32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
Dinesh R
செய்தியாளர் விவரம் சேலம்

Dinesh R

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

4024 செய்திகள் எழுதப்பட்டுள்ளன வலைத்தளம்
செய்திகள் வரிசை (பக்கம் 251)
‘மாஸ்’ பூலோகம் – ஜெயம் ரவி சினிமா

‘மாஸ்’ பூலோகம் – ஜெயம் ரவி

தமிழ் நாட்டின் மிக முக்கிய கலாச்சார விழாவாக கொண்டாடப்படும் மசானக் கொள்ளை என்று அழைக்கப்படும் மயானக் கொள்ளை திருவிழா இன்று தமிழகமெங்கும் விமரிசையாகக் கொண்டாடப் படுகிறது. ஆஸ்கார் ரவிச்சந்திரன் தயாரிப்பில், கல்யாண கிருஷ்ணன் இயக்கத்தில், ஸ்ரீகாந்த் தேவாவின் இசையமைப்பில், ஜெயம் ரவி ஜோடியாக த்ரிஷா நடிக்க, வட சென்னையின் குத்து சண்டை கலாச்சாரத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்படும் படம் ‘பூலோகம் ‘ படத்தின் சில முக்கிய காட்சிகள் மசானக் கொள்ளையை முன்னிட்டு படமாக்கப்பட்டது. இந்தக் கலாச்சாரத்தை முழுமையாகக் […]

28/02/2014 Dinesh R
என்னை ஏன் டீ வாங்கிட்டு வரச் சொல்லலை? கட்டுரை

என்னை ஏன் டீ வாங்கிட்டு வரச் சொல்லலை?

பொதுவாகவே எனக்கு யாரிடமாவது  பேசுவதென்பதே ரொம்ப கஷ்டமான விஷயம்.  ‘ஆமா என்னத்த பேசி!’ என பேச வேண்டிய இடத்தில் பேசாமல் இருந்து, இழந்தவைகளின் பட்டியல் ரொம்பப் பெரிது. சமீபத்தில் ஒரு திரைப்படத்திற்கு வசனம் எழுதும் வாய்ப்பையே  கூட இழந்திருக்கிறேன். இப்படிப் பட்ட என்னை “சைபர் க்ரைமில்” போய் என் மீதான அவதூறுக்கு எதிராக கம்ப்ளெயின்ட் பண்ணச் சொல்லி ஆளாளுக்கு அட்வைஸ் என்ற பெயரில் விரட்டினார்கள். போனா நிறைய கேள்வி கேட்பாங்களே.. போகணுமா என ஒரு தயக்கம் இருந்தது. […]

26/02/2014 Dinesh R
அட ஆண்டவா!! இது உண்மையா? அப்படின்னா..!!? கதை

அட ஆண்டவா!! இது உண்மையா? அப்படின்னா..!!?

‘ஆர்வக் கோளாறில் இப்படி வந்து மாட்டிக் கொண்டோமே! இப்போது இங்கிருந்து எப்படி வெளியே போவது?’ என்று தெரியாத பதட்டத்தில் அல்லாடிக் கொண்டிருந்தான் வெங்கடேஷ். சுமாவிற்கு மட்டும் இது தெரிந்தால் அவ்வளவு தான்! நேரம் வேறு ஓடிக் கொண்டிருந்தது. வெங்கட் என்ற வெங்கடேஷ் ஃபோட்டோ எடுப்பதில் அதீத ஆர்வம் கொண்டவன். காமெரா என்பது ஒரு சாதனமே. நம் பார்வையில் தெரியும் காட்சிகளை மிக அழகான கோணத்தில் படமாக்குவதுதான் கலை என்று பாலுமகேந்திரா எப்போதோ ஒரு பேட்டியில் சொன்னதை வேதவாக்காகக் […]

24/02/2014 Dinesh R
தெகிடி என்றால்? சினிமா

தெகிடி என்றால்?

பகடை, சூது விளையாட்டு, புரட்டு ஆகிய அர்த்தங்கள் கொண்ட வார்த்தை ‘தெகிடி’. ஃபிப்ரவரி 28 வெளியாகவுள்ள தெகிடி க்ரைமும் சஸ்பென்ஸும் கலந்த படம். தொடர் கொலைகளின் பின் இருக்கும் மர்மத்தையும் ட்விஸ்ட்டையும், ஒரு டிடெக்டிவ் கண்டுபிடிப்பதுதான் படத்தின் கதை. நடிகர்கள்: >> அஷோக் செல்வன் >> ஜனனி ஐயர் >> ஜெயப்ரகாஷ் >> ஜெயகுமார் >> காளி >> ப்ரதீப் நாயர் >> கோவர்தன் >> கமலகண்ணன் >> மாதவன் >> சக்கரபாணி பணிக் குழு: >> […]

23/02/2014 Dinesh R
பிரம்மன் விமர்சனம் சினிமா

பிரம்மன் விமர்சனம்

நமது பொறுமையைச் சோதித்தறிந்து கொள்ள மீண்டுமொரு ஓர் அற்புத வாய்ப்பை நல்குகிறது பிரம்மன். தான் கோயிலாக மதிக்கும் தியேட்டரைக் காப்பாற்ற புறப்படுகிறான் நாயகன். இது முதற்பாதி. நான்காவதுவரை கூட படித்த உயிர் நண்பனுக்காக எல்லாத்தையும் விட்டுக்(!?) கொடுக்கிறான். இது இரண்டாம்பாதி. தியேட்டரை லீசுக்கு எடுத்து நடத்தும் சிவாவாக சசிகுமார். டி-ஷர்ட், ஜீன்ஸ் என மாடர்ன் உடையில் வருகிறார். இம்முறை, “நண்பன் ஜெயிச்சா நாம ஜெயிச்ச மாதிரி” என்ற பன்ச் வேலைக்காமல் போய்விட்டது. காரணம் அவ்வளவு திராபையான திரைக்கதை. […]

22/02/2014 Dinesh R
ஆஹா கல்யாணம் விமர்சனம் சினிமா

ஆஹா கல்யாணம் விமர்சனம்

நானியின் நேரடி தமிழ்ப்படமிது என்ற போதிலும்.. தெலுங்கு ரசிகர்களுக்கும் சேர்த்துத் தயாரிக்கப்பட்டதாலோ என்னமோ படம் முழுவதும் வண்ணங்கள் கொட்டிக் கிடக்கின்றன. முதல் பாதியின் அத்தனை ஃப்ரேமிலும் பாதி ஸ்க்ரீனுக்கு மேல் இடம்பிடிப்பது சிவப்பு நிறம்தான். இதுவே தமிழ் ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தைத் தரும். சக்தியும் ஸ்ருதியும் இணைந்து, ‘ஃபினான்சும் ரொமான்சும் ஒண்ணு சேரக்கூடாது’ என்ற விதிமுறையை ஏற்படுத்திக் கொண்டு ‘கெட்டிமேளம்’ எனும் நிறுவனம் தொடங்குகிறார்கள். ஆனால் அவர்களுக்குள் ரொமான்ஸ் வந்துவிடுகிறது. பின் என்னானது என்பதுதான் கதை. ‘நான் […]

22/02/2014 Dinesh R
டமால் டுமீல் – இசை வெளியீட்டூ விழா சினிமா

டமால் டுமீல் – இசை வெளியீட்டூ விழா

‘கேமியோ ஃபிலிம்ஸ் (Cameo Films) எனும் புது தயாரிப்பு நிறுவனம், வைபவை நாயகனாகக் கொண்டு டமால் டுமீல் படத்தைத் தயாரித்துள்ளது. ‘ப்ரொக்ளைம் அட்வர்டைசிங் ஏஜென்சி (Proclaim Advertising Agency)’ என்ற விளம்பர நிறுவனம்தான், கேமியோ ஃப்லிம்ஸ் என வெள்ளித்திரையை நோக்கி தனது அடுத்த அடியை எடுத்து வைத்துள்ளது.நூறு விளம்பரப் படங்கள் தயாரித்த பின்னரே திரைப்படத் தயாரிப்பில் இறங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ‘டமால் டுமீல்’ படம் க்ரைம் காமெடி த்ரில்லர் வகையைச் சார்ந்த படமாம்.படத்தின் நாயகி ரம்யா நம்பீசன். படத்தின் […]

21/02/2014 Dinesh R
நண்பனையும் காப்பாத்துவோம்.. பிரபஞ்சத்தையும் காப்பாத்துவோம்… ஆங்! சினிமா

நண்பனையும் காப்பாத்துவோம்.. பிரபஞ்சத்தையும் காப்பாத்துவோம்… ஆங்!

Captain America -The winter soldier என்ற பெயரில் வெளியிடப்படும் இந்த வருடத்தின் மிகப் பெரிய அதிரடிப் படம் தமிழ் தவிர ஹிந்தி, தெலுங்கு ஆகிய மற்ற பிராந்திய மொழிகளிலும் ‘எதற்கும் அஞ்சாதவன்‘ என்ற பெயரில் கோடை விடுமுறையை ஒட்டி ஏப்ரல் 4ஆம் தேதி அமெரிக்காவில் வெளியாகும் அதே நாளில் இங்கே தமிழகத்திலும் வெளியாகிறது . நியூ யார்க் நகரில் நடக்கும் பேரழிவுக்கு பிறகு, ஸ்டீவ் ரோகேர்ஸ் அமைதியான முறையில் வாஷிங்டன் நகரில் வசித்து, நவீன உலகிற்கு […]

21/02/2014 Dinesh R
“அம்மா”.. “அம்மா”.. என்று லட்சம் முறை அழைக்கலாம் – இயக்குநர் சேரன் கட்டுரை

“அம்மா”.. “அம்மா”.. என்று லட்சம் முறை அழைக்கலாம் – இயக்குநர் சேரன்

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு, கோடான கோடி நன்றிகள்.. பசித்த வயிற்றுக்கு குறைந்த விலையில் “அம்மா உணவகம்” ஆரம்பித்தபோதே நீங்கள் ஏழைகளின் இதயங்களில் நிரந்தரமாக குடியேறிவிட்டீர்கள். இப்போது “அம்மா திரையரங்கம்” கொண்டுவந்ததின் மூலமாக திரையுலகில் வாழ்க்கை இழந்து, எப்படி இனி திரைப்படம் எடுத்து வாழப்போகிறோம், என தவித்து நின்ற ஆயிரக்கணக்கான தயாரிப்பாளர்கள் இதயங்களிலும், கண்களில் ஆயிரம் ஆயிரம் கனவுகளோடு இயக்குநராகவே வாழ்ந்து மடிய வேண்டும் என்ற எண்ணம் கொண்ட என்போன்ற ஆயிரக்கணக்கான இயக்குநர்கள், உதவி இயக்குநர்களின் இதயங்களில் […]

20/02/2014 Dinesh R
சிநேகாவின் காதலர்கள் – இசை வெளியீட்டு விழா சினிமா

சிநேகாவின் காதலர்கள் – இசை வெளியீட்டு விழா

இயக்குநர் விக்ரமணனே அசந்துவிடுவார். அப்படியொரு நெகிழ்வான பின்னணிக் கொண்டது ‘சினேகாவின் காதலர்கள்’ படத்தின் முதற்புள்ளி. பேச்சுலர்களாக இருந்த பொழுது, ஒரே அறையில் தங்கியவர்கள் தயாரிப்பாளர் கா.கலைக்கோட்டுதயமும் இயக்குநர் முத்துராமலிங்கனும். அப்பொழுது முத்துராமலிங்கன் ‘சத்ரியன்’ அரசியலிதழின் ஆசிரியர்; கலைக்கோட்டுதயம் அந்த இதழில் பணி புரியும் தலைமைச் செய்தியாளர். அந்த நட்பு இப்பொழுது அவர்களை படம் பண்ண வைத்திருக்கிறது. “நான் 12 வருஷத்துக்கு முன்னாடி சின்னத் திரைக்கு வந்தேன். ‘தமிழன்’ தொலைக்காட்சி தொடங்கினேன். அப்பவே வெள்ளித் திரைக்கு வரணும்னு ஆசை. […]

20/02/2014 Dinesh R
சீமான் செய்த துரோகம் அரசியல்

சீமான் செய்த துரோகம்

“நான் எங்கண்ணன், அம்மா கிரியேஷன்ஸ் சிவா அவர்களுக்கு ஒரு துரோகம் செஞ்சிருக்கேன். இன்னைக்கு வரைக்கும் அந்தக் குற்றவுணர்விருக்கு. அவர் பகலவன்னு என்னுடைய கதையைதான் எடுக்கச் சொல்லிக் கட்டாயபடுத்தினார். அதை எடுத்திருந்தா மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைஞ்சிருக்கும். தொடர்ச்சியா நானும் படங்கள் இயக்கியிருந்திருக்கலாம். அன்னைக்கு ‘வாழ்த்துகள்’ படமெடுத்து பெரிய பொருளிழப்பைத் தந்துட்டன். அந்தப் படத்தை வெளியிட்ட ஒருவாரத்திலதான் என் தலைவன் பிரபாகரன்கிட்டயிருந்து அவசர அழைப்பு. நான் போனேன். போன அந்த நாளிலிருந்து என் வாழ்க்கை திசை மாறிட்டது.  […]

19/02/2014 Dinesh R
‘அந்த தாயின் உறுதிக்கு கிடைத்த வெற்றி!’ கட்டுரை

‘அந்த தாயின் உறுதிக்கு கிடைத்த வெற்றி!’

மூவரின் விடுதலைக்காக ஒரு இனம் தொடர்ந்து போராடியது. சில தலைவர்கள் தொடர்ந்து குரல் கொடுத்தார்கள். நிறைய அமைப்புகள் விடுதலை வேண்டி போராட்டம் நடத்தியது. செங்கொடி என்ற இளம்வயது தங்கை தீக்குளித்தாள். இதெல்லாம் தாண்டி ஒரு தாய், தன் மகனை இளம் வயதில் எதெல்லாம் அனுபவிக்க வேண்டுமோ அதையெல்லாம் தொலைத்துவிட்ட மகனை மீட்க 23 வருடங்கள் தொடர்ந்து சிறைக்கும் வீட்டுக்கும் நடந்திருக்கிறாள். அது எவ்வளவு துயரம் எவ்வளவு கடினம் என்று யாருக்கும் தெரியாது. தன் மகன் தனக்கு மீண்டும் […]

19/02/2014 Dinesh R
“தமிழர்களின் வரலாற்றில் மகத்தான நாள்” – பாரதிராஜா கட்டுரை

“தமிழர்களின் வரலாற்றில் மகத்தான நாள்” – பாரதிராஜா

என் இனிய தமிழ்மக்களே! 22 வருட கடுஞ்சிறைக்கு பின் விடுதலை. 22 வருட அனைத்துலக தமிழர்களின் போராட்டத்திற்குப் பின் விடுதலை. செங்கொடியின் வீரமரணத்திற்குப் பின் விடுதலை. இந்த 22 வருடங்களாய் என்னென்னவோ பார்த்தாயிற்று. ராமேஸ்வரத்து மீனவர்களின் இடர், இறுதியுத்தம் எல்லாவற்றிற்கும் மேலாய் தாங்கொணா வலியையும் வேதனையையும் தமிழர் வாழ்வில் வீசிப்போயிற்று. இத்தனை பேரிடரை சமன் செய்யாவிட்டாலும் எம் தமிழ் வாழ்வும் தமிழ்மனமும் இந்த 2014 பிப்ரவரியில் முதன்முறையாக தன்னிறைவு அடைந்தது. பேரறிவாளன், முருகன் மற்றும் சாந்தன் அவர்களின் […]

19/02/2014 Dinesh R
ஏனோ தெய்வம் சதி செய்தது!? கட்டுரை

ஏனோ தெய்வம் சதி செய்தது!?

இங்கு எவரும் அவரவர் விருப்பப்படி பிறப்பதில்லை. அவரவர் தேர்விற்கு முகம் கிடைப்பதாக இருந்தால், பிறக்கும் முன்பே அடிதடியும் குழப்பமும் ஏற்பட்டு கண்டிப்பாக சிருஷ்டியே ஸ்தம்பித்திருக்கும். ஆனால் சினிமாவில் தான் விருப்பப்பட்ட முகத்தை காட்டமுடியும் என தனது பிரத்தியேக ஒளிச் சேர்க்கையினால் மாயங்கள் நிகழ்த்தியவர் பாலு மகேந்திரா. அப்படி ஒரு நாய்க்குட்டிக்கு அவர் ‘சுப்பிரமணி’ எனப் பெயரிட்டு, தமிழர்கள் மனதில் அதை படரவிட்டு இன்றோடு 32 வருடங்கள் ஆகிறது. ஆம், ‘மூன்றாம் பிறை’ வெளியிடப்பட்ட தினம் இன்று. இன்னமும் […]

19/02/2014 Dinesh R