32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

ஆதியும் அந்தமும் – இசை வெளியீட்டு விழா

Dinesh R சேலம் Published: 12/02/2014 2 நிமிட வாசிப்பு Updated: 14/02/2014 சினிமா
எழுத்து அளவு:

Adiyum Andamum

கோலங்கள் புகழ் ஆதி என்கிற ஆதித்யா கதாபாத்திரத்தில் நடித்த அஜய்தான் ‘ஆதியும் அந்தமும்’ படத்தின் நாயகன். சின்னத்திரையில் இருந்து வெள்ளித் திரைக்கு முதன்முறை வந்திருப்பதாக மேடையில் அமர்ந்திருந்த சில பிரமுகர்கள் சொன்னார்கள். ஆனால் பிரியதர்ஷன் இயக்கத்தில் 1993 இல் வெளிவந்த “கர்டிஷ் (Gardish)” எனும் ஹிந்திப் படத்தில், ஜாக்கி ஷெரோஃப் தம்பியாக நடித்திருப்பார். மும்பைவாழ் பஞ்சாபிவாலாவான அவரது பெயர் அப்பொழுது கெளரவ் கபூர். தமிழில் கூட முரளி, ரோஜா நடித்த “ஊட்டி” படத்தில் வில்லனாக 1999 இலேயே நடித்திருந்தார்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

Ajay n L.V.Ganesan படத்தின் இசையமைப்பாளர் எல்.வி.கணேசன். இவர் பிரபல இசையமைப்பாளர் எல்.வைத்தியநாதனின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. ‘சைக்காலஜிக்கல் த்ரில்லர்’ படம் என்பதால், படத்தின் பின்னணி இசையும் இணைந்து படத்தில் கதை சொல்ல வேண்டும். அதை அற்புதமாகச் செய்துள்ளாராம் எல்.வி.கணேசன். இப்படம் வெளிவந்த பிறகு, எல்.வி.கணேசனின் புகழ் பன்மடங்கு உயரும் என நாயகன் அஜயும் புகழாரம் சூட்டினார்.

Kaushikசின்னத்திரை நடிகரான கெளஷிக்தான் படத்தின் இயக்குநர். ‘இவருக்கு இயக்கத்தில் ஆர்வமிருக்கென எனக்குத் தெரியாது’ என ஆச்சரியப்பட்டார் இயக்குநர் வெற்றிமாறன். “எனக்கு இயக்கத்தில் ஆர்வமிருந்தது. ‘கதை நேரம்’ பொழுதெல்லாம் வெற்றிமாறன் பேசுவதையெல்லாம் கவனிச்சுட்டே இருப்பேன். இயக்கத்தில் ஆர்வமுண்டென நான் சொல்லாததுதான் என் சிறந்த நடிப்பாக இருக்கும். கே.பாலசந்தர், பாலு மகேந்திரா சார் ஆகியவர்களைப் பார்த்து நான் நிறைய கத்துக்கிட்டேன். ‘பனிவிழும் மலர்வனம்’னு ஒரு படமும் இயக்குறேன். இந்த ‘அபியும் நானும்’ கதை நான் 2003இல் ஊட்டி போகும்பொழுது எழுதினேன். நல்லாயில்லை என அங்கேயே கிழிச்சுப் போட்டேன். பின் கொஞ்சம் கொஞ்சமாகச் செதுக்கி ஒரு முழுமையான கதை உருவாக்கினேன். பதினொரு வருடங்களுக்குப் பிறகு அந்தக் கனவு பலிச்சிருக்கு” என்றார் கெளஷிக்.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.