32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
குறிச்சொல்

Pentagan Public Relations

279 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 15 / 19
செய்திகள் வரிசை (பக்கம் 15)
டெஸ்பிக்கபிள் மீ 3 விமர்சனம் அயல் சினிமா

டெஸ்பிக்கபிள் மீ 3 விமர்சனம்

2010இல் தொடங்கியது ‘டெஸ்பிக்கபிள் மீ’ தொடர். அதில் வரும் மினியன்ஸ் எனும் திரைப்பாத்திரங்களுக்கு ரசிகர்களிடம் கிடைத்த பரவலான வரவேற்பின் காரணமாக வசூலில் தொடர்ந்து சாதனை புரிந்து வருகிறது. சமீபத்தில், மினியன்ஸ் போன்று மக்களின் ஏகோபித்த வரவேற்பினைப் பெற்ற திரைப்பாத்திரம் வேறில்லை என்றே சொல்லவேண்டும். சமூக வலைத்தளங்களில் எமோட்டிகான்களாகப் பயன்படுத்தப்படும் மினியன்ஸ், மக்களின் எல்லா விதமான உணர்ச்சிகளையும் தங்கள் சின்னஞ்சிறு மஞ்சள் உருவங்களின் மூலம் பிரதிபலிக்கின்றன. மக்களுக்கு மினியன்ஸிடமுள்ள மோகத்தினை மனதில் கொண்டே, யுனிவர்சல் பிக்சர்ஸ் முதல் முறையாக டெஸ்பிக்கபிள் மீ […]

16/06/2017 Dinesh R
மினியன்ஸ் கலக்கப் போகும் டெஸ்பிக்கபிள் மீ 3 அயல் சினிமா

மினியன்ஸ் கலக்கப் போகும் டெஸ்பிக்கபிள் மீ 3

ஃப்ரான்ஸில் உள்ள ‘மெக் கஃப்’ என்கிற மிகப் பெரிய அனிமேஷன் ஸ்டூடியோவில் மிகப் பிரம்மாண்டமான முறையில் உருவாக்கப்பட்ட படம்தான், ‘டெஸ்பிக்கபிள் மீ’ திரைப்படம். 69 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் 2010 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட அப்படம், 543.1 மில்லியன் அமெரிக்க டாலர்களை வசூலித்துக் குவித்தது. அதன் தொடர் படமாக 2013 இல் வெளிவந்த டெஸ்பிக்கபிள் மீ 2 அமெரிக்க டாலர்கள் செலவில் தயாரிக்கப்பட்டு 970.8 மில்லியன் அமெரிக்க டாலர்களைச் சம்பாதித்தது. அவ்விரு படங்களையும் பியரீ காஃபின் […]

12/06/2017 Dinesh R
தி மம்மி விமர்சனம் அயல் சினிமா

தி மம்மி விமர்சனம்

மம்மி படத்தில் டாம் க்ரூஸ் நடிக்கிறார் என்ற செய்தி, ரசிகர்கள் மத்தியில் பலமான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது. ரகசிய தீவிரவாத சிண்டிகேட்களை வேரறுக்கும் டாம் க்ரூஸ் எகிப்தியக் கல்லறைக்கு என்ன வேலையாகப் போயிருப்பார் என்ற ஆவலே அதற்குக் காரணம். ஈராக்கில் (மெசொப்பொதாமியா), எதிர்பாராத விதமாய்ப் புராதனமான கல்லறை (சிறை) ஒன்றைக் கண்டுபிடிக்கிறார் நிக் மோர்டன். அந்தப் பாதாளச் சிறையில் புதைக்கப்பட்டிருக்கும் எகிப்திய இளவரசி அஹமனெத்தின் கல்லறைப் பெட்டி பாதரசத்திலிருந்து எடுக்கப்பட்டதும், பாலைவனப் புயல்களைக் கட்டுப்படுத்தும் இருள் கடவுளான செத்துடன் […]

12/06/2017 Dinesh R
குறும்பட இயக்குநர்களுக்கு வாய்ப்பளித்த சூர்யாவின் 2டி நிறுவனம் சினிமா

குறும்பட இயக்குநர்களுக்கு வாய்ப்பளித்த சூர்யாவின் 2டி நிறுவனம்

முதல் கைதட்டல் – குறும்படப் போட்டி மூவி பஃப் நடத்திய ஃபர்ஸ்ட் கிளாப் எனும் குறும்படப் போட்டியின் முடிவுகள் கோலாகலமாக சத்யம் தியேட்டரில் வெளியிடப்பட்டது. ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம், இயக்குநர் எழில், இயக்குநர் வெற்றிமாறன், ஒளிப்பதிவாளர் மகேஷ் முத்துசுவாமி, இயக்குநர் S.U.அருண் குமார், 2டி எண்டர்டெயின்மென்ட் தலைமை நிர்வாக அதிகாரி ராஜசேகர் கற்பூரசுந்தரப்பாண்டியன், திரை விமர்சகர் ஸ்ரீதர் பிள்ளை, படத்தொகுப்பாளர் K.L.பிரவீன், ஒலிப்பதிவாளர் உதயகுமார், இயக்குநர் ஹரி விஸ்வநாத், சென்னை சர்வதேச குறும்பட விழா இயக்குநர் ஸ்ரீனிவாச சந்தானம், காமன் […]

26/05/2017 Dinesh R
மீண்டும் ஏலியன்கள் அயல் சினிமா

மீண்டும் ஏலியன்கள்

இயக்குநர் ரிட்லீ ஸ்காட், 1979இல் தனது ஏலியன் படம் மூலம் முதல் விதையைப் போட்டார். ஏலியன்ஸ் (1986), ஏலியன் 3 (1992), ஏலியன்: ரெசரக்ஷன் (1997), ப்ரொமீத்தியஸ் (2012) என ஐந்து படங்களைத் தொடர்ந்து, ஏலியன் தொடர் படங்களில் ஆறாவதாக வரவிருக்கிறது ‘ஏலியன்: காவெனன்ட்’. Covenant என்றால் உடன்படிக்கை எனப் பொருளாகும்; ஆனால், படத்தில் அது ஒரு விண்கப்பலின் பெயர். முதல் படத்திற்குப் பிறகு, மீண்டும் அத்தொடரின் நான்காவது படமான ப்ரோமோத்தியஸை 33 வருடங்கள் கழித்து 2012இல் […]

08/05/2017 Dinesh R
சென்னை மாலில் “ஸ்குவாஷ்” போட்டிகள் மற்றவை

சென்னை மாலில் “ஸ்குவாஷ்” போட்டிகள்

19வது ஆசிய ஸ்குவாஷ் சேம்பியன்ஷிப் போட்டி, மூன்றாம் முறையாகச் சென்னையில் நிகழ்கிறது. இப்போட்டியை, ஸ்குவாஷ் ரேக்கட்ஸ் ஃபெடரேஷன் ஆஃப் இந்தியா மற்றும் ஏஷியன் ஸ்குவாஷ் ஃபெடரேஷனுடன் இணைந்து, தமிழ்நாடு ஸ்குவாஷ் ரேக்கட்ஸ் அசோசியேஷன்   நடத்துகிறது. இதற்கு முன்னர், இப்போட்டி 2002இலும், 2010இலும் சென்னையில் நடந்துள்ளது. ஸ்குவாஷ் போட்டியை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கவும், ஸ்குவாஷைப் பிரபலப்படுத்தவும், ஆசிய ஸ்குவாஷ் சேம்பியன்ஷிப் போட்டியைச் சென்னை ராயப்பேட்டையிலுள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் நடத்துகின்றனர். இன்று முதல் 30 ஆம் […]

26/04/2017 Dinesh R
ஸ்மர்ஃப்ஸ்: தி லாஸ்ட் வில்லேஜ் விமர்சனம் அயல் சினிமா

ஸ்மர்ஃப்ஸ்: தி லாஸ்ட் வில்லேஜ் விமர்சனம்

அனிமேஷன் படங்கள் குழந்தைகளுக்கானது எனத் தவறான கற்பிதம் உள்ளது. ஆனால், ‘ஸ்மர்ஃப்ஸ்: தி லாஸ்ட் வில்லேஜ்’, முற்றிலுமே குழந்தைகளுக்கான ஒரு படம். ஏனென்றால் ஸ்மர்ஃப்ஸ் 1 & 2 போல், இது லைவ் ஆக்ஷனுடன் கலந்த அனிமேஷன் படமன்று. முதல் இரண்டு பாகங்களுக்குச் சம்பந்தமில்லாத தனி படம் என்பதோடு, வண்ணஜாலம் நிகழ்த்தும் முழு அனிமேஷன் படம். ஒரு தொலைந்த கிராமத்தைச் சாகசப் பயணமொன்றில் கண்டுபிடிக்கிறார்கள் ஸ்மர்ஃபெட்டும் அவளது மூன்று நண்பர்களும். கதையாக, ஒரு வரியில் சொல்லும் பொழுது […]

22/04/2017 Dinesh R
ஸ்மர்ஃப்ஸ் – மர்ம கிராமம் அயல் சினிமா

ஸ்மர்ஃப்ஸ் – மர்ம கிராமம்

ஸ்மர்ஃப்ஸ் படம் 2011இலும், அதன் இரண்டாம் பாகம் 2013இலும் வெளிவந்து ரசிகர்களை ஈர்த்தது. அந்த சின்னஞ்சிறு நீள நிற கதாபாத்திரங்கள், குழந்தைகளைப் பெரிதாகக் கவர்ந்தார்கள் என்பதே ஸ்மர்ஃப்ஸின் வெற்றிக்குக் காரணம். பெல்ஜியன் காமிக்ஸ் ஆர்டிஸ்ட்டான பெயோ (Peyo) உருவாக்கிய கதாபாத்திரங்களே ஸ்மர்ஃப்ஸ். காமிக்ஸை அடிப்படையாகக் கொண்டு தான் இரண்டு படங்களும் உருவாக்கப்பட்டன. ஏப்ரல் 21 அன்று வெளியாகும் இப்படத்தின் மூன்றாம் பாகம், ஒரு சாகச ஃபேன்டசி வகைமையைச் சேர்ந்தபடம். ஸ்மர்ஃபெட்டி, ப்ரெய்னி, க்ளம்ஸி, ஹெஃப்டி ஆகிய நண்பர்களுக்கு […]

18/04/2017 Dinesh R
ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் 8 விமர்சனம் அயல் சினிமா

ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் 8 விமர்சனம்

ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் 7 ‘தி ஃபேட் ஆஃப் தி ஃப்யூரியஸ்’ எனப் பெயரிடப்பட்டிருக்கும் இப்படத்தின் ஆரம்பமே அதகளமான கார் ரேஸில் தொடங்குகிறது. ரசிகர்கள், இந்தத் தொடர் படங்களில் இருந்து என்ன எதிர்பார்ப்பார்களோ அதில் மட்டுமே கவனம் செலுத்தியுள்ளார் திரைக்கதையாசிரியர் க்றிஸ் மார்கன். கதை, லாஜிக் எல்லாம் இரண்டாம் பட்சமே! ரோலர் கோஸ்டரில் இரண்டு சுற்று போய் வந்தது போன்ற உணர்வை தரக்கூடிய பொழுதுபோக்குச் சித்திரம். அதனால் தான் உலகளவில் வசூலில் ரெக்கார்ட் பிரேக் சாதனை புரிந்து வருகிறது. […]

16/04/2017 Dinesh R
ஆட்டிசம் – விழிப்புணர்வு கருத்தரங்கு மருத்துவம்

ஆட்டிசம் – விழிப்புணர்வு கருத்தரங்கு

ஆட்டிச விழிப்புணர்வு வாரத்தின் பொருட்டு, ஏப்ரல் 8 அன்று, ட்ரைமெடும் நியூரோக்ரிஷும் இணைந்து, The Future of Autism Care என்ற கருத்தரங்கை நிகழ்த்தினார்கள். ட்ரைமெட்-இல், மனம் மற்றும் மூளைப் பராமரிப்பிற்கான பிரத்தியேக சிகிச்சை முறையை வடிவமைத்துள்ளனர். ‘புத்தி (Buddhi)’ என்ற அந்தத் திட்டத்தின் கீழ், வித்யாசாகரிலுள்ள 7 முதல் 21 வயது வரையுள்ள 20 ஆட்டிச சிறுவர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளித்து ஓர் ஆய்வினை மேற்கொண்டுள்ளனர். தொடர்ந்தாற்போல் 7 நாட்கள், ஆயுர்வேதம் (Shriroabhyanga), Acupressure, Refloxology […]

15/04/2017 Dinesh R
வில்லனாகிறார் வின் டீசல் அயல் சினிமா

வில்லனாகிறார் வின் டீசல்

பால் வாக்கருக்கு விடையளித்த ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் 7, பெரும் வசூலை ஈட்டிய வெற்றிப்படமாக அமைந்தது. அத்தொடரின் எட்டாவது பாகத்தில், நாயகர்களில் ஒருவரான வின் டீசல் வில்லனாகிறார். ஒரு மனிதனுக்கு குடும்பம் மிக அவசியம் எனக் கொள்கையுடைய டொமினிக் டொரெட்டோ எனும் கதாபாத்திரத்தில் வருபவர் வின் டீசல். கார் சேஸ்களைத் தவிர்த்து, எல்லாப் பாகத்திலும் குடும்பத்தை ஒருங்கிணைப்பதிலே கவனம் செலுத்துவார். அவரைக் குடும்பத்தில் இருந்து பிரித்து சார்லிஸ் தெரான், குற்றச்செயல்களில் ஈடுபட வைக்கிறார். எப்படி அவரது குடும்பம் […]

30/03/2017 Dinesh R
லைஃப் விமர்சனம் அயல் சினிமா

லைஃப் விமர்சனம்

பூமிக்கு வெளியில் வாழும் உயிரினம் ஒன்றைச் செவ்வாய் கிரகத்தில் கண்டுபிடிக்கின்றனர் நாசா விஞ்ஞானிகள். ஓர் அணு உயிரியான அதைக் கண்டுபிடித்ததன் மூலம் மகத்தானதொரு பெருமிதத்தில் உள்ளது ஆறு பேர் கொண்ட அக்குழு. அவ்வுயிரி அசைந்து தன் இருப்பைக் காட்டியவுடன் தான் படத்தின் பெயரே போடுகிறார்கள். ஒளி புகும்தன்மையோடு மிக அழகாய் இருந்த அந்த ஓர் அணு உயிரி, தட்பவெட்ப சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு தன்னை மாற்றிக் கொண்டு பல்லணு உயிரியாக வளர்கிறது. அதிபுத்திசாலியாய்ப் பரிணமிக்கும் அந்த உயிரால் என்னென்ன […]

25/03/2017 Dinesh R
முதல் கைதட்டல் – குறும்படப் போட்டி சினிமா

முதல் கைதட்டல் – குறும்படப் போட்டி

ஆயிரம் விருதுகள் கிடைத்தாலும், கலைஞர்களுக்கு கைதட்டல் என்பது தான் ஊக்க சக்தி. அதுவும் முதல் கைதட்டல் என்பது அவர்களுக்குக் கிடைக்கப் பெறும் முதல் அங்கீகாரம். அவர்களது நம்பிக்கையைப் பன்மடங்கு உறுதி செய்யும் தருணம் அது. தன் படைப்பு, பெருவாரியான மக்களைச் சென்று சேர்ந்துள்ளது என்ற உணர்வு தரும் சொல்லொன்னா பரவசத்திற்கு அளவுகோலே கிடையாது. அப்படி, இளம் படைப்பாளிகளைப் பரவசப்படுத்தும் முன்முயற்சியைத் தான் மூவி பஃப் (Movie Buff – First Clap) மேற்கொண்டுள்ளது. மூன்று நிமிடங்கள் காலளவு […]

14/03/2017 Dinesh R
காங்: ஸ்கல் ஐலேண்ட் விமர்சனம் அயல் சினிமா

காங்: ஸ்கல் ஐலேண்ட் விமர்சனம்

குழந்தைகளுடன் பார்த்து மகிழ நல்லதொரு படம். மோனார்க் எனும் நிறுவனம், மனிதன் காலடிப்படாத ‘ஸ்கல் ஐலேண்ட்’ எனும் தீவை ஆராய அமெரிக்க அரசின் உதவியை நாடுகிறது. “நாம போகலைன்னா அந்தத் தீவுக்கு ரஷ்யா முதலில் போயிடும்” எனும் யோசிக்கும் அமெரிக்க அரசைச் சம்மதிக்க வைக்கிறது. ரொம்ப காக்க வைக்காமல், அதிர்வுகளை ஆராய நாலைந்து வெடிகுண்டுகளைத் தீவுக்குள் போட்டதுமே நாயகன் காங் தோன்றி அதகளம் செய்து விடுகிறார். வேரோடு மரத்தைப் பிடுங்கி அசுரர்கள் மேல் எறிந்தனர் வானரப்படை வீரர்கள் […]

11/03/2017 Dinesh R