60 வயது ஆசிரியரின் வாழ்க்கையைப் பேசும் “குற்றம் கடிதல் 2”
தயாரிப்பாளர்-இயக்குநர்-நடிகர் ஜே எஸ் கே முதன்மை வேடத்தில் நடிக்கும் 'குற்றம் கடிதல் 2' திரைப்படத்தை எஸ் கே ஜீவா இயக்குகிறார்60 வயது ஆசிரியரை சுற்றி நடக்கும் கதையின் படப்பிடிப்பு விரைவில் தொடங்குகிறதுவிநியோகம், தயாரிப்பு, நடிப்பு, இயக்கம் என திரையுலகின் பல்வேறு துறைகளில் இயங்கி வரும் பன்முகத்தன்மை கொண்ட ஆளுமையான ஜே எஸ் கே, தற்போது 'குற்றம் கடிதல் 2' படத்தில் முதன்மை வேடத்தில் நடிக்க தயாராகி வருகிறார்.2015ம் ஆண்டு திரைக்கு வந்து தேசிய விருது உள்ளிட்ட அங்கீகாரங்களையும் பெரும் வரவேற்பையும் பெற்ற ஜே எஸ் கே தயாரிப்பில் உருவான 'குற்றம் கடிதல்' படத்தின் இரண்டாம் பாகத்தை எஸ் கே ஜீவா எழுதி இயக்குகிறார். ஜேஎஸ்கே ஃபிலிம் கார்ப்பரேஷன் இப்படத்தை தயாரிக்கிறது.ஆர் பார்த்திபன் நடித்த 'புதுமை பித்தன்', கார்த்திக் நடித்த 'லவ்லி' படங்களை இயக்கிய ஜீவா, 'அழகிய தமிழ் மகன்', சமீபத்தில் வெள...