32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
Dinesh R
செய்தியாளர் விவரம் சேலம்

Dinesh R

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

4025 செய்திகள் எழுதப்பட்டுள்ளன வலைத்தளம்
செய்திகள் வரிசை (பக்கம் 231)
எனக்குள் ஒருவன் விமர்சனம் சினிமா

எனக்குள் ஒருவன் விமர்சனம்

லூசியா எனும் கன்னடப் படத்தை மீள் உருவாக்கம் செய்துள்ளார் இயக்குநர் பிரசாத் ராமர். லூசியா, தென்னிந்தியத் திரைப்பட ரசிகர்கள் பெருமையாக காலரை உயர்த்திக் கொள்ள உதவிய படம். முறைப்படியாக உரிமை வாங்கி தமிழில் எடுத்துள்ளனர். தியேட்டர் ஆர்டிஸ்டாக இருந்து திரைத்துறையில் நுழைந்த பவன் குமாரின் பெயரே திரைக்கதையில் வருகிறது. ஒருவன்தான் வாழ நினைக்கும் வாழ்க்கையைப் பற்றி கனவு காண்பதுதான் எனக்குள் ஒருவன் படத்தின் கதை. சித்தார்த்தின் கேரியரில் கண்டிப்பாக இது முக்கியமானதொரு படமாக அமையும். வாழும், வாழ நினைக்கும் […]

07/03/2015 Dinesh R
தொப்பி விமர்சனம் சினிமா

தொப்பி விமர்சனம்

குற்றப் பரம்பரையைச் சேர்ந்த பட்டியல் இனத்தவனான சித்தன், தனது லட்சியமான காவல் துறையில் சேருகிறானா இல்லையா என்ற கேள்விக்கான பதில்தான் கதை. படத்தின் தலைப்பு போடும்பொழுதே, பொம்மலாட்ட பாணியில் குற்றப்பரம்பரை எப்படி உருவாகின என்ற செய்தியைச் சொல்லி விடுகிறார் இயக்குநர் யுரேகா. படத்தின் பலம் அதன் இயல்பான கதாபாத்திரங்கள். படத்தின் முதற்பாதி மிகவும் கலகலப்பாகப் பயணிக்கிறது. மலைவாசிகளின் தலைவராக வரும் G.M.குமார் அதகளம் செய்துள்ளார். திருடச் செல்பவர்களை ஆசிர்வாதம் செய்து அனுப்புதல், ஏ.டி.எம். மெஷினைப் பெயர்த்தெடுப்பது, பேயோட்டுவது, […]

07/03/2015 Dinesh R
பாண்டி.. மில்க் பாண்டி சினிமா

பாண்டி.. மில்க் பாண்டி

கோஸ்ட் கோபல்வர்மாவாக நடித்த ‘நான் கடவுள்’ ராஜேந்திரனின் அடுத்த அவதாரத்தை, ‘இவனுக்கு தண்ணில கண்டம்’ படத்தினைக் காணலாம். இரண்டு மணி நேர முழு நீள நகைச்சுவைப் படம். குமரவேல், செண்ட்ராயன், மனோ பாலா, எம்.எஸ்.பாஸ்கர், ‘லொள்ளு சபா’ சுவாமிநாதன், சுப்பு பஞ்சு, “கானா” பாலா என நகைச்சுவைக்கு தீனி போட படத்தில் பலருள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. A7 Band என்ற பெயரில் மூன்று இளைஞர்கள் இணைந்து இசையமைத்து உள்ளனர். “எல்லோரும் சொன்னாங்க.. குமரவேல் சார் ராதாமோகன் சார் […]

05/03/2015 Dinesh R
ஒரு புது கதவு திறக்குது சினிமா

ஒரு புது கதவு திறக்குது

“இப்பாடல் ஒரு இளைஞனின் கொண்டாட்டத்தின் வெளிப்பாடாய் இருந்தது. கௌதம் அவர்களின் குரல் இந்தப் பாட்டிற்கு அந்தத் துள்ளலைத் தந்துள்ளது. இசையமைப்பாளர் ஸ்டீவ், கௌதமின் நண்பர். முதலில் இசையமைப்பாளர் ஸ்டீவ் வாட்ஸ், கௌதம் மூலமாகத்தான் எனக்கு அறிமுகமானார். படத்தில் ஒரு சோலோ சாங் வைக்கலாம் என்று நானும் ஸ்டீவ் அவர்களும் முடிவு செய்தோம். இப்பாடலுக்கு புதிதாக ஒரு குரல் வேண்டும் என்று நினைத்தோம். ஜி.வி.எம். (கெளதம் வாசுதேவ் மேனன்) பாடினால் நன்றாக இருக்கும் என்று ஸ்டீவ் கூறினார். கௌதம் […]

28/02/2015 Dinesh R
எலி – படக்குழுவினர் சினிமா

எலி – படக்குழுவினர்

நடிகர்கள்: >> வடிவேலு >> சதா >> பிரதிப் ராவத் >> பெசன்ட் ரவி >> மகாநதி சங்கர் >> சந்தானபாரதி >> பாவா லட்சுமணன் >> போஸ் வெங்கட் >> பூச்சி முருகன் >> ராஜ்கபூர் >> வெங்கல் ராவ் >> கிருஷ்ணமூர்த்தி பணிக்குழு: >> தயாரிப்பு – G சதிஷ் குமார், S அமர்நாத் >> தயாரிப்பு நிர்வாகம் – சிவராஜ், வெங்கடேஷ் >> தயாரிப்பு மேற்பார்வை – பன்னீர் செல்வம் >> கதை, […]

28/02/2015 Dinesh R
எட்டுத்திக்கும் மதயானை விமர்சனம் சினிமா

எட்டுத்திக்கும் மதயானை விமர்சனம்

தனது முதற்படத்தின் பெயரிலேயே ‘ராட்டினம் பிக்சர்ஸ்’ எனும் தயாரிப்பு நிறுவனம் தொடங்கி தனது இரண்டாவது படத்தை இயக்கித் தயாரித்துள்ளார் இயக்குநர் K.S.தங்கசாமி. சாகித்திய அகாதமி விருது வாங்கிய நாஞ்சில் நாடனின் நாவலொனின் தலைப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது. சாதீயமும் அதிகாரமும் பண ஆசையும் இணைந்து தமிழின் தம்பியான பிரபாவைக் கொன்று விடுகிறது. தமிழ் எப்படிப் பழி வாங்குகிறான் என்பதுதான் கதை. ஆர்யாவின் தம்பி சத்யா நாயகனாக நடித்துள்ளார். ஆனாலும் இது நாயகனுக்குரிய படமில்லை. நாயகனும் மற்றொரு பாத்திரமாகவே […]

28/02/2015 Dinesh R
கிங்ஸ்மேன்: தி சீக்ரெட் சர்வீஸ் அயல் சினிமா

கிங்ஸ்மேன்: தி சீக்ரெட் சர்வீஸ்

(Kingsman: The Secret Service) கிங்ஸ்மேன் என்பது ஒரு தையற்கடை. எனினும், இது ஜேம்ஸ் பாண்ட் பாணி படமென்று தலைப்பைக் கொண்டே யூகிக்கலாம்.  மனிதாபிமானத்தை வைரஸாகவும், புவி வெப்பமயமாதலை காய்ச்சலாகவும் உருவகிக்கும் கோடீஸ்வரரான ரிச்மாண்ட் வேலண்டைன்.. வைரஸ் உலகை அழிக்கும் முன் தீர்வு காணத் துடிக்கிறார். அதாவது மக்களுக்குள் வன்முறை உணர்ச்சியைக் கிளிர்ந்தெழச் செய்து, ஒருவரை ஒருவர் தாக்கி அழிந்து போகவைப்பது. இதை கிங்ஸ்மேன் குழுவினர் எப்படித் தடுக்கின்றனர் என்பதுதான் படத்தின் கதை. முதல் ஃப்ரேமில் இருந்தே படம் நம்மை […]

27/02/2015 Dinesh R
தமிழுக்கு எண் 1-ஐ அழுத்தவும் விமர்சனம் சினிமா

தமிழுக்கு எண் 1-ஐ அழுத்தவும் விமர்சனம்

தலைப்பு மட்டுமன்று படமும் வித்தியாசமாகவே உள்ளது. ஆனால் கதைக்குப் பொருந்தும் தலைப்பாகத் தெரியவில்லை. சூரியனின் மேற்பரப்பில் எழும் வெப்ப அலைகளால் பூமியில் காந்தப் புயல் வீசுகிறது. அதனால் செல்ஃபோன் சிக்னல்கள் வேலை செய்யாமல் போகின்றன. மீண்டும் எப்படி வேலை செய்கிறது, அதுவரை என்ன நிகழ்ந்தது என்பதே கதை. வழக்கமான தமிழ்ப் படமாக இல்லாமல் படம் நெடுகவே நிறைய சுவாரசியங்கள் உண்டு. உதாரணத்திற்கு பிக்பாக்கெட் திருடனாக வரும் அஜய்யின் கதாபாத்திரம். எல்லாப் பாத்திரத்துக்குமே சம அளவு முக்கியத்துவம் கொடுத்ததோடு […]

20/02/2015 Dinesh R
இலக்கியமும் இலக்கிய நிமித்தமும் கட்டுரை

இலக்கியமும் இலக்கிய நிமித்தமும்

சிவகாசி ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரியின் தமிழியல் துறையும், பாரதி இலக்கியச் சங்கமும் இணைந்து இலக்கிய மாநாடு – யாதுமாகி 2015 எனும் இலக்கிய நிகழ்வை ஃபிப்ரவரி 12, 13 தேதிகளில் நடத்தினார்கள். பாரதி இலக்கியச் சங்கத்தை சிவகாசியில் நிறுவிய கவிஞர் திலகபாமா அவர்களின் முயற்சியில்தான் எழுத்தாளர்களும் மாணவர்களும் நேரடியாகச் சந்திக்கும் இந்நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது. எது குறித்து மாணவர்களிடம் பகிரப்பட வேண்டுமென எழுத்தாளர்களே தீர்மானித்ததாகச் சொன்ன திலகபாமா, “இன்றைக்கு, இலக்கியம் படைச்சு என்னத்த கிழிச்சீங்க என்ற கேள்வி பரவலாக […]

18/02/2015 Dinesh R
‘பாம்புசட்டை’ படக்குழுவினர் சினிமா

‘பாம்புசட்டை’ படக்குழுவினர்

நடிகர்கள்: >> பாபி சிம்ஹா >> கீர்த்தி சுரேஷ் >> பானு >> K.ராஜன் >> சோமசுந்தரம் >> ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் >> சார்லி >> R.V.உதயகுமார் >> சரவண சுப்பையா பணிக்குழு: >> தயாரிப்பு – மனோபாலா, R.சரத்குமார், R.ராதிகா சரத்குமார், லிஸ்டின் ஸ்டிஃபன் >> தயாரிப்பு நிறுவனம் – மேஜிக் ஃப்ரேம்ஸ், மனோபாலா பிக்சர் ஹவுஸ் >> தயாரிப்பு மேற்பார்வை – பாலகோபி >> இயக்குநர் – ஆடம் தாசன் >> ஒளிப்பதிவு […]

11/02/2015 Dinesh R
துவங்கியது ‘பாம்பு சட்டை’ சினிமா

துவங்கியது ‘பாம்பு சட்டை’

பாபி சிம்ஹா, கீர்த்தி சுரேஷ் நடிக்கும் ‘பாம்பு சட்டை’ படத்தின் படப்பிடிப்பு சென்னையில் இன்று துவங்கியது. R.சரத்குமார், R.ராதிகா சரத்குமார், லிஸ்டின் ஸ்டிஃபன் ஆகியோரின் மேஜிக் ஃப்ரேம்ஸ் நிறுவனம் மற்றும் இயக்குனர் தயாரிப்பாளர் மனோபாலா அவர்களின் மனோபாலா பிக்சர் ஹவுஸ் இணைந்து தயாரிக்கும் ‘பாம்பு சட்டை’. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் துவங்குகிறது. நடிப்பில் தனக்கென ஒரு தனி பாணியைக் கையாண்டு வரும் பாபி சிம்ஹா இப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். பல தமிழ்ப் படங்களில் நடித்து வரும் […]

11/02/2015 Dinesh R
பொங்கி எழு மனோகரா விமர்சனம் சினிமா

பொங்கி எழு மனோகரா விமர்சனம்

அம்மா செண்ட்டிமென்ட் கொண்டு படம் வந்து நாளாகும் குறையைத் தீர்க்க வந்துள்ள படம். சிக்கரசம்பாளையத்தைச் சேர்ந்த மனோகரன் தன் சிறு வயதிலேயே தாயை விட்டுப் பிரிகிறான். மீண்டும் தனது அன்னையுடன் இணைகிறானா இல்லையா என்பதுதான் கதை. சுமார் 20 அல்லது 25 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ்த் திரைப்படங்களை நினைவுப்படுத்தும் கதையும் திரைக்கதையும். திரைக்கதையிலேனும் சுவாரசியப்படுத்தல்களை கவனம் செலுத்தியிருக்கலாம். எழுதி இயக்கி இருப்பவர் ரமேஷ் ரங்கசாமி. மனோகரனாக, சுண்டாட்டம் படத்தில் நாயகன் இர்ஃபான் நடித்துள்ளார். தந்தையின் மிரட்டலுக்குப் பயப்படுவது, […]

06/02/2015 Dinesh R
என்னை அறிந்தால்… விமர்சனம் சினிமா

என்னை அறிந்தால்… விமர்சனம்

அஜித்தும், கெளதம் வாசுதேவ் மேனனும் இணைகிறார்கள் என்றால் ரசிகர்களின் எதிர்பார்ப்பினைக் கேட்கவும் வேண்டுமா? காதலியின் மரணம் சத்யதேவ் ஐ.பி.எஸ்.-ஐ மிகவும் பாதிக்கிறது. அதிலிருந்து எப்படி மீள்கிறார் என்பதுதான் கதை. அஜித்தின் முகத்தையும், நடையையும் எந்தக் கோணத்தில் காட்டினால் திரையில் நன்றாக இருக்குமென்ற புரிதல், அவரை வைத்து இயக்கும் இயக்குநர்களுக்கு வந்துவிட்டதெனத் தெரிகிறது. எல்லாம் வெங்கட் பிரபு வகுத்துக் கொடுத்த பாதை. மங்காத்தாக்கு பின்னான அஜித் திரையில் அங்குமிங்கும் நடந்தாலே போதுமென்பது கதையற்ற வீரம் படத்தின் திரையரங்கக் கொண்டாட்டத்தில் நிரூபணமாகிவிட்டது. […]

06/02/2015 Dinesh R