32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
Dinesh R
செய்தியாளர் விவரம் சேலம்

Dinesh R

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

4024 செய்திகள் எழுதப்பட்டுள்ளன வலைத்தளம்
செய்திகள் வரிசை (பக்கம் 255)
சுவிட்சர்லாந்து கட்டுரை

சுவிட்சர்லாந்து

மனிதன் தன் கலை ஆர்வத்தினாலும், உழைப்பினாலும் உருவாக்கிய செயற்கை அழகும், அற்புதங்களும் பார்த்த மாத்திரத்தில் நம்மை வாய்பிளக்க வைத்தாலும் கூட, இயற்கை தன் போக்கில் உருவாக்கி வைத்திருக்கும் அழகின் முன்னால் அவை யாவும் இரண்டாம் பட்சம்தான். ஒரு காலத்தில் இந்த இயற்கையோடும் அதன் எழிலோடும் இணைந்து வாழ்ந்திருந்த நாம், கால ஓட்டத்தில் நம் தேவைகளை முன்னிறுத்தி இயற்கையை அழித்தே நம் வாழ்வாதாரங்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். அந்த வகையில் இன்றைய தலைமுறை இயற்கையை அதன் அழகைக் கனவிலும், காலண்டரிலும் […]

21/11/2013 Dinesh R
காவு வாங்கும் புகையிலை கட்டுரை

காவு வாங்கும் புகையிலை

அக்டோபர் 27. முகேஷ் ஹரானே இறந்த தினம். இன்றோடு நான்காண்டுகள் நிறைவாகிறது. அவர் இறக்கும் பொழுது அவர் வயது 24. திரைப்படங்களில் வரும் நாயகர்களுக்கு எந்தவிதத்திலும் குறைந்தவர் அல்லர் அவர். இளம் வயதிலேயே வேலைக்குச் சென்று, தனது தம்பியைப் படிக்க வைத்துள்ளார். திணறடிக்கும் ஏழ்மை நிலையிலும், விழிப்புணர்வு விளம்பரங்களுக்கு பணமேதும் வாங்கிக் கொள்ளவில்லை முகேஷ். இன்று நாயகர்களாகத் திரையில் சித்தரிக்கப்படும் கதாபாத்திரங்களை விட மிகவும் உயர்ந்தவர் முகேஷ். ஓர் ஆண்டுக்கு சுமார் 1,30,000 பேர் இந்தியாவில், வாய் […]

27/10/2013 Dinesh R
வட அமெரிக்காவில் இலையுதிர்காலம் கட்டுரை

வட அமெரிக்காவில் இலையுதிர்காலம்

இந்த வர்ணஜாலங்களைக்கண்டுகளிக்க ஏதுவாகப்பலரும் பிரயாணம் செய்யும் வகையில் மலையோர ரயில்களும், மலைப்பிரதேசங்களும் ஆயத்தமாக இருக்கும். Vermont, NY மாநிலங்களைச் சுற்றி இருக்கும் மலைச் சூழந்த காடுகளின் அழகை ரசிக்க வேண்டிப் பலரும் படையெடுக்கும் நேரமிது. ஒவ்வொரு மரத்திலும் பல வண்ண வண்ண இலைகள். அவை தரையெங்கும் உதிர்ந்துக் கிடப்பதை பார்த்துக்கொண்டே இருக்கலாம். அதன் அழகே அழகு! இந்தப் பருவத்தில் வரும் மழையும், காற்றும் இலைகளை உதிர வைத்து இலையுதிர்காலம் முடிந்தது, பனிக்காலத்திற்குத் தயாராகுங்கள் என்று மொட்டையாய் நிற்கும் […]

15/10/2013 Dinesh R
இனியாவது ஒரு விதி செய்வோம்! கட்டுரை

இனியாவது ஒரு விதி செய்வோம்!

வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டி வைத்த காலம் எல்லாம் மலையேறி, இன்று பெண்கள் வேலைக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விட்டது. தற்போதைய நிலையில் ஒருவரின் வருமானத்தில் குழந்தைகளின் படிப்பு, குடும்பச் செலவுகள், விலைவாசி உயர்வு, மற்றும் இன்ன பிற செலவீனங்களை சமாளிப்பது கடினம் என்றாகி விட்டதால் கணவன் மனைவி என இருவருமே வேலைக்குப் போக வேண்டிது அவசியமாகிறது.  இப்படி வேலைக்குப் போகும் பெண்களில் இரண்டு வகையினர். ஒரு சாரார் தாங்கள் கற்ற கல்வியின் பயனை அடைய வேண்டி, […]

30/09/2013 Dinesh R
ஒரு பொற்கொல்லனின் வாக்குமூலம் – 02 தொடர்

ஒரு பொற்கொல்லனின் வாக்குமூலம் – 02

ஒரு பொற்கொல்லனின் வாக்குமூலம் – 01 விரும்பிய ஒரு பொருளைப் புதிதாக கடையில் இருந்து வாங்கும் போது இயல்பாகவே நமக்கு ஒரு மன நிறைவும், மகிழ்ச்சியும் இருக்கும். அதிலும் தங்கநகை என்றால் கேட்கவே வேண்டாம். இது உலகம் முழுமைக்கும் பொருந்தும். இந்தத் தங்கத்தின் மீது மனிதன் வைத்திருக்கும் அபரிமிதமான அபிமானத்தினால் மனித சமூகம் காலம் காலமாய் பல சம்பவங்களையும், சரித்திரங்களையும் கடந்து வந்திருக்கிறது.  இன்றும் கூட ஒரு தனி நபர் அல்லது ஒரு நாட்டின் செல்வம்/செல்வாக்கு அவர்கள் […]

23/09/2013 Dinesh R
அக்கரைச் சீமை அழகினிலே மனம் மாறக் கண்டேனே! கட்டுரை

அக்கரைச் சீமை அழகினிலே மனம் மாறக் கண்டேனே!

  கல்வியையோ, செல்வத்தையோ தேடி வெளிநாடு வருகிறவர்கள், வந்த வேலை முடிந்தவுடன் தாயகம் திரும்புகிறார்களா என்றால் பெரும்பாலும் இல்லை என்பது தான் நிதர்சனம். படிக்க வந்தவர்கள் வேலை தேடி செட்டிலாகிறார்கள். வேலை கிடைத்தவர்கள்  மெல்ல மெல்ல வெளிநாட்டு வாழ்க்கையில் உழல ஆரம்பித்து,  இன்னும் சில வருடம் சில வருடம் எனத்  தள்ளிப் போட ஆரம்பித்து, திருமணம் முடியட்டும் எனக்  காத்திருந்து,  பிறகு குழந்தை, அப்பா, அம்மா, மாமனார், மாமியார் விஜயம் எல்லாம் முடிந்த பிறகு, சரி! ஊருக்குப் […]

18/09/2013 Dinesh R
ஒரு பொற்கொல்லனின் வாக்குமூலம் – 01 தொடர்

ஒரு பொற்கொல்லனின் வாக்குமூலம் – 01

தெருவில் திரும்பிய பக்கமெல்லாம் ஆளை அசரடிக்கும் வகையில் விளம்பர பதாகைகள், போஸ்டர்கள். டிவியை திறந்தால் அதில் பிரபல நடிகர்கள் ஆளுக்கு ஒருவராய் நின்று கொண்டு வளைந்து நெளிந்து குழைந்து பேசி நடித்து ஆடிப் பாடி நம் கவனத்தை ஈர்க்கிறார்கள். செய்தித் தாளை புரட்டினால் பக்கம் பக்கமாய் விளம்பரங்கள். தள்ளுபடி, அள்ளுபடி என நீட்டி முழக்கி நம்மை ஒரு வழியாக்கி விடுகின்றன. இத்தனை ஆர்ப்பாட்டங்களும் நம் போன்ற சாமானியர்கள் வாங்கப் போகும் ஒருபவுன்,  அரைப் பவுன் நகைக்குத்தான் என்றால் […]

16/09/2013 Dinesh R
மேகமலை ஒரு பயணம் கட்டுரை

மேகமலை ஒரு பயணம்

சில நாட்களுக்கு முன் குமுதம் இதழ் மூலம் இந்த மேகமலை பற்றியறிந்த என் தந்தை தன்னை அங்கே அழைத்து செல்லுமாறு கேட்டார்.  அலுவலகத்தில் ஒரு வாரம் விடுப்பில் இருந்த நான், மேகமலை செல்ல இது தான் சரியான நேரம் என்று முடிவெடுத்து அதற்க்கு வேண்டிய  தகவல்களை சேகரிக்க தொடங்கினேன். அனைத்து விவரங்களும் சேகரித்த பின்னர், நாங்கள் ஒரு ஐந்து நபர்கள் விழுப்புரத்தில் இருந்து ஆகஸ்ட் 14 காலை 5 மணிக்கு  போலேரோ வில் புறப்பட்டோம். கடல் மட்டத்திலிருந்து […]

24/08/2013 Dinesh R
தி மேன் வித் தி அயர்ன் ஃபிஸ்ட்ஸ் அயல் சினிமா

தி மேன் வித் தி அயர்ன் ஃபிஸ்ட்ஸ்

2012 இல் வெளிவந்த இந்த அமெரிக்கப் படம், “இரும்புக்கை மாயாவி” என்ற பெயரில் டப் செய்யப்பட்டு இரு வாரங்களுக்கு முன் தமிழகத் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. பிரபல முத்து காமிக்ஸ் நாயகனான இரும்புக்கை மாயாவியின் பெயரை விளம்பரத்திற்காகப் பயன்படுத்தி கொண்டுள்ளனர். படத்தில் எந்த மாயாவியும் இல்லை. ஜங்கள் வில்லேஜ் என்ற கிராமம் பல போராளி குழுக்களின் தலைமையகம். அவ்வூரின் வழியாக கொண்டு செல்லப்படும் தங்கத்திற்கு பாதுகாப்பு அளிக்கும்படி, லயன் குழுவின் தலைவர் கோல்ட் லயனிடம் ஒப்படைக்கிறார் அப்பிராந்தியந்தின் கவர்னர். […]

14/08/2013 Dinesh R
அதிர்ஷ்ட தேவதை ஹன்சிகா சினிமா

அதிர்ஷ்ட தேவதை ஹன்சிகா

ஹன்சிகாவை ஒரு அதிர்ஷ்ட தேவதை என திரையுலக வல்லுனர்கள் கூற ஆரம்பித்ததாக  வந்த   செய்தியின் பிண்ணனியில் இந்த வருடம் வெளி வந்து பெரும் வெற்றி பெற்ற இரு படங்கள்: தீயா  வேலை செய்யணும் குமாரு மற்றும் சிங்கம் 2 இல் நடித்தது தான் காரணமாகக் கூறப்படுகிறது. இந்தப் புதிய பட்டதை பற்றி ஹன்சிகாவை விசாரித்த போது, ‘ இதை வெறும் அதிர்ஷ்டம் என கூற முடியாது. என்னைப் பொறுத்த வரை அதிர்ஷ்டம் என்பது வாய்ப்பு வரும் […]

13/08/2013 Dinesh R
வணக்கம் சென்னை இசை – ஒரு பார்வை இசை விமர்சனம்

வணக்கம் சென்னை இசை – ஒரு பார்வை

சிவாவும், ப்ரியா ஆனந்தும் நடிக்கும்  இப்படத்தின் மூலம் இயக்குநராக திரையுலகில் கால் பதிக்கிறார் கிருத்திகா உதயநிதி. தனது  முதல் இரண்டு படங்களின் மூலம் பல இளைஞர்களின் நெஞ்சில் இடம் பிடித்துள்ள அனிருத் அந்த வேட்டையை மேலும் தொடர்கிறாரா என்று பார்ப்போம். படத்தில் மொத்தம் 7 பாடல்கள்.  1. பாடல் – ஹே காற்றில் ஏதோ புதுவாசம்  பாடியவர்கள் – பபோன், மரியா  வரிகள் – நா.முத்துக்குமார்   பர்பி படத்தில் வரும் க்யோன் பாடல் மூலம் பிரபலமடைந்த […]

08/08/2013 Dinesh R
இக்கரைக்கு அக்கரை பச்சை! கட்டுரை

இக்கரைக்கு அக்கரை பச்சை!

அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற மேலை நாடுகளின் மீது நம்மில் பலருக்கும் ஏதோவொரு இனம் புரியாத மோகம் இருக்கும். அல்லது அது மாதிரி நாம் வளர்க்கப்பட்டிருக்கிறோம். மேலை நாடுகள் என்றாலே, அங்கே தேனும் பாலும் ஓடுவதைப் போலொரு மாயத்தோற்றத்தை நமது கல்விமுறையும், சமூகக் கருத்தியலும் நமக்குள் உருவாக்கி விட்டிருக்கிறது. அதிலும் இந்த நாடுகளில் வேலை கிடைத்து, நாம் அங்கே போகப்போகிறோம் என்றவுடன் வாழ்க்கையில் ஏதோ பெரிதாய் சாதித்ததைப் போன்று ஓர் உணர்வு ஏற்படுவதை தவிர்க்க இயலாது. […]

06/08/2013 Dinesh R
இரண்டாம் உலகம் – இசை வெளியீட்டு விழா சினிமா

இரண்டாம் உலகம் – இசை வெளியீட்டு விழா

“இன்னிக்கு (ஆகஸ்ட் 4) ஃப்ரெண்ட்ஸ் டே. லவ்வர்ஸ் டே மாதிரி இங்க ஃப்ரெண்ட்ஸ் டே கொண்டாடப்படலை. அதற்கு காரணம், செல்வராகவன் மாதிரி இயக்குநர்கள் தான். எனக்கும் அவருக்கும் நேரடி பழக்கம் இல்லை. அவருடைய ‘மயக்கம் என்ன’ படத்திலும், என் ‘கோ’ படத்திலும் ஹீரோ ஃபோட்டோக்ராஃபர். சோ ஃபோன் பண்ணி அரை மணி நேரம் கதை சொன்னேன். ஆனா அவர் தனுஷை வச்சு பிளான் பண்ணியிருந்த அடுத்த படத்தின் கதை இதுல இருந்தது. அவர் அந்தப் படத்தையே கை […]

06/08/2013 Dinesh R
கல்யாண சமையல் சாதம் – இசை வெளியீட்டு விழா சினிமா

கல்யாண சமையல் சாதம் – இசை வெளியீட்டு விழா

அறிமுக இசையமைப்பாளர் அரோரா புல்லாங்குழல் வாசித்து விழாவினைத் தொடங்கினார். அவர் 2000 பாடல்களுக்கு மேல் FLUTIST ஆகப் பணியாற்றியுள்ளார். இப்படத்திற்கு இவரை இசையமைப்பாளராகப் பரிந்துரைத்தது புஷ்பா கந்தசாமி என்பது குறிப்பிடத்தக்கது. “எனக்கு இவன் நவீன். சினிமாக்காக வச்சுக்கிட்ட பெயர்தான் அரோரா. எனக்கு அவனை எப்ப தெரியும்னா.. பிறந்ததில் இருந்தே தெரியும். நானும் இவனோட சித்தப்பா வி.எஸ்.குமாரும் 35 வருட நண்பர்கள். நாங்க கிரிக்கெட் விளையாடுறப்ப இவன் பார்த்துட்டு இருப்பான்.  ‘ராணா’ படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் ஒரு ம்யூசிக் போட்டிருந்தார். […]

03/08/2013 Dinesh R