32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

ஆக்காட்டி திரைப்படம் – Best Film Recognition Award | IFFI 2025

Dinesh R சேலம் Published: 26/11/2025 2 நிமிட வாசிப்பு சினிமா
எழுத்து அளவு:

WAVES Film Bazaar பிரிவின் கீழ், 56 ஆவது சர்வதேச கோவா திரைப்பட விழாவில், சிறந்த திரைப்படத்திற்கான அங்கீகார விருதை ‘ஆக்காட்டி’ திரைப்படம் பெற்றுள்ளது. படத்தின் இயக்குநர் ஜெய் லட்சுமி, இணை தயாரிப்பாளர் சுனில் குமார், ஒலி வடிவமைப்பாளர் ஹரி பிரசாத், மற்றும் காஸ்டிங் இயக்குநர் சுகுமார் சண்முகம் ஆகியோர் விழாவில் கலந்து கொண்டு விருதைப் பெற்றனர்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

தென் தமிழகக் கிராமப்புறங்களில் நிலவும் தாய்மாமன் சீர் வரிசை முறையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இப்படம், சமுதாய மரபுகள் உருவாக்கும் நெருக்கடிகளையும், அதனால் மனித மனத்தில் எழும் சிக்கல்களையும் மென்மையான உணர்வுகளையும் பதிவு செய்துள்ளது.

அறிமுக இயக்குநர் ஜெய் லட்சுமி, நாளைய இயக்குநர் – சீசன் 6 போட்டியில் பங்கேற்று, அதில் அடாப்ட் செய்யப்பட்ட குறும்படத் திரைக்கதைக்கான இறுதிப்போட்டி விருதைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேற்கு தொடர்ச்சி மலையில் நடிப்பின் மூலம் கவனம் பெற்ற ஆண்டனி, முக்கிய கதாப்பாத்திரத்தில் முல்லையரசி, சிறுவனாக சுபாஷ் ஆகியோர் கதையின் மாந்தர்களாக நடித்து உள்ளனர். படத்தின் தொழில்நுட்பக் குழுவில் ஒளிப்பதிவாளர் S.E. எசக்கி ராஜா, படத்தொகுப்பாளர் ராம் குமார், இசையமைப்பாளர் தீபன் சக்ரவர்த்தி, கலை இயக்குநர் மனோஜ் குமார், நேரடி ஒலி வடிவமைப்பாளர் பாலா ஜீவ ரத்தினம், காஸ்டிங் இயக்குநர் சுகுமார் சண்முகம், CG கலை இயக்குநர் சேகர் முருகன், டைட்டில் ஸ்டோரிபோர்ட சந்திரன், டிரெய்லர் & புரமோஷன் எடிட்டிங் பிரேம் B, கலரிஸ்ட் ரத்தன் மற்றும் படத்தின் ஒலி வடிவமைப்பை பெப்பிள்ஸ் ஸ்டூடியோ ஹரி பிரசாத் M.A ஆகியோர் மேற்கொண்டுள்ளனர்.

ஆக்காட்டி திரைப்படத்திற்குப் பெருமை சேர்க்கும் விதமாகக் கவிஞர் கார்த்திக் நேத்தா இரு பாடல்களை எழுதியுள்ளார். மேலும் பல சர்வதேசத் திரைப்பட விழாவுக்கு அனுப்பப்பட்டிருக்கும் ஆக்காட்டி திரைப்படம், விரைவில் முதல் பார்வையை வெளியிடும் என தயாரிப்புக் குழு தெரிவித்துள்ளது.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.