள்ளார் இயக்குநர் ஸ்ரீநாத் ராமலிங்கம். எம்.ஆர்.கே. உடன் இணைந்து கதை இயற்றி இயக்குநராக அறிமுகமாகும் ஸ்ரீநாத் ராமலிங்கம், தனது படத்தைப் பற்றிக் கூறுகையில், “ஒவ்வொரு குழந்தையும் பெற்றோர்களின் வாழ்க்கை என்னும் சுவரை அலங்கரிக்கும் சித்திரமே. பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் தங்களது பெற்றோரின் மேல் […]

03/07/2015 Dinesh R
தண்ணீரில் விளக்கெரித்த வள்ளலார்! ஆன்‌மிகம்

தண்ணீரில் விளக்கெரித்த வள்ளலார்!

வள்ளலார் என்று போற்றப்படும் இராமலிங்க அடிகளார் வகுத்த உயர்நெறியே சன்மார்க்க சங்கமாய் உருவாகியது. அனைத்து உயிகளிடத்திலும் அன்பு செய்தலே சன்மார்க்கத்தின் முக்கியக் கொள்கை. சிறந்த மனிதநேயம் கொண்ட இவர். ‘உயிர்களிடத்து இரக்கம் காட்டுங்கள். எல்லா உயிர்களையும் உங்களுடைய உயிர் போலவே எண்ணுங்கள், பாவியுங்கள்’ என்று ஜீவ காருண்யத்தைப் போதித்தவர். வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்,பசியினால் இளைத்தே வீடு தோறிரந்தும் பசியறாதயர்ந்த வெற்றரைக் கண்டுளம் பதித்தேன்.. என்கிற பாடல் அவரது ஜீவகாருண்ய கொள்கையை உணர்த்தும். நிலம் வறண்டு […]

01/07/2015 Dinesh R
ஜே.ஆர். ரங்கராஜு சினிமா

ஜே.ஆர். ரங்கராஜு

மாயலோகத்தில்.. வடுவூர் துரைசாமி ஐயங்கார் துப்பறியும் நாவல்கள் எழுதி புகழுடன் இருந்து வந்த அதே காலத்தில், அவரைப் போலவே துப்பறியும் நாவல்கள் எழுதுவதில் மிகவும் திறமை வாய்ந்த மற்றுமொரு எழுத்தாளர் ஜே.ஆர். ரங்கராஜு. ’ராஜாம்பாள்’ என்கிற இவரது நாவல் இதே பெயரில் திரைப்படமாக 1935இல் வெளிவந்தது. மீண்டும் இக்கதை இரண்டாவது முறையாக 1951இல் தயாரிக்கப்பட்டு இதே ‘ராஜாம்பாள்’ என்கிற பெயரில் வெளிவந்தது. நாடகக்காவலர் என்று பின்னாளில் பெயர்பெற்ற ஆர்.எஸ்.மனோகரின் அறிமுகப்படம் இது. இதில் மனோகர் கதாநாயகனாகத்தான் அறிமுகமானார். […]

01/07/2015 Dinesh R