Shadow

Tag: Pentagan Public Relations

கிளாடியேட்டர் II விமர்சனம்

கிளாடியேட்டர் II விமர்சனம்

அயல் சினிமா, இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
கிபி 200. கிளாடியேட்டர் படத்தின் நாயகனான மேக்ஸிமஸ் டெசிமஸ் மெரிடியஸ் இறந்து 16 வருடங்களுக்குப் பின், இப்படத்தின் கதை தொடங்குகிறது. அகேஷியஸின் தலைமையிலான ரோமப்படைகளால் முற்றுகைக்கு உள்ளாகும், நுமிடியாவின் கடைசி நகரத்தை, அதன் தலைவனான ஜுகர்தாவுடன் இணைந்து பாதுக்காகப் ஹேனோவும், அவரது மனைவி அரிஷத்தும் போரிடுகின்றனர். போரில் அரிஷத் கொல்லப்பட, ஜுகர்தாவும் ஹேனோவும் அடிமைகளாக ஆஸ்டியாக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். அகேஷியஸைக் கொல்லத் துடிக்கும் ஹேனோவின் ஆத்திரத்தைக் கண்டுகொள்ளும் மேக்ரினஸ், ஹேனோவை கிளாடியேட்டராகக் களத்தில் இறக்குகிறார். மேக்ஸிமஸ் உதிர்க்கும் கவிதையைச் சொல்லி, அவரைப் போலவே களத்தில் வாளைச் சொருகி, மண்ணை எடுத்து கைகளில் தடவிக் கொள்ளும் ஹேனோ தான், தனக்கும் மேக்ஸிமஸ்க்கும் பிறந்த மகன் லூசியஸ் வெரஸ் அரிலியஸ் என லூசிலாவிற்குத் தெரிந்து விடுகிறது. அதன் பின் ஏற்படும், தாய் – மகன் பாசப்ப...
சென்னையில் ஷரதோத்சவ் – இலையுதிர் கால திருவிழா 2024

சென்னையில் ஷரதோத்சவ் – இலையுதிர் கால திருவிழா 2024

இது புதிது, சமூகம்
தென் மெட்ராஸ் கலாச்சார சங்கத்தின் (SMCA – South Madras Cultural Association) 46 ஆவது ஆண்டு இலையுதிர்கால விழாவான "ஷரதோத்சவ்", அக்டோபர் 9 முதல் 13 வரை கொண்டாடப்படுகிறது. இதுவே சென்னையில் நிகழும் மிகப் பெரிய துர்கா பூஜை கொண்டாட்டமாகும். இந்த பிரம்மாண்டமான நிகழ்வை மாண்புமிகு தமிழக ஆளுநர் திரு. ஆர்.என்.ரவி அவர்கள் தொடங்கி வைத்தார். SMCA இன் தலைவர் திரு. சுதீப் மித்ரா, "நாங்கள் துர்கா பூஜையை 46 ஆண்டுகளாகச் சென்னையில் கொண்டாடி வருகிறோம். இப்போது இரண்டாவது ஆண்டாக, இந்த இடத்தில் (கைலாஷ் கன்வென்ஷன்ஸ், ECR), மிகப் பிரம்மாண்டமான முறையில் துர்கா பூஜையைக் கொண்டாட பிரத்தியேகமான ஏற்பாடுகளைச் செய்துள்ளோம். நிகழ்த்துகிறோம். நாங்கள் விஷயங்களைச் செய்துள்ளோம். எங்கள் பூஜையின் பிரமாண்டம், எங்கள் நிர்வாக அறங்காவலர் எங்களின் தொலைநோக்கு மற்றும் பணி பற்றி விளக்குவார். SMCA, தனது அறக்கட்டளையின் மூலமாக நிறைய நற்பணிக...
SMCA | சென்னையில் பிரம்மாண்ட துர்கா பூஜை கொண்டாட்டம்

SMCA | சென்னையில் பிரம்மாண்ட துர்கா பூஜை கொண்டாட்டம்

சமூகம்
மேற்கு வங்காளத்தைப் பூர்வீகமாகக் கொண்டு சென்னையில் வசிப்பவர்கள் மிகப் பிரம்மாண்டமான முறையில் துர்கா பூஜையைக் கொண்டாடுகின்றனர். The Secret of religion lies not in theories but in practice; To be good and do good – that is the whole of religion. - Swami Vivekananda "சுவாமி விவேகானந்தரின் மேற்கோள்களை உண்மையாகவே உள்வாங்கி, இடையிடையே நடக்கும் பண்டிகைகளைத் தவிர, பொது அறக்கட்டளையாகப் பதிவுசெய்யப்பட்ட SMCA (South Madras Cultural Association) சாரிட்டபிள் டிரஸ்டுடன் ஆண்டு முழுவதும் சமூக சேவையில் ஈடுபட்டு வருகிறோம். நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக அன்னதானம், கல்வி, சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் ஆகிய துறைகளில் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு ஆதரவைச் சிறப்பாக வழங்கி வழங்குகிறோம். சமூகத்தின் விளிம்புநிலை மற்றும் தேவைப்படும் மக்களின் சமூக பொருளாதார வாழ்க்கை நிலைமைகளை மேம்படுத்துவதில் SMCA எப்ப...
தலைவா – NCRI | 5 ஆம் ஆண்டு கருத்தரங்கு | சென்னை 2024

தலைவா – NCRI | 5 ஆம் ஆண்டு கருத்தரங்கு | சென்னை 2024

மருத்துவம்
நியூரோக்ரிட்டிகல் கேர் சொசைட்டி ஆஃப் இந்தியாவின் (NCRI) 5 ஆம் ஆண்டு கருத்தரங்கு சென்னையில் ஆகஸ்ட் 30 முதல் செப்டம்பர் 1 வரை நடைபெறுகிறது. இந்தக் கலந்தாய்வினை, NCRI உடன் இணைந்து, சென்னை ரேடியல் சாலையில் உள்ள காவேரி மருத்துவமனை இணைந்து நடத்துகிறது. நரம்பியல் சம்பந்தமான நோய்களுக்கு, சான்றுகள் அடிப்படையிலான சிகிச்சையினை நடைமுறைப்படுத்துவதே NCRI-இன் பிரதான குறிக்கோள் ஆகும். நரம்பியல் சிகிச்சைத் துறையை முன்னேற்றுவதற்கும், நோயாளிகளின் ஆரோக்கியத்தை சிறப்பான முறையில் மேம்படுத்துவதற்கும், அவர்களுக்குப் பல்முனை பராமரிப்பு வழங்குவதற்கும், NCRI தொடர்ந்து ஊக்கத்துடன் செயற்பட்டு வருகிறது. நரம்பியல் துறையின் தற்போதைய அறிவியல் முன்னெடுப்புகளை, பிற மருத்துவப் பிரிவு நிபுணர்களுடன் கலந்தாலோசித்து, சிறந்த மருத்துவ நடைமுறையை வழங்கும் அரும்பணியைச் செய்துவருகிறது NCRI. கல்வி, ஆராய்ச்சி, நோயாளிகளின் பாதுகாப்பு, அ...
ஏலியன்: ராம்யுலஸ் விமர்சனம்

ஏலியன்: ராம்யுலஸ் விமர்சனம்

அயல் சினிமா, திரை விமர்சனம்
பூமியிலிருந்து 1600 ஒளியாண்டுகள் தள்ளியுள்ள, பகலே இல்லாத ஒரு கிரகத்தில் சிக்கியுள்ளார் ரெயின். அவ்விடத்தை விட்டுத் தப்பிக்க, ரெயினின் முன்னாள் காதலன் டைலர் ஒரு யோசனையை முன்மொழிகிறான். அரைமனதுடன் சம்மதிக்கும் ரெயினும், அவனது இயந்திரத் தம்பி ஆன்டியும், டைலர் குழுவும், ஈவாகா எனுமிடத்திற்குச் செல்லத் தேவைப்படும் குளிர்சீர்நிலைக்கருவிகளைச் (Cryostatic Chamber) சேகரிக்க, ஒரு சிதிலமடைந்த விண்கப்பலுக்குள் செல்கின்றனர். விண்கப்பல் இரண்டு பகுதியாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒன்றிற்கு ரோமுலஸ் என்றும்; மற்றதிற்கு ரெமுஸ் என்றும் பெயர். ரோம் என்ற நகரம் உருவாவதற்குக் காரணமானவர் ரோமுலஸ் என்பதால்தான், அவரது பெயரையே அந்நகரத்துக்குச் சூட்டியுள்ளனர். Romulus-இன் ஹாலிவுட் உச்சரிப்பு, ராம்யுலஸாக உள்ளதால், ராம்யுலஸ் என்றே தமிழ்த்தலைப்பு வருகிறது. கருவிகளைச் சேகரிக்கும் முயற்சியில், முகமணைப்பான்கள் (Facehuggers) என...
க்ரேவன் தி ஹண்டர் – ட்ரெய்லர்

க்ரேவன் தி ஹண்டர் – ட்ரெய்லர்

Trailer, அயல் சினிமா, காணொளிகள்
க்ரேவன் தி ஹண்டர் என்பது மார்வெலின் மிகச்சிறந்த வில்லன்களில் ஒருவர் எப்படி, ஏன் உருவானார் என்பது பற்றிய கதை. அற்புதமான ஆக்‌ஷன், தீவிரமான சண்டைக் காட்சிகள் மற்றும் மற்றொரு ஸ்பைடர் மேன் வில்லனைப் பற்றிய ஸ்னீக் பீக் உடன், மார்வெலின் மிகப் பயங்கரமான வேட்டைக்காரனின் தனிப் படத்தின் ட்ரெய்லர் இப்போது வெளியாகியுள்ளது.  ஆங்கில டிரெய்லர்: https://youtu.be/_y6O-tcfhBI தெலுங்கு டிரெய்லர்: https://youtu.be/krYauKDFXCE டிசம்பர் 13 அன்று தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, இந்தி ஆகிய மொழியில் ‘க்ரேவன் தி ஹண்டர்’ படத்தைத் திரையரங்குகளில் சோனி பிக்சர்ஸ் என்டர்டெயின்மென்ட் இந்தியா வெளியிடுகிறது....
ஏலியன்: ரோமுலஸ் | உலகளவில் $ 110 மில்லியனைத் தாண்டியது வசூல்

ஏலியன்: ரோமுலஸ் | உலகளவில் $ 110 மில்லியனைத் தாண்டியது வசூல்

அயல் சினிமா, திரைத் துளி
ரிட்லி ஸ்காட்டின் உருவாக்கமான ஏலியன் பல தசாப்தங்களாகப் பயமுறுத்திப் பார்வையாளர்களைப் கவர்ந்திழுத்து வருகிறது. ஏலியன்: ரோமுலஸ், 20th செஞ்சுரி ஸ்டுடியோவின் சமீபத்திய படமாகும். இந்த அறிவியல்புனைவு திகில் தொடர் மீண்டுமொரு முறை தனது சக்தியை நிரூபித்துள்ளது. இப்படம் வெளியாவ வாரத்தின் இறுதியில் ஒரு குறிப்பிடத்தக்க பாக்ஸ் ஆபிஸ் சாதனையை நிகழ்த்தியுள்ளது. அதன் தொடக்க வார இறுதியில், ஏலியன்: ரோமுலஸ் உள்நாட்டில் $41.5 மில்லியன் வசூல் செய்து, ஏலியன் படத்தொடரில் இரண்டாவது அதிக வசூலான படமெனும் அந்தஸ்தை அடைந்துள்ளது. சர்வதேச டிக்கெட் விற்பனையில் கூடுதலாக $66.5 மில்லியனால் இந்த ஈர்க்கக்கூடிய எண்ணிக்கை மேலும் அதிகரித்து, இது உலகளாவிய வசூலை $108 மில்லியனாக உயர்த்தியுள்ளது. படத்தின் சிக்கலான கதைக்களம், பிரமிக்க வைக்கும் காட்சிகள் மற்றும் இதயத்தை அதிரச் செய்யும் காட்சிகள் பார்வையாளர்களை ஆரம்பம் முதல் இறுதி வரை...
முஃபாஸா: தி லயன் கிங் | ஷாருக் – ஆர்யன் – ஆப்ராம் கான்ஸ்

முஃபாஸா: தி லயன் கிங் | ஷாருக் – ஆர்யன் – ஆப்ராம் கான்ஸ்

அயல் சினிமா, சினிமா, திரைச் செய்தி
ஷாருக் கானும், அவரது மகன்கள் ஆர்யன் கானும், ஆப்ராம் கானும் முதன்முதலில் ஒன்றாக இணைந்து, டிஸ்னியின் மிகவும் எதிர்பார்க்கப்படும் 'முஃபாஸா: தி லயன் கிங்' திரைப்படத்தின் ஹிந்திப் பதிப்பிற்குக் குரல் கொடுத்திருக்கிறார்கள். இயக்குநர் பேரி ஜென்கின்ஸின் கைவண்ணத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படம், இந்தியாவில் டிசம்பர் 20, 2024 அன்று, தமிழ், தெலுங்கு, ஹிந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது. கெளரவ பூமியின் கடைசி ராஜாவான முஃபாஸாவின் பாரம்பரியத்தை ஆராய்கிறது இப்படம். இப்படத்தின் கதாபாத்திரங்களை உயிர்ப்பிக்கும் விதத்தில், ஷாருக்கானும், அவரது மகன்கள் ஆர்யன் கானும், அப்ராம் கானும் தங்களது குரல் வளத்தை வாஞ்சையோடு வழங்கியுள்ளார்கள். தி லயன் கிங் எனும் லைவ்-ஆக்ஷன் படம், 2019 இல் வெளிவந்து பிளாக்பஸ்டர் வெற்றியைத் தொடர்ந்து, ஷாருக்கான் முஃபாஸாவாக மீண்டும் பவனி வருகிறார். காட்டு ராஜாவைக் காணப் பார்வைய...
முஃபாஸா – தி லயன் கிங் | ட்ரெய்லர்

முஃபாஸா – தி லயன் கிங் | ட்ரெய்லர்

Trailer, அயல் சினிமா, காணொளிகள்
சிம்பாவிற்கும், நளாவிற்கும் பிறக்கும் சிங்கக்குட்டியான கியாராவிற்கு, கெளரவ பூமியின் அன்புக்குரிய மன்னரான முஃபாஸாவின் கதையை டிமோனும் பும்பாவும் விவரிக்க, திரைக்கதை ஃப்ளாஷ்பேக்கினில் விரிகிறது. அநாதையான முஃபாஸா தொலைந்து தனியாகத் திரியும்போது, டகா எனும் ராஜவம்சத்தைச் சேர்ந்த டகாவைச் சந்திக்க நேரிடுகிறது. அவர்கள் இணைந்து மேற்கொள்ளும் பயணத்தில், பயங்கரமான எதிரியை நேரிட்டு, தங்கள் தலைவிதியை மனமொத்துத் தீர்மானிக்கின்றனர். இப்படம், இந்த ஆண்டு டிசம்பர் 20 ஆம் தேதி அன்று, தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் இந்தியாவில் வெளியாகிறது....
காவேரி மருத்துவமனை | நிமிர்ந்த முதுகுத்தண்டு – ஓடியாடி விளையாடிய சிறுமி

காவேரி மருத்துவமனை | நிமிர்ந்த முதுகுத்தண்டு – ஓடியாடி விளையாடிய சிறுமி

இது புதிது, மருத்துவம்
பங்களாதேஷைச் சேர்ந்த இரண்டு வயது பெண் குழந்தைக்கு சிக்கலான முதுகுத்தண்டு வளைவு திருத்தல் அறுவை சிகிச்சை ரேடியல் சாலையிலுள்ள காவேரி மருத்துவமனையின் நரம்பியல் மற்றும் முதுகுத்தண்டு மருத்துவ நிபுணர்களால் வெற்றிகரமாகச் செய்யப்பட்டது. பிறப்பிலேயே முதுகுத்தண்டு வளைந்த அக்குழந்தைக்கு, நாட்கள் செல்லச் செல்ல முதுகுத்தண்டின் சிதைவு அதிகரித்துக் கொண்டே போனது. குறிப்பாக, சிறிது நேரம் விளையாடிய பிறகு குழந்தையின் கால்களில் பலவீனம் ஏற்படத் தொடங்கியது. குழந்தையின் ஆறாவது மாதத்தில், முதுகுத்தண்டில் காசநோய் பாதித்தது. அக்குழந்தையை வங்காளதேசத்தில் இருந்து, சென்னை ரேடியல் சாலையிலுள்ள காவேரி மருத்துவமனைக்கு சிகிச்சை பெற அழைத்து வந்தனர். குழந்தையைப் பரிசோதித்த பின், காவேரி இன்ஸ்டிடியூட் ஆப் ப்ரைன் அண்ட் ஸ்பைன் (KIBS)-இன் இயக்குநரும், மூத்த நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணருமான மருத்துவர் கிருஷ் ஸ்ரீதரும், அவரத...
காவேரி மருத்துவமனை | ENT சிகிச்சைக்கான தனிப் பிரிவு தொடக்கம்

காவேரி மருத்துவமனை | ENT சிகிச்சைக்கான தனிப் பிரிவு தொடக்கம்

இது புதிது, மருத்துவம்
சென்னை ரேடியல் சாலையிலுள்ள காவேரி மருத்துவமனையில், சர்வதேச தரத்திற்கு இணையான விரிவான நோயறிதல் மற்றும் சிகிச்சைகளுக்கான மேம்பட்ட வசதிகளுடன் கூடிய அதிநவீன காது மூக்கு தொண்டை பிரிவு, மெட்ராஸ் இஎன்டி ரிசர்ச் பவுண்டேஷன் நிர்வாக இயக்குநர் பத்மஸ்ரீ முனைவர் மருத்துவர் மோகன் காமேஸ்வரன் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. தூங்கும் பொழுது ஏற்படும் குறட்டை மற்றும் பிறப்பிலேயே ஏற்படும் காது கேளாமை போன்ற பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிப்பது இந்த ENT பிரிவின் சிறப்பு அம்சமாகும். நுண் காது அறுவை சிகிச்சைகள், சைனஸ் அறுவை சிகிச்சைகள் மற்றும் தலை மற்றும் கழுத்து அறுவை சிகிச்சைகள் ஆகியவற்றைச் செய்வதற்கான அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய தனிப்பட்ட உள்நோக்குமானி அறைகள், ஆடியோலஜி ஆய்வகம், தலைச்சுற்றல் ஆய்வகம் மற்றும் அறுவை சிகிச்சை அறைகள் ஆகியவற்றையும் கொண்டுள்ளது. ரேடியல் சாலையிலுள்ள காவேரி மருத்துவமனையின் காது மூக...
ஜூலை 20 – சென்னையில் சித் ஶ்ரீராம் இசைக்கச்சேரி

ஜூலை 20 – சென்னையில் சித் ஶ்ரீராம் இசைக்கச்சேரி

சினிமா
ஜூன் 22 ஆம் தேதி நடைபெற இருந்த பிரபல பின்னணிப் பாடகர் சித் ஸ்ரீராம் அவர்களின் இசை நிகழ்ச்சி வானிலை காரணமாக ஜூலை மாதம் 20 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. வானிலை மாற்றத்தால் கடந்த சில தினங்களாக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மாலை நேரங்களில் மழை பெய்து வருவதால் இந்த மாற்றம் தவிர்க்க முடியாததாகியுள்ளது. தற்போது பெற்றுள்ள டிக்கெட் மறு திட்டமிடப்பட்ட தேதிக்குச் செல்லுபடி ஆகும். இசைக்கச்சேரிக்கு வரும் பார்வையாளர்களுக்கு எவ்விதப் பாதிப்பும் ஏற்படாத வண்ணம், உள்கட்ட அமைப்பு வசதிகளை ஏற்படுத்த முடியாதது போன்ற காரணங்களாலும் இசைக் கச்சேரி நடைபெறும் நாள் மாற்றப்பட்டுள்ளது. ரசிகர்கள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளித்து இந்தக் கடினமான முடிவை எடுத்துள்ளதாக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் அறிவித்துள்ளனர். ரசிகர்களிடையே குழப்பத்தையும், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தக்கூடும் என்பதை உணர்...
வெனம்: தி லாஸ்ட் டான்ஸ் | ட்ரெய்லர்

வெனம்: தி லாஸ்ட் டான்ஸ் | ட்ரெய்லர்

Trailer, அயல் சினிமா, காணொளிகள்
மூன்று பாகங்கள் கொண்ட 'வெனம்' படத்தொடரின் கடைசிப் படமான, "வெனம்: தி ளாஸ்ட் டான்ஸ்" அக்டோபர் 25 அன்று வெளியாகிறது. மரணம் வரை பிரிக்க முடியாமல் ஒன்று சேர்ந்துள்ள எடி ப்ரோக்கையும் வெனத்தையும், பூமியைச் சேர்ந்தவர்களும், வேற்றுலக சிம்பயாட்களும் வேட்டையாடுகிறார்கள். இந்தியாவில், தமிழ், ஆங்கிலம், இந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் சோனி பிக்சர்ஸ் என்டர்டெயின்மென்ட் இந்தியா நிறுவனம் வெளியிடுகிறது.  ஆங்கில ட்ரெய்லர்: https://youtu.be/MbIoY50ZOxg...
உலக MS தினம் 2024 | இளைஞர்களை ஊனமாக்கும் நோய்

உலக MS தினம் 2024 | இளைஞர்களை ஊனமாக்கும் நோய்

இது புதிது, மருத்துவம்
MSSI என்பது ‘மல்டிபிள் ஸ்க்ளிராசிஸ் சொசைட்டி ஆஃப் இந்தியா (Multiple Sclerosis Society of India)’ -வைக் குறிக்கும். உடலின் பல்வேறு இடங்களில் திசுக்கள் கடினமாகி, தண்டுவட மரப்பு நோய் (MS) ஏற்படும். மூளை மற்றும் முதுகு தண்டுவடத்து திசுக்களை மூடியுள்ள காப்புப் பொருளான மையீலின் (Myelin) கடினமாவதால் ஏற்படும் வடுக்கள், மூளை நரம்பணுக்கள் மற்றும் முதுகுத்தண்டுக்கிடையே உள்ள தொடர்பினைத் துண்டித்து, நோயாளியை ஊனமாக்குகிறது. இந்த நோய் ஏற்படுவதற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. ஆதலால், இதற்கான மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை. இது, 14 முதல் 40 வயதுக்குள் உள்ளோரைத் தாக்குவதால், ‘இளைஞர்களை ஊனமாக்கும் நோய் (Crippler of the Young Adult)’ என்றும் அழைக்கப்படுகிறது. MS ஒரு நரம்பியல் சிதைவு ஒழுங்கின்மைக் கோளாறாகும். இது, மூளை, முள்ளந்தண்டு வடம் மற்றும் பார்வை நரம்புகளைப் பாதிக்கிறது. மேலும் பல நரம்பியல் கோள...
The Garfield Movie விமர்சனம்

The Garfield Movie விமர்சனம்

அயல் சினிமா, திரை விமர்சனம்
திங்கட்கிழமையை வெறுக்கும், உணவை மிக மிக விரும்பும், எவரையும் மதிக்காத புசுபுசு புஷ்டி பூனையாகிய கார்ஃபீல்ட், 15 வருடங்களுக்குப் பின் வெள்ளித்திரையைக் காண்கிறது. ஜிம் டேவிஸ் என்பவரால் 1976 இல், காமிக் துண்டாக அறிமுகமான ஆரஞ்சு நிற கார்ஃபீல்ட் பூனை, உலகளவில் பல செய்தித்தாள்களில் பரவலாக இடம்பெற்று, கின்னஸ் சாதனை பெற்றுள்ளது. கார்ஃபீல்ட் உமிழும் புத்திசாலித்தனமான பகடிகள் தான் அதன் சிறப்பே! இப்படத்தில் அதை அழகாகக் கொண்டு வந்துள்ளனர். சாலையில் தனித்து விடப்பட்டு பரிதாபமாக இருக்கும் பூனையை ஜான் தத்தெடுக்கிறார். ‘ஜான் என்னைத் தத்தெடுக்கலை. நான் தான் ஜானைத் தத்தெடுத்தேன்’ என ஆரம்பிக்கும் கார்ஃபீல்டின் அட்டகாசம் முதற்பாதி முழுவதும் அற்புதமாக விரவியுள்ளது. விலையுயர்ந்த சொகுசு சோஃபாவில் அமர்ந்து, எப்பொழுதும் எதையாவது சாப்பிட்டுக் கொண்டு, CatFlix பார்க்கும் பரம சுகவாசியாக ராஜவாழ்க்கை வாழ்கிறது கார்ஃபீ...