32°C
விளம்பரம்
Advertisement
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
செய்திப் பிரிவு

திரைத் துளி

1092 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 7 / 73
செய்திகள் வரிசை (பக்கம் 7)
Janaki v/s State of Karala – மெளனமாக்கும் முயற்சிக்கு எதிராக | Zee 5 OTT

Janaki v/s State of Karala – மெளனமாக்கும் முயற்சிக்கு எதிராக | Zee 5

வரும் சுதந்திர தினத்தன்று, எளியவர்களுக்குக் குரல் கொடுக்க, அமைப்பைக் கேள்விக்குட்படுத்தத் துணிந்த, அமைதியாக இருப்பவர்களுக்குக் குரல் கொடுக்கும் ஒரு கதையை ரசிகர்களுக்கு வழங்கவுள்ளது ஜீ5. ஆகஸ்ட் 15 ஆம் தேதி பிரத்தியேகமாகத் திரையிடப்படும் “ஜானகி V/S ஸ்டேட் ஆஃப் கேரளா” ஒரு அழுத்தமான மலையாளத் திரைப்படமாகும். இப்படத்தினை பிரவீன் நாராயணன் எழுதி இயக்க, J பனிந்திர குமார் தயாரித்ததுள்ளார். சேதுராமன் நாயர் கன்கோல் இணை தயாரிப்பாளராகப் பணியாற்றியுள்ளார். சுரேஷ் கோபி தார்மீக ரீதியாகச் செயல்படும் வழக்கறிஞர் டேவிட் […]

05/08/2025 Dinesh R
Oh God Beautiful – பரிதாபம் ப்ரொடக்‌ஷன்ஸின் ஃபர்ஸ்ட் லுக் Movie Posters

Oh God Beautiful – பரிதாபம் ப்ரொடக்‌ஷன்ஸின் ஃபர்ஸ்ட் லுக்

பரிதாபங்கள் ப்ரொடக்‌ஷன்ஸ் வழங்கும், புதுமுக இயக்குநர் விஷ்ணு விஜயன் இயக்கத்தில், பரிதாபங்கள் கோபி, சுதாகர் முதன்மை பாத்திரங்களில் நடிக்க, ஃபேண்டஸி – ஃபேமிலி எண்டர்டெயினர் ஜானரில், எமோஷனல் டிராமாவாக உருவாகியிருக்கும் “ஓ காட் பியூட்டிஃபுல்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. ஃபர்ஸ்ட் லுக்கில் சார்லி சாப்ளின் மேக்கப்பில் கோபி அமர்ந்திருக்க, அருகே வாய் கட்டப்பட்ட நிலையில் இன்னொரு சார்லி சாப்ளினாக நியாய தராசு ஏந்தி நிற்கிறார் சுதாகர். தராசில் ஒரு புறம் காந்தியின் புகழ் பெற்ற மேற்கோளைப் […]

05/08/2025 Dinesh R
Hombale Films | மகா அவதார் நரசிம்மா – முதல் வாரத்தில் 53 கோடி வசூல் அயல் சினிமா

Hombale Films | மகா அவதார் நரசிம்மா – முதல் வாரத்தில் 53 கோடி வசூல்

ரசிகர்களைப் பரவசப்படுத்தும் வகையிலும், கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் வகையிலும் வெளியான மகா அவதார் நரசிம்மா முதல் வாரத்தில் இந்தியாவில் 53 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்திருக்கிறது. க்ளீம் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் அஸ்வின் குமார் இயக்கத்தில் ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் வழங்கிய ‘மகாஅவதார் நரசிம்மா’ இந்தியாவில் வெளியான ஒரே வாரத்தில் 53 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்திருக்கிறது. காட்சி ரீதியாக சக்தி வாய்ந்த கதை மூலம் இப்படம் உயிர்ப்பிக்கப்பட்டிருக்கிறது. குழந்தைகளை மட்டுமல்ல பெரியவர்களையும் கவரும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது […]

03/08/2025 Dinesh R
WinStar விஜய் இன் மக்கள் தொடர்பாளன் சினிமா

WinStar விஜய் இன் மக்கள் தொடர்பாளன்

‘மக்கள் தொடர்பாளன்’ என்ற பெயரில் புதிய படம் தயாராகி உள்ளது. இந்தப் படத்தை எச்.முருகனின் கிரீன் சேனல் மூவீஸ் தயாரிக்கிறது. இதில் நாயகனாக விண் ஸ்டார் விஜய் நடிக்க, மும்பை மாடல் அழகி சைத்ரா, பெங்களூருரைச் சேர்ந்த ரீனா உள்பட பதினெட்டு புதுமுகங்கள் உடன் நடிக்கின்றனர். சம்பத் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இசை – சந்தோஷ் ராம்; ஒளிப்பதிவு – மணிகண்டன், அகரன். இந்தப் படத்துக்குக் கதை, திரைக்கதை, வசனம் எழுதி எச்.முருகன் டைரக்டு செய்கிறார். சிறு […]

30/07/2025 Dinesh R
Vibe இருக்கு பேபி | தேஜா சஜ்ஜா | ரித்திகா நாயக் Songs

Vibe இருக்கு பேபி | தேஜா சஜ்ஜா | ரித்திகா நாயக்

‘சூப்பர் ஹீரோ’ தேஜா சஜ்ஜா, கார்த்திக் கட்டமனேனி, டி. ஜி. விஸ்வ பிரசாத், கிருத்தி பிரசாத், பீப்பிள் மீடியா ஃபேக்டரி ஆகியோர் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ‘மிராய்’ படத்தில் இடம்பெறும் முதல் பாடலான ‘வைப் இருக்கு பேபி’ எனும் பாடலின் முழு லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது. ‘ஹனுமான்’ படத்தின் பிரம்மாண்ட வெற்றி மூலம் நாடு முழுவதும் பிரபலமான ‘சூப்பர் ஹீரோ’ தேஜா சஜ்ஜா, ‘சூப்பர் யோதா’வாக நடிக்கும் இந்தப் படத்தைக் கார்த்திக் கட்டமனேனி இயக்குகிறார். […]

28/07/2025 Dinesh R
PRK Productions – புதிய தயாரிப்பு நிறுவனம் சினிமா

PRK Productions – புதிய தயாரிப்பு நிறுவனம்

தமிழ்த் திரைத்துறையில் பல ஆண்டுகளாகப் பணிபுரிந்து வரும் ராஜ்குமார், “PRK Productions” எனும் பெயரில் புதிய தயாரிப்பு நிறுவனத்தைத் துவங்கியுள்ளார். வித்தியாசமான கதைக்களத்தில், நேர்த்தியான கதைகளைத் தேர்ந்தெடுத்து, அனைத்து ரசிகர்களும் ரசிக்கும் பல புதுமையான படைப்புகளை வழங்கும் நோக்கத்தில் துவங்கப்பட்டுள்ளது. சமீபத்தில் துவங்கிய இந்தப் புதிய தயாரிப்பு நிறுவனத்தின் துவக்க விழாவில், நடப்பு தமிழ்த் தயாரிப்பு சங்கத்தின் செயல் தலைவர் சத்ய ஜோதி பிலிம்ஸ் திரு. தியாகராஜன், திருமதி செல்வி தியாகராஜன், பெப்சி சங்கத்தின் தலைவர் திரு. […]

21/07/2025 Dinesh R
ராம்சரணனின் கம்பீரமான புதுத் தோற்றம் | Peddi அயல் சினிமா

ராம்சரணனின் கம்பீரமான புதுத் தோற்றம் | Peddi

குளோபல் ஸ்டார் ராம்சரண் நடித்து வரும் ‘பெடி (Peddi)’ படத்திற்காக நாளை முதல் தொடங்கும் நீண்ட நாட்கள் திட்டமிடப்பட்ட படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக நம்ப முடியாத வகையில் அவரது தோற்றமும், ஒப்பனையும் மாற்றி அமைத்துக் கொண்டு தோன்றும் புகைப்படம் வெளியிடப்பட்டிருக்கிறது. ராம்சரண் தற்போது நடித்து வரும் இலட்சிய படமான ‘பெடி (Peddi)’ திரைப்படத்திற்காக ஒப்பற்ற முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். புஜ்ஜி பாபு சனா இயக்கத்தில் உருவாகி வரும் இந்தத் திரைப்படத்தை விருத்தி சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் […]

21/07/2025 Dinesh R
காளிதாஸ் 2 – டீசர் | பரத் | அஜய் கார்த்திக் Teaser

காளிதாஸ் 2 – டீசர் | பரத் | அஜய் கார்த்திக்

பரத், புதுமுக நடிகர் அஜய் கார்த்திக் முதன்முதலாக இணைந்து நடித்திருக்கும் ‘காளிதாஸ் 2’ எனும் திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனைத் தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர்களான ரவி மோகன், ஜீ.வி.பிரகாஷ் குமார் ஆகியோர் இணைந்து அவர்களது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு, படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள். 2019 ஆம் ஆண்டில் பரத் நடிப்பில் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றியைப் பெற்ற காளிதாஸ் படத்தைத் தொடர்ந்து அதன் இயக்குநரான ஸ்ரீ செந்தில் இயக்கத்தில் […]

18/07/2025 Dinesh R
Kutti Story Pictures | எம்.எஸ்.பாஸ்கர் | ஃப்ராங்க்ஸ்டர் ராகுல் சினிமா

Kutti Story Pictures | எம்.எஸ்.பாஸ்கர் | ஃப்ராங்க்ஸ்டர் ராகுல்

குட்டி ஸ்டோரி பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் புவனேஷ் சின்னசாமி தயாரிப்பில் நடிகர் ஃப்ராங்க்ஸ்டர் ராகுல் இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத புதிய திரைப்படத்தின் தொடக்க விழா பூஜையுடன் சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. காமெடி நடிகராக பிரபலமான ‘ஃப்ராங்க்ஸ்டர்’ ராகுல் இயக்குநராக அறிமுகமாகும் இந்தத் திரைப்படத்தில் தமிழ்த் திரையுலகின் சிறந்த குணச்சித்திர நடிகரான எம்.எஸ்.பாஸ்கரும், ஃப்ராங்க்ஸ்டர் ராகுலும் முதன்மையான வேடங்களில் நடிக்கிறார்கள். இவர்களுடன் நடிகை ஸ்மீகா, அருள்தாஸ், முனீஸ்காந்த், ஸ்ரீநாத், சிவா அரவிந்த், பிரியதர்ஷினி, அஞ்சலி ராவ், அபிநயா […]

18/07/2025 Dinesh R
ரெஜினா கசாண்ட்ரா இன் The Wives திரைப்படம் அயல் சினிமா

ரெஜினா கசாண்ட்ரா இன் The Wives திரைப்படம்

Rocket Boys, Jaat, Farzi, Kesari Chapter 2 போன்ற பிரபல ஹிந்தி வெப் சீரிஸ் மற்றும் திரைப்படங்களில் தனது நடிப்பால் கவனம் பெற்ற ரெஜினா கசாண்ட்ரா, இந்திய சினிமாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவரான மதுர் பந்தார்க்கருடன் புதிய படத்தில் நடிக்கத் தயாராக இருக்கிறார். இப்புதிய திரைப்படம் “தி வைவ்ஸ்” எனும் தலைப்பில் உருவாகிறது. உணர்வுமிக்க, சிக்கலான கதாபாத்திரங்களை நம்பிக்கையுடன் திரையில் கொண்டு வரும் ரெஜினா, இந்தப் படத்திலும் ஒரு முக்கியமான கதாநாயகி வேடத்தில் நடிக்கவுள்ளார். இது […]

17/07/2025 Dinesh R
கவின் – பிரியங்கா மோகன் | Think Studios சினிமா

கவின் – பிரியங்கா மோகன் | Think Studios

திங்க் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தில் கவின் கதையின் நாயகனாக நடிக்கிறார். இப்படத்தின் தொடக்க விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இயக்குநர் கென் ராய்சன் இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத புதிய திரைப்படத்தில கவின், பிரியங்கா மோகன் ஆகியோர் முதன்மையான வேடங்களில் நடிக்கிறார்கள். இத்திரைப்படத்திற்கு ஓஃப்ரோ (OFRO) இசையமைக்கிறார். ஃபேன்டஸி ரொமான்டிக் காமெடி ஜானரிலான இந்தத் திரைப்படத்தை, திங்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஸ்வரூப் ரெட்டி தயாரிக்கிறார். மேலும் இந்தத் திரைப்படத்தில் பணியாற்றும் ஏனைய […]

16/07/2025 Dinesh R
KPY பாலாவின் ‘காந்தி கண்ணாடி’ சினிமா

KPY பாலாவின் ‘காந்தி கண்ணாடி’

ஆதிமூலம் கிரியேஷன்ஸ் தயாரிப்பில், KPY பாலா ஹீரோவாக அறிமுகமாகும் ‘காந்தி கண்ணாடி’ திரைப்படத்தை ஷெரிப் இயக்குகிறார். ஆதிமூலம் கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக உருவாகும் இந்தத் திரைப்படம், எளிமையையும் நேர்மையையும் பிரதிபலிக்கும் ஒரு அழுத்தமான திரைப்படமாகத் தயாரித்துள்ளார் ஜெய்கிரண். சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் படப்பிடிப்பு முடிந்த நிலையில், தற்போது இப்படக்குழு முழு உற்சாகத்துடன் இறுதிக்கட்டப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். தயாரிப்பாளர் ஜெய்கிரண், “காந்தி கண்ணாடி என்பது எங்கள் நிறுவனத்தின் முதல் தயாரிப்பு மட்டுமல்ல, எனக்கு மிக […]

30/06/2025 Dinesh R
Sci-Fi க்ரைம் த்ரில்லரில் கெளதம் கார்த்திக் | Verus Productions சினிமா

Sci-Fi க்ரைம் த்ரில்லரில் கெளதம் கார்த்திக் | Verus Productions

கெளதம் ராம் கார்த்திக், வேரூஸ் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய திரைப்படத்தில் கமிட் ஆகியுள்ளார். தனிஷ்தன் பெர்னாண்டோ, ராஜராஜன் கணநாசம்பந்தம், சஞ்சய் சங்கர் மற்றும் ஷைக் முஜீப் ஆகியோரால் தயாரிக்கப்படும் இந்தத் திரைப்படம், “நாளைய இயக்குநர் சீசன் 1” மூலம் அறிமுகமான இயக்குநர் சூரியபிரதாப். எஸ் இயக்கத்தில் உருவாகவிருக்கிறது. இவர், சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கிய ‘கோச்சடையான்’ படத்தில் துணை இயக்குநராகப் பணியாற்றியவராவார். இந்தப் பெயரிடப்படாத் திரைப்படம் ஒரு சயின்ஸ் ஃபிக்ஷன் க்ரைம் த்ரில்லராக உருவாகவிருக்கிறது. இதில் கெளதம் […]

28/06/2025 Dinesh R
MYSAA – ராஷ்மிகாவின் ஆக்‌ஷன் அவதாரம் அயல் சினிமா

MYSAA – ராஷ்மிகாவின் ஆக்‌ஷன் அவதாரம்

ராஷ்மிகா மந்தனா நடிக்கும், கதாநாயகியை மையப்படுத்திய புதிய திரைப்படத்திற்கு “மைசா” எனப் பெயரிடப்பட்டுள்ளது. ராஷ்மிகாவின் அட்டகாசமான ஆக்‌ஷன் அவதாரத்தை வெளிக்காட்டும்படி அப்படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது. பிரபல இயக்குநர் ஹனு ராகவபுடியின் உதவியாளராகப் பணியாற்றிய ரவீந்திர புள்ளே இப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். Unformula Films நிறுவனம் இந்தப் படத்தை மிகப் பெரிய பட்ஜெட்டில் பான் இந்தியா படைப்பாக இப்படத்தைத் தயாரிக்கிறது. அஜய் மற்றும் அனில் சாய்யபுரெட்டி தயாரிக்கும் இப்படத்தில், இணைத் தயாரிப்பாளராக சாய் கோபா பணியாற்றுகிறார். இப்படத்தின் […]

28/06/2025 Dinesh R
ஆலப்புழா ஜிம்கானா – Sony LIV இல் ஜூன் 13 முதல் OTT

ஆலப்புழா ஜிம்கானா – Sony LIV இல் ஜூன் 13 முதல்

திரையரங்குகளில் ரசிகர்களின் மனங்களை வென்ற பிறகு, விளையாட்டு, நகைச்சுவை மற்றும் உணர்வுகள் கலந்து உருவாக்கப்பட்ட “ஆலப்புழா ஜிம்‌கானா” திரைப்படம், இப்போது OTT தளத்தில் களமிறங்குகிறது. ஜூன் 13 முதல் Sony LIV-இல் பிரத்தியேகமாக ஸ்ட்ரீமிங் ஆகிறது. இந்தக் கதை, ஜோஜோ ஜான்சன் (நஸ்லென்) எனும் சோம்பேறித் தனமான கல்லூரி மாணவனைப் பற்றியது. அவன் கல்லூரியில் பொய்யாகக் குத்துச்சண்டை ஒதுக்கீட்டின் மூலம் சேருகிறான். ஆனால் அவனும், அவனைப் போலவே குழப்பத்தில் இருக்கும் நண்பர்களும், கடினமாகவும் கட்டுப்பாட்டுடனும் பயிற்சி அளிக்கும் […]

08/06/2025 Dinesh R