Shadow

மணிரத்னத்தின் அசிஸ்டென்ட் இயக்கத்தில் ‘துப்பாக்கி முனை’

Maniratnam-assitantdirects-Thuppaki-Munai

“சட்டத்தை இந்தச் சமூகம் கேடயமாகப் பயன்படுத்துகிறது. அனால் நான் வாளாகப் பயன்படுத்துகிறேன். முன்பு வறுமை குற்றவாளிகளை உருவாக்கியது. இன்று அதிகாரம் குற்றவாளிகளை உருவாக்குகிறது. தேசதந்தை காந்தியைச் சுட்ட துப்பாக்கி தவிர சமுயாதயத்திற்காகச் சந்தன மரமாய்த் தேய்ந்து தேய்ந்து மனம் வீசி கொண்டிருக்கும் ஒவ்வொரு போலீசரிடமும் உள்ள துப்பாக்கிகள் எல்லாம் மதிப்பு மிக்கவை என்பது ஸ்பெசலிஸ்ட் பிர்லா போஸின் உறுதியான கருத்து. தன் கருத்தில் உறுதியாக இருக்கும் போஸின் வாழ்க்கையில் அவர் இழந்தது என்ன, பெற்றது என்ன என்பதே இந்தத் ‘துப்பாக்கி முனை’ கதையின் சுருக்கம். மேலும் போலீஸ் அதிகாரி பிர்லா போஸ் கதாபாத்திற்காக நரைமுடி தலையுடன் 45 வயது தோற்றத்தில் விக்ரம் பிரபு சிறப்பாக நடித்துள்ளார். படத்தின் கதையும், விக்ரம் பிரபுவின் வித்தியாசமான தோற்றமும் படத்தின் பெரும்பலம்” என்று இயக்குநர் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார். இந்தியாவில் மிகச்சிறந்த காதசிரியர்களில் ஒருவரான ‘அன்னக்கிளி’ ஆர்.செல்வராஜின் மகனும், மணிரத்னத்தின் இணை இயக்குநரான தினேஷ் செல்வராஜ் இத்திரைப்படத்தினை எழுதி இயக்கியுள்ளார். 

இத்திரைப்படத்தின் மூலமாக ஹன்சிகா மோத்வானி முதன் முறையாக விக்ரம்பிரபுவுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். சென்டிமென்ட் மற்றும் ஆக்க்ஷனுக்கு முக்கியதுவம் கொடுத்து எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தின் க்ளைமாக்ஸில் முக்கியமான சமூகப்பிரச்சனை குறித்து பேசப்பட்டுள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் கூறியுள்ளார். மிகவும் பிரம்மாண்டமான பொருட்செலவில் இந்தத் திரைப்படத்தினை வி கிரியேஷன்ஸ் சார்பாக கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார்.

படத்தின் பெரும்பாலான காட்சிகள் இதுவரை யாரும் படம் பிடிக்காத ராமேஸ்வரம், தனுஷ்கோடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள தீவுகளில் எடுக்கப்பட்டுள்ளதாகவும், நிச்சயம் இது ரசிகர்களுக்கு ஒரு விசேஷ ட்ரீட்டாக அமையும் எனப் படத்தின் ஒளிப்பதிவாளர் கூறியுள்ளார். இதுதவிர மும்பை, டெல்லி, மதுரை மற்றும் சென்னை ஆகிய இடங்களில் தொடர் படப்பிடிப்பு நடத்தி 40 நாட்களில் மொத்த படப்பிடிப்பினையும் முடித்துள்ளனர்.

கதை தேர்வில் மிகுந்த கவனத்துடன் இருந்த நேரத்தில், துப்பாக்கி முனை படத்தின் கதையும், கதைக்களமும் வித்தியாசமாக இருந்ததால் படத்தில் நடித்ததாக விக்ரம் பிரபு கூறியுள்ளார். துப்பாக்கி முனையின் முக்கய கதாபாத்திரங்களில் வேல.ராமமூர்த்தி, எம்.எஸ்.பாஸ்கர், ‘ஆடுகளம்’ நரேன், ‘மிர்ச்சி’ ஷா, மாரிமுத்து, தீனா, பரத்ரெட்டி, கல்யாணி நட்ராஜ், வின்சென்ட் அசோகன் மற்றும் பலர் நடித்திருக்கும் இத்திரைப்படத்தின் ஒளிப்பதிவை ராசாமதியும், இசையை மாபெரும் இசைமேதை எல்.வைத்யனாதனின் மகனான எல்.வி.முத்துகணேஷும், படத்தொகுப்பினைப் புவன் ஸ்ரீனிவாசனும் கையாள்கிறார்கள்.

படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் நடந்து கொண்டிருக்கும் இந்தப் படத்தின் பின்னணி இசை சேர்ப்பு வேலைகள் க்ரீஸ் நாட்டிலுள்ள மெக்கடோனியாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கபாலி, வி.ஐ.பி 2 படங்களுக்குப் பிறகு, துப்பாக்கி முனை படத்தின் இசைக்கோர்ப்பு அங்கு நடைபெறுவது குறிப்படத்தக்கது.