32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

82 வயது அம்மணி

Dinesh R சேலம் Published: 08/06/2015 1 நிமிட வாசிப்பு Updated: 14/10/2016 சினிமா
எழுத்து அளவு:

அம்மணி

இயக்குநர் லக்ஷ்மி ராமகிருஷ்ணன் இயக்கும் மூன்றாவது படமான அம்மணியை, ‘டேக் எண்டர்டெயின்மென்ட் (Tag Entertainment)’ நிறுவனர் திரு. வெண் கோவிந்தா தயாரிக்கும் இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் முழு வேகத்தில் நிறைவுற்று வருகிறது.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

படத்தைப் பற்றிப் பேசிய தயாரிப்பாளர், “நிஜ வாழ்க்கை கதாப்பாத்திரத்தை அடிப்படையாய்க் கொண்டது இக்கதை. ஒவ்வொரு மனித வாழ்க்கையும் மனிததத்தின் சம நிலையை பேணுவதற்காகவே என்ற அற்புதமான எண்ணத்தின்பால் அமைந்ததே ‘அம்மணி’. இத்தகைய நல்ல கதையை எனக்கு கொடுத்த எனது இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணன் அவர்களுக்கு நன்றி. 

‘விண்ணைதாண்டி வருவாயா’ படத்தில் நடித்த சுப்புலட்சுமி பாட்டி இப்படத்தில் முதன்மைக் கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். பகல் இரவென பாராமல் பரபரவென ஷூட்டிங்கில் உற்சாகத்துடன் இருப்பார்.

பாட்டி என்றழைத்தால் பிடிக்காத 82 வயதான இந்நடிகை அவரை ‘‘அக்கா’ன்னு கூப்பிடுங்க’ என்பார். அவரது உற்சாகம் எங்களைக் குதூகலத்தில் ஆழ்த்தியது. எதார்த்த சினிமாக்களுக்கு மக்களிடம் வரவேற்பு அதிகரித்துள்ளது. அம்மணியும் அனைவரும் கொண்டாடும் ஒரு திரைப்படமாய் அமையும்” என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார் தயாரிப்பாளர் திரு. வெண் கோவிந்தா.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.