32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

எளிய மக்களைக் காக்கும் சூரன் – ‘ஜெய் பீம்’

Dinesh R சேலம் Published: 01/10/2021 2 நிமிட வாசிப்பு Updated: 30/11/2021 சினிமா
எழுத்து அளவு:

சூர்யா நடிப்பில் தயாராகியிருக்கும் ‘ஜெய் பீம்’ படம், இந்தியா மற்றும் 240 நாடுகளில், நவம்பர் 2ஆம் தேதி அன்று அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியாகிறது. இயக்குநர் த. செ. ஞானவேல் எழுதி இயக்கியிருக்கும் இப்படத்தை 2டி என்டர்டெய்ன்மென்ட் என்ற நிறுவனம் சார்பில் நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா தயாரித்திருக்கிறார்கள். இப்படம் தெலுங்கிலும் வெளியாகிறது.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

பழங்குடி சமூகங்களுக்கு இடையேயான முரண்பாடுகளை எதிர்த்துப் போராடும் வழக்கறிஞராக சூர்யா நடித்துள்ளார். இவருடன் நடிகர்கள் பிரகாஷ்ராஜ், ராவ் ரமேஷ், நடிகைகள் ரஜிஷா விஜயன், லிஜோமோள், ஜோஸ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இந்தப் படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.

மிஸ்டரி டிராமா ஜானரில் தயாராகியிருக்கும் ‘ஜெய் பீம்’ படம், பழங்குடி இனத்தைச் சேர்ந்த தம்பதியான செங்கேணி மற்றும் ராஜ்கண்ணுவின் வாழ்வியலை நுட்பமாகவும் ஆழமாகவும் பேசுகிறது. ராஜ்கண்ணு கைது செய்யப்பட்டு காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்படுகிறார். அங்கிருந்து அவர் காணாமல் போகிறார். விசாரணைக்காக சென்ற தன்னுடைய கணவர் வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த ராஜ்கண்ணுவின் மனைவி செங்கேணி, வழக்கறிஞர் சந்துருவின் உதவியை நாடுகிறார். வழக்கறிஞர் சந்துரு உண்மையை வெளிக் கொணரவும், மாநிலத்தில் ஆதரவற்ற பழங்குடி இனப் பெண்களுக்கு நீதி கிடைக்கவும் பொறுப்பேற்கிறார்.

நீதிக்காகப் போராடும் சூர்யாவின் வெற்றி எத்தகைய போராட்டத்திற்குப் பின் கிடைத்தது என்பதை அறிய நவம்பர் இரண்டாம் தேதி வரை ரசிகர்கள் காத்திருக்க வேண்டும்.

சூர்யாவின் சூரரைப் போற்று, 2020 ஆம் ஆண்டின் தீபாவளிக் கொண்டாட்டமாக அமைந்தது போலவே, இவ்வருடம் ஜெய் பீம் திரைப்படமும் தீபாவளி விருந்தாக அமையும் என அத்திரைப்படக் குழுவினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.