32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
குறிச்சொல்

Pentagan Public Relations

279 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 17 / 19
செய்திகள் வரிசை (பக்கம் 17)
அற்புதமான மிருகங்களை எங்குக் காணலாம்? அயல் சினிமா

அற்புதமான மிருகங்களை எங்குக் காணலாம்?

‘ஃபென்டாஸ்டிக் பீஸ்ட்ஸ் அன்ட் வேர் டூ ஃபைண்ட் தெம் (FANTASTIC BEASTS AND WHERE TO FIND THEM)’ எனும் படம் ஆங்கிலத்திலும் தமிழிலும் தெலுங்கிலும் நவம்பர் 18 ஆம் தேதி அன்று வெளியாகவுள்ளது. ஹாரி பாட்டர் புத்தகங்களை எழுதிப் பெரும்புகழை அடைந்த பெண் எழுத்தாளர் J. K. ரெளலிங்கின் கற்பனையில் இருந்து உதித்த மற்றொரு படமிது. அதை விட, திரைக்கதையாசிரியராக அவதாரமெடுத்திருக்கும் முதல் படமிது என்பது இப்படத்திற்கான கூடுதல் சிறப்பு. படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவராகவும் தன்னை […]

13/11/2016 Dinesh R
ப்ரிட்ஜெட் ஜோன்ஸ்’ஸ் பேபி விமர்சனம் அயல் சினிமா

ப்ரிட்ஜெட் ஜோன்ஸ்’ஸ் பேபி விமர்சனம்

நம்மால் கொஞ்சம் கூட யோசித்துப் பார்க்கவே முடியாத ஒரு கதையை, மிக நேர்த்தியான நகைச்சுவைப் படமாக உருமாற்றியுள்ளார் இயக்குநர் ஷரோன் மக்வயர் (Sharon Maguire). ப்ரிட்ஜெட் ஜோன்ஸ் சீரிஸில் இது மூன்றாவது படம். முந்தைய பாகங்களைப் பார்க்கவிடினும் கூடப் பாதகமில்லை. இந்தப் படம் நிச்சயம் உங்களைக் கலகலப்பாக்கிவிடும். படத்தின் கதை அப்படி. 43 வயதாகும் ப்ரிட்ஜெட் ஜோன்ஸ் கர்ப்பமாகிறார். பிறக்கப் போகும் குழந்தைக்குத் தந்தை முன்னாள் காதலன் மார்க் டார்சியா அல்லது இசை விழாவில் சந்தித்த அந்நியனான […]

30/10/2016 Dinesh R
எம் எஸ் ஜி – தி வாரியர்: லயன் ஹார்ட் விமர்சனம் அயல் சினிமா

எம் எஸ் ஜி – தி வாரியர்: லயன் ஹார்ட் விமர்சனம்

எம் எஸ் ஜி (MSG) – ‘மெஸெஞ்சர் ஆஃப் காட்’ சீரிஸின் மூன்றாவது படமிது. இத்தொடர் படங்களின் நாயகன், தனக்கென ஒரு கூட்டத்தைக் கொண்டுள்ள ராஜஸ்தானைச் சேர்ந்த துறவியான குர்மீத் ராம் ரஹீம் சிங் ஆவார். டி.ராஜேந்திரின் திறமையும், தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவின் நடிப்பையும் ஒருங்கே கொண்ட பவர் ஸ்டார் இவர் என்றே சொல்லலாம். மாயாஜாலப் படமான ‘லயன் ஹார்ட்’ அதகளக் காமெடியாய் உள்ளது. ஓர் உதாரணம்: போர்க்களத்தில் குதிக்கும் நாயகன் குர்மீத், யானையை (ஆம், யானையே […]

17/10/2016 Dinesh R
ஜேசன் பார்ன் விமர்சனம் அயல் சினிமா

ஜேசன் பார்ன் விமர்சனம்

குண்டடிப்பட்டு தன் நினைவுகளை இழந்து அல்லலுற்ற ஜேசன் பார்ன், மக்களின் அபிமானத்தைப் பெற்ற ஒரு கதாபாத்திரம். தன் கடந்த காலத்தை மறந்து தன்னைத் தானே தேடி வந்த ஜேசன் பார்ன், அனைத்து நினைவுகளும் மீண்ட நிலையில், தன் பழைய வாழ்க்கையில் இருந்து துண்டித்துக் கொண்டு தலைமறைவாக வாழ்கிறான். ஜேசனின் கடந்த காலம் பற்றியும், அவனது தந்தையைப் பற்றியும் ஒரு முக்கியமான தகவல், அவனை ஒரு தலையாகக் காதலித்த நிக்கி பார்சன்ஸ்க்குக் கிடைக்கிறது. கண் கொத்திப் பாம்பாகத் தொடரும் […]

06/08/2016 Dinesh R
கோஸ்ட் பஸ்டர்ஸ் விமர்சனம் அயல் சினிமா

கோஸ்ட் பஸ்டர்ஸ் விமர்சனம்

சந்திரமுகி, காஞ்சனா, மாயா, டிமான்ட்டி காலனி என தமிழ்த் திரையுலகம் டிசைன் டிசைனாகப் பேய்களை மார்க்கெட்டில் இறக்கிவிட்டுக் கொண்டிருக்கும் இந்த வேளையில், ஹாலிவுட்டில் இருந்து சமீபத்தில் கால் பதித்திருக்கும் பேய்க் கதைதான் இந்த கோஸ்ட் பஸ்டர்ஸ். இது இந்த (GHOST BUSTERS) வரிசையில் மூன்றாவது படம் என்றபோதும் மற்ற படங்களைப் பற்றிய முன்கதைச் சுருக்கங்கள் இல்லாமலே நமக்குப் புரிகிறது. கொலம்பியா யுனிவர்சிட்டியில் பேராசிரியராகப் பணிபுரியும் எரினைச் சந்திக்க ஒருவர் வருகிறார். அவர் கையில் எரினும் அபியும் சேர்ந்து […]

01/08/2016 Dinesh R
ஹாலிவுட்டின் காமெடி பேய்கள் அயல் சினிமா

ஹாலிவுட்டின் காமெடி பேய்கள்

பேய்ப் படப் பின்னணியில், நகைச்சுவை ததும்ப ஒன்றன் பின் ஒன்றாகத் திரைப்படங்களை அள்ளி வழங்குவதில் வள்ளலாகி விட்டது தமிழ்ப் பட உலகம் மட்டும் தானா? நாங்களும் அதற்கு எந்த விதத்திலும் குறைந்தவர்கள் அல்ல என்பது போல், ஹாலிவுட்டும் தற்போது புறப்பட்டு விட்டது. கோஸ்ட்பஸ்டர்ஸ் படத் தொடரில் மூன்றாவது படமான இதை இயக்கியுள்ளவர் பால் ஃபீக். கேட்டி டிப்போல்டுடன் இணைந்து இதன் திரைக்கதையையும் உருவாக்கி உள்ளார் பால் ஃபீக். மெல்லிசா மெக் கார்த்தி, க்றிஸ்டன் வீக், கேட் மெக்கினோன், […]

28/07/2016 Dinesh R
அச்சுறுத்த வருகிறது ‘லைட்ஸ் அவுட்’ அயல் சினிமா

அச்சுறுத்த வருகிறது ‘லைட்ஸ் அவுட்’

இருள் என ஒன்றும் இல்லை; ஒளி இல்லாத ஒரு சூழலே இருள் எனப்படும் என சுவாமி விவேகானந்தர் சொன்னார். இருளிற்கும் இரவிற்கும் னெருக்கமான தொடர்பு உண்டு. பொதுவாக ஒளிமயமான விஷயங்கள் தெய்வீகமாக கருதப்படுவது போல், இருளுடன் திகிலும் இணைந்து பேசப்படும். அத்தகைய இருளில் சிக்கித் திகிலிறும் ரெபெக்கா படும்பாடுதான் ‘லைட்ஸ் அவுட்’ திரைப்படம். டேவிட் F.சாண்ட்பெர்க் இயக்கிய குறும்படமான ‘லைட்ஸவுட்’ பரவலான வரவேற்பைப் பெற்றது. ஆவிகளைப் பற்றி ஆராய்கிற திகில் படமது. அக்குறும்படத்தை முழு நீள திரைப்படமாக […]

25/07/2016 Dinesh R
ஐஸ் ஏஜ்: கொலிஷன் கோர்ஸ் விமர்சனம் அயல் சினிமா

ஐஸ் ஏஜ்: கொலிஷன் கோர்ஸ் விமர்சனம்

சிறுகோள் (Asteroid) ஒன்று பூமியைத் தாக்க வருகிறது. பூமியின் அடியாழத்தில் வாழும் பக், ஒரு தீர்க்க தரிசணத்தைச் சொல்லும் தூணைத் தற்செயலாகக் கண்டுபிடிக்கிறது. அந்தத் தூணிலுள்ள செய்தியின் படி, முன்பே பூமியில் விழுந்த சிறுகோளின் ஒரு பகுதிதான் அதன் மற்றொரு பகுதியை ஈர்க்கும் விசையாகச் செயல்படுகிறது; அதை மீண்டும் விண்வெளிக்கு அனுப்பி விட்டால் பூமியைப் பேரழிவில் இருந்து காப்பாற்றலாம் என்றிருக்கிறது. பக்-கின் தலைமையில் பாலூட்டிகள் எப்படி சிறுகோளை விண்வெளிக்கு ஏவி பூமியைக் காப்பாற்றுகின்றன என்பதே படத்தின் சுவாரசியமான கதை. […]

15/07/2016 Dinesh R
இண்டிபெண்டன்ஸ் டே: ரீசர்ஜென்ஸ் விமர்சனம் அயல் சினிமா

இண்டிபெண்டன்ஸ் டே: ரீசர்ஜென்ஸ் விமர்சனம்

வேற்றுக் கிரகவாசிகளின் தாக்குதல்களில் இருந்து மீண்டு, மெல்ல இயல்பு வாழ்க்கைக்கு பூமி வந்து 20 ஆண்டுகள் ஆகிறது. பூமிக்கு ஏற்படும் பாதிப்புகளை முன்னறிவிக்க வேற்று கிரகவாசிகள் விட்டுச் செல்லும் தொழில்நுட்பத்தையே உபயோகித்து, ESD (எர்த் ஸ்பேஸ் டெஃபன்ஸ்) என்ற அமைப்பை உருவாக்குகிறது ஐக்கிய சபை. அவ்வமைப்பை, செவ்வாய் கிரகத்திலும் நிலவிலும் ரேயாவிலும் (சனி கிரகத்தின் துணைக்கோள்) அமைத்து, கண்காணிப்பு வேலையைச் செய்கின்றனர். 20 ஆண்டுகளுக்கு முன், வேற்றுக்கிரகவாசிகள் தோற்கும் பொழுது தங்கள் தோல்வியைத் தலைமையிடத்துக்குச் சமிக்ஞை செய்துவிடுகின்றனர். […]

26/06/2016 Dinesh R
சென்ட்ரல் இன்டெலிஜென்ஸ் விமர்சனம் அயல் சினிமா

சென்ட்ரல் இன்டெலிஜென்ஸ் விமர்சனம்

நட்பைக் கொண்டாடும் நகைச்சுவைத் திரைப்படம். 20 வருடங்களுக்குப் பின், ஃபேஸ்புக் மூலமாக தன் நண்பனைச் சந்திக்கிறான் கால்வின் ஜாய்னர். அடுத்த நாள் காலை சி.ஐ.ஏ. கால்வின் வீட்டு வாசலில் நிற்கிறது. அவன் சந்தித்த நண்பனான பாபி ஸ்டோன் ஒரு கொலை செய்து விட்டு, செயற்கைக் கோள் சம்பந்தமான குறியீட்டு இலக்கங்களை தீவிரவாதிகளிடம் விற்கப் பார்க்கும் மோசமான நபர் என சி.ஐ.ஏ.வால் கால்வினுக்குச் சொல்லப்படுகிறது. பாபியோ மீண்டும் கால்வினை அணுகி உதவி கேட்கிறான். கால்வின் சி.ஐ.ஏ. பக்கமா? நண்பன் […]

19/06/2016 Dinesh R
மீண்டும் ‘இண்டிபெண்டன்ஸ் டே’ அயல் சினிமா

மீண்டும் ‘இண்டிபெண்டன்ஸ் டே’

1996 இல் வெளிவந்து பிரம்மாண்ட வெற்றியைப் பெற்ற படம் ‘இண்டிபெண்டன்ஸ் டே’. 75 மில்லியன் டாலர் பொருட்செலவில் உருவான அப்படம், 817 மில்லியன் டாலர் சம்பாதித்தது. அந்த ஆண்டு வெளியான படங்களிலேயே அதிக வசூலை ஈட்டிய படம் என்பதோடு, சிறந்த விஷூவல் எஃபெக்ட்ஸுக்கான ஆஸ்கர் விருதையும் வென்றது. 20 ஆண்டுகள் கழித்து அதன் அடுத்த பாகத்தை எடுத்துள்ளார் இயக்குநர் ரோலண்ட் எம்மெரிச். இம்முறை 200 மில்லியன் பொருட்செலவில் வரவுள்ளது ‘இண்டிபெண்டன்ஸ் டே: ரீசர்ஜன்ஸ்’. வேற்றுக் கிரகவாசிகளின் தாக்குதல்களில் […]

15/06/2016 Dinesh R
தி கான்ஜூரிங் 2 விமர்சனம் அயல் சினிமா

தி கான்ஜூரிங் 2 விமர்சனம்

‘தி கான்ஜூரிங்’ என்றால் இந்திரஜாலம் அல்லது அமானுஷ்யச் சம்பவங்கள் எனப் பொருள் கொள்ளலாம். இப்படத்திற்கு இரண்டாவது பொருளே பொருந்தும். தூங்கிக் கொண்டிருக்கும் 11 வயது சிறுமியான ஜேனட், விழிக்கும் பொழுது கீழ்த் தளத்தில் இருக்கிறாள்; அந்தரத்தில் மிதக்கிறாள்; 72 வயது முதியவரின் குரலில் பேசுகிறாள். அவள் ஆவியால் பீடிக்கப்பட்டது உண்மைத்தானா அல்லது அந்தச் சிறுமியின் குடும்பம் நாடகமாடுகிறதா என அறிய, அமெரிக்கத் திருச்சபை எட் – லோரைன் தம்பதியை இங்கிலாந்து செல்லுமாறு பனிக்கிறது. பின் என்னாகிறது என்பதுதான் […]

10/06/2016 Dinesh R
தி ஆங்க்ரி பேர்ட்ஸ் மூவி விமர்சனம் அயல் சினிமா

தி ஆங்க்ரி பேர்ட்ஸ் மூவி விமர்சனம்

‘தி ஆங்க்ரி பேர்ட்ஸ்’ என்ற வீடியோ கேமை, சோனி பிக்சர்ஸ் இமேஜ்வொர்க்ஸ் திரைப்படமாகத் தயாரித்துள்ளது. பறக்க இயலாத பறவைகளுக்கு, பச்சை நிறப் பன்றிகள் மேல் அப்படியென்ன கோபம்? ஏன் வெஞ்சினம் கொண்டு பன்றிகளைத் தாக்குகிறார்கள் என்பதே படத்தின் கதை. ரெட் (Red – Hot head) எனும் சிவப்பு நிறப் பறவைக்கு பெரிய புருவங்கள்; நண்பர்களும் கம்மி. ஊருக்கு ஒதுக்குபுறமாக வீடு கட்டி வாழ்கிறது. கோபம் அதிகமாக வருகிறதென, கோபத்தைக் குறைக்கும் வகுப்புக்கு அனுப்பி வைக்கப்படுகிறார். அங்கே […]

28/05/2016 Dinesh R
கோவக்காரப் பறவைகள் அயல் சினிமா

கோவக்காரப் பறவைகள்

சோனி பிக்சர்ஸின், ‘The Angry Birds Movie’ ஆங்கிலத்திலும் தமிழிலும் (தமிழ்த் தலைப்பும் அதுவே) மே 27 ஆம் தேதி வெளிவர உள்ளது. இப்படத்தின் வெளியீட்டிற்கு முன்னோடியாக, 3 D அனிமேஷன் கார்டூன் படமான இதில் இடம் பெற்றுள்ள கதாபாத்திரங்கள் தத்தம் உடை அலங்காரங்களோடு, சமீபத்தில், சென்னை நகரில் உள்ள முக்கிய மால்கள் (Malls) மற்றும் பன்னடக்கு அரங்குகளில் உலா சென்று வலம் வந்தார்கள்! கோடை கால விடுமுறை தொடங்கும் நேரமாகையால், அதிக எண்ணிக்கையில் குழந்தைகள் படை […]

06/05/2016 Dinesh R
பஸ் 657 விமர்சனம் அயல் சினிமா

பஸ் 657 விமர்சனம்

தன் மகளின் மருத்துவச் சிகிச்சைக்காக, தான் வேலை செய்த கேசினோவை ஜேசன் காக்ஸுடன் இணைந்து கொள்ளையடிக்கிறார் லூக் வான். கொள்ளையடித்து விட்டு ஓடும்போது, தப்பிப்பதற்காக பேருந்தொன்றில் ஏறுகின்றனர். ரோந்துப் பணியில் இருக்கும் க்றிஸியா எனும் காவல்துறை அதிகாரி சந்தேகத்தோடு அப்பேருந்தைத் தொடருவதால், லூக் வான் குழு வேறு வழியின்றி பேருந்தைக் கடத்துகின்றனர். மொத்த காவல்துறையும் அப்பேருந்தை பின் தொடர்கிறது. இச்சிக்கலில் இருந்து லூக் வான் எப்படித் தப்பிக்கிறார் என்பதுதான் படத்தின் கதை. எந்தப் புதுமையும் இல்லாத கதை. […]

20/03/2016 Dinesh R