32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
குறிச்சொல்

விக்ரம் பிரபு

13 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன
ரோமியோ பிக்சர்ஸும், ஏவியேட் பிக்சர்ஸும் இணையும் புதுப்படம் சினிமா முக்கியச் செய்தி
03/09/2026 Dinesh R 2 நிமிட வாசிப்பு

ரோமியோ பிக்சர்ஸும், ஏவியேட் பிக்சர்ஸும் இணையும் புதுப்படம்

பிரம்மாண்ட திரைப்படத் தயாரிப்பிலும், வெற்றிகரமான விநியோகத்திலும் முத்திரை பதித்த தயாரிப்பாளர் ராகுலின் ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம், தனது புதிய படத்தினை ஏவியேட் பிக்சர்ஸ் கோகுல் ஸ்ரீனிவாசனுடன் இணைந்து தயாரிக்கிறது. இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று இனிதே துவங்கியது. ரைட்டர் பட இயக்குநரும், DC படத்தின் எழுத்தாளருமான ஃபிராங்க்ளின் ஜேக்கப் இப்படத்தை இயக்குகிறார். இளைய திலகம் பிரபு மற்றும் விஜய் வர்மா முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கும் இப்படத்தில், நடிகை ஷிவாத்மிகா ராஜசேகர் கதாநாயகியாக நடிக்கிறார். ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் […]

முழுமையாகப் படிக்க
செய்திகள் வரிசை (பக்கம் 1)
“சிறை: இது ஒரு டீம் வெற்றி” – விக்ரம் பிரபு சினிமா

“சிறை: இது ஒரு டீம் வெற்றி” – விக்ரம் பிரபு

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ்.எஸ். லலித் குமார் தயாரிப்பில், விக்ரம் பிரபு, அறிமுக நடிகர் LK அக்‌ஷய் குமார் நடிப்பில், அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில் உருவான திரைப்படம் சிறை ஆகும். உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு மாறுபட்ட களத்தில் உருவான இந்தப் படம் 2025 டிசம்பர் 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் சிறப்பு வெளியீடாக உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே சிறப்பான வரவேற்பைப் பெற்றது. அதைத் தொடர்ந்து, ஜனவரி 23 அன்று […]

14/03/2026 Dinesh R
“ஒவ்வொரு முறையும் நிரூபிக்க வேண்டியுள்ளது” – விக்ரம் பிரபு | Love Marriage சினிமா

“ஒவ்வொரு முறையும் நிரூபிக்க வேண்டியுள்ளது” – விக்ரம் பிரபு | Love Marriage

அஸ்யூர் பிலிம்ஸ், ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், சக்தி பிலிம் ஃபேக்டரி வெளியீட்டில், லவ் மேரேஜ் திரைப்படம் ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றிகரமாகத் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் படத்தை வெற்றி பெறச் செய்த ரசிகர்களுக்கும், ஊடகத்தினருக்கும் படக்குழுவினர் நன்றி தெரிவிக்கும் வகையில் விழா ஒன்றினை சென்னையில் ஒருங்கிணைத்திருந்தனர். இயக்குநர் சண்முக பிரியன், ”இந்தப் படத்தை வெற்றிப் படமாக்கிய ஊடகத்தினருக்கும் ரசிகர்களுக்கும் மிகப்பெரிய நன்றி. இப்படத்திற்கான பத்திரிகையாளர்கள் காட்சி திரையிட்ட பிறகு உங்களிடம் இருந்து கிடைத்த வாழ்த்துகளும் […]

04/07/2025 Dinesh R
லவ் மேரேஜ் விமர்சனம் | Love Marriage review இது புதிது

லவ் மேரேஜ் விமர்சனம் | Love Marriage review

உசிலம்பட்டியைச் சேர்ந்த முப்பத்து மூன்று வயதான ராமச்சந்திரனுக்குக் கோபிச்செட்டிப்பாளையத்தைச் சேர்ந்த அம்பிகாவுடன் நிச்சயதார்த்தம் நிகழ்கிறது. ராமின் ராசிக்குக் கல்யாணமே ஆகாது என உறவினர்களும் ஊரார்களும் அவர் காதுபடக் கிண்டல் செய்தவண்ணம் இருக்க, அம்பிகாவுடனான திருமணத்திற்காக மிகவும் மகிழ்ச்சியுடனும் எதிர்பார்ப்புடனும் காத்திருக்கிறார் ராம். அவரது ராசியோ, விதியோ, இயற்கையோ, இயக்குநரின் திரைக்கதையோ ஏதோ ஒன்று விளையாட, குடும்பத்துடன் கோபிச்செட்டிப்பாளையத்திலேயே லாக்டவுனில் சிக்கிக் கொள்வதோடு கல்யாணமும் நின்று விடுகிறது. 90’ஸ் கிட்டான ராமின் வேதனை ஒரு முடிவுக்கு வந்ததா இல்லையா […]

28/06/2025 Dinesh R
பாயும் ஒளி நீ எனக்கு விமர்சனம் இது புதிது

பாயும் ஒளி நீ எனக்கு விமர்சனம்

கண் பார்வைக் குறைபாடுள்ள நாயகனுக்கு, தன் குடும்ப உறவைக் கொன்றது யார் என்பதைக் கண்டுபிடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. கொலையாளி யார், கொலையாளியை எப்படிக் கண்டுபிடித்தார், குடும்ப உறவுக்கும் கொலையாளிக்கும் என்ன பகை போன்ற கேள்விகளுக்கு விடையளிப்பது தான் ‘பாயும் ஒளி நீ எனக்கு’ படத்தின் கதை. படத்தின் ஆரம்பக் காட்சியில் ஆட்டோவில் பயணம் செய்யும் விக்ரம் பிரபு நடுரோட்டில் பைக் பஞ்சர் ஆனதால் தவித்துக் கொண்டிருக்கும் ஓர் இளம் கணவன் மனைவிக்கு லிஃப்ட் கொடுத்து உதவுகிறார். […]

23/06/2023 Dinesh R
பொன்னியின் செல்வன் 2 விமர்சனம் இது புதிது

பொன்னியின் செல்வன் 2 விமர்சனம்

பொன்னியின் செல்வன் நாவலே எழுத்தாளர் கல்கியின் புனைவு எனும் பட்சத்தில், இப்படத்தில் வரலாற்று ஆராய்ச்சி செய்வதென்பது பாலைவனத்தின் மத்தியில் கடல்மீன்களைத் தேடும் அநாவசிய முயற்சியாகும். ஆக, புனைவை ஆராயாமல் ரசிக்க முடிந்தால், பொன்னியின் செல்வன் 2, அதன் முதல் பாகத்தை விடவுமே சிறப்பாக உள்ளதை உணரலாம். போரில்லாமல் வரலாற்றுப் புனைவை முடிக்கக் கூடாதென்ற வணிக நிர்ப்பந்தத்திற்கு உட்பட்டு, ஒரு போர்க்காட்சியை அமைத்துள்ளனர். அந்தப் போர்க்களக் காட்சி இல்லாமலேயே படம் முழுமையடைந்திருக்கும். காதலியை இழந்த வேதனையும், தீனமான நிலையில் […]

28/04/2023 Dinesh R
வானம் கொட்டட்டும் விமர்சனம் சினிமா

வானம் கொட்டட்டும் விமர்சனம்

தேனி மாவட்டத்தில் பாசமான அண்ணன் தம்பி பாலாஜி சக்திவேலும், சரத்குமாரும். ஒரு உள்ளூர் தேர்தல் பிரச்சனையில் பாலாஜி சக்திவேலை வெட்ட, அண்ணனுக்காக எதிராளிகளை வெட்டிவிட்டு 20 வருடங்கள் சிறைக்குச் செல்கிறார் சரத்குமார். ராதிகா தனி ஆளாக இருந்து விக்ரம் பிரபுவையும், ஐஸ்வர்யா ராஜேஷையும் வளர்க்கிறார். விக்ரம் பிரபு கோயம்பேடு மார்கெட்டில் வாழைக்காய் மண்டி வைக்கிறார். 20 வருடங்கள் கழித்துச் சிறையில் இருந்து வரும் சரத்குமாரை விக்ரம் பிரபுவும் ஐஸ்வர்யா ராஜேஷும் வெறுக்கிறார்கள். இதே நேரம் சரத்குமாரால் இறந்து […]

08/02/2020 Dinesh R
விக்ரம் பிரபுவின் அசுரகுரு சினிமா

விக்ரம் பிரபுவின் அசுரகுரு

திரைப்படக் கல்லூரியில் தங்கப் பதக்கம் பெற்று இயக்குநர் மோகன் ராஜாவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய ராஜ்தீப் இயக்கி வெளிவரயிருக்கும் படம் ‘அசுரகுரு’. இயக்குநர் ராஜ்தீப் அவர்களுக்குத் தமிழக அரசு சிறந்த குறும்பட இயக்குநருக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து டப்பிங் பணிகள் நடந்து வருகிறது. தற்போது, இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. முதல் நாள் டப்பிங்கில் விக்ரம் பிரபு அவர்கள் பேசிய வசனம், ‘மக்களை நான் காப்பாற்றுவேன்’. இந்த வசனத்திற்கேற்றாற்போல் இந்தப் படத்தின் […]

03/11/2018 Dinesh R
மணிரத்னத்தின் அசிஸ்டென்ட் இயக்கத்தில் ‘துப்பாக்கி முனை’ சினிமா

மணிரத்னத்தின் அசிஸ்டென்ட் இயக்கத்தில் ‘துப்பாக்கி முனை’

“சட்டத்தை இந்தச் சமூகம் கேடயமாகப் பயன்படுத்துகிறது. அனால் நான் வாளாகப் பயன்படுத்துகிறேன். முன்பு வறுமை குற்றவாளிகளை உருவாக்கியது. இன்று அதிகாரம் குற்றவாளிகளை உருவாக்குகிறது. தேசதந்தை காந்தியைச் சுட்ட துப்பாக்கி தவிர சமுயாதயத்திற்காகச் சந்தன மரமாய்த் தேய்ந்து தேய்ந்து மனம் வீசி கொண்டிருக்கும் ஒவ்வொரு போலீசரிடமும் உள்ள துப்பாக்கிகள் எல்லாம் மதிப்பு மிக்கவை என்பது ஸ்பெசலிஸ்ட் பிர்லா போஸின் உறுதியான கருத்து. தன் கருத்தில் உறுதியாக இருக்கும் போஸின் வாழ்க்கையில் அவர் இழந்தது என்ன, பெற்றது என்ன என்பதே […]

19/09/2018 Dinesh R
60 வயது மாநிறம் விமர்சனம் சினிமா

60 வயது மாநிறம் விமர்சனம்

‘கோதி பண்ணா சாதார்ணா மைக்கட்டு (Godhi Banana Sadharna Mykattu)’ என்ற படம் கன்னடத்தில், 2016 இல் வெளிவந்தது. ‘கோதுமை நிறம் சாதாரண உடற்கட்டு’ என்பது அந்தக் கன்னடப்படத் தலைப்பின் பொருள். இயக்குநர் ராதாமோகன், ’60 வயது மாநிறம்’ எனத் தமிழில் மீள் உருவாக்கம் செய்துள்ளார். அல்சைமர் நோயால் பாதிக்கப்படும் 60 வயது கோவிந்தராஜ் காணாமல் போய்விடுகிறார். அவரையொரு பராமரிப்பு இல்லத்தில் சேர்த்துவிட்டிருக்கும் அவரது மகன் சிவா, தனது அலட்சியத்தால் தந்தையைத் தொலைத்துவிட்டோமெனத் தேடி அலைகிறான். சிவாவின் […]

02/09/2018 Dinesh R
பக்கா விமர்சனம் சினிமா

பக்கா விமர்சனம்

விக்ரம் பிரபு முதல் முறையாக இரண்டு வேடங்களில் நடித்திருக்கிறார். அரசன்குடியைச் சேர்ந்த ஜமீன்தாரின் மகளான நதியாவிற்கு, திருவிழாவில் பொம்மை கடை வைக்கும் பாண்டி மீது காதல் வருகிறது. தனது அந்தஸ்தினை நினைத்துத் தயங்கும் பாண்டியை ஊர் ஊராய்த் தேடிச் சமாதானம் செய்து சென்னைக்கு அழைத்து வந்துவிடுகிறார் நதியா. தாம்பரம் ரயில் நிலையத்தில் நதியாவை உட்கார வைத்து விட்டுச் செல்லும் பாண்டி திடீரெனக் காணாமல் போவதால், தற்கொலை புரிந்து கொள்ள தண்டவாளத்தில் படுத்துக் கொள்கிறார் நதியா. அச்சமயம், குடித்து […]

27/04/2018 Dinesh R
வீரசிவாஜி விமர்சனம் சினிமா

வீரசிவாஜி விமர்சனம்

கால் டாக்சி ஓட்டுநர் சிவாஜியிடம் இருந்து 5 லட்சத்தை மோசடி செய்து அபகரித்து விடுகிறார் ஜான் விஜய். வீரம் கொண்டு வெகுண்டெழும் சிவாஜி தன் பணத்தை எப்படி மீட்கிறார் என்பதுதான் படத்தின் கதை. நடிகை ஷாலினியின் தங்கை ஷாம்லி நாயகியாக அறிமுகமாகி உள்ளார். ‘தீவிர விஜய் விசிறி’யாக வருகிறார். இது மட்டுந்தான் படத்திலுள்ள அதிகபட்ச சுவாரசியமே! ‘தாறுமாறு தக்காளி சோறு’ பாடலில் இடுப்பை வெட்டி வெட்டி நடக்கிறார். ஏழைக் குழந்தைகளுக்கு நாயகன் புத்தகங்கள் வாங்கித் தந்ததும் காதல் […]

18/12/2016 Dinesh R
வாகா விமர்சனம் சினிமா

வாகா விமர்சனம்

பாகிஸ்தான் பெண்ணான காணமைக் காதலிக்கிறான் இந்திய இராணுவ வீரனான வாசு. அவர்கள் காதல் என்னானது என்பதே படத்தின் கதை. ஹரிதாஸ் படத்தின் இயக்குநர் ஜி.என்.ஆர்.குமரவேலனின் அடுத்த படமிது. ஹரிதாஸ் ஈட்டிய புகழை மறக்காமல், எதிலும் கவனம் செல்லாத நாயகனுக்கு ஆட்டிசம் இருந்தது என ஒரு முடிச்சுப் போட்டுள்ளார். இலவசமாக மது கிடைக்குமென இராணுவத்தில் சேர்ந்து விடுகிறான் நாயகன். இந்தக் கதாபாத்திரத்தின் மனநிலையையும் அலட்சியத்தையும் படம் நெடுகே வெளிப்படுத்தியுள்ளார் விக்ரம் பிரபு. நாயகியைப் பார்த்ததும் லட்சியக் காதலனாகி விடுகிறார். […]

15/08/2016 Dinesh R