32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

நிவின் பாலியின் “சர்வம் மாயா” – புதிய போஸ்டர்

Dinesh R சேலம் Published: 19/11/2025 1 நிமிட வாசிப்பு Updated: 20/11/2025 சினிமா
எழுத்து அளவு:

நடிகர் நிவின் பாலி நடித்துள்ள “சர்வம் மாயா” திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அகில் சத்யன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம், 2025 டிசம்பர் 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை தினத்தில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

இன்று வெளியீட்டுத் தேதி அறிவிப்புடன் கூடிய புதிய போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில் நிவின் பாலி, அஜு வர்கீஸ் மற்றும் மூத்த நடிகர் ஜனார்த்தனன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். அவர்களின் கவர்ச்சிகரமான தோற்றம், படத்தின் வித்தியாசமான உலகை அனுபவிக்கும் ஆவலைத் தூண்டுகிறது.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

“சர்வம் மாயா” போஸ்டர் இப்படம் முழுக்க முழுக்கக் குடும்பத்தோடு ரசிக்கக்கூடிய நகைச்சுவைத் திரைப்படமாக இருக்கும் என்பதைத் தெளிவாக உணர்த்துகிறது. மூவரின் சுவாரசியமான முகபாவனைகள், அனைத்துத் தரப்பினரையும் கவரும் நகைச்சுவை கலாட்டாவாக இப்படம் இருக்குமென்பதை உறுதி செய்கிறது. காமெடி டிராமா வகை படங்களில் ரசிகர்கள் அதிகம் விரும்பும் நிவின் பாலி தனது அசத்தலான நடிப்பை மீண்டும் வழங்கவுள்ளார் என்பதையும் இந்தப் போஸ்டர் உணர்த்துகிறது.

அட்டகாசமான காமெடியுடன், கொண்டாட்ட உணர்வைப் பதிவு செய்யும் இந்தப் படம், இந்த ஆண்டின் சிறந்த விடுமுறை கொண்டாட்டப் படமாக இருக்கும். மூத்த இயக்குநர் சத்யன் அந்திக்காடின் மகனான அகில் சத்யன் இயக்கத்தில், ஃபயர்ஃப்ளை ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் “சர்வம் மாயா”, 2025 இன் மிகப்பெரிய பண்டிகை வெளியீடுகளில் ஒன்றாக உருவாகி வருகிறது.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.