மற்றவைதமிழ்தாத்தா உ.வே.சா.வின் 159வது பிறந்தநாள்
தமிழ்தாத்தா உ.வே.சாமிநாதையர் அவர்களின் பிறந்தநாள் இன்று. இந்த நன்னாளில் அவரின் உழைப்பை நன்றியோடு நினைவு கூர்வோம்.
செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

தமிழ்தாத்தா உ.வே.சாமிநாதையர் அவர்களின் பிறந்தநாள் இன்று. இந்த நன்னாளில் அவரின் உழைப்பை நன்றியோடு நினைவு கூர்வோம்.

[Show slideshow] 1 2 ►

[Show slideshow] 1 2 ►

பாலுமகேந்திராவின் குரலுடன் குக்கூ இசை வெளியீட்டு விழா தொடங்கியது. அந்த மகா கலைஞருக்கான மரியாதையை வந்திருந்த அனைவரும் எழுந்து நின்று செலுத்தினர். “முருகா.. உன் கனவுகள் நனவாக என்றுமிருப்பேன் துணையாக” என விகடன் ஆசிரியர் ரா.கண்ணன் சிம்பிளாகத் தொடங்கி வைத்தார். குக்கூ பட இயக்குநர் ராஜூமுருகனின் முதல் குரு இவர். கண்ணன் கொடுத்த தைரியமும் நம்பிக்கையும்தான், ‘தன்னால் முடியுமா?’ என சந்தேகித்த ராஜூமுருகனை ‘வட்டியும் முதலும்’ எழுதவைத்தது. ராஜூமுருகனின் இரண்டாவது குரு, சினிமா தொழிலைக் கற்றுக் கொடுத்த […]

சில்லறை குற்றங்களில் ஈடுபட்டு வரும் நால்வர், சிறுவயதில் ஏற்பட்ட ஒரு பொதுவான துயரத்தின் அடிப்படையில் சேர நேர்கிறது. அடிப்படை சந்தோஷங்கள் எதையும் இழக்க மனமில்லாமல், யாருக்கும் அடிபணியாமல் வாழ நேரிடும் அவர்களது வாழ்க்கை பயணமே ’ஆந்திரா மெஸ்’. “அனைவரும் அதென்ன ஆந்திரா மெஸ்னு தலைப்பு என்றே கேட்கிறாங்க. தலைப்பு ரொம்ப கவர்ச்சியாக இருக்கு. அப்புறம் சாப்பாடு. அனைவருக்கும் பிடிச்ச விஷயம். இதுல ஒவ்வொரு பாத்திரமும் ஒவ்வொரு சுவையைக் குறிக்கிறது. காரம், புளிப்பு, ஸ்வீட் என கதாபாத்திரங்களின் metaphor […]

இந்தப் புகைப்படத்தில் கிராமஃபோனுக்குப் பக்கத்தில் நிற்கிற முருகேசண்ணனை நீங்கள் பார்க்க வேண்டும். குழந்தை மாதிரி திறக்காத கண்களும் நம்மைத் திறந்து வைக்கிற சிரிப்புமாக இருக்கிற முருகேசண்ணன். மூர்மார்க்கெட்டில் கடை நடத்துகிறார். இந்தக் கதையை எனக்கு பரிசளித்தவர்களில் அவரும் ஒருவர். படத்தில் ஒரு மாண்டேஜில் தோன்றுவதற்காக அவரது மனைவியையும் அழைத்தேன். காட்சி எடுப்பதற்கு முன்பாக மனைவியின் கைகளைத் தடவிப் பார்த்தவர், “ஏய்.. வளையல் போடல..” என்றபடி வளையலை வாங்கி மாட்டிவிட்டார். அது நம்மால் யோசிக்கவே முடியாத அன்பின் எட்டாவது […]

ரஜினிகாந்த் நடித்த மாபெரும் வெற்றிப் படமான ‘சந்திரமுகி’ படத்திற்குப் பிறகு இயக்குநர் பி.வாசு கடந்த இரண்டரை வருடங்களாக ஒரு கதையை எழுதி வருகிறார். உணர்வுபூர்வமான, சென்டிமென்ட்டான, நகைச்சுவை கலந்த படங்களைக் கொடுப்பதில் வல்லவரான இயக்குநர் பி.வாசு இந்தக் கதையை பிரமிக்க வைக்கும் விஷுவல் எஃபெக்ட்ஸ் காட்சிகளுடன் அனிமேட்ரானிக்ஸ் படமாக உருவாக்கவிருக்கிறார். ‘ஐஸ்வர்யாவும் ஆயிரம் காக்காவும்‘ என இப்படத்திற்கு தற்போது பெயரிட்டிருக்கிறார்கள். இந்தியத் திரையுலகம் கண்டிருக்காத, ஒரு தனித்துவம் வாய்ந்த கதையாக உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தில் ஐஸ்வர்யா ராய் பச்சன் இதுவரை […]

சூப்பர்ஹிட் ஹிந்திப் படமான ‘கஹானி’ தமிழில் ‘நீ எங்கே என் என்பே’ என்ற பெயரிலும், தெலுங்கில் ‘அனாமிகா’ என்ற பெயரிலும் இயக்கி வருகிறார் இயக்குநர் சேகர் கம்முலா. படத்தினை அப்படியே தழுவாமல் தனது பாணியில் திரைக்கதையை மாற்றி அமைத்திருக்கிறார். உதாரணத்திற்கு வித்யா பாலன் ஹிந்திப் படத்தில் கர்ப்பிணியாக நடித்திருப்பார். சேகர் கம்முலாவின் படத்தில் நயன்தாரா படத்தில் கர்ப்பவதி இல்லை. படத்தைப் பற்றி, ‘கதாநாயகியை மையப்படுத்தி எடுக்கப்படும் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைப்பது வாழ்நாளில் ஒருமுறை நிகழும் அதிசயம். […]

பிரபல ஒளிப்பதிவாளர் ரவி கே.சந்திரன் இயக்குநராக களமிறங்கும் திரைப்படம்தான் “யான்“. RS infotainment சார்பில் திரு.எல்ரெட் குமார் மற்றும் ஜெயராம் தயாரிப்பில் உருவாகி வரும் ஜீவா, துளசி, நாசர், ஜெயபிரகாஷ், தம்பி ராமையா, ‘சூது கவ்வும் ‘ கருணா ஆகியோர் நடிக்கின்றனர். 60% படப்பிடிப்பு இங்கு முடிவடைந்த நிலையில் தற்போது அடுத்த கட்ட படப்பிடிப்பு மொரோக்கோ நாட்டில் படமாக்கப்பட்டுள்ளது. இந்த வருடம் அங்கே வரலாறு காணாத பனி பெய்த போதும் அதைப் பொருட்படுத்தாமல் மிகுந்த சிரமத்துடன் உக்கிரமான […]

இயக்குநர் பாரதிராஜா, வெற்றிமாறன், விடுதலை ஆகியோர் எடுத்த முயற்சியினாலும், பாலுமகேந்திராவின் மகன் கௌரிசங்கரின் பெருந்தன்மையாலும்தான் தன் கணவரின் முகத்தை கடைசியாகப் பார்க்க முடிந்ததாக நடிகை மௌனிகா தெரிவித்துள்ளார். 1985இல், ‘உன் கண்ணில் நீர்வழிந்தால்’ படத்தில் ரஜினிக்கு தங்கையாக நடித்த போதுதான் அவரை முதலில் சந்தித்தேன். அன்று தொடங்கிய உறவு கடந்த 28 ஆண்டுகளில் அன்பும் காதலும் புரிதலும் நிறைந்த உறவாக இருந்தது. கடந்த 2000இல் நாங்கள் முறைப்படி திருமணம் செய்து கொண்டாலும் அவருக்கு இரண்டாவது அட்டாக் வந்தபோதுதான் […]

ஹிந்தியில் சூப்பர் ஹிட்டான ‘பேண்ட் பஜா பராட்’ படத்தை தமிழ் ரசிகர்களின் ரசனைக்கேற்ப மாற்றங்கள் செய்து தமிழில் ‘ஆஹா கல்யாணம்’ என்ற பெயரில் யஷ்ராஜ் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இயக்குநர் விஷ்ணுவர்தனிடம் உதவியாளராக பணியாற்றிய கோகுல் கிருஷ்ணா இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆகிறார். அவர் வெளியிட்டிருக்கும் காதலர் தின வாழ்த்து செய்தியில் தனது முதல் படத்தின் மேல் உள்ள காதல் திருமண பந்தம் போல நீடித்திருக்கும் எனத் தெரிவித்துள்ளார். “படத்தின் முதல் பிரதியைப் பார்த்து […]

கதிர்வேலனின் அப்பாக்கு காதலென்றால் பிடிக்காது. ஆனால் ஆஞ்சனேய பக்தனான கதிர்வேலனுக்கு காதல் வந்துவிடுகிறது. பின் என்னானது என்பதுதான் கதை. ஓகே.ஓகே.வில் நடித்தவரா என அதிசயிக்க வைக்கிறார் உதயநிதி ஸ்டாலின். தலையை மட்டும் வேண்டிய மட்டும் ஆட்டிவந்தவரின் முகத்தில் சில பாவனைகளும் எட்டிப் பார்க்கின்றன. மீண்டும் அவருக்கு தோதான கதாபாத்திரத்தினைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். நடனமும் முயற்சி செய்திருக்கார். கேமிரா பற்றிய பிரக்ஞை கூடியுள்ளதால், சிரமமில்லாமல் தன்னை அழகாக திரையில் எக்ஸ்போஸ் செய்கிறார். சந்தானத்தின் துணையில்லாமலேயேகூட அடுத்த படத்தில் துணிந்து தனியாகவே […]

“எனது படைப்புகள் மூலம் மரணத்தின் பின்பும் நான் தொடர்ந்து வாழ்ந்து கொண்டிருப்பேன். மரணிக்கப் போவது என் உடல்தான். நானல்ல!” என நிறைவாகக்கூற ஒரு மகத்தான கலைஞனால் மட்டும்தான் முடியும். தமிழகத்தில், சினிமாவை கலையாகப் பார்த்த சொற்பமானவர்களில் முதன்மையானவர் பாலு மகேந்திரா. அவருள் சினிமா விதையை முதன்முதலில் விதைத்தது ஓர் அமெரிக்கர். ஆறாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை வகுப்பாசிரியராக இருந்த ஃபாதர் லோரியோ, ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ப்ரொஜெக்டரில் சினிமா காண்பிப்பாராம். கண்டியில் இங்கிலாந்து இயக்குநர் மழையை […]

நம் அனைவருக்கும் இன்னொரு முகம் இருக்கும். சூழ்நிலைகளுக்குத் தகுந்தாற்போல் நல்ல முகமோ கெட்ட முகமோ வெளிப்படும். அப்படித் தேவைக்கேற்ப முகத்தைக் காட்டுபவன்தான் “மறுமுகம்” படத்தின் நாயகன். இப்பொழுது ட்ரெண்டில் இருக்கும் ‘சைக்கலாஜிக்கல் த்ரில்லர்’ வகையைச் சார்ந்ததுதான் இப்படமும். ‘ஊமை விழிகள்’ படத்திற்குப் பிறகு ஃப்லிம் ஸ்டூடண்ட்ஸ் மாணவர்கள் இணைந்து உருவாக்கும் படம். படத்தின் இயக்குநரான கமல் சுப்ரமணியம் திரைப்படக் கல்லூரி மாணவர். படத்தில் முக்கியப் பாத்திரத்தில் நடிக்கும் டேனியல் பாலாஜி அவருக்கு கல்லூரியில் சீனியர். இந்தப் படத்தின் […]

கோலங்கள் புகழ் ஆதி என்கிற ஆதித்யா கதாபாத்திரத்தில் நடித்த அஜய்தான் ‘ஆதியும் அந்தமும்’ படத்தின் நாயகன். சின்னத்திரையில் இருந்து வெள்ளித் திரைக்கு முதன்முறை வந்திருப்பதாக மேடையில் அமர்ந்திருந்த சில பிரமுகர்கள் சொன்னார்கள். ஆனால் பிரியதர்ஷன் இயக்கத்தில் 1993 இல் வெளிவந்த “கர்டிஷ் (Gardish)” எனும் ஹிந்திப் படத்தில், ஜாக்கி ஷெரோஃப் தம்பியாக நடித்திருப்பார். மும்பைவாழ் பஞ்சாபிவாலாவான அவரது பெயர் அப்பொழுது கெளரவ் கபூர். தமிழில் கூட முரளி, ரோஜா நடித்த “ஊட்டி” படத்தில் வில்லனாக 1999 இலேயே […]
தேடலை தொடங்க குறைந்தபட்சம் 3 எழுத்துக்களை தட்டச்சு செய்யவும்.
உங்கள் ஊர், கிராமம் அல்லது பகுதியில் நடந்த சம்பவங்கள், விபத்துக்கள், திருவிழாக்கள் அல்லது பொதுப் பிரச்சனைகளை எமது செய்திப் பிரிவுக்கு உடனே பகிருங்கள்.
முக்கிய பிரேக்கிங் செய்திகளை உடனுக்குடன் உங்கள் திரையில் பெற அனுமதி வழங்கவும்.
