32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

பெண்ணும் அவளது உணர்வுகளும் – தன்ஷிகா

Dinesh R சேலம் Published: 21/05/2015 1 நிமிட வாசிப்பு சினிமா
எழுத்து அளவு:

Thiranthidu Seese Tanshika

“உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு அமைத்திருந்த கதையமைப்பு எனக்கு மிகவும் பிடித்திருந்தது. நான் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான ‘சார்மி’ என்ற பெண் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளேன். இந்தக் கதையைக் கேட்ட மாத்திரத்தில் எனக்கு இந்தக் கதாப்பாத்திரம் மிகவும் பிடித்திருந்தது. எனினும் இந்தக் கதாப்பாத்திரத்தில் என்னால் சோபிக்க முடியுமா என்ற ஐயம் என்னுள் இருந்து வந்தது உண்மைதான். ஆனால் படத்தைப் பார்த்த அனைவரும் என்னைப் பாராட்டுவது எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியைத் தருகிறது.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

என்னுடைய நடிப்பில் சிறிது அதிகமாய் உணர்வுகளைக் காட்டினாலும் படத்தின் முழு அளவியலே மாறிவிடக் கூடும். அவை எல்லாவற்றையும் சரி வர அமைத்து இந்தக் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளேன். பெண்ணுக்கும் அவளது உணர்வுகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் ‘திறந்திடு சீசே’ படத்தில் நடித்தது எனக்கு மிகவும் பெருமையாகவுள்ளது.

குடி பழக்கம், பாலியல் வன்கொடுமை என சமூக அவலங்களுக்கு எதிராக கருத்தமைப்பு கொண்ட ஒரு திரைப்படம் ‘திறந்திடு சீசே’ இது குடும்பங்களுக்கான படம். சமுதாய நோக்குடன் திரைப்படத்தைத் தயாரிக்கும் இந்தக் கூட்டணியுடன் இணைந்து ‘திறந்திடு சீசே’ படத்தில் நடித்தது எனக்கு மிகவும் பெருமையாகவுள்ளது” எனக் கூறினார் நடிகை தன்ஷிகா.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.