Search

நாம் ஏன் பால் அருந்த வேண்டும்?

பாலின் மருத்துவக் குணம்

பாலில் பெரும்பாலும் பசும்பால் அல்லது எருமைப் பால் பயன்படுத்தப்படுகின்றன. அரிதாக ஆட்டின் பாலையும் அருந்துகின்றனர்.

பாலைப்போல் சத்துள்ள உணவு வேறொன்றும் இல்லை. தாய்ப்பால் கிடைக்காத குழந்தைகளுக்கு பசும்பாலே தாய்பால். பசும்பால் எளிதில் ஜீரணமாகும். எனவே குழந்தைகளுக்கு பசுவின் பாலே சிறந்ததாகும். பல ஆயுர்வேத மருந்து உண்பவர்களுக்கு பசும்பாலே பரிந்துரைக்கப்படுகிறது.

நமது உடலுக்குத் தேவையான புரதம், கனிய உப்புக்கள், கொழுப்பு, கேல்சியம், உயிர்ச்சத்து வகைகள் என்பன அனைத்தும் பாலில் அடங்கியுள்ளன. அதனால் அனைவரும் நாள்தோறும் பிரதான உணவு வகைகளுக்கு மேலதிகமாகக் குறைந்தது ஒரு கோப்பை பாலாவது அருந்த வேண்டும்.

உடலின் சூட்டைப் பாதுகாக்க கொழுப்பு வேண்டும். அதுவும் பாலில் நிரம்ப உள்ளது. விசேஷம் என்னவென்றால் இதிலுள்ள கொழுப்பு எளிதில் செரிமானம் அடையக் கூடியது.

பாலைக் காய்ச்சும்போது மேலே ஆடை படிகிறதல்லவா? அதுதான் கொழுப்பு. பாலிலுள்ள கொழுப்புப் பகுதியைப் பிரித்தெடுத்து வெண்ணையாகவும், நெய்யாகவும் நாம் பயன்படுத்துகிறோம்.

எனினும் பாலில் அதிகளவு கேல்சியம் இருப்பதால் சிறுநீரகக் கல் உண்டாகின்றன என மருத்துவர்கள் எண்ணுகின்றனர். ஆனால் பாஸ்டன் நகர் பிரிக்ஹாம் மருத்துவமனையின் ஆய்வு இதனை நிராகரிக்கின்றது. கேல்சியம் உட்கொள்வதால் சிறுநீரகக் கற்கள் உருவாகும் வாய்ப்பு சற்று அதிகம்தான். எனினும் கேல்சியம் செறிந்த உணவை உண்பது உன்மையில் இந்த அபாயத்தைக் குறைக்கின்றது. உணவு மூலம் 1000 மில்லி கிராம் வரை கேல்சியம் உட்கொள்வது இன்னமும் பாதுகாப்பானதே. இந்த வகையில் பாலுக்கு மீண்டும் வெற்றிதான்.

பாலில் இவ்வளவு நன்மை இருக்கிறதினால் நல்லா பால் குடிங்க..!