Shadow

விக்ரம் பிரபுவின் அசுரகுரு

Asura Guru curtain raiser

திரைப்படக் கல்லூரியில் தங்கப் பதக்கம் பெற்று இயக்குநர் மோகன் ராஜாவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய ராஜ்தீப் இயக்கி வெளிவரயிருக்கும் படம் ‘அசுரகுரு’. இயக்குநர் ராஜ்தீப் அவர்களுக்குத் தமிழக அரசு சிறந்த குறும்பட இயக்குநருக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடப்பட்டுள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து டப்பிங் பணிகள் நடந்து வருகிறது. தற்போது, இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. முதல் நாள் டப்பிங்கில் விக்ரம் பிரபு அவர்கள் பேசிய வசனம், ‘மக்களை நான் காப்பாற்றுவேன்’. இந்த வசனத்திற்கேற்றாற்போல் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அமைந்துள்ளது.

நடிகர்கள்:

>> விக்ரம் பிரபு
>> மகிமா நம்பியார்
>> மனோபாலா
>> யோகி பாபு
>> ஜெகன்
>> ராமதாஸ்
>> சுப்புராஜ்
>> நாகிநீடு
>> குமரவேல்

பணிக்குழு:

>> இயக்கம் – அ.ராஜ்தீப்
>> தயாரிப்பு நிறுவனம் – J.S.B Film Studios
>> தயாரிப்பு – J.S.B.சதிஷ்
>> ஒளிப்பதிவு – ராமலிங்கம்
>> இசை – கணேஷ் ராகவேந்திரா