32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
Dinesh R
செய்தியாளர் விவரம் சேலம்

Dinesh R

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

4024 செய்திகள் எழுதப்பட்டுள்ளன வலைத்தளம்
செய்திகள் வரிசை (பக்கம் 257)
“இவ்வுலகில் எல்லோருக்கும் இடமுண்டு” – ஆதி சினிமா

“இவ்வுலகில் எல்லோருக்கும் இடமுண்டு” – ஆதி

விஜய் சேதுபதி , சிவ  கார்த்திகேயன் , அதர்வா, விக்ரம் பிரபு  என்ற தன்னுடைய சக வயது நடிகர்களை சிலாகித்துப் பாராட்டிப் பேசுகிறார் ஆதி. “அவர்களுடைய வெற்றி என்னைப் போன்ற மற்ற நடிகர்களுக்கு ,எங்களது நேரம் வரும் போது  நல்ல கதைகள் கிட்டக் கூடும் என்ற நம்பிக்கையை ஊட்டுகிறது .இது என் தாய் எனக்கு கற்று தந்த பாடம். இவ்வுலகில் எல்லோருக்கும் இடம் உண்டு என்பது தாரக மந்திரம் போல் சொல்லியே வளர்த்தார். அந்தப் பாடமே என்னை […]

07/06/2013 Dinesh R
சிவகார்த்திகேயனுடன் இணையும் ஹன்சிகா சினிமா

சிவகார்த்திகேயனுடன் இணையும் ஹன்சிகா

“இயக்குநர் முருகதாஸ் அவர்களின் தயாரிப்பில் நடிக்கவிருப்பதை பெருமையாகவும், கௌரவமாகவும் கருதுகிறேன். இப்படத்தின் கதையும், திரைக்கதையும் என்னை மிகவும் கவர்ந்தது. இது ஒரு முழு நீள காமெடிப் படம். இப்படத்தின் கதாநாயகனாக சிவா கார்த்திகேயன் நடிக்க உள்ளார். இவரது திறமையும் வளர்ச்சியும் எல்லோரையும் கவர்ந்துள்ளது. இப்படம் ரசிகர்கள்  மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வெற்றிப்பெறும் என்பதில் சந்தேகமே இல்லை. இப்படத்தின் படப்பிடிப்புக்காக ஆவலோடு காத்திருக்கிறேன்” என்கிறார் மகிழ்ச்சியுடன் ஹன்சிகா மோத்வாணி.

07/06/2013 Dinesh R
இயக்குநராகும் சின்னத்திரை நடிகர் பிரேம் சாய் சினிமா

இயக்குநராகும் சின்னத்திரை நடிகர் பிரேம் சாய்

இயக்குநரும் தயாரிப்பாளருமான கௌதம் வாசுதேவ மேனனுக்கும், அவரது பட தயாரிப்பு நிறுவனமான ‘ஃபோட்டான் கதாஸ்’ நிறுவனத்துக்கும் இது தங்கமான நேரம் என்றுதான் சொல்ல வேண்டும் .தங்க மீன்கள் படத்துக்கு கிடைக்கும் எதிர்பார்ப்பைத் தொடர்ந்து  தரமான வித்தியாசமான கதைகளை,  தகுதியான திறமையானவர்களை தேர்ந்தெடுக்கும் ஃபோட்டான் கதாஸ் நிறுவனம் தங்களது அடுத்த தயாரிப்பான ‘தமிழ் செல்வனும் தனியார் அஞ்சலும்‘ திரைப்படத்தின் தொடர்ந்து நடைபெற்று வரும் படப்பிடிப்பால் மிகவும் உற்சாகமாக உள்ளனர். ஹைதராபாத் நகரில் நடை பெறும்  இந்த தமிழ் தெலுங்கு […]

07/06/2013 Dinesh R
சாமீ. அழகப்பனின் வாதங்களும் வயிற்றெரிச்சல்களும்! கட்டுரை

சாமீ. அழகப்பனின் வாதங்களும் வயிற்றெரிச்சல்களும்!

சித்தமருத்துவம் சித்தர்களால் பாடல்களாகப் பாடப்பட்டு தலைமுறை தலைமுறையாக கொண்டு வரப்பட்டது. அது பின்னாளில் குடும்ப சொத்தாக கருதப்பட்டு, சுயநலத்துடன் மற்றவர்கள் பார்வையில் இருந்து மறைக்கப்பட்டதால் மெல்ல அழியத் தொடங்கியது. பின்னர் நல்லோர் சிலரால் ஏற்படுத்தப்பட்ட விழிப்புணர்வு காரணமாக சித்தமருத்துவ நூல்கள் பாதுகாக்கப்பட்டதுடன், அந்தத் தகவல்கள் மக்கள் மத்தியில் சென்றடையவும் தொடங்கியது. ஆயினும் இன்றும் கூட, சிலர் தங்களது சொத்துப்போல் சித்தமருத்துவத்தினைக் கருதுவது சித்தமருத்துவதிற்கு ஏற்பட்ட சாபக்கேடாகும். சித்த மருத்துவ விழிப்புணர்வை மக்களிடையே இணையம் மூலமாக ஏற்படுத்தும் பதிவர்கள் […]

07/06/2013 Dinesh R
சிங்கம் II இசை – ஒரு பார்வை இசை விமர்சனம்

சிங்கம் II இசை – ஒரு பார்வை

சூர்யாவும், இயக்குநர் ஹரியும் மீண்டும் தேவி ஸ்ரீ பிரசாத்துடன் இணைந்துள்ளனர். இந்தக் கூட்டணியில் முன்பு  வெளியான ஆறு மற்றும் சிங்கம் முதல் பாகத்தின் பாடல்கள் நல்ல வரவேற்ப்பைப் பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றி சிங்கம் இரண்டாம் பாகத்திலும் தொடருமா என்று பார்ப்போம்.  இப்படத்தில் மொத்தம் 6 பாடல்கள்.  பாடல்களை எழுதியவர் விவேகா. 1. பாடல் – புரியவில்லை  பாடியவர் – ஸ்வேதா மோகன்  நாயகி, நாயகன் மீதுள்ள காதலை வெளிப்படுத்தும் பாடல் இது. ஸ்வேதா மோகன் […]

06/06/2013 Dinesh R
ஆஸ்கார் நாயகன் பற்றி ஆஸ்கார் வி.ரவிச்சந்திரன் சினிமா

ஆஸ்கார் நாயகன் பற்றி ஆஸ்கார் வி.ரவிச்சந்திரன்

தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன்  சமீபமாக எல்லா புகழும் ரஹ்மானுக்கே என்று சொல்லி கொண்டு இருக்கிறார் . மரியான் படத்தின் இசை கடந்த சில வருடங்களாக தமிழ் திரை உலகம் கேட்டிராத மாபெரும் இசையாகும்.இந்த வெற்றிக்கு முழுக்க முழுக்க உரியவர் A.R .ரஹ்மான் மட்டும் தான் . இதை தவிர படத்தின் பின்னணி இசை கோர்புக்காக  இரவு பகலாக அயராது உழைத்து தன்னுடைய  வெளிநாட்டு இசை நிகழ்சிகளையும் ஒத்தி வைத்து இதுதான் தன்னுடைய முதல் படம் போல் பாவித்து பணி  புரிவதை […]

01/06/2013 Dinesh R
“அது நான் இல்லை!!” – வி.டி.வி கணேஷ் சினிமா

“அது நான் இல்லை!!” – வி.டி.வி கணேஷ்

தன் பெயரில் போலியாகத் தயாரிக்கப்பட்டிருக்கும் ட்விட்டர் கணக்கிலிருந்து பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளார் வி.டி.வி. கணேஷ். இதனால் வேதனையடைந்திருக்கும் அவர், இது சம்பந்தமாக புகார் பதிவு செய்யவும் உள்ளார். தற்போது”சரஸ்வதி சபதம்” பட ஷூட்டிங்கிற்காக மலேசியா செல்கிறார்

31/05/2013 Dinesh R
குட்டிப்புலி இசை – ஒரு பார்வை இசை விமர்சனம்

குட்டிப்புலி இசை – ஒரு பார்வை

“வாகை சூடவா” படத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்த எம். கிப்ரான், அடுத்து “வத்திக்குச்சி”யில்  மேலும் தன் திறமையை  நிரூபித்தார். இப்பொழுது சசிகுமார்  மற்றும் லக்ஷ்மி மேனன் நடிப்பில் மூன்றாவதாக  குட்டி புலி இசை வெளிவந்துள்ளது.   வைரமுத்துவின் வரிகளில் படத்தில் மொத்தம் நான்கு  பாடல்கள். 1.அருவாக்காரன்: 4.5/5 பாடியவர் – பத்மலதா, கௌஷிகி சக்ரவர்த்தி அருமையான குரல், அற்புதமான இசை மற்றும் வைரமுத்துவின் அழகிய வரிகள். இது போதாதா ஒரு பாடல் பிரபலமடைய? “அருவாக்காரன்” பாடல் […]

27/05/2013 Dinesh R
மரியான் இசை – ஒரு பார்வை இசை விமர்சனம்

மரியான் இசை – ஒரு பார்வை

தனுஷ் படத்திற்கு முதன் முறையாக ரஹ்மான் இசையமைத்திருக்கிறார் என்பதால் இப்படத்தின் இசைக்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகமாகவே இருக்கிறது. அது போதாதென்று  ரஹ்மான் இசையில் கொலை வெறி நாயகனின் வரிகளுக்கு, யுவன் வேறு குரல் கொடுத்திருக்கிறார். ஆக பல எதிர்பார்ப்புகளுக்கு இடையே இப்படத்தின் இசை வெளிவந்துள்ளது.. படத்தில் மொத்தம் ஏழு பாடல்கள். 1. எங்க போன ராசா:  5/5 பாடியவர் – சக்தி ஸ்ரீ கோபாலன் வரிகள் – குட்டி ரேவதி,  ரஹ்மான்  கடல் படத்தின் நெஞ்சுக்குள்ள […]

16/05/2013 Dinesh R
“13 வருட காத்திருப்பு” – மரியான் தனுஷ் சினிமா

“13 வருட காத்திருப்பு” – மரியான் தனுஷ்

ஏ.ஆர்.ரஹ்மானுடன் முதல்முறையாக இணைகிறார் தனுஷ். அதைப் பற்றிக் குறிப்பிடுகையில், இது பதிமூன்று வருட காத்திருப்பு என்கிறார். 50 அடி ஆழக் கடலினுள் நடப்பது, நமீபியா பாலைவனங்களில் வெறும் காலுடன் நல்ல வெயிலில் நடப்பது என தனுஷை இயக்குநர் பரத்பாலா சக்கையாகப் பிழிந்துள்ளார்.    “எந்தப் படத்திற்கும் இவ்வளவு கஷ்டப்பட்டதில்லை. இனி பரத்பாலா படத்தில் நடிக்கவே கூடாது என முடிவு பண்ணேன். ஆனா இப்ப ரிசல்ட்டைப் பார்க்கிறப்ப, மீண்டும் அவர் படத்தில் நடிக்கணும்னு தோணுது. படத்தில் ஒரு சீனுல […]

15/05/2013 Dinesh R
2500$ பெறுமானமுள்ள படம் கட்டுரை

2500$ பெறுமானமுள்ள படம்

சேட்டை படத்திற்கு, “ஆபாசம்.. நாராசம்.. கவிச்சி” என ஏகப்பட்ட அர்ச்சனைகள் இணையத்தில் காணக் கிடைக்கிறது. அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்ட ‘ஒன்பதுல குரு‘ என சொல்கின்றனர். ஆனால் படம் அந்த அளவுக்கு மோசமில்லை என்று தான் நினைக்கிறேன். காரணம் சேட்டை ஹிந்திப் படமான ‘டெல்லி-பெல்லி’யின் ரீ-மேக். அந்தப் படத்தின் அழகான வசனங்களை எல்லாம் வடிகட்டி மொன்னையான படமாக சேட்டையை எடுத்துள்ளனர். “This girl has given me blow job.. I am 21st century man, I […]

19/04/2013 Dinesh R
சிதிலமடையும் மோளப்பாளையம் மலை கட்டுரை

சிதிலமடையும் மோளப்பாளையம் மலை

1.மோளப்பாளையம் கிராமத்தின் இயற்கை அமைப்பு: நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் வட்டம் மோளப்பாளையம் கிராமம் இயற்கையாக மலைகள் கொண்ட கிராமம் ஆகும். இங்கு உள்ள மக்கள் வேளாண்மை செய்து வருகிறார்கள் .ஆடு, மாடுகள் வைத்து பராமரித்து வருகிறார்கள். மோளப்பாளையம் கிராமத்தைச் சுற்றி இருபது விவசாய கிராமங்கள் உள்ளன . இந்த கிராமங்களை மலைகள் சூழ்ந்து உள்ளன.வனவிலங்குகள், தேசிய பறவை மயில் மற்றும் பல்வேறு மூலிகை மரங்கள் இந்த மோளப்பாளையம் மலைப்பகுதிகளில் உள்ளன. மோளப்பாளையம் கிராமத்தில் இருந்து ஏழு கிலோமீட்டரில் […]

11/04/2013 Dinesh R
“விஸ்வரூபம் 200” – கமல் ஸ்பெஷல் கட்டுரை

“விஸ்வரூபம் 200” – கமல் ஸ்பெஷல்

விசாம் அகமது காஷ்மீரி விஸ்வரூபம் ரூ.200 கோடி வசூல் செய்தது!! க்றிஸ்டியன் ஃப்ளெட்சர் யூ ரிமெம்பர் ஆளவந்தான்? ஷிங்கென் நராஷி //யூ ரிமெம்பர் ஆளவந்தான்?// யூ ரிமெம்பர் வாட் Quentin Tarantino said? ராகவன் DCP விஸ்வரூபம் கண்டிப்பா ஆஸ்கார் வாங்குது… இது ராகவன்’ஸ் இன்ஸ்டின்க்ட் பல்ராம் நாயுடு இந்தப் படத்திலு வில்லன் எந்த க்ரூப்பூ? அல்கொய்தாவா? லஷ்கிரி தைபவா? இல்ல அல் உம்மாவா? தெனாலி எனக்கு படம் எண்டாலும் பயம்.. வில்லன் எண்டாலும் பயம்.. தீவிரவாதம் […]

02/03/2013 Dinesh R
உண்ணாவிரதம் – உன் நா விரதம் கவிதை

உண்ணாவிரதம் – உன் நா விரதம்

அரசியல் வாணியமாக்கிய விடாணி உருவலும் உறுவலால் உருகியது வரி வாரியம் வறமிளைக்கவோ மோறையும் வாறு இழந்தது வேண்டியன பலவும் பட்டியலில் உணவுமில்லா பெரும் பந்தலில் தொண்டர்கள் யாவரும் பட்டினியில் நீயோ பொருளீட்டும் இச்சையினால் உண்ணாதிருக்கும் சில தினம் மருத்துவமோ தானோ அனுதினம் விவசாயி வாழ்வுமோர் புதினம் பொதுமக்கள் மடிவதோ தினம்தினம் உன் நாவது உண்ணா நாளதுவோ புகழாரத் தேடலின் ஓர் நாளதுவோ உன் நாவது உண்ணா நாளேதுவோ மக்கள் உண்ண போராடும் நாளதுவோ – சிந்தியா ரகுநாதன்

26/02/2013 Dinesh R
‘நாடக’ திருமணங்களும் சப்பை கட்டுகளும் கட்டுரை

‘நாடக’ திருமணங்களும் சப்பை கட்டுகளும்

காதல் திருமணம் செய்ய நினைக்கிறவர்களுக்கு இலவசமாய்க் கிடைக்கும் ஆலோசனைகள் அல்லது அறிவுரைகள் பெரும்பாலும் சாதி என்கிற ஆயிரங்காலத்து காரணத்தை நேரடியாக ச்சொல்லாமல், அதைப் பல்வேறு வகையில் மறைமுகமாக வலியுறுத்துவதை நாம் பல்வேறு இடங்களில் கண்கூடாக பார்க்க முடிகிறது. இந்த ஆலோசனைகள் எல்லாம் பெரும்பாலும் அச்சுறுத்தும் தொணியில்தான் இருக்கும். “அவங்க குடும்பப் பழக்கவழக்கம் வேற, நம்ம குடும்பப் பழக்கவழக்கம் வேற, அதெல்லாம் ஒத்து வராது.” “நமக்கு ஏதாவது பிரச்சினைன்னா யாரும் சப்போர்ட்டுக்கு இருக்க மாட்டாங்க.” “அவன் உன்னை ஏமாத்திருவான். […]

21/02/2013 Dinesh R